முதல் முதலாய் ஒரு மெல்லிய-13

 


  💘 13

அடுத்த நாள் கல்லூரி முடிந்து வீடு வந்து தயாரானாள். பாதைகள் எல்லாம் நன்கு தெரிந்துக் கொண்டாள். பழகிய தெருக்களாக மாறியதால் நடந்துப் போக முடிவு எடுத்தாள்.


ஆகாஷ் ராதையிடம் கூறுவது போல் பவித்ராவிடம், ''அம்மா அந்த ஸ்ரீராம் நம்ம அஸ்வினோட கிளாஸ் மேட். ஆனா அஸ்வினுக்கு அவனுக்கும் ஆகாது, காலேஜில பஸ்ட் இயர் எதுக்கோ முட்டிகிச்சு, ஏன் ஒரு ஹலோ சொல்லற அளவுக்கு கூட தோழமை இல்லை. ஏதோ சொல்லனும்னு தோனுச்சு''
பவித்ரா இயல்பாக ''போய்விட்டு வர்றேன் அத்தை'' என்றாள்.


''
சரிம்மா பார்த்துப் போ'' என்ற ராதைகுள் சிறு கலக்கம். ஒரு தெரு நடந்து செல்ல அவளது அருகே ஸ்ரீராம் கார் நின்றது.


''
வீட்டிற்க்கே வந்து பிக் அப் பண்ணி இருப்பேன். பட்.. ஏறு'' என புன்னகைத்தான்.


ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்திலே ''அஸ்வினும் நீயும் சேம் கிளாஸ்ல படிச்சிங்களா?''


''
ஆ ...ஆமாம்'' என சொல்கையில் அவன் புன்னகை மாயமானது''


''
அன்னிக்கே ஏன் சொல்லல'' என்றாள்.


''
இதே கேள்வியை அஸ்வின்கிட்ட கேட்டியா?'' என்றான் அவனும்.


''
இல்ல. ஆகாஷ் வரும் போது தான் சொன்னார். உங்கிட்ட கேட்பது போல அஸ்வின்கிட்ட என்னால கேட்க முடியாது. முடிந்தளவு அஸ்வினிடம் பேசாம இருக்கறேன்'' என்று கூறினாள்.


ஓர் ஹோட்டலில் கார் நின்றது. கார் பார்க்கிங் செய்தான்.
''
என்ன சாப்பிடற?''


''
நீ தான் இன்விட் பண்ணினது. நீ தான் மெனு சொல்லணும். எனக்கு இது மாதிரி வந்து சாப்பிட்டு பழக்கம் இல்லை'' பேரர் மெனு கார்டு நீட்டினார்.


''
ஓகே, இங்க சூப் டேஸ்ட்டா இருக்கும். சிக்கன் சூப் சொல்லட்டா?
''
ஐயோ, நான் நான்வெஜ்'' என்று பதறினாள்.

 “இதுவேறயா ம்ம் ...ஓகே ஒன் வெஜ் சூப் , ஒன் மட்டன் சூப், ஒன் மஸ்ரூம் பிரியாணி, ஒன் சிக்கன் பிரியாணி , மட்டன் கிரேவி , காலிபிளார் பிரை ஓகே'' என்றதும் வெய்ட்டர் சென்றார்.
''
உனக்கு சொந்த ஊர் தஞ்சை தானே?'' என்று கேட்டான்.


''
ஆமாம், அப்பா அங்கே தான் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ், அம்மா ஹோம்மேக்கர், தம்பி ஊட்டியில டென்த் படிக்கிறான். தாத்தா, பாட்டி, ஆச்சி வீட்ல இருக்காங்க, நான் இங்க... உனக்கு?'' என்று அவனை பற்றியும் கேட்டாள்.


''
ம்ம்.. அக்கா, மாமா இரண்டு பேரும் டாக்டர்ஸ், ஆஸ்திரேலியாவில் இருக்காங்க. நான் அப்பாவோட கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் கான்டினுயூ பண்றேன். அப்பா அம்மா ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பிளஸ் ஒன் படிக்கும் போது இறந்துட்டாங்க. எனக்கு பிரென்ட் இருக்கான், அப்பறம் இப்ப நீ.... லைப் ஸ்மூத்தா போகுது. இங்க லைப் எப்படி இருக்கு'' என்று சென்னை நகரம் பற்றி அறிய ஆவலாய் கேட்டான்.


''
போகுது...'' என பவித்ரா ஒரு விரக்திச் சிரிப்போடு சொல்ல கவலையாய் மாறினாள்.


''
என்னாச்சு?'' என்றான்.


''
அஸ்வின் எனக்கு ப்ரொப்போஸ் பண்ணி இருக்கான், நான் படிச்சு முடிஞ்சு போகிறதுகுள்ள நான் அவனை விரும்பிடுவேன்னு சேலன்ஜ் பண்ணி இருக்கான், எனக்கு அவனை பார்க்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு'' என்று கூறவும் ஸ்ரீராம் கண்கள் உற்று நோக்கியது.


''
ஏன்... என்ன பயம்?'' என்று அறிந்திடும் எண்ணம் அதிகம் இருந்தது.


''
அவன் லவ் உண்மையானது. மூன்று மாசம் முன்னாடி என் போட்டோ எனக்கே தெரியாம எடுத்து அவன் பெட் ரூம்ல மாட்டி இருக்கான், இப்ப ப்ரெசென்ட் போட்டோ ஒன்னு அவன் பர்ஸ்ல பார்த்தேன். ரொம்ப டீப்பா இருக்கான் அதன் பயமே!''
இடையில் வந்த உணவை உண்டார்கள்.


''
நீ கூப்பிட்டதும் அங்கிள்கிட்ட பெர்மிஸ்சன் கேட்க பயந்தேன் ஆனா கேட்டதும் ஓகே தாராளமா போம்மா என்று சொல்லிட்டார் ஆச்சர்யமா இருக்கு'' என்றவளின் பேச்சில் நீரை சிரிப்புடன் பருகிவிட்டு ஸ்ரீராம் தொடர்ந்தான்.


''
உங்க அங்கிள் ஏற்கனவே நான் வந்த பிறகு தான் சாப்பிடுவேன்னு அடம் செய்து நீ சாப்பிட்டதால் அடுத்த நாளே என்னை பற்றி விசாரிக்க செய்துட்டார். அதுவும் அப்பா பிரென்ட் ரகு அங்கிள்கிட்டயே..'' என்றான்.
''
ஓ அதான் என்னை தாராளமா போ என்று சொன்னாரா? ரகு அங்கிள்?''
''
ம் ரகு அங்கிள் என்னை எப்படியும் நல்ல பையன் என்று சர்டிவிக்கேட் கொடுத்து இருப்பார்'' என்று கூறி உணவை விழுங்கினான்.


''
சாரி... விஸ்வநாதன் அங்கிள் என்னை அவர் குடும்ப உறுப்பினரா பார்க்கின்றார் அதான் உன்னை பற்றி விசாரிச்சு இருப்பார் தப்பா எடுத்துக்காதே ராம்''


''
நோ நோ நானா இருந்தாலும் விசாரிச்சு தான் இருப்பேன். இதுல தப்பு சொல்ல முடியாது'' என்றவன் உணவினை முடித்தார்கள்.


''
ஜூஸ்''


''
வயிறு பூல் ராம்''


''
ஐஸ்கிரீம்?''


''
ம் ஓகே.'' என்றாள்.


''
ஐஸ்கிரீம் என்றால் மட்டும் வயிறுல இடம் இருக்குமே இந்த பொண்ணுங்களுக்கு'' என சொல்ல சிரித்து உண்டனர்.


ஸ்ரீரமே ட்ராப் செய்து திரும்பினான். பவித்ரா வந்ததும் அஸ்வின் அறையை ஏறிட்டாள். அவன் இன்னும் வரவில்லை. சரியாக ஆறு முப்பதுக்கு வந்து விடுபவன் இன்று எட்டு முப்பது ஆகியும் வரவில்லை. ஒரு வேளை ஸ்ரீராம்வோடு நான் சென்றது பிடிக்கவில்லை போல என நினைத்தாள்.


மெல்லிய பூகம்பம் தொடரும். 

 பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1