முதல் முதலாய் ஒரு மெல்லிய -2

 


💘 2
    

காலை விடியல் அற்புதமாக விடிந்தது. எல்லா காலை பணியும் முடிந்து கரும்பச்சை கொண்டக் காட்டன் ஆடையை லாவகமாக அணிந்து ஹாலுக்குள் சென்றாள்.

 

  தன்யா சீக்கிரமாக ஸ்பெஷல் கிளாஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். கிச்சனில் ராதை காபி எடுத்துக் கொண்டு பவித்ராவிடம் வந்தாள்.


     ''
தனு எந்திரிச்சப்பவே வந்து பார்தேன் நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் டிஸ்டர்ப் பண்ணல.'' என்று காபியை கொடுத்தார்.


                               
காபியை வாங்கி பருகியவாறு '' நல்லா தூங்கிட்டேன் ஆன்ட்டி ஸாரி. பொதுவா புது இடம் என்றால் தூக்கம் வராதுன்னு சொல்வாங்க ஆனா நல்லா தூங்கினேன்.” என்று கூறவும் பவித்ராவை கண்டு விஸ்வநாதன் நிம்மதி கொண்டார்.


             
முன்பு ஒரு முறை '' என்னால் நம்ம வீட்டுல நிம்மதியா தூங்கக் கூட முடியல அப்பா'' என அழுதவாறு தன் நண்பனிடம் கூறிய பவித்ராவை நினைவுப் படுத்திக் கொண்டார்.


   
அவரை கண்டதும்  ''எப்ப அங்கிள் கல்லூரிக்குக் கிளம்பணும்'' என்றாள் பவித்ரா.


     ''
இதோ போய் மீட் பண்ணலாம். அஸ்வின் ஒரு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டா நாம பார்க்க ஈஸியா இருக்கும்'' என்று மகன் பேசினானா இல்லையா என்று யோசித்தார்.


                       
 அவனோ  தன் கைப் பட்டனை சரி செய்தவாறு ''கிளம்பிட்டீங்களா? போகலாமா?'' என வந்து நின்றான்.

 

  விஸ்வநாதனுக்கு ஆச்சரியம் ஒரு வார்த்தை ஒரு தலையாட்டால் ம் என்ற வார்த்தை இது தான் அஸ்வின். அவனே வருவது திகைப்பு '' நீயும்.. எங்க கூட...'' என்று விஸ்வநாதன் ஆரம்பித்து ஏதேனும் கேட்டு மறுப்பான் என ''கிளம்பிட்டோம் போகலாம்'' என எழுந்தார்.


     ''
சாப்பிடாம எங்க கிளம்புறீங்க'' என்ற ராதை குரல் கேட்டு மூவரும் சாப்பிட அமர்ந்தனர்.


                              சாப்பிட்ட உடன் கிளம்ப ஆயத்தமானர்கள். காரின் முன் இருக்கையில் அஸ்வினும், விஸ்வநாதனும் அமர பின் இருக்கையில் பவித்ரா அமர்ந்தாள். சற்று நேரத்தில் கார் மெயின் ரோடு அடைய, கார் ரிவ்யூ வழியாக பவித்ராவை அஸ்வின் கண்கள் அடிக்கடிப் பார்த்துத் திரும்பின. இதை அறியாது பவித்ரா சாலையை பார்த்துக் கொண்டு வந்தாள்.


                                    
கல்லூரி நுழைவில் வந்தவுடன் விஸ்வநாதனும், பவித்ராவும் இறங்கி விட ''நான் கார் பார்க் பண்ணிட்டு வர்றேன் நீங்க போங்க'' என்றான்.

 

    இருவரும் கிளம்பிய பின் பார்க் செய்து விட்டு வர சென்றான். பவித்ராவும் விஸ்வநாதனும் ப்ரின்சிபால் அறைக்கு வெளியே காத்திருந்தனர்.


      ''
அங்கிள் சீட் கிடைக்குமா? பயமா இருக்கு?' என்று வருத்தமாய் கூறினாள்.


      ''
கவலைப்படாதேமா நிச்சயம் கிடைக்கும். இவனிடம் எப்பவும் ஒரு காரியம் சொன்னா சக்சஸ் பண்ணாம விடமாட்டான்'' என கூறுகையில் ப்ரின்சிபால் கூப்பிட அறைக்குள் சென்றனர்.


      ''
ஹலோ சார். நான் அஸ்வினோட அப்பா.'' என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.

 
     ''
ஆமா சார் அஸ்வின் நேற்றே விவரமா சொன்னான். ம்.. நீ தானே பவித்ரா?’’ என்று கேட்டார்.


     ''
ஆமாம் சார்'' என்று பதவிசமாய் கூறினாள்.


      ''
இந்த பார்ம் பில் பண்ணி தந்துட்டு, மன்டே காலேஜ் ஜாயின் பண்ணிக்கோ மா.'' என்று மிடுக்காய் கூறினார்.


                           
பவித்ராவிற்கு மனம் முழுவதும் பரவசம் வந்தது. ப்ரின்சிபாலிற்க்கு ஏதோ தொலைப்பேசி அழைப்பு வரவும் ''எக்ஸ்க்யூஸ் மீ'' என்று போனை எடுத்துப் பேசினார்.

     விஸ்வநாதானோ ''வெளியே போய் ரிலாக்ஸ்டா பில் பண்ணுமா'' என்று அனுப்பினார்.


                      
வெளியே வந்து வைத்து எழுத இடம் தேடிக் கொண்டு இருக்கையில், ஒரு இளைஞன் மொபைலில் பேசிக் கொண்டே இடிக்க, பவித்ராவின் பேனா, பர்ஸ், போன், எல்லாம் சிதறி விழுந்தது.

 

 அந்த இளைஞன் ''ஸாரி ஸாரி’’என்று தடுமாறினான். அவன் முகம் பாராது ''இட்ஸ் ஓகே'' என பவித்ரா பொருட்களை எடுத்து அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். விண்ணப்பத்தில் எழுதும் நேரம் பவித்ராவின் பேனாவோ எழுதவில்லை.

 

   பேனாவை உதறி உதறி முயற்சித்து எழுதவில்லை என்றதும் உடனே வேறு யாரேனும் இருக்கின்றனரா என்று தேடினாள். அந்த இளைன் மட்டும் அவளை பார்த்து போனில் யாரிடமோ பேசுவதாக திரும்பினான்.


     ''எக்ஸ்க்யூஸ் மீ... உங்களை தான். உங்களிடம் பேனா இருக்கா? என்றதும் அவன் சட்டை பாக்கெட்டில் கைகள் தானாக சென்றது.

 

   “என் பேனா கீழே விழுந்ததும் எழுதலை.'' என்று அவளின் பேனாவை காட்டி கூறினாள்.

 
              
மொபைலை பார்த்தவறே அவளையும் பார்த்து கொண்டு பேனா எடுத்துக் கொடுக்கப் பெற்றுக் கொண்டு, பவித்ரா படிமனைப் பூர்த்தி செய்ய துவங்கினாள்.

 

அந்த இளைஞனோ அவளையே பார்த்து கொண்டு, '' சோ க்யூட் அழகா இருக்கா'' என போனில் கூறினான். '' ஓகே நேர்ல பேசலாம் பை'' என அவன் நண்பனிடம் பேசி முடித்தான்.

 

 பின் கல்லூரி ப்ரின்சிபாலிடம் பேசிவிட்டு சற்று நேரத்தில் பேனாவை பெற்றுக் கொண்டுச் சென்றான். போகும் பொழுதும் பவித்ராவை திரும்பி பார்த்தபடி சென்றான்.

 
        பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுக்க செல்லும் நேரம் அஸ்வின் வந்தான். இத்தனை நேரம் கல்லூரியில் இரண்டு ஆசிரியரிடமும் ப்யூன், வாட்ச்மேனிடம் பேசிவிட்டு வந்ததை உரைத்தான்.  

                            

    ப்ரின்சிபாலிடமும் நெடு நேரம் பேசி விட்டு அம்மூவரும் வீட்டை வந்து அடைத்தனர். பவித்ராவுக்கு ஒரு மாணவனுக்கு இத்தனை மரியாதையா என்று கவனித்தாள்.  

 

   வீட்டிற்கு வந்து காரினைப் பார்க் செய்தவுடன் பைக்கை எடுத்து கொண்டுக் எப்பொழுதும் போல கிளம்பினான்.
     
 விஸ்வநாதனோ சின்ன மகன் சென்ற பின் ''போன் மட்டும் தான் பண்ணுவான்னு நினைச்சேன். ஆனா நேர்ல வந்தது அதிசயம் தான். உன் மகன் இப்ப எங்க கிளம்பிட்டான்.'' என்று வாசல் பக்கம் தலை நீட்டி ராதையிடம் பேசினார்.


    
சின்ன மகனுக்கு கூடுதல் செல்லம் கொடுக்கும் ராதையோ  ''அவனைக் குறைச் சொல்லாம இருக்க மாட்டீங்களே'' என்றார்.

 

  கணவன் மனைவியின் அழகான சண்டை பார்த்து மனம் விட்டு சிரித்தாள் பவித்ரா தன்யா.


     அன்றைய பொழுது சதுரங்க விளையாட்டு, பஜ்ஜி, தொலைக்காட்சி என நேரம் நகர்ந்தது.


                                  
ஞாயிறு எப்பொழுதும் போல விடிய ஐந்து மணிக்கு எல்லாம் பவித்ராவுக்கு விழிப்பு வந்தது. பவித்ராவுக்கு  ஊரில் இருக்கும் பழக்கம், தனு இன்னும் புரண்டு தூங்கினாள். அதனால் அவள் தூக்கம் கலையாது வெளியே இருக்கும் தோட்டத்தை ரசிக்கச் சென்றாள். அழகியப் பூக்கள் மலர்ந்து அவளை வரவேற்றது.

    பூவின் மீது பனித்துளி அவளுக்காகவே காத்திருந்தது. அந்த பனித்துளியை சுண்டி விட்டு மகிழ, யாரோ தன்னைப் பார்ப்பதாக தோன்ற சுற்றி முற்றி பார்த்தாள்.

 

            ராதைகாபி கப்போடு வர '' ஏன் ஆன்ட்டி உங்களுக்கு எதுக்கு சிரமம். கூப்பிட்டா நானே வந்திருப்பேனே!'' என்று காபியை எடுத்தாள்.


      ''
உன்னோடு நானும் பூவை ரசிக்க வந்தேன்னு வச்சிக்கோ'' என்று இருவரும் பேசிய படியே அன்று மலர்ந்த பூவை ரசித்தனர்.


பவித்ராவின் மொபைல் சினுங்க அதனை எடுத்து “ஹலோ அப்பா'' என்றாள்.

   தொலைபேசியின் மறுமுனையில் '' என்னம்மா அப்பாவோட கூடப் பேச தோணலையா?' என்று கேட்கவும் பவித்ரா கலங்கினாள். கண்ணீரை அடக்கி கொண்டு '' அப்படி இல்லப்பா காலேஜ் சீட் கிடைச்சதும் சொல்லணும் நினைச்சேன். நேத்து என்னால பேச முடியலை. பேசினா அழுதுடுவேனோனு பண்ணலை ''
     '
'பரவாயில்லைமா  விஸ்வநாதன் நிலவரத்தை சொல்லிட்டான்மா. உனக்கு அங்க எப்படி இருக்கு?'' என்றார் பவித்ராவின் தந்தை நந்தன்.


     ''
அங்கிள் ஆன்ட்டி எல்லோரும் நல்லா பழகுறாங்க. காலேஜ் சீட் கிடைச்ச மாதிரி ஹாஸ்டல்ல இடம் கிடைச்சா நல்லா இருக்கும்ப்பா.'' என்று


     ''
உன் மனம் படி எல்லாம் நல்லதா நடக்கும் பவி'' என்று ஆசீர்வதித்தார்.
     ''
பாட்டி, தாத்தாஅம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க? தம்பி போன் செய்தானா? என்று விசாரித்தாள்.


     ''
எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா.'' சற்று நேர அமைதி அடைய ''சரிப்பா நான் வைக்கிறேன்'' என்று கூறினாள்.
    ''
சரிம்மா'' என்று அவரும் கத்தரிக்க செய்தார். இதற்கு மேல் பேசினால் கரைந்திடுவார்.


                    
தோட்டத்து பூவினை பறித்து பூஜை அறையில் போடுமா” என்று ராதை கூறியதால் குளித்தக் கையோடு பூவைப் பறித்து பூஜை அறைக்குச் சென்றாள்.

 

   எல்லா விதக் கடவுளும் புன்னகைச் சிந்தினார்கள். ஒரு படத்தில் விஸ்வநாதனின் தந்தை அஸ்வினது தோற்றத்தை ஒத்திருப்பதை கண்டாள்.  ஓ தாத்தா போல பேரன் அஸ்வின் இருக்க  அதனால் தான் தனி கவனிப்பு போல’ என நினைத்துக் கொண்டாள் .
                              
பொங்கல் சாம்பார் சட்னியென ராதையின் கை வண்ணத்தில் வீட்டையே மணம் பரப்பி வாசம் வீசியது.


                
துணி துவைத்து மாடியில் காயப்போட சென்றப் போது மாடியில்  ஒரு அறை மூடி இருக்க, அதனை தாண்டி படிக்கட்டு வழியே மேலே மொட்டை மாடியில் துணி உலர்த்தினர்கள் தன்யா மற்றும் பவித்ரா.

    திரும்ப வருகையில் தன்யா மூடியிருந்த அறையை காட்டி இது அஸ்வின் அண்ணா ரூம், படிக்கட்டுக்கு அடுத்த அறை ஆகாஷ் அண்ணா ரூம் என்று சுட்டிக்காட்டினாள்.

    அஸ்வின் அறைக்கதவுத் திறக்க, பவித்ரா உடனே படியில் இறங்கி தனக்கான அறையில் நுழைந்தாள். ஏனோ அஸ்வினை கண்டதும் பதட்டம் உருவாகியது.

 

  அதனை மறக்க தனுவோடு பொழுதை கழித்தாள்.      

         மதிய உணவு ரெடியான பின் ராதை தனுவை பார்த்து  ''போய் அஸ்வினை கூட்டிட்டு வா'' என்று வேலை வாங்கினார்.
    ''
ஆகாஷ் எல்லாம் டைமுக்கு கரெக்ட வர்றான்ல அஸ்வின் அண்ணாக்கு மட்டும் என்னவாம் '' என குறைப்பட்டாள்.
    ''
அஸ்வின்கிட்ட அப்படியே நீயே சொல்லிடு '' என ராதை கூறினார்.தன்யா வாய் தான் பேசும் அவளுக்கு பெரிய அண்ணன் ஆகாஷை விட சின்ன அண்ணன் அஸ்வின் கண்டால் பயம். அவன் பார்வை அப்படி. ஒரு பார்வை விசுவான் அதிலே என்னவோ அனைத்து அடங்கிவிடும்.


    ''
ம்கும்'' என்று தன்யா படியேற அஸ்வின் தானாகக் கதவுத் திறந்து அவனாகவே வந்தான்.


                    
சாப்பிட அமர்ந்த எல்லோருக்கும் பரிமாறிய படி வர ''ஆன்ட்டி நான் வெஜ்டேரியன்,  என்.வி சாப்பிட மாட்டான் எனக்கு வேணாம்'' என தடுக்க ராதைக்கு என்னச் செய்வது என விழித்தார். ஞாயிறு மற்றும் புதன் வழமையாக கறி சமைப்பது வாடிக்கை அதனால் பவித்ராவை கேட்காமல் செய்து விட்டாள் ராதை.   

 

  ''வேற எதாவது சாப்பிட இருக்கா'' என்று விஸ்வநாதன் கேட்க'' தயிர் ரசம் தான் இருக்கு'' என்று ராதை கூற விஸ்வநாதனோ வந்த சில நாளிலே தயிர் ரசமா என்று வருத்தப்பட்டார்.

 
        ''
ரசம் சாப்பிடுக்கறேன் ஆன்ட்டி'' என்று இலகுவாய் பவித்ரா ஊற்றி சாப்பிட்டாள்.
      ''
முதல்லையே தெரிஞ்சுக்காம விட்டுட்டியே ராதை'' விஸ்வநாதன் தன்மையாய் கேட்டார்.


      ''
பரவால்ல சாப்பிடுங்க சிக்கனோட சொந்தக்காரங்க சண்டைக்கு வர மாட்டாங்க'' என ஆகாஷ் பழகும் எண்ணத்தோடு கூறிவிட்டு சிக்கனை ஒரு வெட்டு வெட்டினான்.


      ''
ரசமே போதும் அங்கிள்'' என்றவள் ஆகாஷ் பேச்சை கண்டு நெளிந்தாள். ராதை ஓடோடி சென்று சமயலறையில் ஜவ்வரிசி அப்பளம் வறுத்து எடுத்து வந்தாள்

.
       ''
அய்யா ஜவ்வரிசி அப்பளம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.”என்று சுவைத்தாள்.
        
தன்யாவோ ''மீனாவது சாப்பிடு பவித்ரா'' என்று கேட்டாள்.


         ''
வேணாம் ப்ளீஸ்.. நான் சுத்த சைவம்'' என்றாள்.


            
அஸ்வின் மிதமா சாப்பிட்டு எழுந்திட '' அஸ்வின் ரெண்டாவது வைக்கலைடா அதுக்குள்ள எந்திரிச்சுட்ட? என்றாள் ராதை.
     ''
போதும் வயிறு புல்'' என்று போனை எடுத்துச் சென்றான்.


      ''
பவித்ராவும் அஸ்வினும் சரியாவே சாப்பிடல'' என ராதை வருத்தப்பட்டாள்.
      ''
அம்மா சுவாதி வந்தா கொட்டிக்க கொடு நல்லா சாப்பிடுவா'' என்று தன்யா தனது அத்தை மகளை குறிப்பிட்டாள்.


      ''
அடி கழுதை என் தங்கச்சி பொண்ணுனா உனக்கு நக்கலா?'' என விஸ்வநாதன் அதட்டினார்.

 

   ''ராதை சுவாதி வந்தாளா? '' என்றும் இங்கு அடிக்கடி வரும் சுவாதியை கேட்டார்.
       ''
இல்லைங்க அவளுக்கு பீவர் அதான் வரல'' என்று ராதை உரைத்தார்.


      ''
'' என்று சென்றார்.
    ''
இப்ப எப்படி இருக்காமா? என ஆகாஷ் முனைப்பாக கேட்டான்.


       ''
பரவாயில்லனு அண்ணி சொன்னாங்க.  நல்லா ஆனதும் ஓடி வந்துடுவாளே!'' என்று அவரும் எழுந்தார். 

              
மெல்லிய பூகம்பம் தொடரும். 

பிரவீணா தங்கராஜ்.     

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1