சிரமமில்லாமல் சில கொலைகள் -1

  



                  *சிரமமில்லாமல் சில கொலைகள்*

ஆல்பா தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும் ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலிருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல.

இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கையாக ஏற்படுவது.

இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத்தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக்கும்.

*ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண்ணற்ற காரியங்களை சாதிக்கலாம்*


                                                                           🩸-1


         சர்வேஷ் தனது நண்பர்களோடு மூன்று தினமாக கோவா சுற்றுலா சென்று சோர்வோடு வீட்டுக்கு காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.

     அவன் தங்கும் அப்பார்ட்மெண்டில் தங்கும் இடத்தை பகிரும் சாந்தனு அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்தான்.

"என்னடா கோவா.... பேச்சுலர் பார்ட்டி செம என்ஜாய்மெண்டா டா" என்று சாந்தனு கேட்க அவனை கொலை வெறியோடு பார்த்தான் சர்வேஷ்.

      "கடுப்ப கிளப்பாதே டா. பேச்சுலர் பார்ட்டி என்று தான் பேர். அவன் அவன் ஆளுக்கு ஒரு ஆளோட வந்துட்டாங்க. நான் தான் சோலோ. இதுல கோவால ஒரு அமெரிக்கா பொண்ணு வந்து டேட்டிங் கூப்பிட்டாளே எப்பா... தப்பிச்சேன் பிழைத்தேன்னு ஓடி வந்துட்டேன். என் டிராவல் கைய்டன்ஸ் இருந்தா சூப்பரா இருக்கும் சொன்னதால தான் கூட போனதே. ஆனா இனி தெரிந்தவர்களுக்கு கையிட் மாதிரி போக கூடாது டா. நான் பண்ற பிசினஸ் கையிட் ரெக்கமண்ட் பண்ணி பணிக்கு இருக்கறவங்களை அனுப்பலாம். ஆனா நான் முதலாளியா எட்டி நின்றுக்கணும் என்று பட்டு தான் தெரிந்துக்கிட்டேன்." என்று சலித்து தனது உடைமையை அகற்றி சோபாவில் அமர, சாந்தனுவோ

     "அடப்போடாங்க... மிஸ் பண்ணிட்டு வந்து பேச்சை பாரு. ஓகே டா... மீதியை வந்து கேட்கறேன். ஆபிஸ்கு நேரமாகுது" என்று ஓடினான்.

     சர்வேஷ் ஒரு குளியலை போட்டு விட்டு மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.

    இங்கு அதே நேரம் நியூயார்க் நகரம் வண்ண ஒளி விளக்குகள் மிளிர இரவும் பகலை போல பிரகாசித்தது.

     அங்கே ஒரு வீட்டில் "ப்ரவுனி... டுடே மை பெர்த் டே சோ நான் பார்ட்டி தர போறேன். நீயும் வர்றியா" என்று ப்ரவுன் நிற நாயினை கொஞ்சி கொண்டு இருந்தாள் மெர்லினா.

     அதற்கு காலையில் இருந்தே அதீத மகிழ்ச்சி போல மெர்லின் ஆனந்தம் அதற்கும் ஓட்டிக் கொண்டு தன் நாவால் அவளை கையில் முத்தமிட்டு தனது அன்பை பறைசாற்றியது.

     "மாம் டாட்... நீங்க எனக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி தந்ததற்கு ஹாப்பி. எங்க நோ சொல்லிடுவீங்கனு பயந்தேன். பட் நீங்க டோட்டலி டிப்ரண்ட். தேங்க்யூ டேட்" என்று தன் அன்னை தந்தையை கட்டி அணைத்து புறப்பட்டாள் மெர்லின்.

     "காட் பிளஸ் யூ டியர். டைம் டென் உள்ள வந்திடணும் ஓகேவா" என்று நேரம் கணக்கிட்டே வழி அனுப்பினார்கள் பெற்றோர் கிரிஷ்டோபர்-தபித்தாள் தம்பதிகள்.

    செல்லும் மகளை பெருமையாக பார்த்தாலும் ஓரத்தில் ஏதோவொரு அச்சம் சூழ வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

    ப்ரவுனி மட்டும் வாசல் வரை வந்து அவளின் கால்களை சுற்றி சுற்றி வந்தது.

    "ப்ரவுனி நான் வீட்டுக்கு வந்தப்பிறகு விளையாடலாம். என்னை போக விடு" என்று கொஞ்சிட, ப்ரவுனி வாசலில் இரு கால்களை தூக்கி அன்பாய் குரைத்தது.

     மெர்லினா அருகே அந்த அருவுருவம் அவளை அறியாது அவளோடு பயணித்தது.

    மெர்லினா கார் ஷெட்டில் இருந்து காரை எடுத்து ப்ரவுனிக்கு கையசைக்க, அதுவரை கருப்பு நிறத்தில் சாதாரண ஒளியோடு மின்னிய ப்ரவுனி கண்கள் வெளிற்பாசிபச்சை நிறத்தில் ஜோலித்தது. அதுவும் பிரகாசமாக அவ்விடமே ஒளிர்வு பெற்றது போன்ற மாயையை காட்டியது.

     நியூயார்க் நகரில் மற்றொரு வீட்டில் மெர்லினா பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அடித்தளம் போட்ட லிசா மெர்லினாவை விட அந்த பிறந்த நாளில் அவர்கள் தோழர்-தோழிகள் தன்னை தான் அதிகம் பார்த்து பேச வேண்டுமென தன்னை உலகழகியாக அலங்கரிக்க துவங்கினாள்.

    சிவப்பு வண்ண ஸிலீவ் கொண்ட முட்டிக்கும் தொடைக்கும் ஏறாவா வேண்டாமாயென்ற ஆடை அணிந்தவவள் தனது லாக்கரில் இருந்து அந்த பிரேஸ்லேட் எடுத்து அணிந்தாள். ரூபி மற்றும் வைரம் மிளிர லிசா கண்களோ பார்ட்டியில் தான் மட்டும் அதிகளவு பேசப்படவேண்டும் என்ற ரீதியில் உடை, மற்றும் முக அலங்காரம் என்று கிளம்பி நின்றாள்.

     "லிசா... காஸ்ட்லி எக்பென்ஸ் இது."

     "யா மாம். ஐ நௌ. பட் மெர்லினா பெர்த் டே அவளை விட நான் தான் பெஸ்டா இருக்கணும்" என்று லிப்ஸ்டிக் வண்ணத்தை கூட்டினாள்.
 
      தபித்தாளின் தங்கை மகள் தான் இந்த லிசா. லிசா மெர்லினா வயதை விட ஒரு வயது கூடுதல்.

      ஆனால் எங்கும் மெர்லினா தான் வரேவேற்பை பெறுவது அதனால் இம்முறை அப்படி அமையாது இருத்திட தன்னை அலங்கரித்து கிளம்பினாள்.

      சிவப்பு நிற கொண்ட ப்ளோரல் கவுன் அவளை இறுக்கி பிடித்து முட்டிவரை இருக்க அவ்வுடையோடு அவள் அந்த காரிலிருந்து இறங்கி சாவி கொத்தை காரை பார்க் செய்யும் நபரிடம் நீட்டினாள்.

      கேம்பிரியா பார்ட்டி ஹோட்டல் நுழைந்தவளின் கண்கள் மினுக்கும் ஒளியில் பேராழகாக இவளும் மிளிர, அந்த இடத்தையை மற்றொரு ஒளி ஹாலை நிரையிட்டது.

   அது அந்த சிவப்பு, வெள்ளை ரூபி வைரம் பதித்த பிரேஸ்லேட் தான்.

     இவள் எண்ணியது போல இளைஞர் வட்டம் அவளை சூழ அவர்களை உதாசீனம் செய்து, மேஜையில் வெந்நிற உறைகள் மேஜையில் போர்த்தி இருக்க, அந்த இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

   சற்று நேரம் அவளை ஆரோல் வந்து பேச நெடுநாள் முன் தான் பேச எண்ணிய ஆடவன். இம்முறை தானாக பேசவர, கையை நீட்டி குலுக்கும் நேரம், அவனோ இதழ் விரிந்து எழுந்து விட்டான்.

     அவன் கண்கள் சென்ற திசை பார்க்க மெஜன்தா நிற பௌ கொண்ட முழுகவுன் அவளை இளவரசியாக காட்டிட, ஆரோல் அவளிடம் வாழ்த்தை பகிர அவள் கை குலுக்கும் நேரம் ஏதோ யாரோ தட்டி விடுவது உணர்ந்தாள்.

     இதில் காதருகே "இருகை வணக்கம் வைத்து நாமமிடுவது நம்மரபு" என்பதாக குரல் கேட்க அவளுக்கு புரியாத நிலையிலும் கையை கூப்பினாள்.

  கேக் கட் செய்து கேளிக்கை துவங்க, நண்பர்கள் வாழ்த்தை பரிமாறி, மது பிரியோகம் செய்யப்பட்டது.

     ஒவ்வொரு டேபிளாக உயர்ரக மது விநியோகப்பட மெர்லினா எடுக்க செல்லும் நேரம் அவள் கைகள் கட்டப்பட்டு இருப்பதாக எண்ணினாள்.

    ஆரோல் வந்து நடனமாட அழைக்க அதையாவது செய்ய போனாள். ஆனால் ஆரோல் தீண்டும் நேரம் எல்லாம் ஆரோல் தள்ளி கீழே விழுந்து இருந்தான். ஏதோவொரு அசௌகரியம் தான் மெர்லினாவுக்கு.

      மெர்லினா மது அருந்துவால் இன்று ஏன் தன்னால் எடுக்க இயலாது போனது என்று அறியாமல் யாரோ பின்னாலிருந்து 'போ... போ... இவ்விடம் விட்டு செல்' என்ற குரலோசை செவியில் தொடர்ந்து விழ மணி ஒன்பதாக வேகமாக வீட்டுக்கு சென்றாள்.

     லிசா ஆரோல் நடனம் ஆட செல்கையிலே மதுவை அளவுக்கு மீறி அருந்தினாள். ஆரோல் அறைக்கு அவளை தூக்கி சென்று தன் தேவையான உடல் போதை அவளிடம் தேட, எங்கோ ஒரு நிழல் உருவம் பெற்று வாள் ஏந்தி,      
   
    "மங்கையர் மறலியின் பிடியில் நெருங்குவது இழிவு நிலை. அதை மீறி நெருங்கினாய் யெனில் தலை கொய்யப்படும் மனிதா" என்று குரல் வர அந்த பேச்சு ஆரோலின் ஆங்கில அறிவிற்கு புரியாது இருந்தாலும் அக்குரலின் கம்பீரமான கணீர் குரலிலும், அருவமான உருவமும் கண்டும் பயந்து ஓடினான்.

    மணி பதினென்று ஆக நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் லிசாவுக்கு காவலனாய் இருந்த அருவுருவம் கோபக்கணலில் பெரும் அலறல் ஒலி எழுப்பியது.

      அத்தனை மது போதையிலும் அந்த ஒலி செவியில் பறைபோல முழங்கியது. லிசாவோ பயத்தில் வெளிறி அத்தனை போதை மயக்கத்திலும் வியேர்த்து விறுவிறுத்து எழுந்தாள்.

    "உம்மை தீங்குயிழைக்க கூடாதென்றும், பிறர் பொருள் களவாடாதேயென்றும் யாம் செப்பியும் எம் யவனரதி அணிகலன்களை எடுத்தணிந்தாள் யாம் கண்ணுற்றும் பொருத்தருள்வோமா... எம் யவனரதி உயிரை துச்சிய உம்மை" என்ற அடுத்த நிமிடம் காற்றில் அந்தரத்தில் குரல்வளை நெறிய மூச்சுக்கு போராடினாள் லிசா.

     கண்கள் மேல் விழி பிதுங்க உயிர் போகும் வலியில் கண்கள் கலங்கி, சில பல நினைவலைகள் வந்து செல்ல, "மன்னித்து தருள்வாய்" என்று லிசா வரவே வராத தமிழில் கெஞ்சினாள்.

அருவுருவம் பிடியினை நழுவவிட, லிசா தரையில் கால் பதித்து நின்றாள்.

அடுத்த நொடி கதவை திறந்து ஓட்டமெடுத்தாள். கதவை திறந்து ஓட்டமெடுத்தவள் பாதை எங்கு என்று அறியாது அறியாது 'ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ...' என்று அலர, அவளின் குரலோ எழும்பாமல் காற்று மட்டுமே வந்தது.

அதன் பின்னே தனது குரல் எழும்பாமல் இருப்பதை உணர்ந்து, சுற்றி முற்றி பார்வையிட, தான் வந்த கேம்பிரியா ஹோட்டலாக இல்லாமல் ஏதோ ஒரு அடர்வனமாக காட்சியளிக்க திக் திக்கென இருந்தாள்.

நெற்றி வியர்வை பூக்க இது இது எந்த இடம் என்று தவிக்க, அவளின் கை பற்றி இழுக்க அவளின் பிரேஸ்லேட் அந்த அருவுருவத்திடம் கையில் இருக்க, லிசா கைகள் குருதி வழிய கீறலோடு காட்சி தந்தது.

சின்னதாய் பெடிக்குயூர் நகம் சிதைந்தாலே இரத்தம் வந்தால் பெரிதாய் ஆர்ப்பாட்டம் செய்யும் லிசா இன்று தனது வலது கை வேம்பையர் கீறிவிட்டதை போல இருக்க, துடிக்க பிரேஸ்லேட் இருக்கும் அருவுருவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு உருவத்தை தந்து தந்து மாற லிசா எச்சிலை கூட்டி விழுங்கி "யவனரதி-இளவழகா? தாங்களா" என்று கேட்ட நொடி 'தங்கவாள்' ஓன்று லிசாவின் சங்கு கழுத்தில் வீச சதக்கென்று கழுத்து மெல்லிய வெட்டபடாத பார்வைக்கு புலப்பட்டாலும் இரத்தசிவப்பு மெல்ல மெல்ல வெளியேறியது.

அவள் போட்டு வந்த சிவப்பு ஆடை மேலும் இரத்தமாக மாற பார்வை மேலழும்ப கண்கள் சொருக அவ்விடத்தில் தன் உடலில் இரத்தாறு பாய மயங்கினாள் லிசா.

       அவளின் உள்ளங்கையில் 'க' என்று எழுதி கீறி எடுக்க கைகள் அதன் பள்ளத்தில் இரத்த திரவியத்தை வெளிபடுத்தி வழிய நம் நாயகன் சர்வேஷ் திடுதிப்பென்று தொப்பலான வியர்வை மழையில் எழுந்து அமர்ந்தான்.

     "அந்த பொண்ணு பாகிரதி இறந்துட்டா... அவளை அவளை கொலை கொலை செய்தாங்க" என்று பதட்டத்தோடு இடத்தை ஆராய்ந்தான்.

      "டேய்... சர்வேஷ்... என்னாச்சு?" என்று சாந்தனு அருகே வர,

     "கொலை டா.. கொலை நடந்தது...?" என்றான்.

     "என்ன சொல்லற? எங்க? யாரை?"என்றான்.

     "நியூயார்க்ல.... இல்லை.. இல்லை... யவனபூமியில் டா.. ஆனா கொலை இல்லை பேய் கொன்றுடுச்சு" என்றான்.

     "டேய் ஒரு இடமா சொல்லு.  கொலையா...  பேயா? என்னடா சொல்லற? கனவு கண்டியா" என்றான் சாந்தனு. அதன் பிறகே அப்படியும் இருக்குமோ என்று நீரை குடித்தான். 

    "நீ... எப்ப வந்த? ஆபிஸ் போனியே?" என்றான் பயம் அகலாது.

     "போனேன் டா. அங்க இன்னிக்கு நாள் முழுக்க பவர் சப்ளே இல்லை. அதுவும்அதுவும் இல்லாம ஜெனரேட்டர் ஒர்க் ஆகலை. திரும்பிட்டோம். உன்னை கூப்பிட்டு பார்த்தேன் கதவு திறக்கலை அதான் என் சாவி எடுத்து திறந்து வந்துட்டேன்."

      "எதுக்கு அலறின?" என்றதும் தான் கண்ட கனவை விவரித்தான்.

     "டேய் கனவா? அதுக்கு இவ்வளவு சீனா?" என்று நகைத்து விட பணிகள் பற்றி பேசி மறக்க முயன்றான் சர்வேஷ்.

    மாலை நான்கு மணி காபி குடித்து அப்படியே சிறிது நேரம் வெளியே சென்று வர எண்ணி சர்வேஷ் சாந்தனு 'காபி கேப்' சென்றனர். 

    நியூயார்க் நகரம் அதிகாலை ஐந்து மணிக்கு  அந்த சென்ட்ரல் பார்கில் காப்ஸ் வண்டிகள் அதிகரித்தது.

  லிசா இறப்பு எப்படி நிகழ்ந்தது. என்று அலெக்ஸ்ப்ரிட்டோ என்பவர் துப்பு துலக்கி கொண்டு இருந்தார்.

   -🩸🩸🩸🩸🩸

- பிரவீணா தங்கராஜ்

*லிசாவை எதற்கு அந்த அருவுருவம் கொன்றது? யார் அது. எதுக்கு?

*யவனரதி-இளவழகன் என்பது யார்?

*சர்வேஷ்க்கு வந்த நிகழ்வு கனவா அல்லது உண்மை நிகழ்வு என்று எப்போ தெரியும். அவனுக்கு ஏன் வருது?

என்பது எல்லாம் பின் வரும் அத்தியாயங்களில் காணலாம்.

இது எனது 27 வது கதை. 😊

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு