உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...9
💟 (௯) 9
எப்படியும் தாம் சொல்லாமல் போனாலும் துர்வனுக்கு சமுத்ரா, ருத்ரா அறிந்திருந்த காரணம் கொண்டதால் அவன் சொன்னான்.
''நாவலூர் அந்நாட்டின் இளைய மகள் ருத்திரா....''
''பார்த்தாயா அன்னையே.. ஒரு சிறுவுரின் சொந்தமான ராஜா மகளை தான் உமது
இளைய புத்திரன் ஆசை கொண்டு இருக்கின்றான்'' என்றே துர்வன் சொல்லி முடிக்க
''ஆசை என்றே சொன்னாயோ உம்மை தாய் மீது கொடுத்த சத்தியம் மீறி அழிக்க
செய்திடுவேன். அவள் மீது எமக்கு இருப்பது உண்மையான அன்பே ஒழிய பார்த்ததும்
தோன்றும் ஆசை அல்ல.. என்ன சொன்னாய்... அவள் சாதாரண சிறுவுரின் இளைய மகளா?
அப்படியெனில் அவளின் தமைக்கை சமுத்ராவை ஆசை கொண்டாயே நீ... அதற்கு பெயர்
என்ன? ஓஹ் அவளை பலியிட தான் மையல் புரிந்தாய் அப்படி தானே?'' என்றே அனலாய்
பேசிய மித்திரனின் பேச்சில் துர்வன் ஏகதாளமாக நின்றான்.
''அன்னையே எமது சக்தி தேடி யான் தொடுக்கும் முயற்சி எல்லாம் இவன்
தகர்க்கவே(உடைக்கவே) செய்கின்றான். இவனுக்கு நான் அதீத சக்தி பெற விருப்பமே
இல்லை..'' என்றே மூத்த மகனின் போலி வருத்ததில் மாதங்கி
''இளையவனே... உமக்கு உமது தமயன் சக்தி பெருக மனமில்லையா?'' என்றே கேட்க
''அன்னையே இவனின் சக்தி பெருக எந்த தவறும் செய்யாமல் 100 பெண்கள்
இறக்க வேண்டுமா? அதற்கு தாங்கள் வேறு துணை?'' என்றே அடக்கபட்ட கோவத்தோடு
சொல்ல
''ஒரு நாட்டினை காக்க ஆயிரம் வீரர்கள் போரில் மாண்டிட செய்வது போல தான்
இதுவும்.ஒரு இளவரசன் நன்மைக்காக 100 கன்னி பெண்கள் உயிர் போவதில்
தவறில்லை... எம்மகன் யாரின் கற்பை அழித்திட வில்லை.. உயிர் மட்டுமே.. அது
கூட இறந்திடும் பெண்கள் இவனை காதலித்து விவாகம் புரிந்து கன்னி பெண்களாக
தமது உயிரை கணவனான இவனுக்கு அற்பணிக்கின்றார்கள் அவ்வளவே'' என்றதும்
''அன்னையே தங்களுக்கு இளவரசியாக பெண் பிறந்து இப்படி ஒரு
அயோக்கியனுக்கு விவாகம் முடித்து அக்கணமே உயிர் துறக்க சொன்னால் செய்து
கொடுப்பிர்களா? செய்ய துணிய மாட்டீர்கள். ஏன் என்றால்.. ராஜவம்சம் என்றால்
ஒரு நியாயம்... சாதாரண குடிமக்கள் என்றால் ஒரு நியாயம்? சே'' என்றே சொல்ல
''போதும் நிறுத்து எத்தனை ராஜாக்கள் இதே குடி மக்களுக்காக உயிர்
துறந்தார்கள் என்று அறியாமல் பேசாதே.. இதோ உமது தந்தை நோய் வாய்ப்பட்டு
கிடக்கின்றார்... மற்ற தேச ராஜாக்களுக்கு இவரின் நிலமை அறிந்து போனாளோ,
அடுத்த கணம் போர் தொடுப்பார்கள். அவரின் நோய் குணமாக அதீத சக்தி
வேண்டும்... உம்மாளும் உமது தமையனாலும் அது சாத்தியம் இருக்க நான் எமது
மூத்தவனை அடக்க செய்வது எந்த விதத்தில் நீதி...?''
''தந்தை விழி திறந்தால் அவருக்காக 100 பெண்கள் இறந்தார்கள் என்றே
அறிந்தால் அவர் உயிர் பிழைத்தது எண்ணி வெட்கம் கொள்வார். அவருக்காக
ஐந்துதறிவு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க எண்ணாதவர் அவர்... அப்படி
விஷயம் தெரிந்தால் வேந்தனான அவரையே அவர் அழித்து கொண்டு நீதியை நிலை
செய்வார்... இந்த துர்வன் முதலில் தந்தைக்காக செய்வது அல்ல.. அவனின் முழு
சுயநலமும் அசத்தை(பொய்) மட்டுமே இதில் உள்ளது. இது தாங்கள் அறியாததா? பிழை
என்று அறிந்தும் மறுப்பது அவன் சுபாவம்.. தங்களிடம் நீதி எடுத்து
இயம்புகின்றேன் பாருங்கள் நான் ஒரு மூடன். பிழை என்று அறிந்தும் 97 உயிரை
துச்சமாக எண்ணி தானே இன்னமும் பேசுகின்றிர்'' என்றே அங்கிருந்து அவன் தந்தை
அறை நோக்கி சென்றான்.
உயிர் மட்டும் எஞ்சி இருந்தாலும் ஒரு வேந்தனின் கர்வம் கொண்டு
உறங்கியது போல தான் இருந்தார் பரிதி செங்குட்டவன். துர்வன் என்ற
தீங்கானவன் மித்திரன் என்னும் நல்லவனையும் ஒரு சேர பெற்று எடுத்த எந்தையாக
உறக்க கோலத்தில் கடந்தார்.
அவரின் கரங்களை பற்றி துர்வனை பற்றி கூறி கொண்டு இருக்க அவரின்
விழிகள் தானாக நீர் வடிந்தது. அதனை கண்டிருந்தால் மித்திரனின் சில மன
காயங்கள் ஆறி இருக்கும்..
தனது அறைக்கு சென்று அங்கிருக்கும் மலரோடு நடந்து கொண்டு யோசனை செய்ய,
'இல்லை அவன் எண்ணம் போல நடக்க விட கூடாது... என்றே எண்ணி கொண்டு
இருக்க துர்வனின் உயிர் சுவாசம் காற்றில் மிதந்து வர அவனின் வருகையை
உணர்ந்து கொண்டு
''உமக்கு என்ன வேண்டும்?'' என்றான் மித்திரன்.
''ஆஹா அனைத்தும் அறிந்த உமக்கு தெரியாததா? யான் இங்கு வந்த நோக்கம்?''
''இந்நேரம் எவரை பலியிட தேவை என்றே பெண்களை தேடி செல்லும் உமக்கு
எம்மை பார்க்க வந்த நோக்கம் என்றால் எப்படி யாம் அறிந்திட இயலும்?''
என்றான் துர்வனின் சுவாசம் இருக்கும் திசையை பார்த்தபடி
''நாடகம் இயற்றி நடித்து கரவோசை வாங்கி கொள்... எம்மிடமே பிதற்றுதலில் செப்புகின்றாய்...''
''எதற்கு சுற்றி வளைத்து சலசலத்து கொண்டு இருக்கின்றாய்... நேரிடையாய்
காண தான் தயக்கம்.. பேசவும் சொல்ல வந்ததை செப்பவுமா உமக்கு நேரிடை இல்லை''
என்றே மிதிரன் கேட்ட பின்
''அறியாதது போல இன்னமும் பேசுவது நீயே.. எமக்கு அப்பெண் வேண்டும்
பலியிட.. நீ அவளை மையல் கொண்டு ஊனாய் உயிராய் எண்ணி இருந்து முகத்தில் தாடி
வடித்து சந்நியாசி ஆகாதே.. அதை சொல்லவே வந்தோம்''
''மூடனாக கதைக்காதே... மஞ்சரியை சொல்கின்றாயா? அவள் மேகனின் இல்லாள்'' என்றதும்
''யாம் அவளை செப்பவில்லை... '' என்றவனின் குரலில் ஏக கடுப்புகள் இருக்க மித்திரனுக்கு உடனே ருத்திரா எண்ணம் தோன்ற
''ருத்திரா?'' என்றே வினா தாங்கி திரும்ப
''ஆம் எமது நூறாவது பலி அவளே....''என்றான் துர்வன்.
''எம் உயிர் இருக்கும் வரை நடவாது.. பகல் கனவு கண்டு களிக்காதே.. அவள்
மீது சிறுதுரும்பு பட்டாலும் உமக்கு எம்மால் மரணம் நேரிடும்... தேசந்திர
முனிவர் நமது குரு சொன்னது நினைவு இருக்கும் அல்லவா உமக்கு. எம்மால் உம்மை
கொள்ள இயலாமல் போகலாம். ஆனால் யாம் மனம் உவந்து காளி தேவி முன் எமது உயிரை
சொற்பமாக எண்ணி தலையை வெட்டும் நொடி யாம் யாரை கொல்ல துடிக்கின்றேனோ அவனும்
மடிவான்... அது நீயே ஆனாலும் என்பதை மறந்திருக்க மாட்டாய் அல்லவா?"
Comments
Post a Comment