நீ என் முதல் காதல் -11

அத்தியாயம்-11

   ஸ்ரீநிதி வீட்டிற்கு செல்லும் முனைவரை வந்துவிட்டான் ம்ருத்யு.  
   அவளை தட்டியெழுப்ப, "டோண்ட் டச் மீ ஜீவி. எத்தனை முறை சொல்லறது. தொட்டு பேசாதனு'' என்று முனங்கினாள்.

   "நான் ஜீவியில்லை ம்ருத்யு" என்றான். ஸ்ரீநிதி மட்டும் நிதானத்தில் இருந்தால் அவனின் செங்கனலான முகத்தை பார்த்திருப்பாள். 
   
  ''ம்ருத்யுவா? சோ ஸ்வீட் வந்துட்டியா? அந்த ஜீவியிடம் ஏன்டா ஹாஸ்பிடல்லயிருந்து ஓடிட்டனு கேட்டா. என்ன பேசறான் தெரியுமா? மம்மியை ஒரு பங்ஷன்ல பார்த்து சைட் அடிச்சிருக்கான் அந்த பரதேசி. 
   எங்க மம்மி பார்த்தா அதை வச்சி ரிஜெக்ட் பண்ணுவாங்கனு ஓடி ஒளியறான். 
   நீ வேணுமின்னா பாரு ம்ருத்யு இப்படியே ஓடியொளிந்தா நான் உன்னையே கட்டிக்கப்போறேன்." என்று உலறியவள் அவன் கன்னத்தை தட்ட தட்ட பேசி முடித்து அவன் தோள் வளைவில் சரிந்தாள். 

     ம்ருத்யுவோ அவள் பேசியதை கேட்டு கடுப்பானது. ஆனால் மற்றதை யோசிக்க அவனுக்கு நேரமில்லை. வீட்டு கதவு திறந்ததும் இவளை அறைக்கு எப்படி அழைத்து செல்வது? இப்படியே என்றால் தள்ளாடியோ தொபுக்கடீரென விழுந்தோ மாட்டிக்கொள்வாள். 

  ஏற்கனவே திருமண நாளை பார்த்துக்கொண்டிருக்க, விரைவில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. 

   என்ன பண்ணலாமென்று சிந்தித்தவனுக்கு பேசாம தூங்கிட்டுயிருக்கானு சொல்லி நம்மளே கையில தூக்கிட்டு போய் அவ ரூம்ல படுக்க வச்சிடலாம். அத்தை மாமா அப்ஜெக்ஷன் பண்ண மாட்டாங்க. என்ன நமக்கு தான் தைரியம் வரணும். என்றவன் சிந்தனையில் ஸ்ரீநிதி உருண்டுபடுக்க முனைய, "யோசிக்க அவசியமேயில்லை. தூக்கிட்டு போகறது பெஸ்ட்" என்றவன் காரை ஸ்டார்ட் செய்து ஸ்ரீநிதி வீட்டுக்குள் விடுத்தான். 

   வீட்டுகதவும் திறந்திருக்க, அவளை தூக்க ஆரம்பித்தான். 

  'மாமா அத்தை கிட்டவரக்கூடாது காட். இல்லைனா ஸ்மெல் லைட்டா வந்து காரியத்தை கெடுத்துடும்.' என்று நடந்தான். 

   ரிதன்யா எப்பவும் போல இரவில் வெகு சீக்கிரமே உறங்கிடும் சமத்து குட்டி. 

   லலிதாவும் ஸ்ரீவினிதா கூட அவர்கள் அறையில் உறங்கியிருக்க, ஷண்மதி தான் ஹாலில் வீற்றிருந்தது. 

     யுகனுமே மகளுக்காக மனைவியோடு காத்திருக்க, ம்ருத்யு கையில் ஸ்ரீநிதி தவழ்ந்திருக்க, "என்னாச்சு ம்ருத்யு?" என்று கேட்டான். 
     "கார்ல லாங் டிரைவ் போனோம் மாமா. வர்றப்பவே தூங்கிட்டா. சரி எழுப்ப வேண்டாமேனு தூக்கிட்டு போறேன். நான் மாடில விட்டுட்டு கிளம்பிடறேன். யூ டோண்ட் வொர்ரி மாமா." என்று யுகேந்திரன் அருகே வராமலிருக்க அவசரமாய் லிப்ட் கதவை மூடினான் ம்ருத்யு. 

   "எவ்ளோ பொறுப்பா பார்த்துக்கறான். நம்ம பொண்ணு தூக்கம் கூட கலையக்கூடாதுனு" என்று அவர்களை ரசித்து மனைவியை பார்க்க ஷண்மதியோ வெறுப்பாய் முகம் வைத்து, "கல்யாணத்துக்கு முன்ன எங்கயும் போகவேண்டாம்னு ஸ்ரீயிடம் சொல்லிருந்தேன் யுகி. உன் மகளுக்கு அந்த அறிவேயில்லை." என்று கோபமானாள். 
   
   இங்கே யுகி ஷண்மதி மகளை கூறவும் அவளிடம் தன் மகளின் பெருமையை வாசிக்க ஆரம்பித்தான். 

   ம்ருத்யு அந்த இடைப்பட்ட நேரத்தை சாதகமாக பயன்படுத்தி லிப்டில் ஏறி ஸ்ரீநிதி அறையை அடைந்துவிட்டான். 
  
   அவளை மெத்தையில் கிடத்திவிட்டான். எப்பொழுதும் லைட்வெயிட் என்றாலும் நீண்ட காதணிகள் அணிவது ஸ்ரீநிதி பழக்கம் அத்தோடு அதனை உறங்கும் நேரம் மொத்தமாய் கழட்டிவிடுவாள்.  

   பெரும்பாலும் வீடியோ காலில் கம்மல், செயின், மோதிரம் உட்பட கழட்டவும் இன்று ம்ருத்யு அதே போல அவளது செருப்பை முதலில் கழட்டினான். 

    ஹீல்ஸ் செருப்பு கழட்டி அதனை தூரமாக வைத்துவிட்டு, பிரேஸ்லேட் கைகடிகாரம், கம்மல் என்று கழட்டி அதனை டிரெஸ்ஸிங் டேபிளில் வைத்தான். 
   மோதிரம் மெதுவாக உருவ, தலையில் மாட்டிய க்ளிப் என்று கழட்டியவன் கடைசியாக கழுத்திற்கு சென்றான். 

   கழுத்தை நெறுக்கும் நெக்லஸ் தேவையா? அதுவும் உறங்கும் நேரம்? கைகள் நடுங்க, கழட்ட முயன்றான். 
  
   கஷ்டப்பட்டு நெக்லஸை கழட்டிவிட்டு பின்னங்கழுத்தில் அவன் கையை நுழைத்து, அவளை முத்தமிட ஆசையெழும்பியது. 

     அவள் வேறொருவனை விரும்புவதை எண்ணியே கையை தளர்த்தி கொண்டான். 

  ஆசையை அடக்கியபடி நெக்லஸையும் டேபிளில் வைத்துவிட்டான். 
  
   போர்வையை போர்த்திவிட்டு "உனக்கு ஏன் ஸ்ரீ என்னை பிடிக்காம போச்சு. நான் உன் மனதை பாதிக்கலையா? யாரோவொருத்தன் காதலை எப்படி ஏத்துக்கிட்ட? என்னோட காதல் உன் கண்ணுக்கு தெரியாம தான் இந்த முட்டாள் ஒருதலைபட்சமா காதலிச்சிருகாகேனா? நீ எனக்கில்லையா ஸ்ரீ?'என்று கலங்கினான். 

   எட்டாகனியாகப் போகின்றவளை ரசித்து உன் இதயத்தை நீயே பலவீனமாக்கி ரணத்தை வடிக்க போகின்றாயா? மனதை தேற்றிக்கொண்டு தயார்படுத்திக்கொள். 
   திருமணம் வரை வந்தாலும் இவள் ஜீவியை மணக்க சென்றிடுவாள். நீ ஒரு சப்டூயுஸ்ட் எப்ப வேண்டுமென்றாலும் உன்னை அகற்றிடும் முனைப்பில் இருக்கின்றால் உன்னவள்.

     இங்கேயேயிருந்தால் இவளை விட்டு ஒரு அடிக்கூட எடுத்து வைக்க தயங்கும் என் கால்கள். இது இரவு நேரம் பகலில் காணலாமென்று வெளியேறினான்.

  கீழே மாமாவும் அத்தையும் வாதம் செய்வது கண்ணில்பட்டது. "உன் மகளை பத்தி நீ இன்னமும் சரியா புரிஞ்சுக்கலை யுகி. அவ சுத்தமா சரியில்லை. திமிர் பிடிச்சிட்டு கிடக்கா. என்னைக்காவது கரி அள்ளி பூசுவா அப்பவும் சின்னதுல பவுடரை போட்டு சேட்டை செய்யறவளா மனசுல நினைச்சி. வாவ் என் பொண்ணு பிளாக் கலரை என் முகத்துக்கு போட்டு அழகுப் பார்க்கறானு லூசாட்டும் பேசுவ." என்றவள் கணவரை அதட்டிவிட்டு ம்ருத்யுவிடம் வந்தாள். 

  "நான் கிளம்பறேன் அத்தை. மாமா அத்தை சொல்லறதை கேளுங்க. உதை வாங்காதிங்க" என்று நகைத்து கடக்க, "இவன் ஒருத்தன் உன்னை பார்த்ததிலருந்து நான் சந்தோஷமாவே இருக்கேன்னு நம்பறான்." என்று சலிப்பாய் கூற, "அப்படியா அப்ப அதுக்கு முன்னவே ஹாப்பியா இருந்திங்க." என்று கேட்கவும் அத்தை மாமாவின் அக்கப்போரை கண்டவன் வெளிநடப்பு செய்தான். 

   இருவரும் "குட் நைட் ம்ருத்யு" என்றதற்கு சிரித்து கை அசைத்தான். 
  
   யுகியோ ம்ருத்யு போனப்பின் தோன்றிய எண்ணத்தால் ஷண்மதியை வாகாக தூக்கினான். 

   "இப்பவும் சந்தோஷமா இருக்க நீ தான் காரணம்." என்று பேசவும், ஷண்மதியோ ஸ்ரீநிதி மீதிருந்த கோபத்தை மறந்தவளாக கணவனிடம் நேசத்தை பகிர்ந்தவளாக கிலுக்கி சிரித்தாள். 

   "ஓகே ரூமுக்கு இப்படியே துக்கிட்டு போங்க" என்று ஆணையிட்டாள் ஷண்மதி.

  வெளியே ம்ருத்யுவோ 'நீயும் நானும் அத்தை மாமாவுக்கு மேலே காதலிக்கணும் எத்தனை ஆசையோடு இருந்தேன் ஶ்ரீ. இப்படி நெருப்பை திண்ண வச்சிட்டியே.' என்றவன் வீட்டுக்கு சென்று நேரம் கழித்து உறங்கினான். 

    அடுத்த நாள் காலையிலேயே ம்ருத்யு ஸ்ரீநிதிக்கு கால் செய்து, 'உன்னை பார்க்கணும். கொஞ்சம் பேசணும் ஸ்ரீ" என்று கூறினான். 

  நிச்சயம் தன்னை திட்டுவதற்கு கூப்பிடுகின்றானென்று அறிந்தவள், "இன்னிக்கு கொஞ்சம் பிஸியாச்சே ம்ருத்யு" என்று நழுவ பார்த்தாள். 
   
   "சாவடிச்சிடுவேன் நீ என்ன பிஸினு எனக்கு தெரியும். வரலை, 'அத்தை அத்தை, ஸ்ரீநிதி ஜீவினு ஒரு பையனை லவ் பண்ணறா'னு போட்டு கொடுத்துடுவேன். மரியாதையா 'வானவில் குடில்' ரெஸ்டரண்டுக்கு வந்துடு." என்று பேசவும், "சரிடா." என்று போனையே வெறித்தாள். 
   
   தனியாக சென்றால் மாட்டிப்போமென்று ஜீவியை அழைக்க, அவனோ ம்ருத்யுவோடு ஸ்ரீநிதி இருந்தால் பிடிக்காமல் தவிர்க்க பார்த்தான். 

  ஒருவழியாக மதிய உணவிற்கு 'வானவில் குடில்' ரெஸ்ஸார்ட் பக்கம் தனியாக வந்தார்கள். 

  எப்பவும் பார்க்கும் சாந்த சொரூபனான முகமேயில்லை ம்ருத்யுவிற்கு. கடுகடுவென்று இருந்தான். உப்பிற்கும் சிரிப்பை மறந்து கற்சிலைக்கு கைகால் செய்து உயிர் கொடுத்தது போல வந்தான். 

   ஸ்டார்டட், மெயின் டிஸ் முகிலில் செய்த பிரியாணி ஆர்டர் கொடுத்துவிட்டு சில்லென்ற நீரை எடுத்தான். 

  "வெயிட்டர் ஹாட் வாட்டர் வேண்டும்'' என்று கூறிவிட அது வந்ததும் லேசான குளிர் நீரை கலந்து தொண்டையை நனைத்தான்.

     ஸ்ரீநிதி அங்கும் இங்கும் பார்வையை வீசியவள் ம்ருத்யுவின் வார்த்தை அம்பிற்கு தயாராகினாள். எப்படியும் தன்னை போல கத்தி அதட்ட மாட்டானென்ற நம்பிக்கை. 

   அப்படியே என்றாலும் இங்கு தங்களுக்கு அருகே யாருமில்லையே. 
   
    "நேத்து வீட்டுக்கு எப்படி வந்தேன்னு நினைவியிருக்கா?" என்றான். 
   அவன் அதட்டவில்லை, தன்னிடம் கோபிக்கவில்லை, ஆனால் என்னவோ வார்த்தையில் தன்னை இரண்டும் ஆட்டிப்படைத்து கேட்பதாக தோன்றியது. 

   "நீ தான் கூட்டிட்டு வந்த" என்றாள்.

  "எப்படி?" என்றதும், "வேற எப்படி என் கைப்பிடிச்சி" என்றதும் ம்ருத்யு முறைக்க, "சரிசரி "தோள்ல சாய்ச்சி கார்ல கொண்டு போய்" என்றதற்கும் முறைக்க ஆரம்பித்தான். 

   "எப்பவும் ஜீவி அப்படி தான் கூட்டிட்டு போவான், அதே போல" என்றதும் கூடுதலாக முறைத்து, "எப்பவும்... சோ அடிக்கடி தண்ணியடிக்கிற?" என்று கேட்க, "சீசீ இல்லையே. நீ என்ன குடிக்காரி ரேஞ்சுக்கு லுக் விடற ம்ருத்யு. உனக்கே தெரியும் மந்த்லி அங்க ஜீவியோட போவேன். அங்க போறப்ப எல்லாம் வீடியோ கால் போடுவேன். இந்த மாசத்துல மட்டும் இதான் முதல் தடவை. ஆக்சுவலி ஜீவியை பார்க்க வர்றப்ப மட்டும் தான். பிகாஸ் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அங்க என்றால் தான் தெரியாது. ஏன்னா அது ஜீவியோட பிரெண்ட் பப்." என்றாள். 

  "அடிச்சேன்னா பல்லு சிதறு தேங்காவா சிதறிடும். அப்பறம் கியூட்டா பல் இளிச்சிட்டு சிரிக்க முடியாது. 
    நேத்து பாவனாவுக்கு போன் பண்ணி பப் போகற பழக்கமிருக்கானு கேட்டா, எனக்கு அந்த பழக்கமேயில்லைனு சொன்னா. நீ அப்ப பாவனாவை கூட்டிட்டு போறனு தான் நான் நினைச்சேன். ஆனா நீ ஜீவியை பார்க்க இப்படி தனியா கிளம்பியிருக்க. 

  ஏய் அவன் பிரெண்ட் பப்னு சொல்லற. உன்னை ஏதாவது பண்ணினா என்னடி பண்ணிருப்ப?" என்று கத்தினான். 

நாட்டில் நடக்காதது அல்ல. தன் நண்பனை அடித்துவிட்டு அவன் காதலியோடு உல்லாசமாக இருப்பதும், நண்பனுக்கு தன் காதலியை விருந்து வைப்பதும் என்று ஏகப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தினசரி செய்திகளாக மனதை உலுக்குகின்றதே. இதில் உண்மை காதல் என்று எதையும் எளிதில் நம்பயியலவில்லையே. 
   
  "சீ, ஜீவி அப்படி கிடையாது. நீ என்ன கண்ணை மூடிட்டு எவனையாவது காதலிச்சிட்டேன்னு நினைக்கிறியா. யுகேந்திரன்-ஷண்மதி பொண்ணு. எங்கப்பாவை விடு அப்பாவி. எங்கம்மா எப்படிப்பட்டவனு தெரியும் தானே. கிளியை பூனையாக்குவா. பூனைய கிளியாக்குவா. 

   அப்படியிருக்கறப்ப எங்க எப்படின்னு எனக்கு தெரியும். அதோட நான் லவ் பண்ணற பையன் ஜீவி எப்படின்னு என்னால சொல்லமுடியும். காதலிக்கறேன்னு சொன்னதும் நான் ஓகே சொல்லிடலை. ஒன் இயர் பிரெண்ட்லியா பழகியிருக்கேன். ஐ நோ. 

   பக்கத்துல கைதாங்கலா கூட்டிட்டு போனதுக்கு ஓவரா ரியாக்ட் பண்ணிட்டு இருக்க" என்று கத்தினாள். 

    வெயிட்டர் வரவும் ம்ருத்யு அமைதியானான். அவன் முங்கிலில் இருந்து ப்ரியாணியை தட்ட, தட்டில் அப்படியே உதிரி உதிரியாக ப்ரியாணி கறிபீஸ் விழுந்தது. வெயிட்டர் சென்றதும், மூங்கில் வாசம் ப்ரியாணி மணம் என்று வயிற்று பசியை உண்டுசெய்ய, ஸ்டார்டட் சூப்பை குடித்தவள் மடமடவென அள்ளினாள். 

  "கைத்தாங்கலா? உனக்கு நல்லா தெரியுமா? உன்னை தூக்கிட்டு போனேன். இரண்டு கையிலயும்." என்று ம்ருத்யு பேசவும் ஸ்ரீநிதி நிமிர்ந்து பார்த்தாள்.

    "பொய்." என்றாள் உணவை ருசித்தபடி. 

  "கார்லயிருந்து தூக்கிட்டு நான் உன்னை ஹாலை தாண்டி, லிப்ட்ல நுழைந்ததை அத்தை மாமா பார்த்தாங்க. மாமா கூட கிட்ட வர்ற முயன்றாங்க. நான் தான் தூங்கிட்டானு சொல்லி நானே படுக்க வச்சிட்டு வர்றேன்னு உன் ரூமுக்கு வந்தேன். மாமா மட்டும் 
கிட்ட வந்திருந்தா அப்ப தெரிந்திருக்கும். 

  யார் கண்டா அத்தை இன்னிக்கே அவசரமா மேரேஜ் பண்ணி வச்சிருப்பாங்க. இல்லை உன் தோலை உறிச்சி அவங்க கம்பெனிலயே தொங்கிட்டு இருப்ப." என்று பேசவும் ஸ்ரீநிதி அலட்சியமாக "மேபீ ஷண்மதி எதையும் வேஸ்ட் பண்ணிட மாட்டா. என்னை கொன்றாலும் அவ கம்பெனில யூஸ் பண்ணினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை." என்று தெனாவட்டாய் கூறினாள். 

    "எங்கத்தையை பத்தி பேசாத. என்ன தெரியும் எங்கத்தையை பத்தி." என்று பேசவும், "உங்க அத்தை உன்னை எப்பவும் தூக்கி தலைமேல வைப்பா. என்னை தரையில வச்சிப்பா." என்று பொறுமினாள். 

  அத்தையை பத்தி பேசினால் பேச்சு திசைமாறுமென்று "நான் உன் ரூம்ல வந்து படுக்க வச்சி அசசரிஸ் கழட்டி வச்சிட்டு போர்வை போர்த்திட்டு போனேன்." என்றான். ஒரு ஆண்மகன் உன்னை தீண்டி உன் அசசரிஸை கழட்டியதாக அர்த்தத்தில் பேசவும், "சோ வாட். நீ தானே." என்றாள் இலகுவாய். 
   
  "சுயநினைவேயில்லாம போதையில இருந்த, சப்போஸ் நான் உன்னை கிஸ் பண்ணி உன்னை ஏதாவது செய்திருந்தா என்னடி பண்ணிருப்ப?" என்று ஒரு வாய் உணவும் விழுங்காமல் வினா எழுப்பிக் கொண்டிருந்தான். 

   ஸ்ரீநிதியோ வாயில் உணவும் கறித்துண்டும் வைத்து, வாயை மூடி அவை கீழே சிதறாமல், எதிரில் இருப்பவன் மீது படாமல், மற்றொரு கையால் வயிற்றை பிடித்து சிரித்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் பாதி அரைப்பட்டதும் "ஜோக் பண்ணாத. நீ அப்படி செய்ய மாட்ட. உனக்கு அந்த தைரியம் கிடையாது." என்றதும் ம்ருத்யு என்ன சொல்கின்றால்? 

  'உன்னால் காதலையே அவளிடம் பகிர முடியவில்லை. இதில் உடல் ஆக்கிரமிப்பா?' என்று மனசாட்சியே கேலி செய்தது. 

   ஸ்ரீநிதியோ வாயிலிருந்த உணவை விழுங்கி, "நீயுன்னு இல்லை. யாரும் என்னை நெருங்க முடியாது. பிகாஸ் தப்பி தவறி என்னிடம் வாலாட்டினா அவன் உயிரோட இருக்க மாட்டான். 
  அதோட ஷண்மதி எனக்கு ஏதாவதுனா அவங்களை கிழிச்சி தொங்க விட்டுடுவா." என்று கூறியதும் தன் அன்னையின் பெருமையை தன் வாயல் வரவும் சாப்பிடுவதை நிறுத்தினாள். 
   
  ஏனோ இந்தமுறை தான் தனக்கு திருப்தியான பதில் கிடைத்ததாக ம்ருத்யு உணவை உண்ண ஆரம்பித்தான். 

   ஸ்ரீநிதி கையை கட்டி செயற்கை நீரூற்றை வெறித்தாள். 

      அங்கே ஓடியாடி குழந்தைகள் விளையாடியபடி இருக்க ஒரு குழந்தை விழுந்து வாறியது. 

   கால் முட்டியில் ரத்தம் கசிந்திட, நிம்மதியாக வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்த ம்ருத்யுவிடம், "இரத்தம்?'' என்று கைகாட்டினாள். 

  "விளையாட்டுன்னா கீழே விழுந்து ரத்தம் வரத்தான் செய்யும். அதான் அவங்கம்மா இருக்காங்களே." என்றான்
    "ம்ருத்யு ரத்தம் டா. நீ நான் ரத்தபந்தம். சொந்தத்துல மேரேஜ் நடந்தா அவங்களுக்கு பிறக்கற குழந்தைக்கு உடல்நலக்குறைவோட பிறக்கும் சொல்வாங்க. 

  ஆல்ரெடி உனக்கு சின்னதுல ஹார்ட் பிராப்ளம் இருந்தது. இப்பவும் அன்னைக்கு மயங்கி விழுந்துட்ட. ஒருவேளை உனக்கும் எனக்கும் கல்யாணமாகி, நமக்கு பிறக்கற குழந்தைக்கு பிராப்ளம் ஆகும்னு ஷண்மதிகிட்ட பிட்டு போட்டு பார்க்கலாமா?" என்றதும் ம்ருத்யு மெதுவாக உணவை விழுங்கினான். 

    "என்னை பார்த்தா எப்படி தெரியுது. நோஞ்சான்னா? என் இதயத்துக்கு எதுவும் இல்லை. பிரச்சனை என்றால்  உன்னால தான் வரும்" என்று சாப்பிட்டு முடித்ததற்கு பில்பே செய்துவிட்டு எழுந்தான். அவன் பின்னாலேயே ஸ்ரீநிதி ஓடினாள். 

  "ம்ருத்யு ம்ருத்யு கொஞ்சம் நில்லுடா. என் எதிர்கால புருஷா கொஞ்சம் நில்லு" என்று அவன் கையை பற்றினாள். 

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ் 



  

   
   
   
  


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1