பஞ்ச தந்திரம்-1
தந்திரம்-1
இடம் : மெரீனா கடற்கரை
தன்னந்தனியா அங்குமிங்கும் மக்களை பார்த்து கொண்டிருந்தாள் அவள். இந்த பரந்த கடற்கரையில் இவளை போல தனியாக யாரும் கடற்கரை ரசிக்க வந்திருப்பார்களா என்று கணக்கெடுத்தால் நிச்சயம் புள்ளிவிவரப்படி பூஜ்ஜியமாக காட்டலாம். ஆம் அவள் வயது அப்படி.
ஆறு வயதானவள் தனியாக கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்.
அவள் வயதிற்கு மணலில் வீடுகட்டி மகிழலாம். இல்லையென்றால் சிப்பி பொறுக்கி குதுகலிக்கலாம், இரண்டுமில்லையென்றால் கடற்கரை அலையில் கால் நனைத்து நுரையோடு விளையாடி சிரிக்கலாம்.
எதையும் செய்யாமல் இந்த கடல் நீரில் மூழ்கினால் எப்படி மூச்சடைக்கும். மேலே எழும்பால் நீருக்குள் மூழ்கி இழுத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போகுமோ என யோசித்துக் கொண்டிருந்தாள்.
இந்த வயதில் இந்த எண்ணம் கூடாது தான். ஆனால் சிந்தித்திருந்தாள் குழந்தையவள்.
அருகேயிருந்த பெண் மெலிதாய் சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் குழந்தை(சிறுமி) தனுஜா.
ஏதோவொரு ஆர்வம் மேலோங்க தனுஜா மெதுவாய் பக்கவாட்டு பக்கம் விழியை செலுத்த மாடர்ன் யுவதியாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.
கண்ணில் காஜோல் போட்டிருந்தாள் அது அவளை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய அழகை, அவளுக்கு ஈட்டியது. தோள்வரை புரண்ட கூந்தல் அலைப்பாய்ந்தது. அதுவும் இந்த புயலில் வீசிய பேரலைகள் அவளின் சிகையை முகமும் நெற்றியிலும் கொஞ்சியபடி இருந்தது.
கடற்கரையில் காதலனோடு காலார இவள் நடக்க அந்த மணற்பரப்புகள் சர்க்கரையாக மாறி தாங்க காத்திருக்கும் இளமையும் அழகிற்கும் சொந்தமானவள்.
*Nainika* நைனிகா என்ற டாட்டூவை இடது கையில் மணிக்கட்டிற்கு கீழே குத்தியிருந்தாள்.
தனுஜா அதை தான் விநோதமாக பார்த்தாள்.
நைனிகா சிரிக்க தனுஜா சட்டென திரும்பி கொண்டாள். நைனிகாவோ தனுஜாவின் கியூட் திருப்பலில் தன்னை மறந்து சிரித்தாள்.
குழந்தையாவே இருந்திருக்கலாம் என்று ஏக்கமாய் தனுஜாவையே நோக்கினாள்.
இந்தயிடம் விட்டு எப்போது தனுஜா செல்வாளென காத்திருந்தாள். நைனிகாவிற்கு அவசரமாய் தற்போது உயிர் நீத்திட வேண்டும். அவளுக்கு இந்த பூமியில் வாழ பிடிக்கவில்லை. இந்த வயதில் என்றால் காதல் காரணமாக இருக்குமென்று உங்கள் யூகம் இருந்தால் அதுவும் ஒரு காரணமே. ஆனால் அது மட்டும் காரணமல்ல...
தனுஜா நைனிகாவை தாண்டி சற்று தள்ளி மணலில் விளையாடிய பாப் கட்டில் இருந்த பெண்ணை கண்டாள். ஒரு பெரிய சாக்லேட் கவரை கையில் வைத்து தட்டிக்கொண்டிருந்தவள், தனுஜாவை பார்த்து வேண்டுமா என்று கேட்க தனுஜா ஆசையாய் சாக்லேட் கவரை பார்வையால் வருடினாள்.
அந்த பாப்கட் பெண்ணோ தனது ரஞ்சனா என்ற கீசெயின் தொங்கிய கைப்பையில் வைத்து 'கண்ணை நோண்டிடுவேன் திரும்பு' என்பது போல விளையாடினாள். நிச்சயம் இவள் தான் ரஞ்சனாவாக இருக்க வேண்டும்.
தனுஜாவுக்கு கவலையாய் இடது பக்கம் திரும்பினாள்.
தனுஜாவையே பார்த்தபடி ஒரு சேலையணிந்த பெண் கண்ணீர் வடித்தபடி இருக்க தனுஜா பார்க்கவும் விழிநீர்படலத்தை துடைத்தாள்.
வட்ட முகமும் சின்ன பொட்டும், இடைவரை வளர்ந்த கூந்தலில், மல்லிகைப்பூ இன்னமும் வாசம் வீசியது.
தனது மாங்கல்யத்தை விட வேதாந்த் திரிஷ்யா என்று இதயவடிவ செயினில் பெயரை தாங்கிய அப்பெண்ணவள் மீண்டும் தனுஜாவை தான் பார்வையிட்டாள்.
சுற்றிமுற்றி பார்த்துவிட்டு "அம்மா அப்பா எங்கே? ஏன் தனியா இருக்க?" என்று கேட்டாள் திரிஷ்யா. தனுஜாவோ மீண்டும் தனது இரு கைகளையும் குறுக்கி கொண்டு குனிந்தாள்.
ஏன் எல்லாரும் என்னையே பார்க்கறாங்க? ஏன் சிரிக்கறாங்க? இங்கயிருந்து போக மாட்டாங்களா? என்ற கேள்வியை வைத்து திரும்பினாள்.
ஒரு முதிய பெண்மணி மெதுவாய் தன்னிலை மறந்து கடற்கரையை நோக்கி மெதுவாக கடலை வெறித்து நடந்தார். நிச்சயம் 60 65 வயதுக்கு மேல் இருக்கும். நரைமுடி அதிகப்படியாகவே இருந்தது. சின்னதாய் பார்டர் வைத்த பட்டு சேலை அணிந்திருக்க நிச்சயம் நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்மணி என்று கூறிடலாம். ஆனால் முகமோ வாடியபடி, வாழ்க்கையை வெறுத்தபடி இருந்தது.
அம்முதியவளோ கடலலையில் கால் வைத்து கடலுக்குள் நடந்தார். தனுஜா கண்களை விரித்து அந்த பாட்டியை பிடிக்க ஓடினாள்.
தனுஜாவையே அடிக்கடி பார்த்திருந்த திரிஷ்யா, ரஞ்சனா நைனிகா மூவரும் குழந்தை கடலுக்குள் ஓடவும் அவளின் செய்கைக்கு காரணம் பார்த்து அவர்களும் ஓடினார்கள்.
அந்த முதிய பெண்மணியை, தனுஜாவின் பிஞ்சு கைகள் இழுக்கவும் தன்னிலை உணர ஆரம்பித்தார் அம்முதியவள்.
தனுஜா நீரில் அடித்து செல்ல போகும் தருணம் திரிஷ்யா அவளை தூக்கிவிட்டாள்.
ரஞ்சனாவோ "ஓ மை காட் என்ன பண்ணறிங்கமா." என்று அந்த முதிய பெண்மணியை இழுத்து வந்து கடற்கரை மணலில் அமர வைத்தனர்.
நைனிகா நீரை கொடுக்க வாங்கி பருகினார் அம்முதியவள்.
"டிவில புயல் என்று சொல்லியும் ஏன்மா வெளியே வந்திங்க. வந்தது வந்திங்க... கடலலை அரக்கனாட்டம் தண்ணியை அடிச்சி வீசுது. ஏன் இப்படி கடல்ல நடந்திங்க?" என்று ரஞ்சனா திட்டினாள்.
"சாகலாம்னு இருக்கற எனக்கு கடலலை என்ன புயலென்னமா?" என்றதும் திரிஷ்யா நைனிகா தனுஜா மூவருமே அதிர்ந்தார்கள். ஏனென்றால் அம்மூவருமே சாக வந்த மேதாவிகள் தான்.
ஆனாலும் இந்த சூழ்நிலையில் 'வாங்க சாகலாமென்று' ஜோடி போட மனமில்லை. ஏனோ தடுத்து பேசிட ஆறுதல் அளிக்க முடிவெடுத்தார்கள்.
"ஏன்பாட்டி சாக முடிவெடுத்திங்க. இறப்பை தேடி நாம போகக்கூடாது. அதுவா நம்மளை தேடி வரும். என்ன கஷ்டமிருந்தாலும் கடந்து போகும்." என்றாள் நைனிகா.
"சின்ன பொண்ணு சொல்லறது சரி தான். இந்த வயசுல ஏன்மா இந்த முடிவு." என்று முகத்தை சேலையால் துடைத்தாள் திரிஷ்யா.
தனுஜாவோ தன் கழுத்துவரை வந்த நீரை கண்டு பயந்து பாட்டி கையை இறுக்கமாய் பிடித்திருந்தாள். பயத்தோடு கண்ணை கண்ணை உருட்டவும் ஆரம்பித்தாள்.
"இங்க பாருங்க குழந்தை பயப்படுது. பாப்பா யாரு நீ? உங்க பாட்டியா?" என்று கேட்டாள் ரஞ்சனா.
"நான்... நான்... தனியா வந்தேன். நா.. நானும்.. சாக வந்தேன்." என்று தனுஜா சொல்லி முடித்தாள். இதுவரை ஏன் பிழைத்தோமென்ற விரக்தியில் இருந்த முதியவள் சிறு குழந்தை பேசவும் சப்பென்ற அறையை விடுத்தார்.
"என்ன பேச்சு பேசற. முளைச்சி மூனு இலை விடலை. சாகணுமாம் சாகணும்." என்று அடித்துவிட்டு அணைத்து கொண்டார்.
"உண்மையை சொல்லப் போனா நானுமே சாக தான் வந்தேன்." என்று திரிஷ்யா கூறவும், நைனிகாவோ ''வாட் எ கோஇன்சிடெண்ட்... நானுமே அதுக்கு தான் வந்தேன். என்னடா சாகலாம்னா யாரும் நகர மாட்டறாங்களே இருந்தேன்." என்று கூறவும் ரஞ்சனாவோ "ஓ... ஓ... குழந்தையை வச்சிட்டு என்ன பேசறிங்க. ஆளாளுக்கு... குட்டிம்மா.. உன் பெயர் என்ன உங்கப்பா அம்மா யாரு.?" என்று கேட்டாள் திரிஷ்யா.
"அப்பா.. தெரியாது. அம்மா..அம்மா.." என்று திணறவும் "ஓகே ஓகே அழாதே... யாருமில்லையா. நீ அப்பவே இந்த சாக்லேட் ஆசையா பார்த்த இந்தா வச்சிக்கோ அழக்கூடாது." என்று சமாதானம் செய்தாள் ரஞ்சனா.
சாக்லேட்டை வாங்கி கொண்டு "தேங்க்யூ" என்றாள் தனுஜா.
ஐவரும் அமைதியாக நின்றனர்.
"உங்கப்பெயர் என்னம்மா?" என்று ரஞ்சனா முதியவளிடம் கேட்க, "மஞ்சரி" என்றார் அவர்.
"ஹாய் ஐ அம் நைனிகா" என்றாள் நைனிகா கை நீட்டி, "ஐ அம் ரஞ்சனா" என்றாள் பாப்கட் அணிந்தவள்.
"என் பெயர்... திரிஷ்யா." என்று தன்னையும் அறிமுகப்படுத்தி கொண்டாள் திரிஷ்யா. கூடவே குழந்தையை கன்னம் பற்றி உங்க பெயர் என்ன?" என்று கொஞ்சினாள்.
"தனுஜா." என்று கூறி சாக்லேட் கவரை பிரித்தாள். "தனுஜா.. தனு" என்று தரிஷ்யா கூறி பார்த்தாள்.
மீண்டும் அமைதியானது. ஆர்ப்பரிக்கும் கடலலையும் சூறாவளி காற்றுமாய் சூழ்ந்தது.
"ஓகே.. சாகணும் முடிவெடுத்துட்டோம். இங்க இன்னிக்கு வேண்டாம். ஒருத்தரை பற்றி ஒருத்தர் தெரிந்துக்கிட்டு வலியில்லாம நிம்மதியா பாய்ஸன் வாங்கி குடிப்போம். அதுவரை நம்மை பற்றி நாம் அறிவோமே?" என்று ரஞ்சனா திட்டம் வகுக்கவும் மற்றவர்களுக்கும் முதியவர் மஞ்சரி இறக்க போனதை கண்டு உதறலெடுத்து இன்றைய இறப்பை ஒத்தி வைக்க முடிவெடுத்தனர்.
"ரொம்ப புயல் காத்து அடிக்குது. இங்கிருந்து கிளம்பலாம்." என்று நைனிகா கூற மற்றவர்களோ எங்கு செல்வதென்று தவித்தனர்.
"அட நான் தான் கேர்ஆப் பிளாட்பார்ம் பார்த்தா... நீங்களும் ஸ்டக் ஆகறிங்க. எங்கயும் போக பிடிக்கலையா?" என்று ரஞ்சனா கேட்டதும் திரிஷ்யா ஆமென்று தலையாட்டினாள்.
"ம்ம்... இட்ஸ் ஓகே என்னோட வாங்க. நான் இன்னிக்கு ஸ்டே பண்ண ஐடியா தர்றேன்." என்று அழைத்தாள் நைனிகா.
தனுஜாவின் கைகளை நைனிகா பிடித்து கூப்பிட, ரஞ்சனா திரிஷ்யா மஞ்சரி பின் தொடர்ந்தார்கள்.
ஐவரும் ஒன்றாக தங்கள் மரணத்தை ஒத்தி வைத்து இன்று வாழ முடிவெடுத்து கடற்மணலிலிருந்து உதறி நடந்தார்கள்.
இந்த மணலில் எத்தனை விதமான கால்கள் பதிந்து மீண்டதோ. அதில் இவர்களின் மனசஞ்சலமும் துகளாய் பறந்து கடந்திட முயன்றனர்.
சென்னை புயலை போல இவர்களின் வாழ்வில் நடந்த புயலை அறிய பஞ்சதந்திரங்களை அறிவோம்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
5பஞ்ச -தந்திரம்👇
த(Tha)-தனுஜா (Thanuja-6)
ந்(N)-நைனிகா (Nainika-18)
தி(Dhi)-திரிஷ்யா (Dhirishiya-27)
ர(Ra)- ரஞ்சனா (Ranjana-35)
ம்(M)- மஞ்சரி (Manjari-69)
சாவ துணிந்தவர்கள் சாவகாசமாய் அமர்ந்து சாவை பற்றி அறிந்து
ReplyDeleteசங்கடமாய் பேசி
சேர்ந்த கூட்டம்
சாவை தள்ளி வைத்து சாதிக்கப் போகிறார்களோ
wow thank u sis... keep supporting
Deleteவாவ் ! வெரி இன்ட்ரெஸ்டிங்..
ReplyDeleteரெகுலரா கடற்கரைக்கு காத்து வாங்கத்தான் போவாங்க..... பட்
இந்த பஞ்சமுகிகளும் கடல்ல காத்துவாங்க போனதோடு நமக்கு வித்தியாசமான கதையையும் கொடுக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன்.
ஆமா சகி. உங்கள் அன்பிற்கு நன்றி. வாசிக்க வாங்க. களெண்ட்ஸை எக்ஸ்பெக்ட் பண்ணுவௌன்.
Deleteஆரம்பமே செம .... ஐவர் கூட்டணி அருமை
ReplyDeleteஏன் வீணா இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினை
ReplyDeleteபுதுமையான ஆரம்பம்
ReplyDelete