நீ என் முதல் காதல் -3

அத்தியாயம்-3

   ம்ருத்யு தங்கியிருக்கும் அறையெங்கும் ஸ்ரீநிதி நிறைந்திருக்க, தன்னிடம் வீடியோ காலில் பேசியவள் தான் காண்பதை கூட யோசிக்காமல் ஆடையை நெகிழ வைத்ததை எண்ணி குறும்போடு தனியாக சிரித்தான். 

    'ஸ்ரீ நான் வீடியோ கால் கட் பண்ணலைனா என்ன நடந்திருக்கும். உஷாராயிட்டு இருப்பியா? இல்லை தேவி தரிசனம் கிடைச்சிருக்குமா?' என்று தனியாக சிரித்து தலையணையை நெஞ்சோடு தழுவி நிலைக்கொள்ளாமல் தவித்தான். 

   ம்ருத்யு இன்று நேற்றல்ல உறக்கத்தை எட்டி நிறுத்தி இரவெல்லாம் ஸ்ரீநிதியை எண்ணி சிரித்து கனவில் வாழும் நிலை இங்கு வந்ததிலிருந்தே நடப்பது தான். 

  மாமன் மகள் ஸ்ரீநிதி பிடிவாதக்காரி. எதிலும் தனக்கு முன்னிலை தரவேண்டுமென்று எதிர்பார்ப்பாள். 
    சிறுவயதில் ஷண்மதி இரண்டாம் முறை கருவுற்ற போது, தம்பி வேண்டுமா? தங்கை வேண்டுமா? என்று கேள்வி முன்னிருத்த, ம்ருத்யு 'அத்தைக்கு பாய் பேபி பிறக்க வேண்டும்' என்றான். 
  ஸ்ரீநிதியோ தன் தாயிற்கு கேர்ள் பேபி வேண்டும் என்றுரைத்தாள். 
கடவுள் தரும் குழந்தை எது வந்தாலும் ஏற்றுக்க வேண்டும் என்று இரு குழந்தைக்கும் புரியவைக்க, ம்ருத்யு சம்மதமாய் எந்த குழந்தையென்றாலும் விளையாட வருவேனென்று உரைத்திட, ஸ்ரீநிதி அப்பொழுதுமே 'இல்லை கடவுளிடம் சொல்லிடுங்க. ஸ்ரீநிதிக்கு தங்கச்சி தான் வேண்டும்' என்று அழுத்தமாய் உரைத்தாள். 

   மருத்துவமனையில் யுகேந்திரன் விளையாட்டிற்கு ரிதன்யா பிறந்த பொழுது பெண் குழந்தை என்பதை மறைத்து ஆண் குழந்தை தம்பி பிறந்தானென்று உரைத்திட "அவனை எங்கயாவது தூர வீசிடுங்க. எனக்கு தங்கச்சி தான் வேண்டுமென்று மருத்துவமனையில் ஆக்ரோஷமாக கூறிட, யுகேந்திரனுக்கு சட்டென "அப்படி பேசாதடா தங்கச்சி தான் கடவுள் உனக்கு தந்தார் அப்பா விளையாட்டுக்கு சொன்னேன். ஒருவேளை தம்பியை தந்திருந்தா கூட இப்படி பேசக்கூடாது.'' என்று உரைத்திட,  தம்பி பிறந்ததால் தான் தந்தை தன்னை சமாளிக்கின்றாரென நினைத்து எனக்கு இந்த பேபி வேண்டாமென்று குழந்தை இருந்த தொட்டிலை உலுக்கினாள். ஷண்மதி மயக்கத்தில் கிடக்க அடக்கும் வழி யாரும் அறியவில்லை.

  யுகேந்திரன் எவ்வளவோ தடுத்தும் பெண் குழந்தை என்பதை நம்பாதவளை, அப்பொழுது ம்ருத்யு தான் டாக்டரிடம் அழைத்து சென்று "டாக்டர் ஸ்ரீநிதிக்கு தம்பி பிறந்திருக்கானா? தங்கச்சி பிறந்திருக்காளா?" என்று கேட்க தங்கச்சி என்று டாக்டர் கூறவும் தான் சமாதானம் ஆனாள். ஸ்ரீநிதியை பொறுத்தவரை அவளை அடக்குவது அன்னை ஷண்மதியால் மட்டும் இயலும். அதற்கு பிறகு என்றால் அவளையறியாது அடங்குவது ம்ருத்யுவிடம். 

ஒன்றாயிரண்டா சமாளிக்கும் வித்தையை அந்த வயதில் அவன் கற்றது இவளின் பிடிவாதத்தில் இவளின் கோபத்தால் என்று கூட கூறலாம்.

   இப்பொழுது வரை அவளை சமாளிப்பது ம்ருத்யுவை பொறுத்தவரை எளிதானது. அவளை ஏதோவொரு புள்ளியில் சமாளித்து சாந்தம் பெற வைத்திடும் கில்லாடி.

  காலம் முழுக்க சமாளித்து அவளை எப்படி கையாள்வதென்ற கலையை அவன் அறிவான். கரம் பற்றும் நொடிக்கு காத்திருக்கும் இவன் படிப்பு முடிவடைவதற்கு இரண்டு மாதம் இருக்கின்றது. 

    அதோயிதோயென்ற இரண்டு மாதமும் ஓடிடும் அதன் பின் அவளை நாடி, இந்தியா சென்றிடும் நாட்களுக்கு ஏங்கியிருந்தான்.

   இவனை ஏங்க வைப்பவள் துளியும் உறக்கத்திற்கு பாதகமின்றி நித்திரையில் லயித்தாள். 

   ஒரு ஆண்மகனின் மனதை சலனம் செய்து விட்டோமென்ற எண்ணமின்றி தொண்டையில் சரித்த வோட்காவால் போதையில் உறங்கியிருந்தாள். 

கொஞ்ச காலமாக ஸ்ரீநிதிக்கு அடுத்து என்ன? என்ற பெரிய வினாவுக்கு பதிலை தேடி மனம் சலித்து போனாள். 

  எப்படியும் விடையறியும் பொருட்டு சுற்றியவள் அன்னையின் பார்வையில் முறைப்புக்கு ஆளாகினாள். 

   மேற்படிப்பு படி, பேக்டரி வருகின்றாயா? தந்தையின் தொழிலை கவனிக்க ஆசையா? என்று கேட்க, இரண்டு மாத தவணையை மட்டும் மீண்டும் கேட்டிருந்தாள். 

   அதில் பாதி நாட்கள் தண்ணீர் பட்ட உப்பாக கரைய துவங்கியது. 

---

   ம்ருத்யுவின் தாய் தந்தையான தாரிகா பைரவ் இருவரும் கோவிலுக்கு வந்தார்கள். 
    
    தாரிகா கோவிலை சுற்றிவிட்டு அக்கடாவென அமர்ந்தவருக்கு மூச்சுவாங்கியது. 

   "என்ன இதுக்கே பலமா மூச்சு இறைக்குது. 

  அடுத்து பையன் இலண்டன்லயிருந்து வருவான். படிப்பு முடியவும் பிஸினஸ் பண்ணப்போறான். அவனுக்கு கல்யாணம் பண்ண வேண்டாமா? மருமக வந்தா மாமியார் அதிகாரம் பண்ண தெம்பு வேண்டாம்? அதோட பேரன் பேத்தி வந்தா ஓடியாடணும். நீ என்ன நோஞ்சானா இருக்க தாரிகா" என்று பைரவ் பேசவும் தாரிகா கணவரை பார்த்து "அந்த பயம் இருக்குங்க." என்று வருந்தினாள். 

    "ஏன் உன் பையன், கையோட வெள்ளைக்காரியை யாராவது கூட்டியாந்துடுவான்னா?" என்றதும் கணவரை புஜத்தில் அடித்து, "வாயில வசம்பை தேயுங்க. கல்யாணம் என்றதும் நல்லதா யோசிக்கறிங்களா? வெள்ளக்காரியாமே வெள்ளைக்காரி.
  ஏன் என் தம்பி மகளுக்கு என்ன குறை? ஒருத்திக்கு இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. வெள்ளைக்காரிங்க எல்லாம் அவங்க அழகுல நிற்க முடியாது. ம்ருத்யுவுக்கு அவங்களில் இரண்டு பேரை கட்டிவைப்பேன்." என்று சட்டென வார்த்தை விடுத்தார். 

   கணவர் பைரவ் என்ன நினைத்து கொள்வாரோ என்ற ரீதியில் அச்சம் கொள்ள, "நீ தான் சொல்லிட்டு இருக்க. உன் தம்பிக்கு அந்த எண்ணம் இருக்கான்னே தெரியலை. படிப்பு முடிஞ்சுடுச்சு. இன்னமும் கல்யாணம் பண்ணாம ஸ்ரீநிதியை வீட்ல வச்சிட்டு இருக்கான். 

   நானும் நாசூக்கா கேட்கலாம்னா உன் தம்பி பொண்டாட்டி ஷண்மதி எப்படி எடுத்துப்பான்னு தெரியலை. 

   உன்னை மாதிரி வீட்டோட இருக்கறவள் அவள் கிடையாது. தோல்பதனிட்டு தொழிற்சாலையை நடத்தறா, அதுவும் யுகேந்திரனோட தலையீட்டலோ உதவியோ எதுவும் தேவையின்றி ஒத்தையா நின்று நடத்துறப்ப, அவளோட பிஸினஸ் பீல்டுல யாரோட பையனையாவது ஸ்ரீநிதிக்கு கட்டி வைப்பாளோனு நானும் தயங்கிட்டு இருக்கேன்." என்றதும் தான் தாரிகாவுக்கு நிம்மதி பிறந்தது. 

   "ஒருவேளை பையனை பெத்தவங்க நாம. நாமளா கேட்கணும்னு இருக்கலாம். 

இப்பவே ரொம்ப லேட். நாளைக்குபின்ன நீங்க நினைச்ச மாதிரி ஷண்மதி உறவுலையோ பிசினஸ் பீல்டுலையோ கட்டி வைச்சி முடிச்சி பிறகு  நாம கேட்டிருந்து பொண்ணு கொடுத்திருப்போம்னு இரண்டு பேர்ல யாராவது சொன்னா, நமக்கு வாய்ப்பு நழுவியது போல ஆகிடும். 

   நம்ம ம்ருத்யுவுக்கு நாம தானே கேட்டு பார்க்கணும். சப்போஸ் மறுத்துட்டா ம்ருத்யுவுக்கு அலையன்ஸ் பார்க்க வேலையை இப்பயிருந்தே பார்க்கலாம்." என்றதும் பைரவோ தாடையை தேய்த்து முடித்தார். 

   "உன் தம்பியிடம் ஸ்ரீநிதியை ம்ருத்யுவுக்கு கட்டி வைக்க கேட்கலாம்னு சொல்லறியா?" என்று கேட்டார்.

   "கேட்டுடலாமே" என்று தாரிகா முடிவெடுத்து கூற, கோவிலிலிருந்து நேராக தாய் ஸ்ரீவினிதாவை காண்பதாக சென்று அப்படியே யுகேந்திரனிடம் பேசுவோமென்று கோவிலிலிருந்து கொடிமரத்தை பார்த்து வேண்டினார்கள். 

     பைரவோ யுகேந்திரனிடம் பேச தயாராகினான். 
ஒருவேளை மறுத்தாலும் ஏற்கும் முடிவோடு தான் இருந்தார். ஏனெனில் யுகேந்திரன் மனைவி ஷண்மதி ஸ்டேடஸ் அறிந்தவர் பைரவர். 

      ஷண்மதி வீட்டுக்குள் கார் நுழையும் நேரம் "பொண்ணு கேட்கலாமா வேண்டாமா தாரிகா?" என்று இரண்டு மனமாக மாறினார். 

   சில நேரம் உறவுகள் முக்கியமாக தோன்றினாலும் அவர்கள் வசதி மிரளவைக்கும் அல்லவா? அத்தகைய பயத்தில் சிக்குண்டு கேட்க, "ஆசையா என்னவென்னவோ பேசிட்டு கேட்கவா வேண்டாமானு என்னையே யோசிக்க வைக்கறிங்க. என்னவோ போங்க, யுகேந்திரன் வீட்லயிருந்த பார்ப்போம். இல்லைனா அம்மாவோட காதுல போட்டுட்டு கிளம்பிடுவோம். அம்மா பொறுமையா கேட்டு மறுத்துட்டா விலகியிருந்துப்போம்." என்று முடிவெடுத்து கொண்டு தம்பி வீட்டில் காலடி எடுத்து வைத்தார். 

   அதிகாலை பத்து மணி என்பதால் ஷண்மதி வீட்டில் இல்லை. ரிதன்யாவும் பள்ளிக்கு சென்றிருந்தாள். ஸ்ரீநிதி ஊர்ச்சுற்ற கிளம்பியவளை ஷண்மதி 'ஒன்னு என் பேக்டரிக்கு வா. இல்லை உங்க அப்பா கூட போய் அவர் ஆபிஸையாவது பார்த்துட்டு வா.' என்று கடிந்திட, தாயோடு இருப்பது தலைவலி என்பதால் தந்தையோடு சென்றாள். யுகேந்திரனுக்கு மகள் வருவதாக கூறவும் பேக்டரியை விடுத்து, கடலில் கப்பலில் பயணித்தார்கள். 
  
  கடல் வாழ் உணவுகளை அப்பொழுதே பிடித்து சமைத்து ருசித்து கடலழகை ரசிக்கும்படியாக நேரம் கடத்த திட்டமிட்டாள். 

    லலிதா ஸ்ரீவினிதா இருக்க, தாரிகா அன்னை ஸ்ரீவினிதா நலத்தை கேட்டு கொண்டு விபூதி புளியோதரை பிரசாதமும் வழங்க விபூதியை நெற்றியில் வைத்து பிரசாதத்தை சுவைத்து நலம் குறித்து பேசிட, லலிதாவை கண்டு பைரவ்-தாரிகா இருவருமே ஸ்ரீநிதியை ம்ருத்யுவிற்கு பேச தயங்கினார்கள். 
  
   லலிதாவோ "அக்கா நீங்க தாரிகாவோட பேசுங்க. நான் கொஞ்சம் ரூம்ல என் சின்ன அண்ணாவிடம் பேசிட்டு வர்றேன்." என்று நகர பார்த்தார். 

   "லலிதா நீங்களும் எங்க குடும்பம் தானே. எப்படியும் உங்களை தவிர்த்து என்ன பேசிடப் போறோம்." என்று ஸ்ரீவினிதா ஷண்மதியின் அத்தை லலிதாவை அமர வைத்தார்.

  என்ன தான் ஷண்மதியின் அத்தை லலிதா என்றாலும், யுகேந்திரனின் தாய் ஸ்ரீவினிதா அவர்களோடு வாழும் போது தங்கையாக பார்க்க ஆரம்பித்து விட்டார். 

  குறை குடைச்சலோ கொடுத்தாலாவது விலகி இருக்கலாம். நட்பாய் தங்கள் வீட்டு நலனில் அக்கறை செலுத்துபவரை யாரோவென்று போகவிடவில்லை.

   பைரவிற்கு பொண்ணு கேட்க சங்கடம் பிறந்தது. ஆனாலும் கேட்டிட தைரியம் இருந்தது. லலிதாவின் மனமும் அறிந்ததால் அப்படி தவறாக எண்ணமாட்டார் என்ற எண்ணம். 

  "அது வந்து அத்தை. ம்ருத்யு படிச்சிட்டு வரப்போறான். அடுத்து பிசினஸ் பண்ணலாம்னு இருப்பதா சொல்லிட்டு இருந்தான். 

    இதுக்கு நடுவுல அவனுக்கு கல்யாணம் பண்ணிடலாமானு ஆசை வந்தது. கேட்கலாமானு தெரியலை நம்ம வீட்ல ஸ்ரீநிதி ரிதன்யா இருக்காங்க.

ஸ்ரீநிதியை... இல்லை ஸ்ரீநிதிக்கு வேற வரன் ஷண்மதி பார்த்து வச்சிருந்தா ரிதன்யா படிக்கிறவரை காத்திருக்கோம். 
   
   இரத்த சொந்தத்துல வேண்டாம்னா மட்டும் சொல்லுங்க. அசல்லயே ம்ருத்யுவுக்கு பார்க்கறோம்." என்று பைரவ் முடித்தார். 

    ஸ்ரீவினிதாவோ "என்ன மாப்பிள்ளை இப்படி தயங்கிட்டு, யுகேந்திரன் வரட்டும் எப்ப ஸ்ரீநிதிக்கும் ம்ருத்யுவுக்கு கல்யாணம் பேசலாம்னு கேட்கறேன்." என்று சாதகமாய் பேசினார். 

  "இல்லை அத்த. ஷண்மதி மனசுல ஸ்ரீநிதிக்கு யாராவது" என்று பேசியவரை லலிதாவோ, "தம்பி ஷண்மதி இதுவரை அப்படி யோசித்தது இல்லை. இந்த இரண்டு மாசமா தான் ஸ்ரீநிதியை தொழிற்சாலைக்கு வர்றியானு ஷண்மதி கேட்டுட்டு இருக்கா. என்னைக்கு அன்பான சொந்தத்தை விட்டுட்டு அடுத்தவங்களுக்கு பொண்ணை தூக்கி கொடுப்பாளா?" என்று நியாயம் பேசினார். 

    "கரெக்ட் தான் அத்தை. என்னயிருந்தாலும் ஷண்மதியை பத்தி யோசித்தா இன்னமும் யுகேந்திரனையே மிரட்டி கட்டிக்கிட்டது நினைவு வந்து தொலைக்குதா, அதான் எங்க ம்ருத்யுவை பிடிக்காதோ என்னவோனு. என்னயிருந்தாலும் ம்ருத்யு படிக்க வெளிநாட்டுல போயிருக்கான். வெளிநாட்டுலயே வாழறவனை தங்கச்சி கட்டி கொடுக்க ஆசைப்படுமோனு தான் யோசித்தோம்." என்று முடித்தார். 
   
   "சேசே ஷண்மதி பத்தி உங்க மனசுல முதல்ல அப்படி பதிந்துடுச்சு. அவ கொஞ்சம் தான் அரக்கி முழுக்க தேவதை. 
   நிச்சயம் ம்ருத்யுவுக்கு ஸ்ரீநிதியை கட்டிகொடுப்பா. என்ன அக்கா?" என்று பைரவிடம் பேசிவிட்டு ஸ்ரீவினிதாவிடமும் முடிவுரை கேட்க, "நிச்சயமா மருமக வரட்டும். யுகேந்திரனிடமும் ஷண்மதியிடமும் பேசிட்டு நல்ல விஷயத்தை சொல்லறேன்." என்றுரைத்தார்கள். 

   -தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

     

   

     
      

Comments

  1. வெரி வெரி நைஷ்மா

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1