முதல் முதலாய் ஒரு மெல்லிய-9


 💘9

       ஆடை மாற்றி வந்தவளை பார்த்து ''போகலாமா?'' என்று கேட்க கார் கிளம்பியது. பின்னரே, ''உங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும்?'' என்று கேட்டாள்.


கொஞ்சம் நேரம் எடுத்தே, ''அன்னைக்கு காலேஜில உங்க அங்கிள் பெயர் சொல்லி கூப்பிட்டாங்க தட்ஸ் இட்'' என்றான். 
''
'' என்றவளுக்கு இத்தனை நாள் கழித்து நினைவு வைத்திருகின்றானே என அதிசயித்தாள்.

 
''
உங்க பெயர் என்ன?'' என்று அறிந்திடும் ஆவல் பிறக்க கேட்டாள்.


''
அப்பாடி இப்பவாது கேட்டிங்களே...'' என சிரித்தான்.


தனக்கு இவ்வளவு உதவி செய்தவன் பெயரை தாமதமாக கேட்ட தன் நிலையை நினைத்து வருந்தினாள்.


''
என் பெயர் ஸ்ரீராம். நம்ம காலேஜில எம்.பி.ஏ கரெஸ்ல பண்றேன்.'' என்று கூறினான்.


''
'' என்றவள் சற்று நேர அமைதிக்கு பிறகு “இந்த வீடு தான்” என்று குறிப்பிட அஸ்வின் வீட்டில் கார் நுழைந்தது.


''
ரொம்ப நன்றி இத லைப் லாங் மறக்கமாட்டேன். வீட்டுக்கு வந்துட்டு போங்க, அங்கிள், ஆன்ட்டி சந்தோஷப்படுவாங்க'' என்று அழைத்தாள்.


''
இட்ஸ் ஓகே, நெக்ஸ்ட் டைம்...'' என மறுத்தான்.


''
ப்ளீஸ்'' என்று கண்கள் சுருங்க கேட்கவும் '' சரி'' காரை நிறுத்தி விட்டு அவளோடு சேர்ந்து வந்தான்.

 

கார் நுழையும் போதே, அனைவரும் உள்ளிருந்த பவித்ராவை கண்டு நிம்மதி அடைந்தனர்.


அஸ்வின் வேகமா சென்று பவித்ராவின் கன்னத்தில் 'பளார்' என அறைந்தான். அதை கண்டு எல்லோரும் ஒரு நொடி ஸ்தம்பித்து போயினர்.


''
எங்கடி போன என்னை சாகடிச்சுட்டு. ஒரு போன் பண்ணி சொல்ல தோணல, நீ எல்லாம் எதுக்குப் படிச்சு கிழிக்கிற, இங்க எல்லோரும் நீ இல்லாமல் தவிச்சுக்கிட்டு இருக்கோம்'' என அடித்து விட்டு கூறியதும் தான், அஸ்வின் சுய உணர்வு பெற்றான்.

இதயம் வேகமாக அடித்துக் கொள்ள, கண்கள் குளமாயின பவித்ராவுக்கு.


அருகே இருந்த பூந்தொட்டி மீது விழுந்தவள் கன்னத்தைப் பிடித்தப் படியே, என் பிரென்ட் நித்யா வீட்டுக்கு போனேன். திரும்பி வரும் போது வழி தெரியாம மாட்டிகிட்டேன், இரண்டு பேர் என்கிட்ட தப்ப நடக்க முயற்சி பண்ணினப்ப, என் போனை மிஸ் பண்ணிட்டேன். அவங்ககிட்ட இருந்து தப்பி வந்தப்ப ஸ்ரீராம் கார்ல மோதிட்டேன். அவர் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தார். எனக்கு யார் நம்பரும் தெரியாது. அதான் போன் பண்ணல'' என விசும்பலோடு முடித்தாள்.


அஸ்வின், ஸ்ரீராமை பார்த்து விட்டு தலையை பிடித்து கொண்டு அப்படியே படிக்கட்டில் அமர்ந்தான்.

விஸ்வநாதன் ராதையைப் பார்த்து ''பவித்ராவை உள்ள கூட்டிட்டு போ'' என்று கூறினார்.


''
ஸ்ரீராமை உள்ள வந்துட்டு போக சொல்லுங்க அங்கிள்'' என்றாள் பவித்ரா.


அஸ்வின் பவித்ராவை முறைக்க ஸ்ரீராம் ''இட்ஸ் ஓகே பவித்ரா. அங்கிள் நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம். பவித்ராவை பார்த்துக்கோங்க, ரொம்ப பயந்து போய் இருக்காங்க'' என விடைப் பெற்றான்.

 ஸ்ரீராமுக்கு நிச்சயம் அஸ்வின் அவனை ‘வா’ என அழைக்க மாட்டான் என அறிந்து அவ்விடம் விட்டு வேகமாக நகர்ந்தான்.


''
அங்கிள் உங்க பையனை அவரை கூப்பிட சொல்லுங்க, உள்ள வர அலோ பண்ண சொல்லுங்க. எனக்காக இவ்வளோ தூரம் வந்து விட்டுட்டு போறாருல'' என எடுத்துரைக்க அஸ்வின் வேகமாக மாடிக்கு சென்று தன் அறைக்கதவை ' படார் 'என சாற்றினான்.


ராதை, பவித்ராவை அணைத்து வீட்டில் சோபாவில் உட்கார வைக்க பவித்ரா தன் இடது கன்னத்தை பிடித்தபடி வந்து அமர்ந்தாள்.


''
ஏன் அங்கிள் எனக்கு இவ்ளோ ஹெல்ப் பண்ணியவரை உள்ளே வர வச்சி ஒரு டம்ளர் தண்ணீராவது கொடுத்திருக்கலாம்''


விஸ்வநாதனுக்கு பவித்ரா கூறியது சரி எனப்பட்டாலும் அஸ்வினுக்கு பயந்தே அமைதியானார் இவ்வளவு நேரம் வார்த்தையால் சாடியவர் அல்லவா.


ராதை பழச்சாறு கொண்டு வந்துக் கொடுக்க ''எனக்கு எதுவும் வேணாம்'' என மறுத்து விட்டாள். விஸ்வநாதன் 'சற்று பொறு' என செய்கையால் கூறினார்.


சைக்கிள் நிப்பாட்டி ''செம பசி'' என வயிற்றை பிடித்து, தன்யா பவித்ரா அருகே அமர்ந்தாள்.


''
என்னாச்சு யார் உன்னை இப்படி அடிச்சது? அம்மா... பவித்ரா கன்னத்தை பார்றேன். அப்பொழுது தான் கவனித்தனர். கன்னத்தில் விரல் பதிந்து இருப்பதை, எல்லோரும் அமைதியாக இருக்க, தனுவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.
இதை எல்லாம் மேலிருந்து கேட்டுக் கொண்டு இருந்த அஸ்வினுக்கு அவளை அறைந்தக் கையை வெட்டி விடலாம் போன்ற உணர்வு.

வந்த கொஞ்ச நாட்களிலே தான் விரும்பும் பெண்ணை அடித்துவிட்டோமே. அவளது பட்டுக் கன்னத்தில் கைப்பதியும் அளவிற்கு அடித்து விட்டதை எண்ணி மனம் ரணமாக வாட்டியது அவனுக்கு. 


பின் சாப்பிட கூப்பிட்டும் வர மறுத்து விட்டாள். அஸ்வினும் சாப்பிடாமல் உறங்க சென்றான்.


பவித்ரா உறக்கத்தில் அலற, முதல் ஆளாக அஸ்வின் ஓடி வந்து நின்றான். ராதையிடம், ''அம்மா இன்னிக்கு நைட் கூடவே இருங்க'' என்றதும் பவித்ரா தலையை வருடி விட்டு ராதை அங்கே உறங்கினர். அஸ்வின் தூக்கம் தொலைத்தவனாக இருந்தான்.

                 

      மெல்லிய பூகம்பம் தொடரும். 

பிரவீணா தங்கராஜ்.            

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு