Magic Water

 Magic Water

 


ரகி உறங்கி கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, "அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து வை." என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில் வைக்க சென்றாள் ப்ரியா.

     "ப்ரியா" என்ற அழைப்பு தொடுத்தான் விஜய். இரண்டாம் தளத்தில் இருந்து என்னயென்று கேட்க, "என் போன்" என்றதும் அதை கொடுக்க சென்றாள்.

    அந்த நேரம் ரகி விழி திறந்தாள். குளிருட்டப்பெற்ற அறையில் அவள் மட்டும் இருக்க, தனது ஷாக்ஸ் அணிந்த காலில் மெல்ல நடந்து வந்தாள்.

     அந்த இடத்தில் யாருமே இல்லை என்பதை அறிந்து தன்னை பூட்டி வைத்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.

     ஜன்னல் வழியே பகலவன்  கதிர்கள் ஒளியை தர இதுவரை ஒளியை காணாத அவள் கண்கள் கூசியது.

   ஒவ்வொர் அடியாக எடுத்து வைத்தாள் அவளின் நடை எந்திரம் போல மெதுவாக இருந்தது.

     கண்கள் நாலப்பக்கமும் தூழாவியது. இங்கே தன்னை தவிர யாருமில்லையென்ற எண்ணம் எழுவும், குளிர்சாதன பெட்டியில் கை சென்றது. அங்கே அந்த நீரும் இருந்தது.

    கண்ணாடியில் குடுவையில் இருந்த நீரை எடுத்து குடித்து முடித்தாள்.

       இது சாதரண நீர் அல்ல. நீரை போலவே நிறமற்றது. சற்றே துவர்ப்பு கலந்த சுவையாக இருந்தது. 

    இதுவரை அந்த சுவை சுவைத்திருக்காத ரகி அதன் பின் மீண்டும் யாருமில்லையென்றதும் தன்னை பாதுகாப்பாக வைத்திருந்த அறைக்கே சென்றாள். அங்கே தான் ரெட் என்ற அவளின் எந்திரமும் இருந்தது.

    அதோடு அவளும் சென்று படுத்துக் கொண்டாள்.

    இமையை மூடி படுக்க, ப்ரியா போன் பேசியபடி வந்ததை அறிந்தாள்.

      இம்முறை ரகி எழவில்லை. ஆனால் காதில் அனைத்தையும் பதிவு செய்யும் அவள் ப்ரியா போனில் பேசியதை கேட்டப்படி விழி மூடினாள்.

    "அந்த தண்ணீர் ரகிக்கு கொஞ்சமா  கொடு. அவளுக்கு ஒத்துக் கொண்டால் நல்லது." என்ற குரல் கேட்டது. ப்ரியா ஸ்பீக்கரில் போட்டு இருந்து தனது புத்தகத்தை எடுத்து வைத்தாள். மேலும் விஜய் "பார்த்து ப்ரியா  ஒத்துக் கொள்ளவில்லை
என்றால் எட்டி வை. விளைவு தெரியும் தானே. போன முறை ஜீவிக்கு கொடுத்து என்னாச்சு தெரியும்ல அளவுக்கு அதிகமா வளர்ந்து..." என்றவனின் பேச்சை இடைவெட்டினாள் ப்ரியா. 

    "அய்யா அறிவுஜீவி எனக்கும் தெரியும் நானும் பட்டுட்டேன். உங்களை மாதிரி பாடம் கற்றுக்கிட்டேன்." என்று ப்ரியா கூறவும் விஜய் அணைத்து இருந்தான்.

    ரகி படுத்திருந்தவள் அந்த கண்ணாடியில் இருந்தவை முழுவதும் குடிச்சிட்டேன். அப்போ எனக்கு என்னாகும். அளவுக்கு அதிகமா வளர்ந்திடுவேனா? என்றவளின் சிந்தனையில் சிறுமூளை பெருமூளையிடம் விசாரணைக்கு சென்றது.

     அவள் உடலில் மாற்றம் பெற எழுந்தாள். அவள் எழுந்ததை அவளறிவாளா? அது நேரம் கடக்க அறிவாளோ?

     தன் கைகள் நீண்டு கொண்டிருக்க, கால்கள் அதுப்போலவே தடிக்க, உயரமானாள்.

      சுவர் தலையில் இடிக்க நேரிடும் என்பதை அறிந்தவள் வேகமாக வெளியே ஓடினாள்.

     ரகி மாடிக்கு விரைந்தாள் அங்கே பக்கத்து பக்கத்தில் கட்டிடங்கள் நெருங்கி இருக்கவும் தன் வளர்ச்சியை அதனோடு ஒப்பிட்டு பார்த்தாள்.

     அச்சோ... நான் இத்தனை உயரம் வளர்ந்துவிட்டேன். எனக்கு என்ன ஆனது?
 
     சுற்றிமுற்றி பார்த்தாள் ரகி. யாரும் தன்னை விசித்திரமாக பார்க்கவில்லை. தன்னை கண்டு அஞ்சவும் இல்லை. ஏதோ புத்துணர்வும் விளையாடும் மனமும் எட்டி பார்த்தது.

     படியில் தாண்டுவதை போல மாடியில் இருந்து ரோட்டில் கால் பதித்தாள்.

    அவள் கால் தடம் வைத்தயிடத்தில் மனிதர்கள் எறும்பு போல இருந்தார்கள். அவர்களை மிதிக்கவில்லை என்றதும் அந்த மானிடன் நன்றி கூறி சிரிக்க, ரகியுமே இணைந்து சிரித்தாள்.

     இந்த அனுபவம் விசித்திரமாக இருந்நது. சில நாட்கள் முன் ஜீவி போட்டு பார்த்த திரைப்படத்தில் வந்தது போல தான் வளர்ந்துவிட்டோமே என்ற துள்ளல் மகிழ்ச்சி ரகியிடம் அதிகமாகவே இருந்தது.

   துள்ளி குதிக்க எண்ணினாள். நான்கு தெரு சந்திக்கும் ரோட்டில் நின்றவள் குதிக்க, தூரத்தில் அவளுக்கு பிடித்த, ஒயிட் நூடுல்ஸ் விற்றுக் கொண்டிருந்தது.

      அதனால் அந்தப்பக்கம் நடந்து சென்றாள். இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த ஸ்டீட்புட் வந்தடைந்தவள் அங்கே நின்று குனிந்து கையை நீட்ட, தானாக அந்த கடைக்காரர் தட்டில் வைத்து கொடுத்தார். ரகியின் கையில் சீரகமிட்டாய் அளவு ஒயிட் நூடுல்ஸ் தெரியவும் அதனை ஒரே வாயில் போட்டாள்.

    ஒர் பாத்திரத்தில் இருந்தவையை அப்படியே போட்டு நீட்ட இம்முறை அது அனைத்தும் ரகியின் வயிற்றில் விழுந்தது.
  
      தனது உயரத்திற்கு இன்னமும் பல இடங்கள் அவளை கட்டி இழுத்தது.

      அவளும் தூரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சென்றாள்.

      இம்முறை ரோட்டில் அவ்வளவு எளிதாக நடைபயில இயலவில்லை.  எங்கு திரும்பினும் கூட்டம். கால்களை பார்த்து பார்த்து வைக்கும்  நிலைக்கு தள்ளப்பட்டாள். கீழே மனிதர்கள் "ரகி... ரகி..." என்று அலறுவது எங்கோ கேட்பதாகப்பட்டது.

    தன்னருகே இருக்கும் உயரமான கட்டிடத்தினை தொட்டு பிடித்துக் கொண்டே சென்றாள்.
 
     அவள் எங்கு செல்கின்றாளென அவளே அறியவில்லை. பாதை கிடைக்கும் பக்கம் காலடி வைத்தாள்.

     அதுவே தானாக ஒர் மாற்று பாதையை காட்டியது. நின்று பார்த்தவள் மனம் குத்தாட்டம் போட்டது. எதிரே கடற்கரை, சில்லென்ற காற்று, மனிதர்கள் ஒரளவு கூட்டமின்றி  நடக்க எளிதானது.

    தன்னிரு கையை தன் பாக்கெட்டில் வைத்து, ஸ்டைலாக நடந்தாள். அவளுக்கு இப்படி மண்ணில் காலை புதைத்து மணல் பறக்க விளையாடி மகிழ பிடித்திருந்தது. "இதே ஜீவி இப்படியல்ல" என்ற குரல் மீண்டும் கேட்டது.

    ஜீவி பிடிக்காத பெயர் எனக்கு முன் உருவாக்கம் பெற்றவள். அதனாலே ஒப்பிட்டு பார்த்து கடுப்பாக்குவாள் ப்ரியா.
  
    இன்று ஜீவியில்லை. நான் மட்டுமே... எனது உயரம் ஜீவியை விட அதிகம். ஜீவியை விட பலம். அடுத்த முறை ஜீவியோடு தன் உயரத்தை ஒப்பிட்டு வேண்டும்.

    விஜய் கூறுவது போல ரகி சற்றே புது கம்பியூட்டர் தான். அனைத்தையும் அழிக்காமல் பதிவு செய்து சரியான நேரத்திற்கு வாதிடும்.

     பிழையை சரிச்செய்ய இயலாது புது அப்டேட்டாக மாற்றிடும். நாம் தான் அவளின் அப்டேட்டிற்கு வளைந்து செல்ல வேண்டும்.

   ரகி ஆட்சி செய்ய ஆரம்பித்தாள். ப்ரியாவுக்கு எப்பொழுதும் திட்டு உண்டு ஜீவியை கடுப்பாக்குவார்கள்.

    மணலில் விளையாடிய ரகி நினைவுகள் எதிரே இருந்த ஐஸ்க்ரிம் கடையை குறி வைத்தது.

   இம்முறை "ஐஸ்க்ரிம்" என்று ரகி ஓட, "ரகி எழுந்திரு. ஐஸ்க்ரிம் எல்லாம் நோ. இங்க மேஜிக் வாட்டர் இருக்கு. குடி." என்ற குரல் அதள பாதாளத்தில் கேட்டது.

     தன் காதில் கேட்ட குரலை புறம்தள்ளி மணலில் பெரிய வீட்டை கட்டி முடிக்க விரும்பினாள். கையில் தூழாவி ஈரமணலை எடுத்து கட்டி முடிக்கவும் சிற்சில நீரால் கரைந்தது. கோபம் கொண்டு எழுந்து நிற்க ப்ரியா அங்கே சிலை போல காட்சியளித்தாள்.
  
     நாம சிலையை இல்லை கட்டி பிடிச்சோம் இது என்ன ப்ரியா நிற்குது என்றே ரகி யோசிக்க, ரகி கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாக மாறியிருந்தாள். அந்த இடமோ கடற்கரையாக இல்லாமல் அவளின் படுக்கும் அறையாக காட்சியளித்தது.

     "எத்தனை முறை ரகி எழுப்பறது. ஜீவி எல்லாம் எழுந்து குளிச்சிட்டு ஆன்லைன் பத்து மணி கிளாஸ்க்கு தயாராகிட்டா.. நீ ஒன்பதரைக்கு கிளாஸை வைச்சிட்டு ஒன்பது மணி வரை தூங்கிட்டு இருக்க. எழுந்திரு...'' என்று அரற்றினாள்.

      கண்களை இன்னமும் கசக்கிக்கொண்டு "அம்மா... அப்போ நான் வளரவில்லையா..?" என்று ரகி கேட்டாள்.

      "ரகி பாப்பா தான் அக்காவோட பாதி உயரத்துக்கு வளர்ந்துட்டு இருக்காளே." என்று ப்ரியா கூறினாள்.

      "இல்லை மா. நான் பில்டிங் உயரத்துக்கு. எனக்கு பெர்த்டேவுக்கு ஒரு கடையில பொம்மை வாங்கினியே அந்த கடை அளவுக்கு வளர்ந்தேன். அன்னிக்கு ஈவினிங் பீச் கூட்பிட்டு போனியே அங்க போனேன்." என்று கனவை நினைவுப்படுத்தி விவரித்தாள்.

      "இந்த படத்தை பார்த்து அடுத்த நாள் கனவு கண்டு ஏன் டி இப்படி பண்ணற...

நேற்று முன்ன பேய் படம் பார்த்து பேய் வந்துச்சுனு சொன்ன.

அதுக்கு முன்ன டாய் ஸ்டோரி பார்த்து என் பொம்மை என் கூட பேசிச்சு சொன்ன.

    அதுக்கு முன்ன நைட்டு போன்ல டோரா கார்டூன் பார்த்துட்டே தூங்கி டோரா வீட்டுக்கு மலை கடல் காடு தாண்டி போனேன் சொன்ன. இப்ப 'ஹனி ஐ பிளோ அப் த கிட்ஸா'...?" என்று எழுப்பியபடி குளிப்பாட்டினாள்.

     "ம்மா... ப்ரிட்ஜில இருந்த மேஜிக் வாட்டரை குடிச்சிட்டேன். நான் பிக்கா வளர்ந்தேன்." என்று முகம் தேய்க்க விடாது திருப்பி கொண்டாள் ரகி.

      "என்னது மேஜிக் வாட்டரா...? அது இளநீர் டி. உனக்கு இளநீர் சொன்னா குடிக்க மாட்டனு அப்பா மேஜிக் வாட்டருனு சொன்னா நீ குடிக்கிறனு அப்படி சொன்னது."

    "இல்ல அது மேஜிக் வாட்டர். நான் குடிச்சி பிக்கா வளர்ந்தேன்." என்று இருந்த நீரை மக்கில் எடுத்து ப்ரியா மீது தெளித்தாள்.

      "ரகி நான் குளிச்சிட்டேன் டி. என் மேல தண்ணீர் ஊத்தாத." என்று ப்ரியா அதட்டவும்

     "அப்போ ஒத்துக்கோ... அது மேஜிக் வாட்டர். நான் வளர்ந்தேன். அக்காவை விட,  உன்னைவிட, அப்பாவை விட,  அந்த பில்டிங் விட பிக்கா.'' என்று கூறி ஆமோதிக்க வைக்க,

     "சரி நீ வளர்ந்த.. பிக்கா... அந்த ஸ்கை இடிக்கிற அளவுக்கு போதுமா." என்று சம்மதித்து விட்டாள்.

   'உன்னை சொல்லக் கூடாது உங்கப்பாவை சொல்லணும். எப்பபாரு படத்தை பார்த்து அடுத்த நாள் அந்த கேரக்டரை வைத்து உன்னை உசுப்பேத்தி விடறதுக்கு.' என்று முனங்கியபடி ஆன்லைன் வகுப்புக்கு அமர வைத்தாள்.

     தொடுத்திரையில் ஆன்லைன் வகுப்பு ஆரம்பிக்கவும், மேம் நான் மேஜிக் வாட்டர் குடிச்சி  பிக்கா வளர்ந்தேன். உங்களுக்கு தெரியுமா.?" என்று ஆன்லைன் வகுப்பில் ரகி கதை அளந்து கொண்டிருந்தாள்.

       போச்சு கூட பதினெந்து பிள்ளைகள் அங்க கிளாஸ்ல இருக்கும். எல்லாம் குழம்பிட்டு சுத்துமே... என்றபடி ''மேம் அவ ட்ரீம்ல வந்ததை பேசறா.. டோண்ட் மிஸ்டேக்'' என்று கூறவும் யா ரகி அம்மா ஐ அன்டர்ஸ்டேண்ட்'' என்றதும் என்னை போல் ஒருவள் என்று சிரித்து கொண்டேன்.

     -முற்றும்.

-பிரவீணா தங்கராஜ்.

  hi
யாருக்கெல்லாம் இன்றைக்கு ஒரு படம் பார்த்தா அதுல வர்ற கேரக்டரை ஒரு வாரம் மனசுலயே தங்கி அவங்க மாதிரியே ரியாக்ட் பண்ணற பழக்கம் இருக்கு.... என் மகளுக்கு இருக்கு. தெறி படம் அப்பா மகள் அவங்களா கேரக்டரை பிரிச்சுப்பாங்க. டெடி படம்னா ஆர்யா தான் அப்பா டெடி தான் நானு இப்படி என் மக அவளா பிரித்து பா. நாம கூட நாவல் படிச்சா சில நேரம் அந்த நாயகி கதாபாத்திரம் நாமளா எண்ணிப்போம். இது ஒரு வகை.

   பட் பீலிங் சம்திங் நல்லா இருக்கும். இது எழுதி ஒரு மாதம் மேல ஆகுது. ஆனா கவர் பிக் கொடுக்க மாட்டேனு ஒரே அலப்பறை. காபி ரைட்ஸ் வேண்டுமாம். நான் பெற்ற மகள் நான் கட்டிக்க கணவர். போட்டோ தர மாட்டறாங்களே...
நான் அந்த சைட்ல இருந்து சுட்டுட்டேன். 😌
போட்டோவில இருப்பது என் பெரிய பொண்ணு. இப்ப வளர்ந்துட்டா. பட் சின்ன பொண்ணோட சேட்டைக்கு இந்த பிக் மேட்ச் ஆச்சு. அதான் சிறுகதையா போட்டுட்டேன்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு