வாழ்க்கை யென்னும் கல்வி
எட்டு மைல்கள் ஏழு மைல்கள் நடந்தே
புத்தகப் பையை முதுகில் சுமந்து
நீரோடைக் கடந்து நிலங்களைக் கடந்து
மணி அடித்து முடித்தப் பின்னே
சுவரின் மறைவில்
தமிழ்த்தாய் வாழ்த்து முடிவில்
ஆசிரியர்கள் பார்க்காதப் போது
சாரையாய் நின்றிருந்தக் கூட்டத்தில்
பையோடுக் கலந்து விட்டு
மூச்சு வாங்கி வகுப்பறையில் நுழைந்து
திக்கித் திணறி கற்ற ஆங்கிலத்தில்
இருந்த நிறைவு
இன்று ஆயிரங்களை அள்ளி வழங்கி
நுனி நாக்கில் பிள்ளைகள் பேசிடும் ஆங்கிலத்தில்
ஏதோவொன்று மனதை நிறைய விடாது
குறைந்தே இருக்கின்றது
வாழ்க்கை யென்னும் கல்வி அவர்கள்
கற்றிடாது செல்வதால்...
-- பிரவீணா தங்கராஜ் .
புத்தகப் பையை முதுகில் சுமந்து
நீரோடைக் கடந்து நிலங்களைக் கடந்து
மணி அடித்து முடித்தப் பின்னே
சுவரின் மறைவில்
தமிழ்த்தாய் வாழ்த்து முடிவில்
ஆசிரியர்கள் பார்க்காதப் போது
சாரையாய் நின்றிருந்தக் கூட்டத்தில்
பையோடுக் கலந்து விட்டு
மூச்சு வாங்கி வகுப்பறையில் நுழைந்து
திக்கித் திணறி கற்ற ஆங்கிலத்தில்
இருந்த நிறைவு
இன்று ஆயிரங்களை அள்ளி வழங்கி
நுனி நாக்கில் பிள்ளைகள் பேசிடும் ஆங்கிலத்தில்
ஏதோவொன்று மனதை நிறைய விடாது
குறைந்தே இருக்கின்றது
வாழ்க்கை யென்னும் கல்வி அவர்கள்
கற்றிடாது செல்வதால்...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment