உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...4

 


 

 💟 (௪) 4
          ருத்திரா என்றே மையல் சொட்டும் மித்திரன் அழைப்பில் ருத்திரன் அஞ்சி தாடி தடவி பார்த்தபடி
      ''மூடனே ... இங்கு மஞ்சரியை தவிர்த்து நங்கை எவருமில்லை..'' என்றே பேச
       ''மெய் தானாக மேடை ஏறாது அப்படி தானே பரவாயில்லை... யானே செப்புகின்றேன்.. உன் மொட்டு போன்ற செவியில் ஏற்றி கொள்... உன் ஒட்டுதல் எல்லாம் பலே தான் அதில் எல்லாம் நான் கண்டறிய இயலவில்லை.. ஆனால் சில பல பிழைகள் இருந்தது. முதல் பிழை நீ பெண் புரவியில் வந்தது.. எந்த ஒரு ஆண்மகனும் அவனுக்கு ஏற்ற ஆண் புரவியில் தான் பயணபடுவான். பிழை இரண்டு நீ என்னை தாக்கும் பொழுது பின் பக்கம் வந்தாய்.. வீரன் நல்லவனாக இருப்பின் நெஞ்சில் நேருக்கு நேர் தாக்க வருவான் கெட்டவனாக இருந்தால் தாக்கி விட்டு தான் பேச்சே ஆரம்பிப்பான்.. நீ பெண் அதனால் இது எதுவும் அறியாமல் பின் நின்று தாக்கினாய் சொன்னதும் முன்னே வந்தாய்.. அதிலே உன்னை கவனிக்க செய்தேன். புரவியில் ஏறியதும் இன்னும் கூர்ந்து ஆராய்ந்தேன்.
          அதைவிட நீயும் மஞ்சரியும் சேர்ந்து தான் ஆற்றில் காலையில் குளித்து முடித்து இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் இருவரும் சூரிய நமஸ்காரம் செய்தீர்கள் ஒரே முறையில்.. அது மட்டுமில்லை.. மிக முக்கியமான ஒன்று அவள் உன் தமையனுக்கு சொந்தமானாள்.... என்றால் நேற்று குகையில் அதுவும் ஜாமத்தில் நீ இலைகளால் செய்த மஞ்சத்தில் இருவர் உறக்கம் கொள்ள ஏற்பாடாக அமைத்து இருக்க மாட்டாய்... என்ன ருத்திரா சரி தானே?'' என்றே கேட்க ருத்திரா முகம் திருப்பி கொண்டு சென்றாள்.
              மித்திரன் அவள் அருகே வந்து ருத்திரா ''இன்னும் என்ன தயக்கம் முகமூடி அகற்றலாமே...'' என்றே அவள் முகம் அருகே கைகளை கொண்டு போக இரண்டு அடி பின் நகர்ந்தவள்.
     ''எம்மை பற்றி அறிந்த நீ உம்மை பற்றி துரும்பும் செப்பவில்லை... யார் நீ.. ஒற்றை வீரன் என்று மட்டும் சொல்லாதே.. வீரனை தாண்டி உன்னில் ஒன்று உள்ளது.. இவ்வளவு எளிதில் நாம் இங்கு வர இயலாது நீ என்ன செய்தாய்... ? நீ ஜலாம் செய்து இருக்கின்றாய்.. அப்படி என்றால் நீ தான் அந்த..''
      ''நிறுத்து உம் கற்பனை குதிரையை... நான் ஜலாம் செய்தே இங்கு உம்மையும் மஞ்சரியையும் அழைத்து வந்தேன் தான் ஆனால் தவறாக எதுவும் நிகழவில்லை.. உறுதி.. இடுகாடு இருக்க விரைவாக அழைத்து வர முடிவு செய்தேன் அவ்வளவே...'' என்றே கூற ருத்திரா அமைதியாக இருக்க மஞ்சரி அருகே போனாள்.
    ''இன்னும் என்ன ருத்திரா... தாமரை முகம் மறைக்கலாகுமோ.. உன் வெண்ணிலா முகம் காண துடிக்கின்றேன்'' என்றே சொல்ல
       ''இது உமக்காக அணிவித்து கொண்டதல்ல... எமது பணிக்காக அணிவித்து கொண்டது.. இதற்கு இன்னும் பணிகள் காத்து கொண்டு இருக்கின்றன அதற்கு மட்டுமே...'' என்றே மஞ்சரியை எழுப்ப...
      ''மஞ்சரி தற்சமயம் நித்திரை கலைய மாட்டாள். எமது மந்திரம் எம்மை விரும்பும் கண்கள் மட்டுமே ஜாலதில் முடிந்த பின் என் கட்டு பாட்டுக்குள் என் சொல்லுக்கு இணங்க கேட்டு விழித்திடும் ஆனால் மற்ற விழிகள் உறங்கும் நிலைக்கு சென்றிடும் அதனால் தான் நீ எம் குரலோசையில் உம் செவியில் கேட்டதும் விழித்திட செய்தாய்... மஞ்சரி எழவில்லை...'' என்றே சொல்ல
     ''நான் ஒன்றும் உம் மீது மையலில் இல்லை...'' என்றே சினம் பொங்க சொல்ல
     ''உம்மை ரசிக்க முடியாது தடுக்கின்றது உந்தன் கோலம்... நீயே கொஞ்சம் இரக்கம் காட்டு.. ஆண்மகன் போல வேடமிட்டு இருக்கும் உம்மை நான் இமைக்காமல் பார்க்கலாகுமோ... சொல் ருத்திரா'' என்றே சொல்ல கலகலவென ருத்திரா சிரிக்க மித்திரன்
     ''ஏதேது பொற்காசுகள் கீழே சிதறி போகின்றன... உன் கற்கண்டு சிரிப்பில்'' என்றே சொல்ல ருத்திரா மித்திரனையே இமைக்காமல் பார்த்தாள்.
       ''உம் வேடத்திற்கும் உந்தன் பார்வைக்கும் சம்மந்தம் இல்லையடி கண்ணே... எப்பொழுது தான் இந்த வேடம் கலைப்பாயோ? ஆவலாக உள்ளது. உன் முழு முக வதனம் நோக்க என்று நான் கொடுத்து வைத்து இருக்கின்றேனோ...?''
      ''எந்தன் முழு வதன முகம் பாராமலே தான் மையல் கொண்டீரோ? அது எப்படி?'' என்றே ருத்திரா வினா தொடுக்க
      ''உமது விழியில் உணர்ந்தேன் ருத்திரா... மையல் கொண்டது உந்தன் மைவிழி பார்வையால்... மஞ்சரி எம்மை விழித்து நோக்கும் பொழுது எல்லாம் உந்தன் மான்விழிகள் ஒட்டமெடுக்கும் அவளை அனல் போல உறுத்துவாய் அது எமக்குள் அருவி போல இனிமையாக இருக்கும்.. பரவசம் ஆக்கும்.
உமக்கு எந்தன் மேலும் மையல் உண்டு என்று அன்றே கண்டு கொண்டேன்... ஆனால் நீ எம்மை ஐயம் கொண்டு இருப்பதும் யறிவேன்...''
      ''ஐயம் தான்... எம்குல பெண்கள் மாயமாகும் மர்மம்... இன்று வரை அறியவில்லை... அதுவும் என் தமக்கை சமுத்ரா அவளும் மாயமானதும் எம் அரண்மனையே இருளில் மூழ்கியது போல தோன்றுகின்றது... சமுத்ரா எங்கள் அரண்மனையில் துள்ளி ஓடும் மான் அவள்... எம் குலத்தில் பிறந்த முத்தானவள்...அவளின் விழிநீர் என்றுமே கண்டதில்லை நாங்களே.. அப்படியிருக்க...'' என்றே கோவதில் இருக்கும் ருத்திராவை மித்திரன் தோளில் கை வைத்து ஆறுதல் படுத்த வந்திட அவளாகவே சற்றே தள்ளி நின்றாள்.
      ''எம்மை ஆறுதல் செய்யும் எம்மொழியும் எமக்கு தேவையில்லை.. எமக்கு வேண்டியது யெல்லாம் சமுத்ரா... எமது பயணமும் அவளை தேடியே ஒழிய வேறில்லை... எமக்கு இங்கு உம்மிடம் பேசி காதல் மயக்கத்தில் கிறங்கிட எமக்கு நேரமுமில்லை அதுக்கான காலமுமில்லை..'' என்றே சொல்லி நகர அதே நேரம் மஞ்சரி விழித்து நோக்கிட அவளின் அருகாமை சென்றே போனாள்.
      ''ருத்திரா எமக்கு என்னவாயிற்றே என்றே அறியவில்லை அடிக்கடி பயணம் செய்வதலோ என்னவோ தலை சுற்றல் ஏற்படுகின்றது... என்றே மஞ்சரி சோர்ந்து சொல்ல
     ''இருக்கும்... எதற்கும் ஓய்வெடு.. இங்கிருப்பது பாதுகாப்பை தான் கொடுக்கும்... '' என்றே அவளுக்கு ஏற்றவாறு மஞ்சனை அமைக்க போக
     ''மஞ்சரி கருவுற்று இருக்கின்றாள்... அவள் நெடுந்தூரம் பயனப்படுவது சரிவராது... என்றே குரலில் கடுமை பூசி மித்திரன் சொல்ல
     ''என்ன உளறுகின்றாய் மித்ரன்... இவள் இவள்... கன்னிப்பெண்.'' என்றே கூற மஞ்சரி திடுக்கிட்டு போனாள் ஆனால் அடுத்த நொடி மேகவித்தகனை எண்ணியும் அவனிடம் நற்செய்தி நவில களிப்பில் திண்டாடினாள்.
      ருத்திரா மித்ரன் என்ற அழைப்பில் கன்னிப்பெண் என்றதிலும் நிகழ்வுக்கு வந்தவள்
   ''அவர் சொல்லும் செய்தி முழுதும் மெய் கலப்படம் இல்லை ருத்ரா ... எமக்கும் மேகனுக்கும் திங்கள் சாட்சியாக அந்தஆம்பல் மலர் கொண்டு மாலை சூடி தாரகை யொளியில் மணம் புரிந்து கொண்டோம். அன்றைய இரவிலே எம்மை மேகனுக்கு அர்பணித்து விட்டேன்... எம்மை மன்னித்து அருள்வாய் ருத்திரா... உம்மிடம் செப்ப அஞ்சினேன் ஒழிய மறைக்கும் நிலை இல்லை துளியும் எம்மனதில்... மேகனுக்கும் எமக்கும் அதற்குள் விவாகம் நடைபெற்றிடும் என்றே மேகன் சொல்ல வேண்டாம் என்றார்'' என்றே விழியில் நீர் வழிய உரைக்க இதற்கு மேல் உற்ற தோழியிடம் கடுமை பூச ருத்திரா மனம் ஒப்பவில்லை.. தவறில் தமையனும் உடன் வேறு... என்றே எண்ணி மஞ்சரியை அணைத்து
     ''களிபடைகின்றேன் மஞ்சரி... எம் அரன்மனையில் வானவெடி வெடித்து ஊரே மகிழ பொற்காசுகள் இறைத்து தெரிவிக்க வேண்டிய செய்தியை இங்கு ஜாமத்தில் யாருமில்லாது அறிவித்து விட்டாயே... இதற்காகவே சமுத்ரா, மேகனை இருவரையும்  கண்டறிவேன்'' என்றே சபதம் செய்தாள் ருத்திரா.
        மஞ்சரி கருவுற்ற அறிந்த நிமிடம் முதல் மித்திரன் முகம் அதீத சினத்தில் சிக்கியது. இனி இவள் தமக்கு தேவைபட மாட்டாது என்றே அறிந்த மித்திரன் சினம் எல்லாம் அடக்கி கொண்டான். இனி இவர்கள் பாதை அந்த துர்வசந்திரன் வர மாட்டான்.. இனி அவனின் மற்றைய குறி யாராக இருக்கும் என்றே சிந்திக்க செய்யலான்.
            மித்திரனும் துர்வசந்திரனும் தமையன்கள். இருவருமே தங்கள் மீது மையலில் இருக்கும் நங்கைகளை மயக்கும் சக்தி படைத்தவர்கள். அப்படி மையலில் அல்லாதவர்கள் மயக்கம் பதில் நித்திரைக்கு சென்றிடுவார்கள். இரேண்டுமே ஒன்று என்றாலும் மையலில் இருக்கும் நங்கையை மயக்கும் குரலுக்கு செவி மடுத்து எழுந்து கொள்வார்கள் அவ்வளவே... நித்திரை சென்றவர் அவராக எழும் வரை எழுப்ப முடியாது.
       அதே போல சௌமித்திரனும் துர்வசந்திரனும் நங்கையின் பார்வயிலும் அவர்கள் உடலில் உபாதையை அறிந்து கொள்வார்கள். இருவர் தேடுவதும் அதிசய நட்சத்திரம் படைத்த நங்கைகளை... ஆனால் அவர்கள் கன்னி பெண்களாக இருப்பது வேண்டும் அப்படி என்றால் மட்டுமே பலிகள் ஏற்புடய செய்யும். அதனால் மஞ்சரியை இனி துர்வசந்திரன் தேட மாட்டான் என்றே மித்திரன் எண்ணி இருக்க அங்கே துர்வசந்திரன் இமை மூடி நான் தேடும் கன்னிகை எங்கே என்றே மந்திரம் உச்சரிக்க இவர்கள் இருக்கும் இடமே வந்து சென்றது.
 இவை யாவும் அறியாத மித்திரன் இனி இவர்களுக்கு துர்வனால் தீமை ஏற்பாடாது என்றே எண்ணி இவர்களை தவிர்த்து எண்ணி போக எண்ணமிட்டான்.
     மஞ்சரி என்னவாயிற்று?'' என்றே ருத்திரா அருகே வந்து கேட்க
    ''பசிக்கின்றது ருத்திரா என்னவென்றே தெரியவில்லை?''
    ''ஒரு உயிருக்கு இரு உயிர் அல்லவா அதனால் பசிக்கின்றது. பொறுத்திரு பழங்கள் கிட்டுகின்றனவா என்றே பார்க்கின்றேன் என்றே எழுந்து செல்ல மித்திரன் தடுத்து நிறுத்தி மந்திரம் உச்சரிக்க கையில் மாங்கனிகள் கிட்டியது.
     ருத்திரா ஏற்கனவே இவனின் செய்கையில் கொஞ்சம் அறிந்து இருந்த காரணத்தால் திகைப்பின்றி பார்த்து வாங்கி கொண்டாள். மஞ்சரியோ வியப்பில் மிதக்க ருத்திரா இவர்..?' என்றே கேட்க
  ''ஆம் அனைத்தும் அறிந்து கொண்டார் எம்மை பற்றி ஜாலங்கள் செய்யும் வேந்தனும் கூட''
      ''எந்த நாட்டிற்கு?''
      ''சந்திராதேச இளவரசன் வேந்தனுக்கு இணையாக தற்பொழுது பொறுப்பை சுமந்து வந்து இருக்கின்றார்'' என்றே ருத்திரா சொல்லி முடிக்க மித்திரனுக்கு ருத்திராவுக்கு எப்படி தெரியும் என்றே குழம்பி பார்த்தான்.
    தங்கள் எம்மை பற்றி வானளாவு அறிந்து வைத்தால் யாம் கடுகளவு அறிந்திருக்க இயலாதா?'' என்றே அவனின் பார்வைக்கு விடை கொடுத்தாள்.
   இப்பதிலில் மித்திரனுக்கு போதவில்லை போல.. தங்கள் நாட்டு குடிமைந்தர்களுக்கு கூட தங்களை பற்றி அறியாமல் பார்த்து கொண்ட மித்திரனுக்கு கொஞ்ச நேரம் கூட தன்னை பற்றி அறியாத பேதை இவளுக்கு எங்ஙனம் அறிந்து கொண்டாள் என்றே புரியாமல் அல்லாட ருத்திராவோ மஞ்சரிக்கு மாங்கனி கொடுக்க அவள் உண்ணும் அழகை கண்டு களித்தாள்.
     வான் தொடும் மாளிகையில் பலவித உணவில் பசியாறும் நங்கை இன்றோ இப்படி பசிக்கு என்றே கேட்டு உன்பதை கண்டு இருந்தாலும் அவளின் இப்பசி போனதை எண்ணி நிம்மதி யுற்றாள்.    
        மூடன்-லூசு (ஹாஹா)
        ஜாமம்-இரவு
        வதனம்-அழகு
        திங்கள்-நிலவு
        ஆம்பல்-அல்லி(இரவில் பூக்கும் சிவப்பு அல்லி)
        களிப்பு-மகிழ்ச்சி
       வேந்தன்-அரசன்

-விழியும் வாளும் சந்திக்கும். 

-பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு