சொல்லியது பழமை

பாங்காய் கட்டுக்கட்டிய பாய்களை
பதவிசனமாய் சும்மாட்டில் அமர்ந்தி
கூவிக் கூவி விற்று முடித்து
கூடுகள் தேடி ஓட்ட மெடுக்க
பாய்கள் விற்று வந்த பணம் - பிள்ளையின்
படிப்புக்கும் பழங்கஞ்சிக்கும் போதுமானதாயிருக்க
வீதியென்ன வீடுயென்ன யென்பதுயெல்லாம்
உழைக்கும் கரங்களுக்கும் தெரிவதில்லை
பாதணியில்லை இந்த பாதங்களுக்கு
பஞ்சு மெத்தையில் கிட்டிராத நித்திரை
கோரைப்பாயி சுமந்தவளிடம் மண்டியிட்டே
பங்கமின்றி துயில் கொள்கின்றது .
கோரைப்பாயின் மேற்படுக்க
நோய் நொடிகள் இங்கில்லை
பந்திப்பாயில் பகிர்ந்து உண்ண
பாசமாதில் நீண்டு போக
பங்கமின்றி வாழ்ந்திடவே சொல்லியது பழமை
              -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1