பிரபஞ்சம் நீயே...
பச்சை பசுஞ்சோலை நந்தவனத்தில்
பாவை யென்னுயிராய் வந்தவளே...!
பிரபஞ்சம் நீயே என்றுணர்ந்து
பாதம் மடித்தே கை பற்றுகின்றேன்
விண்ணிலிருந்து வந்த தேவதையே...!
வையத்தில் வாழும் தாரகையே...!
வெய்யோனின் கதிரொளி சாட்சியில்
வேந்தனான் மணம் புரிய ஆசைக்கொண்டேன்
தாமரை வண்ணாடை நீயுடுத்தி
தாமரையாய் யென்மனதை சிதைத்ததென்ன
தாமரை மலர் கரத்தில் மொட்டாய்...
தவிக்கிறது யென்னிதயம் இதழ் பதிக்க
புன்னகை மிதமாய் வீசி விட்டாய்...
புவிதனில் எந்தன் பாதம் சிறகிட்டது
பூவிதழ் மெல்ல நீ திறந்து
புதிரை விடுத்திடு மையல் சொல்லியே...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment