முதல் முதலாய் ஒரு மெல்லிய-4


    

 💘 4

      
நாலு நாட்கள் ஓடின... ஞாயிறு வந்தது.
 பேப்பர் படித்து மடித்து வைத்த விஸ்வநாதன் நிமிர '' என்ன பவித்ரா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே?'' என்றார்.


''
இந்த சில்லுனு கிளைமேட், எனக்கு ரொம்ப பிடிக்கும் அங்கிள். அதுவும் இல்லாமல் பழகிடுச்சு.'' என்றாள் பவித்ரா.

 

    தன்னை யாரோ கவனிக்கின்றனரென உணர பால்கனியைப் பார்க்க அஸ்வின் அறையில் இருந்த திரைசீலை அசைந்தது.
தனு எழுந்தப் பின் ஆகாஷ், சுவாதியும் வந்து விட அரட்டைக்கு பஞ்சமின்றி இருந்தன. அஸ்வின் மட்டும் வெளியேச் செல்ல, ஆகாஷ் என்.வி வாங்க கடைக்குச் சென்றான்.


டிவியில் நிகழ்ச்சி போர் அடிக்க யாருக்கு என்ன படம் பிடிக்கும் என தனு, சுவாதி, பவித்ரா கூடிப் பேசினார்கள்.

 

  தனுவோ '' ரெண்டு அண்ணா ரூம்லயும் நிறைய மூவி கலெக்சன்ஸ் இருக்கும் வாங்க போய் பார்த்து எடுத்துட்டு வரலாம்'' னு ஐடியா கொடுக்க சுவாதியும் ஆமோதித்தாள்.


ராதையோ ''போ பவித்ரா நீ இன்னும் மேல ரூமைப் பார்க்கலை போய் பாரு'' என அனுப்பினார்.


கீழே கேட் திறந்தாள் கொஞ்சம் தோட்டம் நாலு இருக்கை, சற்று தள்ளி கார் பார்க்கிங், வீட்டிற்குள் நீண்ட ஹால், ஹாலின் வலது பக்கம் கிச்சன், பூஜை அறை, ஹாலின் இடது பக்கம் ராதை-விஸ்வநாதன் அறை, தனு-பவித்ரா இருக்கும் அறை, நடுவில் படிக்கட்டு மேலே செல்ல அஸ்வின் அறை, ஆகாஷ் அறை நடுவில் மாடி செல்லப் படிக்கட்டு, ஒவ்வொரு அறையிலும் அட்டச்பாத்ரூம் என கட்சிதமாக இருந்தன.


முதலில் ஆகாஷ் அறையில் நுழைந்தனர். அங்கங்கே துணி, சார்ஜர், கட்டிலில் தலையணை எங்கோகிடக்க, பெட் ஸீட் சுருட்டி கிடந்தன. பால்கனியில் மணி பிளானட் மட்டும் இருந்தன. தனுவும் சுவாதியும் , ஆகாஷின் பட கலெக்சன் புரட்டி பார்த்து எல்லாம் போர், பார்த்த மூவி வாங்க அஸ்வின் அண்ணா ரூம்கு போகலாம்.' என அஸ்வின் ரூமுக்கு வந்தனர்.

 
பெரும்பாலும் அஸ்வின் அறைக்குள் யாரையும் விடமாட்டான். அதனாலே தன்யா வர விரும்புவது.

    நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்ட தலையணை, பெட் ஸீட், லேப்டாப்பிற்கென தனி டேபிள், ஆடை சிதறாமல் ஆங்கரில் தொங்கியது. அலைமாரியில் புத்தகமும், மூவி தட்டும் அடுக்கி இருந்தன. தன்யா அதனை ஆராய, சுவாதி பவித்ராவின் கை பிடித்து '' பால்கனிக்கு வா லவ் பேட்ஸ் இருக்கு பார்க்கலாம்'' என அழைத்துச் சென்றாள்.

 

   லவ் பேட்ஸ் கீச்சிட சிறகுகள் படபடத்தன அதன் அருகே காற்றில் அசைந்தாடும் மணி தொங்க விடப்பட்டு இருந்தன. இள மஞ்சள் ரோஜாவும், சிவப்பு நிற ரோஜாவும் பூத்து இருந்தன.


''
பவித்ரா புக் வேணும்னு சொன்னியே வந்து எடுத்துக்கோ'' என்று தனு அழைக்க, திரைசீலையை சுவாதி தள்ள, கட்டில் அருகே இருந்த சுவரில் பெரிய புகைப்படம் கண்ணில்பட்டது. ஒரு பெண்ணின் பின் உருவம், அழகாக தாவிக் காற்றில் அசைந்தாடும் வாஸ்து மணியை அடிக்கும் விதமாகயிருந்தன. அந்த பெண் இளசிவப்பு நிற சுடிதார் அணிந்து, நீண்டத் தோல் பை மாட்டி, பையில் திராட்சை கீ-செயின் தொங்கிட உன்னிப்பாகக் கவனிக்கத் திடுக்கிட்டாள்.

 

அது அவள் மாலில் அணிந்த ஆடை, அவள் பை, கீ-செயின் என நினைக்கும் போது, '' ஐயோ அஸ்வின்'' என்ற சுவாதி சத்தம் கேட்டு திரும்பினாள்.

    அஸ்வின் கைகளை மார்பின் குறுக்கேக் கட்டியவாறு கதவின் மேல் சாய்ந்து தோரணையாக நின்றான்.
''
அண்ணா மூவி, புக் எடுக்க வந்தோம்.'' என தனு மென்று முழுங்கினாள்.
''
எடுத்துக்கோ'' என்று கூறி அலமாரியில் உள்ள பொம்மையை  எடுத்து பவித்ராவை ஒரு ஆழப் பார்வை பார்த்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்தான்.

 

   கன நேரம் பவித்ராவிற்கு எல்லாம் ஸ்தம்பித்தது. அப்படினா இந்த கிப்ட் பொம்மை சுவாதிக்கு கொடுக்கலையா? பின்ன யாருக்கு? என மீண்டும் புகைப்படம் நோக்கியவளுக்கு தலைவலியே வந்து விட்டது. வேகமாக வெளியே சென்றவளை தன்யாவோ '' பவித்ரா புக் வேணாமா?'' என்று கேட்க பவித்ரா காதில் விழவில்லை .
தனு அவளுக்கு பிடித்த மூவி தட்டை எடுத்துச் செல்ல, இவன் ரூமுக்கு வந்தாலே திட்டுவான் இப்ப அமைதியா இருக்கான் என்ற யோசனையில் சுவாதியும் தனு பின்னால் சென்றாள்.

 
சந்தோஷ மன நிலையில் அஸ்வின் கதவைத் தாழிட்டு மெத்தையில் விழுந்து சுவரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து, ‘உன்னை உனக்கே அடையாளம் தெரிஞ்சுதா? இல்லையா ? பவித்ரா . முதல்ல என்ன ஞாபகம் இருக்கா? இல்ல இப்பவாது ஞாபகம் வந்ததா? உன்கிட்ட எப்ப என் காதலை சொல்வேன்னு இருக்கு, நம்ம காதலா எப்ப மாறும்.’’ என்று மாலில் நடை பெற்ற அவர்களது அன்றைய சந்திப்பினை நினைத்துப் பார்த்தான்.
அஸ்வினது தோழன் கார் பார்க் செய்ய சென்றிட, அஸ்வின் லிப்ட்டில் ஏறினான். லிப்ட் மூடும் சமயம் பவித்ரா உள்ளே நுழைந்தாள். லிப்ட்டில் மட்டும் அல்ல அஸ்வின் மனதிலும். லிப்ட்டில் கூட்டம் அதிகரிக்க அஸ்வின் அருகே சேர்ந்து நிற்க அவன் மனதில் தேவதையோடு சஞ்சரிக்கும் கிறக்கம் ஏற்பட்டது.


பவித்ரா தொலைபேசி சினுங்க ''ஆ சொல்லு நித்தி பிப்த் பிளோரா ஓகே வர்றேன்'' என அணைத்திட, மூன்றாம் தளம் இறங்க வேண்டியவன் அவளோடு ஐந்தவது தளம் சென்றான்.


கிப்ட் பகுதில் ஒரு பெண் ஹாய் சொல்லி பவித்ராவை கை காட்ட அவளோடு பரிசு தேர்தெடுக்க முனைந்தாள்.

 

   அஸ்வின் அவளையே பார்த்துக் கொண்டு வர அதே நேரத்தில் பவித்ராவும் பார்க்க விழிகள் மோதிக் கொண்டன. பவித்ரா திரும்பிக் கொண்டு வேறு இடம் நோக்கி நகர்ந்தாள்.

 

    அஸ்வின் அங்கிருந்த பொம்மையில் '' வில் யூ மேரீட் மீ'' என்ற வாசகம் கொண்ட இதயத்தை ஒரு ஆண் ஒரு கால் மடித்து , ஒரு பெண்ணிடம் கொடுப்பது போல இருக்க, அதை எடுத்துக் கொண்டு திரும்ப பவித்ராவும் திரும்பப் பார்வைகள் மீண்டும் சந்தித்தது. பவித்ரா தன் தோழியிடம் ''போலாமா?'' என்றாள்.


லிப்ட்டில் செல்லும் வழியில் இருந்த காற்றில் அசைந்தாடும் வாஸ்து மணியினை குதித்து அடித்து விட்டு லிப்ட்டில் ஏறினாள். அப்பொழுதுதான் அஸ்வின் புகைப்படம் எடுத்தது. கிப்ட்டையும், அந்த வாஸ்து மணியையும் பில் போடா கீழே கொடுத்தனுப்ப சொல்லிவிட்டு அவளை தேடி கீழே வந்தான்.   மூன்றாம் தளத்தில் ஏற்கனவே வாங்க வேண்டிய பொருட்கள் இருக்க அதை எடுத்துக் கொண்டு பவித்ராவை நோட்டம் விட்டான். நைல் போலிஷ், பிந்தி, ஸ்டட் என வாங்கித் திரும்ப அஸ்வினைக் கண்டு தோழியிடம் ''சீக்கரம் வா பங்ஷன் லேட்டா ஆகும்'' என்று பில் போட அவசரபடுத்தினாள்.


அஸ்வினும் பின்னாடியே வந்து பில் போட நிற்க, பவித்ரா அவளது பொருட்களுக்கு பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டு வேகமாக வெளியேறி ஓடி மறைந்தாள்.

அஸ்வின் வேகமாக வந்தும் அவள் இல்லாது சோர்வுற்றான்.
பார்க் செய்து விட்டு வந்த நண்பன் ''என்னடா அதுக்குள்ள பெர்ச்சஸ் பண்ணிட்ட, பார்கிங்க்ல செமக் கூட்டம்'' என்ற பேச்சு காதில் விழவில்லை.


அன்று மனதை தொலைத்த அஸ்வினுக்கு தன் வீட்டில், தங்கை தனு அறையில் பவித்ராவைக் கண்டு சந்தோஷத்தில் கால்கள் வேகமாக மாடிக்கு ஓடி மகிழ்ச்சி அடைந்தான்.

 

மேலும் இங்கு படிக்க வந்து இருப்பதும் தந்தை தன்னிடமே ப்ரின்சிபாலிடம் ரெகமண்டஷன் செய்ய சொல்ல, தானே ட்ராப் செய்யக் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான்.


ஒரு வாரம் ஆனா போதும் எவ்வித காதல் ஜாடையும் வெளிப்படுத்த இயலாது தவித்தான். பவித்ராவுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லையென பொறுத்தான். இன்று அவள் உடை, பை, கீ அவள் விளையாடி மகிழ்ந்த வாஸ்து மணி, ஏதேனும் தன்னை நினைவுபடுத்தினால் நல்லது என மனம் தத்தளித்தது. பவித்ரா தன் அறைக்குள் வந்து அவள் பாதம் பட்டதை எண்ணி மகிழ்ந்தான்.


''
என்னாச்சு பவித்ரா? புக் எடுத்துக்கலையா? சரி வா மூவி பார்க்கலாம்.'' என தனு அழைத்தாள்.
''
இல்லை தனு தலை வலிக்கு நான் வரல நீ போ.'' என்று மறுத்து படுத்து கொண்டாள்.
''
சரி, ரெஸ்ட் எடு.'' என்று தொந்தரவு தராமல் ஓடினாள்.


பவித்ராவின் நிலையோ அஸ்வின் மனநிலைக்கு முரணாக இருந்தது.

    மாலில் பார்த்ததே இவனுக்கு ஞாபகம் இல்லையென நினைத்த பவித்ராவுக்கு தன்னை புகைப்படம் எடுத்து தனி அறையில் சட்டமாக மாற்றி இருப்பதை பார்த்தப் பின் குழப்பமே அதிகரித்தது. அந்த புகைப்பட பெண் தான்தானா? இல்லை அதே சுடிதார் அணிந்த வேறு பெண்ணா? தன்னை விரும்புவதாக இருப்பின் இத்தனை நாளாய் அவனே வலிய வந்து நட்புக் கரம் நீட்ட வில்லையே?!


அன்று லிப்ட்டில் பார்த்த போதே அவன் பார்வை வீச்சு தாங்காது ஓடி வந்தேன். என்ன பார்வை அது? கிப்ட் வாங்கி பில் போடும் போதும் அவன் அருகாமை ஏதோ செய்ய அங்கிருந்து சீக்கிரம் வெளிவந்து அந்த எண்ணத்திற்கு கடிவாளம் இட்டாளே! இது என்ன திரும்பவும் 'கரை தொடும் அலை போல' இது என்ன விதியா?

 

   எதுவாக இருப்பினும் மனதை அலைபாய விடக்கூடாது தந்தைக்கும் விஸ்வநாதன் அங்கிளுக்கும் அவப்பெயர் வர விடக் கூடாது என்று மனதில் வலுத்துக் கொண்டாள்.


நேரம் கழிய ராதை வந்து ''என்னாச்சு பவித்ரா தலைவலி இப்ப எப்படி இருக்கு?
''
பரவாயில்லை ஆன்ட்டி''


''
சாப்பிடவாம்மா  எல்லாம் சரியாகிடும்.''
''
ம் '' என்று சாப்பிட அமர்ந்தாள்.


அஸ்வின் கண்கள் பவித்ராவை ஊடுருவ, பவித்ராவோ தட்டையேப் பார்த்துச் சாப்பிட ராதை அவளுக்காக பருப்பும் சேனை வறுவலும் செய்ததை சாப்பிட்டு முடித்தாள். பவித்ராவுக்கு தான் அஸ்வினின் பார்வை கண்டு 'என்ன பார்வை அது?’ என்றதற்கு விடை கிடைத்தது. 


மெல்லிய பூகம்பம் தொடரும். 

பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு