உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...7


 💟(௭) 7     

 
                         துர்வசந்திரன் குகையின் முன் வர அவனுக்கு அங்கே பெண்ணின் வாசம் வீச குகையின் உள்ளே வந்தவன் சமுத்ரா அருகே ஒருவள் அமர்ந்து எழுப்ப செய்ய கண்டு அவளின் சிகையினை பிடித்து
      ''யார் நீ உம் நாமம் என்ன?'' என்று கேட்க மஞ்சரி அவனின் சிகை பிடிக்க அதில் வலியினை உணர்ந்து ''ருத்திரா...'' என்றே தமது தோழியை அழைக்க துர்வனுக்கு மஞ்சரியே ருத்திரா என்று எண்ணி விட அடுத்து மேக வித்தகன் வந்து நின்றதும் அவனின் வளி வேலியினை கூட அகற்றியது இவளே என்றே அதீத சினத்தில் இருந்தான்.
        என்ன அவனின் சிகை பற்றுதலில் மஞ்சரி முகம் சுழிக்க பெண்ணவள் இதற்கே இப்படி என்றால் தன் முன் எதிர்க்க நின்றாள் தோற்பது நிச்சயம் என்றே மமதையில் இருந்தான்.
      ''துர்வசந்திரா... எமது தமைக்கையை விடுவி..'' என்றே மேகவித்தகன் சமுத்ராவை சொல்ல
      ''உந்தன் ஒரு தமைக்கை தான் இவளை காப்பாற்ற வந்தவள் என்றே வெற்றி மிதப்பில் சொல்லுவாய்... எங்கே இவளை வைத்து அவளை எழுப்பு... என்றே சொன்னவன் அந்த இடமே அதிரும் வகையில் சிரித்தவன்... உம்மால் முடியாது எமது வல்லமையை எதிர்க்க ஆண் வர்க்கமே இல்லை இதில் பெண் வர்க்கத்தில் இருப்பார்களா?'' என்றே ஆணவத்தில் சிரிக்க ஒரு கூரிய அம்பு துர்வனின் தலைக்கு சற்றே உரசி சென்றது.
           துர்வன் ஒரு கணம் தலையை தடவி பார்த்தவன் அம்பு கண்டு அதனை எய்தவன் இருந்த திசைக்கு பார்வை பதிக்க அங்கே மித்திரன் அனல் கக்கும் விழிகளோடு நின்றான்.
     ''வந்துவிட்டாயா? இம்முறை எம்மை கண்டு அறிந்து விட்டாய்.... எதிரிகளும் அதிகமாக சேர்ந்தே போனார்கள். ஆனால் உமக்கே தெரியும் மித்திரனே... எம்மை கொல்ல செய்ய நீயோ இவனோ இயலாது...''
      ''மங்கை அவளை விடுவி.... அவள் தாய்மை கோலம் கொண்டவள்'' என்றே மித்திரன் சொல்ல துர்வனுக்கு இவள் தங்கள் ரத்தத்தில் பந்தமாக ஆனவளோ? எமக்கு மரணம் கொடுக்க முடிவானவள் தானா? என்றே சிந்திக்க மேகவித்தகன்
     ''கண்ணே செப்பியது எல்லாம்....''
     ''மெய் பிரபு...'' என்றே மஞ்சரி மகிழ்ந்து அவனை அணைக்க போக மேகவித்தகன் அணைத்து ஆராதழுவ
      ''இவள் உமது தமக்கை அல்லவா?'' என்றே துர்வன் கொஞ்சம் யோசனையோடு கேட்க
      ''அல்ல... இவள் எமது தர்மபத்தினி'' என்றே மேகவித்தகன் சொல்ல(அறிமுகம் மிகவும் தேவை மூடர்களே... )
     ''அப்படி என்றால் ருத்திரா என்றே அலறியது எதற்கு?'' என்றே துர்வன் கேட்க
     ''அதை யாம் செப்புகின்றோம்'' என்றே ருத்திரா பெண் உருவத்தில் காளியாக நிற்க மித்திரனோ இனியும் துர்வன் ருத்திரா அருகே இருந்தால் துர்வனுக்கு ஆபத்தாக அமையுமோ என்றே அஞ்சி போனான் மித்திரன்.
      நொடியில் துர்வன் சுதரித்தவன் அங்கே மேகனை தழுவி இருந்த மஞ்சரியை இழுத்து அவளின் கழுத்து வாள் போன்ற கூர் ஆயுதம் ஏந்தி அழுத்த ருத்திரா யோசிக்க செய்தாள்.
          மஞ்சரி தமையனின் இல்லாள் ஒரு உயிர்... ஓர் உயிரை சுமக்கும் தாய்மை வேறு... என்றே வாளினை கீழே தாழ்த்த செய்ய மித்திரனுக்கு ருத்திரா சாதாரணமாக இதனை விட மாட்டாள் என்றே அறிந்து இருந்தவன் இப்பொழுது தமையனை  அழிக்கும் வல்லமை இவளிடம் இருக்கின்றன என்றே அறிந்த பின்னர் நந்தல் குணம் என்றாலும் தமையனை காக்க மட்டுமே எண்ணினான் மித்திரன்.
         தனது காதலுக்கு முதல் சவம் தொண்டுவதை அறியாமல் போனான் மித்திரன்.
     ''அங்கே நில் பேதையே... யார் நீ?'' என்றே மஞ்சரி கழுத்தில் அழுத்தம் கொடுக்க
     ''எமது தமக்கை வசியம் செய்து நித்திரையில் வைத்திருக்கின்றாயே அவள் செப்பவில்லையா?'' என்றே ஏளனமாக நகைக்க
     ''தேவி...?'' என்றே வினாவோடு கேட்க
     ''ருத்திரமா தேவி... முழு நாமம்...'' என்றே ருத்திரா சொல்லி முடிக்க துர்வனுக்கு அப்பொழுதும் ஒரு அலட்சியம் தான் இவள் உறவில் எமக்கு எமன் இல்லை என்றே எண்ணியபடி யோசித்த நொடி துர்வன் அசர ருத்திரா வாள் வீச துர்வனின்  முகத்தில் வலது பக்கம் வாளின் கூர் தீண்டி குருதி வழிய அதனை உணரும் துர்வன் இல்லை ஆனால் மித்திரனோ
     ''ருத்ரா... ஆருயிரே... சற்றே பொறுத்திரு..'' என்றே அவளின் வாள் மேலும் துர்வனை கொல்ல இயலாமல் அரண் புரிய துர்வனுக்கு தமையன் ருத்திரா என்னும் இவளை மையலில் இருக்கின்றான் என்றே புரிந்திட இனியும் ருத்திரா கையில் அகப்பட்டால் இறப்பு உறுதியாகலாம் என்றே எண்ணி மஞ்சரியை தள்ளிவிட்டு விசையை அழுத்த அக்குகை திறந்திட வெளியேறி புரவியில் ஏறி மந்திரம் உச்சரித்து இமை மூட மித்திரன் புரவி வானில் பறந்தமை போன்றே துர்வனின் புரவியும் சிறகு விரித்து வளியில் பறக்க துவங்கியது.
      மஞ்சரியை பிடித்து நிறுத்தி அவளுக்கு எதுவும் இல்லை என்றே அறிந்த நொடி துர்வனை தேட அவன் வானில் பறக்க கண்டு சொல்ல இயலா கோவத்தில் வாளினை எடுத்து மித்திரன் மார்பில் அழுத்தி
       ''உமது தமையனின் பிறழ்தல் எங்கே?'' என்றே கேட்க மித்திரனோ ருத்திரா தம்மை மையல் புரிந்தாலும் அவளின் வழியில் தெளிவாக இருக்க அவளின் வாள் தனது நெஞ்சில் அழுத்தம் கொடுக்க அதனால் குருதி வருவதை உணர்ந்தவன் புன்னகையுடனே அவளையே பார்த்து
    ''எமக்கு அவனின் பிறழ்தல் அறிந்து இருக்க வில்லை ருத்திரா... அப்படியே அறிந்து இருப்பினும் உம்மிடம் சொல்ல இயலா சூழ்நிலை கைதியாக உள்ளேன் ருத்திரா'' என்றே சொல்ல ருத்திரா சினம் அவளின் வாள் மூலம் மித்திரனின் மார்பில் இறங்கியது.
         மேகவித்தகன் ருத்திரா மித்திரன் பற்றி அறியாததால் வேடிக்கை மட்டுமே காண மஞ்சரி ஓடி வந்து ருத்திரா வாளினை அகற்றி
     ''என்ன செய்கின்றாய் ருத்திரா.. உமது மூளை மழுங்கி விட்டதா? உம்மை கை பற்றும் கரத்தினை நீயே உதறுகின்றாய்? பார் குருதி வழிகின்றது.. சற்றே இன்னும் ஆழம் பார்த்தால் உமது கரத்தாலே துஞ்சல் கதையாகிவிடும்'' என்றே எடுத்து சொல்ல ருத்திரா இமைகளை மூடி விழியினை எங்கோ செலுத்தி
      ''எமது தமக்கை இங்கே இப்படி இருக்க எமக்கு எந்த பந்தமும் வேண்டாம்'' என்றே சமுத்ரா பக்கம் சென்று எழுப்ப
    ''அவளை உம்மால் எழுப்ப முடியாது... எமது தமையனின் வசியத்தின் பிடியில் இருக்கின்றாள்... யாம் உமது சிந்தையை வசியம் செய்தமை போல(ஏன் ஏன் அவளே அனலில்(நெருப்பா) இருக்கா... மேலும் தகவல் எதற்கு நாயகனே?)''
     ''மேக வித்தகா.. நமது தமக்கையை புரவியில் ஏற்று'' என்றே கட்டளையிட்டு நகர
    ''அதற்கு அவசியம் இல்லை ருத்திரா.. உமது தமக்கை செவியில் எமது தமையன் நாமம் மும்முறை செப்பினாலே போதும் வினாடிகள் நகர விழித்து அமருவாள்' என்றே சொல்ல வித்தகன் சமுத்ரா அருகே சென்று பெயரை சொல்ல போக ருத்திரா தடுத்து
      ''நில் தமையனே... அந்த கயவனின் ரத்தம் இங்கு தானே இருக்கின்றான் அவர்களே அவர்கள் தமையன் நாமத்தை செப்ப செய்யுங்கள்'' என்றே ருத்திரா பார்வை தீர்க்கமாக சொல்ல மித்திரன் சமுத்ரா அருகே சென்றான்.     அவளின் செவியில்
      ''துர்வசந்திரன் துர்வசந்திரன் துர்வசந்திரன்(போதும் இங்கே என்ன பெயர் சுட்டு விழாவா நிறுத்து)'' என்றே மும்முறை செப்ப சில வினாடி இமைகளை உருட்டி சமுத்ரா எழ ருத்ரா மஞ்சரி கண்டு அணைத்து இத்தனை திகதிகள் காணாமல் களித்து மகிழ்ந்தார்கள்.
           கொஞ்ச நேரம் போக ருத்திரா சமுத்ரா தள்ளி நிறுத்தி கன்னம் பழுக்க ஒரு அறை விட சமுத்ரா அக்கா என்றாலும் தங்கை போல அமைதியாக இருந்தாள்.
      அவளை பொறுத்தவரை துர்வனை மையல் கொண்ட காரணமும் அவனால் தாம் இங்கு வந்தமைக்கு மட்டுமே ருத்திரா அறைந்து இருக்கின்றாள் என்றே புரிந்து இருந்தாள்.
      ''மேகவித்தகன் மஞ்சரி ஒரு புரவியிலும் ருத்திரா சமுத்ரா ஒரு புரவியிலும் செல்ல கிளம்ப மித்திரன் ருத்திராவை இமைக்காமல் நோக்க மஞ்சரி தான்
     ''ருத்திரா மித்திரன் மீது எப்பிழையும் இருப்பது போல தோன்றவில்லை'' என்றே கூற ருத்திராவின் ஒர் பார்வையில் அமைதி ஆனாள்.
      மித்திரன் ஒரு சிரிப்போடு ருத்திரா அருகே வந்து ''யாம் பிழை செய்யவில்லை என்றே உமது தோழி செப்பும் போது எமது இதயத்தை தாங்கும் உமக்கும் அது தெரிந்து இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை...'' என்றே மித்திரன் சொல்ல ருத்திரா மாறாத பார்வையோடு அவன் புறம் திரும்பி ஏதோ சொல்ல வர
      ''மானுதல் கொள் மங்கையே.... எமது மீது மறலி கொண்டது உமக்கே தெரியாது. ஒரு முறை மறலி செய்தேன் உம்மை அதே போல செய்து.. எம் அரண் கொண்டு செல்ல எம்மால் முடியும் ஆனால் அதை யாம் செய்ய மாட்டேன். உண்மையான அன்பில் உமக்கு உணர்த்துவேன்... இப்பொழுதே நீ உணர்ந்து தான் இருக்கின்றாய் ஆனால் மனுதால் அடைய மாட்டாய்.... உம் அன்பு தேடி வரும் நாளுக்காய் காத்திருப்பேன்.. என்றும் என்றென்றும் ருத்ரா...'' என்றே கர்வமாக நிமிர்த்து புன்னகையோடு பாதையை கையால் காட்ட ருத்திரா புரவி சென்றது. மித்திரன் புரவியில் ஏறி மந்திரம் ஜெபிக்க அது சிறகை விரித்து பறந்தது.
       மித்திரன் மனம் நிலை கொள்ளாமல் சிந்தனையில் சுழன்றது. துர்வனை கொல்ல ருத்திரா ஒருத்தியால் மட்டுமே முடியும் என்றே நன்கு உணர்ந்த மித்திரன் இருப்பினும் துர்வனை அரண் போல காத்தது மித்திரனுக்கே பிடித்தம் இல்லை.
          அவனின் குரு சொன்னது தான். துர்வனின் மனம் நல்வழி படுத்திவிட்டாள் போதும் இந்த பலி சக்தி என்றே அவன் எண்ணம் கலைத்து விட தான் மித்திரன் காத்திருக்கின்றான். அவனின் முன் சற்று நேரம் இருந்தாலே துர்வனின் மனதில் அந்த எண்ணங்களை அழிக்கும் வல்லமை மித்த்ரனுக்கு உண்டு.. அப்படி அழித்தால் ருத்திராவின் தமைக்கை சமுத்ராவோடு இல்வாழ்க்கை வாழும் நிலைக்கு அவனை கொண்டு வர இயலும்... ஆனால் கற்பித்த குரு அப்படி அவன் உன் மன எண்ணத்தினை கலைத்தால் நீயும் அவன் போல பலி சக்தி தேடி செல்ல கூடும் என்றே சொல்லவும் செய்தாயிற்று.
      துர்வன் மித்திரன் இருவரில் யார் யாரை மனதில் இருக்கும் எண்ணங்களை கலைத்து அவர்கள் வாகை புரிவார்கள்?
        இதில் ருத்திரா மித்திரன் சொல் இணங்க துர்வனுக்கு மறு வாய்ப்பு கொடுப்பாளா? அல்லது சமுத்ரா போல 97 மங்கைகளை பலியிட்ட நங்கைகளுக்காக பார்ப்பாளா? என்றே மித்திரன் குழம்பி தான் இருக்கின்றான்.
            நூறு சதம் அவன் பலியிட செய்தால் துர்வனுக்கு மித்திரனின் மீறிய சக்தி கிடைக்கும் ருத்திராவாளும் அவனை கொல்ல இயலாது சக்தி படைத்து இருப்பான்... அவன் இந்த பரிதியில் வாழும் வரை அவனை எதிர்க்க யாருமின்றி இருப்பார் என்ன செய்ய என்றே எண்ணி புரவியில் பயணிக்க 97 மங்கைகள் உயிர் போனதற்கு தாமே தமது தமையனை வெட்டி வீழ்த்தும் ஆவேசமும் மித்திரனிடம் இருந்தது. ஆனால் தாயின் சொல் அவர்களிடம் கொடுத்த வாக்கு என்றே பொருத்து இருக்கின்றான்.

நந்தல் - கேடு
துஞ்சல் - சாதல்
பிறழ்தல் - ஒளிவிடம்
மானுதல் - ஒப்பு
மறலி - மயக்கம்
வாகை-வெற்றி  

 -விழியும் வாளும் சந்திக்கும். 

 -பிரவீணா தங்கராஜ். 

Comments

  1. அருமை .... அடுத்த பதிவு எப்ப போடுவீங்க......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு