பணிப்பெண்

மிக பிடித்த வண்ணங்கள் கொண்ட
ஆடைகளை பரப்பி
மெல்ல மெல்ல தொட்டு
பார்த்து பார்த்து ரசித்து
விலைப்பட்டியல் போடுமிடத்திற்கு
அனுப்பிவைத்தாயிற்று
இனி அடுத்த வாடிக்கையாளர்
வரும் வரை கலைந்த புத்தாடையை
தன் தோளில் பின் குத்தியே
கிழிச்சலை அடைந்த நிறமிழந்தயாடையை 
மறைத்த படி மடித்து வைத்து
சில ஏக்கத்தையும் வறுமையையும் புதைத்தே
அடுத்த வண்ணயாடையை 
எடுத்துக் காட்ட தயாரானாள் பணிப்பெண்.
                               -- பிரவீணா தங்கராஜ் .
 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1