ஒரு பக்க கதை-நல்ல உள்ளம்

   

    தண்ணீர் மோட்டார் பதினொன்றுக்கு மேல் போட்டால் மோட்டார் சூடாகுமென்று ஆர்த்தி காலையிலேயே வீட்டில் தான் இருக்கப்போகும்  குழந்தையே என்றால்ம் குளிக்க வைத்தாள். கூடவே நீரை பிடித்து வைத்தாள். சட்டென தானும் குளித்து பிடித்து வைக்க எண்ணியவள் நேரத்தை பார்த்தாள். மணி ஒன்பது முப்பது பால் ஊற்றும் அண்ணாச்சி வரும் நேரம்.

      "ஐசு பால்கார அண்ணாச்சி வந்தா இந்த பாத்திரத்தில் பால் வாங்கி வை. இல்லை அப்பா தூங்கிட்டு இருக்கார் சொல்லு வந்து வைப்பார். அம்மா குளிக்க போறேன்" என்று துணிமணியை எடுத்து மகளை பார்க்க காலையிலே டோராவை வைத்து அமர்ந்திருந்தாள்.

     "ஐசு..." என்று அழைக்க, ஐசு.."
     
      "என்னம்மா?"
  
     "நான் சொன்னது காதுல விழுந்ததா..?"

     "விழுந்துச்சு மா.. தள்ளு... அங்க பாத்திரம் வை" என்று தள்ளினாள்.

    ஐசுவை கடுப்பேற்ற டிவியை அணைத்து விட்டு ஓடினாள் ஆர்த்தி.

     "அம்மாமா... இங்க நீ குழந்தையா நான் குழந்தையா.." என்று சிணுங்கி டிவியை ஆன் செய்தாள் ஐசு. ஐந்து வயது வால். கொஞ்சம் வால் முதலில் பேசவே வராது அமைதியாக இருந்தவள் இப்ப பேசினா எத்தனை கேள்வி? பெரியவர்கள் தோற்று போவார்கள் அந்தளவு தெளிவு அறிவு சற்று கூடுதலான வாய்.

      "வாய் வாய் வாய்..." என்று ஆர்த்தி குளித்து கொண்டிருந்தாள். சற்று நேரம் கழிந்து தலையில் பெரிய கொண்டையிட்டு சேலையை பிடித்து பக்கேட்டில் அலசிய துணியை வைத்து தூக்கி கொண்டு வந்தாள்.

    பால் பாத்திரம் அதேயிடத்தில் காலியாக இருக்க, "என்ன ஐசு அண்ணிச்சி வரலையா?" என்றதற்கு இல்லை என்று கையில் பயில் தந்தாள்.

      மாடிக்கு ஏறும் நேரம் அவசரமாக பால் ஊற்றுபவர் வர படியிலே பக்கேட்டை வைத்து, பாத்திரம் எடுத்து நீட்டினாள் ஆர்த்தி.

    அவரோ எட்டியிருந்து ஊற்ற ஆர்த்தி கேட்க நினைத்த கேள்வியை கேட்டு விட்டாள்.

     "ஏன் அண்ணாச்சி ஊரே கொரானா நாற்பது நிமிடம் தொலைவுல இருந்து நீங்க இங்க வந்து ஊற்றணுமா. வீட்ல இருக்கலாமே. வந்துட்டு பயந்து எட்டி நிற்கறிங்க." என்றாள்.

    "அதுவா மா... எங்க ஊரில் வீட்டுக்கு பக்கத்துலேயே பால் வாங்கிடுவாங்க. இங்க முன்ன நான் தங்கின ஏரியா... அதான் தினமும் இங்க வர்றேன். அதுவுமில்லாம இங்க இருக்கற பசங்க எங்க நல்லா சாப்பிடுதுங்க. அதான் பாலாவது நல்லதா இருக்கணும். என்னிடம் வாங்கற ஐம்பது ஆறுபது வீட்ல பிள்ளைகள் ஆரோக்கியமா இருக்கணும் அதுக்கு தான் தொலைவை கண்டுக்காம வந்திடறது. எல்லாம் அடுத்த தலைமுறை சத்தா இருக்கணும். நான் வாழ்ந்து முடிச்சாச்சு.

    ஆனா என்ன நான் பலயிடம் போய் வர்றேன். எங்க என்னால மற்றவர்களுக்கு எதுவும் பாதிக்கக்கூடாது. அதான் முன் ஜாக்கிரதையா எட்டியிருந்து ஊத்தறேன்." என்றதும் ஆர்த்தி ஒர் நிமிடம் இவரின் பாதுகாப்புக்கு நம்ம கொரானா நோயாளி மாதிரி பண்ணறாரே என்று எண்ணி விட்டோமே. இவர் எத்தனை பேரின் மீது அக்கறையோடு இருக்கின்றார் என்று மனதிலே பாராட்டியதை கூறவும் ஆரம்பித்தாள்.

     "போம்மா... ரொம்ப புகழற..." என்று அவசரமாக ஓடினார்.

     முற்றும்

   -பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...