உன் விழியும் என் ளும் சந்தித்தால்...-3
💟 (௩) 3
இரு ஆண்கள் இருக்கும் இக்குகையில் மஞ்சரி எவ்வித தயக்கமின்றியே துயில் கொள்ள முனந்தாள். அங்கே பெரிய பெரிய இலைகள் எல்லாம் பறித்து இருவர் உறங்க ஏற்பாடாக இருந்த இலை மஞ்சத்தில் பார்வை சென்றது மித்திரனுக்கு.
அப்படி என்றால் இருவரும் ஒன்றாக துயில் கொள்ள எண்ணினாரோ?! என்றே எண்ணியவன் பார்வை அங்கே நிலைக்க ருத்திரன் செரும கண்டு விழியை அகற்றினான்.
''அது யாம் அங்கே துயிலுறங்க செல்கின்றேன்'' என்றே மித்திரன் அடுத்த பக்கம் சென்று கையை சிரத்திற்கு முட்டு கொடுத்து உறங்க செய்ய இமையை மூடினான்.
ருத்திரனுக்கோ நேற்றே எனது உறக்கதினை பறித்து குடிலுக்கு காவல் புரிந்தேன்... இன்றேனும் நிம்மதியாக உறங்க செய்யலாம் என்றே மஞ்சரியோடு பஞ்சணை செய்தால் இவன் ஒருவன் நடுவே நந்தி போல வந்து இருக்கின்றானே... இவனிடம் இருந்து மஞ்சரியை காக்க யாம்ன இன்றும் எம் நித்திரையை துறக்க வேண்டுமா என்றே ருத்திரன் எண்ணியபடி ஒரு கல்லில் சாய்ந்து வாளை எடுக்க வசதியாக அமர்ந்து கொண்டான்.
அங்கே தீப்பந்தம் மட்டும் எறிய அதனை சுற்றி மட்டும், ஒளி வீசி வெளிச்சம் தர மற்ற இடமெங்கும் ஒரே கருமை பூசிய வண்ணம் இருக்க மஞ்சரி தான் பாங்காக துயில் கொண்டாள்.
ருத்திரனோ மித்திரன் இருக்கும் காரணத்தினால் உறங்க மறுத்து இருக்க, மித்திரனோ ருத்திரன் உறங்காமல் இருப்பதை அறிந்து அவனும் ஏதோ ஒரு சிந்தனையில் சுழன்றான்.
அந்த விழி அவனை இம்சை செய்தது. எப்படியோ எல்லோரும் துயில் கொண்டு இருக்கும் நேரம் ஒரு பெண்ணின் அலறல் கேட்க திடுக்கிட்டு எழுந்தார்கள் மித்திரன் ருத்திரன் இருவருமே...
அலறிய ஓசை அக்குகையின் உள்ளே எதிரொலித்ததை மித்திரன் அந்த துயில் கலக்கதிலும் கண்டு கொண்டான்.
''மஞ்சரிக்கு என்னவாயிற்று'' என்றே மித்திரன் பதறி வர ருத்திரனோ
''அவளுக்கு ஒன்றுமில்லை நித்திரையின் பிடியிலே தான் இருக்கின்றாள்.. நீ எதற்கு இப்படி பதறி விழித்தாய்?'' என்றே ருத்திரன் கேட்க
''உன் செவி செயல்படவில்லையா... பெண் அலறும் ஓசை செவிக்கு எட்டவில்லை?''
''இல்லை'' என்றே ருத்திரன் செப்ப
''மெய்யை மூடி மறைக்கின்றாய் அது எவ்வளவு நாட்கள் ஆனாலும் ஒரு நாள் அது விதியை தாண்டி வீதிக்கு வந்து நிற்கும்....'' என்றே இரு பொருள் பட பேசி மீண்டும் விட்ட இடம் நோக்கி வந்து உறங்க முயன்றான்.
மஞ்சரி அந்த மெல்லிய ஒளியில் அவளை அறியாமல் நித்திரை பிடியில் கிடந்தாள்.
ருத்திரனுக்கு தற்பொழுது மெய்யை மூடி மறைக்கின்றோம் என்றே இருந்தாலும் வேறு வழியில்லை...
பரிதியின் கதிர்கள் குகையின் வழியே வர வெளிச்சம் வந்து முடிக்க அன்று போலவே ருத்திரன் மஞ்சரி இருவரும் குளித்து முடித்து நமஸ்காரம் செய்ய கண்டு இவர்கள் எப்படி இவ்வளவு நாழிகைகுள் குளித்து முடித்தார்கள்... அன்றும் அப்படியே இன்றும்.... மித்திரனே இவர்களை இன்னும் நீ நெருங்கி கவனிக்க வேண்டும் என்றே அவனும் ஆற்றில் குளித்து முடித்து வந்தான்.
அங்கே ஏற்கனவே பறித்து இருந்த பழங்கள் இருக்க உண்டு கொண்டு இருந்த மஞ்சரியிடம்
''அன்றாவது கொஞ்சமேனும் அளாவி இருந்தீர்.. இன்று முகம் கூட பார்க்க மறுக்கும் காரணம் என்னவோ?'' என்றே கேட்க
''அச்சம் வேறென்ன? பெண்கள் தனித்து இருப்பதே நலம்'' என்றே அவ்விடம் விட்டு அகல
''ஏதேது திடீர் ஞானோதயம் நேற்று உரையாடி இன்று என்னை கண்டாலே ஓடி ஒளிவதை பார்த்தால் யாரோ ஞாணம் புகட்டி இருக்கின்றனரோ?'' என்றே பார்வை ருத்திரனின் மீது பதிய
''தான் கள்வன் பிறரை நம்பாதவன் பழமொழி இணங்க நடப்பீரோ'' என்றே ருத்திரன் மித்திரனின் பார்வைக்கு ஏகதாளமாக சொல்லி செல்ல மித்திரனோ எனக்கு ஏற்ற திமிர்.. அதனை எதிர்ப்பேன்'' என்றே வெளியே வந்தார்கள்.
சுற்றி பார்த்தவன் மித்திரனுக்கு என்ன தோன்றியதோ ''யாரோ இருக்கின்றார்கள்'' என்றே சொல்ல மஞ்சரி உடனே ருத்திரன் பின்னால் மறைய.. .ருத்திரனுக்கும் அதே உணர்வு தோன்றியதோ என்னவோ வாளை கையில் தான் ஏற்றி இருந்தான்.
மித்திரன் மீது பார்வை பதிக்க நின்ற ருத்திரன், மித்திரன் ஏதேதோ மந்திரம் உச்சரிக்க அங்கே ஒரு சிறு வட்டம் போல ஒளி பெற்று புரவியோடு மாயமாக போன்றதொரு தோற்றம் தர மித்திரன்
''துர்வசந்திரா.... நீ இங்கு தான் இருக்கின்றாய்.. எம்மை தொடர்ந்தாய் விட்டுவிட்டேன்... எம்மை மணப்பவளை தொடர்ந்தால் உம்மை கொல்ல துணியேன்..'' என்றே பேச ருத்திரனுக்கும் மஞ்சரிக்கும் மித்திரன் உதடு மட்டும் அசைவது கண்டனர் ஆனால் அவன் என்ன பேசுகின்றான் யாரிடம் பேசுகின்றான் என்பதை அறிய முடியவில்லை.
''மித்திரா... அவள் எமது கையால் பலியிட பிறந்தவள் நிச்சயம் அவளை கவர்ந்து செல்வேன்.. அக்கணம் உம்மால் ஒன்றும் செய்ய முடியாது... நீ அறியாதது அல்ல எம்மை பற்றி...'' என்ற குரல் மட்டும் கேட்க
''நீயும் எம்மை அறிவாய் தமையனே... யான் என்ன நினைத்து வந்தோமே அதை நிச்சயம் நடத்தி காட்டும் குலம் தான் எமக்கும்....இதில் உமது எண்ணம் ஈடேருமா அல்லது எம் எண்ணம் ஈடேருமா என்பதை காலம் அறிவுறுத்தி செல்லட்டும்..'' என்றே மித்திரன் செப்ப
எங்கோ புரவி செல்லும் ஓசை மட்டுமே அவ்விடம் அதிர சென்றது.
மித்திரனுக்கு ருத்திரன் என்ன வினா தொடுப்பானோ என்றே அச்சம் வர அந்த மந்திர கட்டுக்குள் இருந்தவர்களை விடுவித்து மீண்டும் ஏதோ சொல்ல ருத்திரன் மஞ்சரி இருவருக்கும் சற்று முன் நடந்த நிகழ்வுகள் அவர்களின் நினைவில் இருந்து கடத்தும் மந்திரம் உச்சரிக்க அதனை செப்பி இருவரின் முன் கைகளை நீட்ட மஞ்சரியோ மயங்கி சரிந்தாள்.
ருத்திரனுக்கு எதுவும் நினைவில் பதிவகாது என்றே இருக்க அவனோ எழுந்து சுற்றி முற்றி பார்த்து
''இங்கு என்ன நடந்தது? ஏதோ புதிதான ஓசை கேட்டதே?'' என்றே கேட்க
''என்ன ஓசையா? செவிகள் நெற்றில் இருந்து உமக்கு சரிவர ஒலிப்பதில்லை.'' என்றே ருத்திரனை வம்புக்கு இழுத்தான்.
நேற்று அந்த குகையே எதிரொலித்த பெண் குரல் சொல்லாமல் இருந்த ருத்திரனின் செய்கைக்கு இன்று அவனை போலவே பதிலடி கொடுத்த திருப்தியில் மித்திரன் வெற்றி மிதப்பில் கர்வமாக சிரித்தான்.
அவன் தன்னை அதிகமாக இம்சை செய்வது கண்டு , ருத்திரன் எதுவும் செய்ய முடியாது விழிக்க மட்டுமே முடிந்தது.
மஞ்சரி தூக்க சென்ற ருத்திரனுக்கு அவள் எளிதாக தூக்கிட முனயாமல் போக ஒரு கேலி சிரிப்பை ருத்திரனுக்கு வழங்கிவிட்டு மஞ்சரியை மலர் போல தூக்கி புரவியில் ஏறினான்.
ருத்திரனுக்கு உடல் எங்கும் ஜுவாலை தகித்தது. இருந்தும் இங்கே இருக்க முடியாது உடனே புறப்படவேண்டும் என்பதை மட்டும் அடிதளமாக கொண்டு அமைதி காத்தான்.
மித்திரன் மஞ்சரியை தனது புரவியில் ஏற்றியதும் ருத்திரன் அதற்கு சினம் மிகுந்து இருப்பதும் அறிந்து மகிழ்ச்சியில் சென்றான்.
பாதி வழியிலே ''வீரனே... அவளை இங்கே இறக்கி விடு... இனி உன் உதவி எங்களுக்கு தேவை இல்லை'' என்றே ருத்திரன் கூற
''இது தகன மேடை அருகே இருக்கும் இடம் ஆயிற்றே.... அப்படி இருக்க பெண் இருக்கலாகுமோ?'' என்றதும்
''அதற்காக இடுகாடு கடந்து இரவு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்குமா என்ன?'' என்றே ருத்திரன் பதிலளிக்க மித்திரன்
''என்ன இடுகாடு இருக்கும் இடமா? யாம் அதற்குள் அங்கிருந்து கடக்க நேரிடலாம்... இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் தொலைவில் செல்லலாம்''
''வேண்டாம்.. யாம்..'' என்றதும் மஞ்சரி எழுந்து கொள்ள மித்திரன் புரவியில் தான் மயங்கி கிடக்கின்றோம் என்றே புரியாது இறங்க முனைய
''மஞ்சரி அவசரம் எதற்கோ... பொறுத்தே ருத்திரா புரவியில் ஏறு'' என்றே சொல்ல மஞ்சரி மித்திரன் ருத்திரா என்றதுமே ருத்திரனை காண அவனோ இல்லை என்பதாய் சிரம் அசைத்து சமிஜை மொழியில் பேச மஞ்சரி திடுதிப்பென்று குதித்து ருத்திரன் புரவியில் ஏறி கொண்டாள்.
ருத்திரன் பார்வை பார்த்தாயா? இது தான் எனது வல்லமை' என்பது போல ஒரு பார்வை கணை வீச மித்திரன் இன்னும் எத்தனை நாழிகையோ உங்கள் வரலாறு நீங்களே கூற வைக்கின்றேன் என்றான் மனதினுள்.
''முடிந்ததா.. தகன மேடை இருக்கும் இடம் இருந்து இடுகாடு வழி செல்லாமல் புதிய பாதை வகுத்து செல்வோம் என்றே புரவியினை தட்ட அதுவோ பறக்கும் விசித்திரம் அடைந்து மேலே எழும்பியது.

ருத்திரன் மற்றும் மஞ்சரி இருவரின் அமர்ந்து இருந்த புரவிக்கு ஏதோ உச்சரித்து கையை அசைக்க அதிலும் அதே போல இரு சிறகுகள் விரிந்து மேலே எழும்பியது. அதே வேகத்தோடு பறக்க ருத்திரன் மஞ்சரி இருவருமே நம்ப முடியாத பார்வையில் திகைக்க கொஞ்சம் தொலைவில் சென்றதுமே மித்திரன் கீழே இறங்க செய்ய இடுகாடு தாண்டி மற்றுமொரு வனத்தில் வந்து சேர்ந்தார்கள்.
''இது எப்படி சாத்தியம்...? தாங்கள் யார்?'' என்றே ருத்திரன் கேட்டு முடிக்க மித்திரன் அவர்கள் கண்கள் நோக்கி முன்பு போலவே மந்திரம் உச்சரிக்க இம்முறையும் சில நாழிகை முன் நடந்த நிகழ்வுகள் பதிவாகமல் போனது. மஞ்சரி தான் அதே போல மயங்கி சரிந்திட.. ருத்திரனுக்கு இது எப்படி சாத்தியம் எமக்கு அங்கு இருந்து இங்கு பயணம் செய்த களைப்போ அல்லது பயணம் செய்த நிகழ்வோ ஒன்றுமே நினைவில் இல்லை... அப்படி என்றால் இங்கு என்ன நடந்து இருக்கும்...? என்றே மித்திரனை பார்க்க அவனோ வசியம் செய்யும் புன்னகை மட்டும் வீசினான்.
மஞ்சரியின் மயக்கத்தில் நீரோடை நீரை அள்ளி தெளிக்க அவளோ நித்திரா தேவியின் புதல்வி போல உறங்கி கிடந்தாள்.
அவளை எதற்கு உலுக்குகின்றாய்? இரவு தானே உறங்கட்டுமே'' என்றான் மித்திரன்.
''நீ ஏதோ ஜாலங்கள் செய்து இருக்கின்றாய் அது அறியாது நாங்கள் இருக்கின்றோம் அது வரை அறிய முடிக்கின்றது ஆனால் நீ எங்களை என்ன செய்தாய் என்றே அறிய முடியவில்லை... யார் நீ... நீ சாதாரணமாக எங்களை தொடர்வது போல தோன்றவில்லை... ஏதோ உள்நோக்கத்தில் தான் தொடர்கின்றாய்'' என்றே வாளினை மித்திரன் நெஞ்சில் வைத்து ருத்திரன் கேட்க
''பரவாயில்லை நீ இது போல சிந்திக்க செய்ய மாட்டாய் என்றே அல்லவா ஜலாம் புரிந்தேன் கண்டறிந்து விட்டாயே... பலே'' என்றே மித்திரன் சொல்ல
''யாம் உம்மை தொடரவில்லை... எம் கண்ணுக்கு இனியவளை தான் காண தொடர்ந்து வந்தேன்.'' என்றே மையலில் பேச
''மூடனே மஞ்சரி எம் தமையன் மேகவித்தகனுக்கு சொந்தமானவள் அவளை தொடரும் உம்மை'' என்றே வாளினை நெஞ்சில் அழுத்த
''நான் மஞ்சரி என்று குறிப்பிடவில்லையே.... ருத்திரா'' என்றான் மித்திரன். துயில்-உறக்கம்
மஞ்சத்தில-மெத்தையில்
சிரம்-தலை
நித்திரை-உறக்கம்
அளாவி-பேசி
செப்பி=சொன்னார்
தகனமேடை-பிணம் எரிக்கும் இடம்
இடுகாடு-சுடுகாடு
மஞ்சத்தில-மெத்தையில்
சிரம்-தலை
நித்திரை-உறக்கம்
அளாவி-பேசி
செப்பி=சொன்னார்
தகனமேடை-பிணம் எரிக்கும் இடம்
இடுகாடு-சுடுகாடு
-விழியும் வாளும்.
- பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment