நீ என் முதல் காதல் -13
அத்தியாயம்-13
ஸ்ரீநிதி ம்ருத்யு ஜோடியாக அலங்கார உடையில் நகைகள் பூட்டி அழகாய் காட்சியளிக்க, காண்போர் கவனம் அவர்களை விட்டு இம்மியளவும் திரும்பவில்லை. நிச்சயதார்த்த விழாவிற்கு ஷண்மதியின் சித்தப்பா சிவந்தியப்பன் தாமரை வந்திருந்தார்கள். அவர்கள் பையன் ரவீந்தரன் அவன் மனைவியாக சாந்தினி(அதாவது ஷண்மதியின் பெரியத்தை மகள்) அவர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் வாரிசு நிச்சயதார்த்தற்கு வரமுடியாத சூழல் என்று வாழ்த்து மட்டும் தெரிவித்தனர்.
ஷண்மதியின் சித்தப்பா மகள் ரசீகாவும் அவள் கணவர் குழந்தைகளும் அயல் நாட்டில் க்ரீன் கார்ட் சிட்டிசன் வாங்கிவிட்டார்கள். சட்டென நிச்சயதார்த்ததிற்கு வரமுடியவில்லை. திருமணத்திற்கு வருவதாக உரைத்துவிட்டாள்.
பெரியத்தை உஷா தவறிவிட்டார். அதனால் லலிதாவே முன்னின்றார்.
யுகேந்திரன் தரப்பில் அன்னை ஸ்ரீவினிதா மட்டும் அறிந்தவர் தெரிந்தவர் பைரவின் வீட்டு பக்கம் ஆட்கள் என்று குழுமியிருந்தனர்.
பைரவோ என் மகனுக்கு எப்படிப்பட்ட இடத்தில் பெண்ணை பிடித்திருக்கின்றேன் என்று வந்தவர்களிடமெல்லாம் அதிகமாகவே சீன் காட்டினார்.
தாரிகாவோ, ம்ருத்யு பிறக்கும் வரை தான் தங்கள் வாழ்வில் சொந்தங்கள் நண்பர்கள் உறவுகள் என்று துளிக்கும் பெரிதாக மதித்ததில்லை. ம்ருத்யு பிறந்தப்பிறகே தங்களை மதித்து பழகுவதாக எண்ணினாள்.
அது ம்ருத்யு பிறந்த நேரமல்ல, தம்பி மனைவி ஷண்மதியால் கிடைத்த சலுகைகள் வசதிகள் என்று யார் அறிவார்.
ஒரு இளகிய மனம் கொண்டவன் நிச்சயம் அறிந்தவனே. அது யுகேந்திரன். அவனோ மகளை கண்டு ஆனந்தமாய் உவகை கொள்வதிலயே திரிந்தான்.
தன் மகளை சுற்றி என்ன நடக்கின்றது என்று அறியாத அளவிற்கு இருந்தான்.
இது அவனை குறை சொல்ல ஒன்றுமில்லை. தன் வாழ்வில் அனைவரிடமும் ஸ்மூத்தாக சென்று விடும் குணம் வந்ததிலிருந்து பெரிதாக யாரையும் பகைத்ததில்லை. அதனால் யார் அப்படி தங்கள் வாழ்வில் எதிரிகள் இருந்திடப்போகின்றனர் என்ற அறியாமை.
ஆனால் சிறுவயதிலிருந்தே தொழில் முறையில் போட்டி ஆதிக்கத்தால் பல எதிரிகளை அலட்சியமாய் கடந்தவளுக்கு ஸ்ரீநிதி மீது அக்கறை கூடுதலாகவே இருந்தது. அதனால் தான் அடிக்கடி ஸ்ரீநிதியின் நடவடிக்கையை அறிந்துக்கொள்வாள்.
தொழில் முறையில் சிறப்பவள் தன் தனிப்பட்ட வாழ்வில் தாயாக பொறுப்பை தவறவிடக் கூடாதென்றதில் அதீதமாகவே மகளின் நல்வாழ்வில் அக்கறை காட்டுபவள்.
அதிலும் தன்னை வெறுக்கும் ஸ்ரீநிதி மீது ஒரு கண் அல்ல இரண்டு கண்ணையும் பதித்திருப்பாள்.
அவ்வாறு மகளை கண்ணும் கருத்துமாய் கவனிக்க அவள் நடவெடிக்கை அறியாமல் போகுமா? மகளின் போன் சாட் முதல், காதலில் விழுந்து பப் சென்றது வரை அனைத்தும் தகவலறிந்தாள் ஷண்மதி.
ஒருவகையில் ஜீவியை அறிந்திருந்தவளே.
மகளாக தன்னிடம் காதலை உரைக்க காத்திருக்க, என்ன காரணமோ ஸ்ரீநிதி தவிர்த்து ஒதுங்கவும், ஜீவியும் தலைதெறிக்க ஓடுவதும் கண்டு சுத்தமாய் பிடிக்கவில்லை.
அதோடு ஜீவியை விட ம்ருத்யுவை ஷண்மதி நன்கு அறிவாள். அவன் மனம் முழுக்க ஸ்ரீநிதி இருப்பதை அறிந்ததால், சிறு வயதில் ம்ருத்யுவிற்கு இதயசிகிச்சை நடைப்பெற பணம் தந்து பாதுகாத்து, உயிர் பிழைக்க வைத்த ம்ருத்யுவிற்கே மகளை கொடுக்க அன்னை மனமாக விரும்பியது.
ம்ருத்யு என்றால் கூடுதல் பிடித்தம் உண்டு.
யாரோ ஒருவனின் மனதை வதைக்கவா? தான் உயிர் பிழைக்க வைத்தவன் மனம் வதைக்கவா? என்று எண்ணியவளுக்கு தான் உயிர் பிழைக்க வைத்த ம்ருத்யுவின் பக்கமே சாய்ந்தாள். இதில் ஸ்ரீநிதி மனதிற்கு எந்த மதிப்பு தரவில்லை. காரணம் தாய் ஷண்மதி மீதான கோபத்தில் சின்ன அரக்கி அவள் தலைகால் தெரியாமல் ஆடி பழிவாங்குகின்றாள். மகள் தன் மேல் கோபத்தில் இருக்க, ஷண்மதி எது செய்தாலும் இனிப்பும் கசப்பாக கருதுவாள். அவள் மனம் போக்கில் விட்டு பிடித்துக் கொண்டிருக்கின்றாள் என்று சொல்லலாம்.
"கொஞ்சம் ஸ்மைல் பண்ணு ம்ருத்யு." என்று ஸ்ரீநிதி கூற, அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
"பேன்ஸி டிரஸ் காம்படேஷன்ல கணவன் மனைவியா மேக்கப் போட்டதா நினைச்சிட்டு நில்லுடா. நீ சிரிக்கலைனா அதுக்கு வேற என்ன என்னனு எங்கப்பா என்னிடம் கேட்கறார்." என்று தந்தையை கண்டு முறுவளித்தாள்.
அதன் பிறகே தங்களை தான் வந்தவர்கள் கவனிப்பது அறிந்தான்.
"உனக்கு பயமாயில்லையா?" என்று கேட்டான் ம்ருத்யு.
"ஏன்"
"என்னோடவே மேரேஜ் நடந்துட்டா?" என்றதற்கு, "அது ஒன் அன்ட் ஆப் மந்த் கழிச்சு நடக்கப்போற சம்பவம். இப்ப இல்லை. அதுக்குள்ள ஜீவி மாத்திடுவான்.
இப்ப இந்த நொடி டென்ஷனாகி முகம் கலக்கத்தை காட்டினா ஷண்மதி உஷாராகிடுவா.
சோ இந்த நிமிஷம் ஹாப்பியாவே இருக்கறேன். நீயும் சந்தோஷமா நில்லு. டென்ஷன் ஆகவேண்டியது நான் தானடா.
ஏன் எல்சா உன்னோட பிக் பார்த்துட்டா அந்த சான்ஸ்ம் போயிடும்னு பீலிங்கா" என்றதும் ம்ருத்யுவிற்கு சிரிப்பு வந்தது.
எல்சா எல்லாம் தன்னை நினைப்பாளா? அவள் நினைப்பாளென்று இவள் தான் ஒவ்வொரு நொடியும் சிந்திக்கின்றாளென்ற நகைப்பு அது.
ஆனால் ஸ்ரீநிதி பேசியதில் ஒன்று மட்டும் எடுத்து கொண்டான். இந்த நொடி இந்த சந்தோஷம் அவளோடு மணக்கோலத்திற்கு நிகராக அவளோடு நிற்பதால் மகிழ்ச்சி அடைந்தான்.
அதன் பின் கஷ்டங்கள் ஓடியது. பெண்ணவளின் அருகாமை அவளது சிரிப்பு, அழகு கைப்பற்றுதல் என்று அவனை அடிக்கடி சொர்க்கத்திற்கு இட்டுசென்றது.
பெரும்பாலும் பைரவ் சொந்தங்கள் தான் அதிகமாக இருந்தார்கள். அதற்கடுத்து என்றால் யுகேந்திரன் வீட்டு ஆட்கள். ஷண்மதி தரப்பில் மிகக்குறைந்த உறவுகளே. அவள் யாரையும் கூப்பிடவில்லையெனலாம். திருமணத்திற்கு இதற்கெல்லாம் மீறி ஆட்களை நிரப்பிட முடிவெடுத்தாள்.
தற்போது நிச்சயதார்த்திற்கு இது போதுமென்றை நினைத்தாள்.
அந்த ஹாலிலேயே ரிதன்யா மட்டும் பட்டாம்பூச்சியாக துள்ளி குதித்து ஓடியாடிக் கொண்டிருந்தாள்.
இந்த நிச்சயத்தில் அக்காவை விட ரிதன்யாவிற்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
ரிதன்யா வயிற்றுக்குள் இருக்கும் போது தங்கை தான் வேண்டுமென்று அடம் செய்தது வேண்டுமென்றால் ஸ்ரீநிதியாக இருக்கலாம். ஆனால் பிறந்து வெளிவந்தப்பிறகு அதிகமாக ம்ருத்யு தான் அழவைக்காமல் விளையாடுவான். சின்ன பெண் என்ற கூடுதல் அக்கறை, அதோடு ஸ்ரீநிதியின் தங்கை என்ற கண்ணோட்டம், அப்படியிருந்தும் ம்ருத்யுவிற்கு ஷண்மதி அத்தையின் டிட்டோ போல யாரென்றால் ஸ்ரீநிதி தான். ரிதன்யா அப்படியே வெள்ளெந்தி குணம். மாமா யுகேந்திரனை போல.
ஸ்ரீநிதி ஷண்மதி போல கொஞ்சம் கரடுமுரடான குணம். அதை பக்குவமாய் கையாளும் திறன் கொண்டவனால் மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும்.
ஸ்ரீநிதி அன்னையை வெறுப்பது கூட தன்னால் தான் என்று ம்ருத்யு அறிவான்.
அதனால் தான் ஷண்மதியை கூடுமானளவு ம்ருத்யுவிடம் மட்டும் சண்டையிடும் அளவிற்கு அலட்சியமாக பேசுவாள். இதே யுகேந்திரன் முன் பேசினால் தந்தையே கைநீட்டி அறைந்திடுவாரென ஸ்ரீநிதி அறிவாள்.
இந்த அலட்சிய பேச்சு எல்லாம் ம்ருத்யுவிடம் மட்டும் தான்.
சொல்லப்போனால் அவனிடம் பேசி அவன் கோபத்தினை தூண்டுவது ஒரு விதமான தண்டைனைகள் என்று கருதுகின்றாள்.
ஸ்ரீநிதியோடு குடும்ப புகைப்படம் எடுக்க ஷண்மதியும் வந்தாள். குடும்பமாக எடுத்ததும் ரிதன்யா கைப்பிடித்து "மாம் நீங்க நான் அக்கா மூன்று பேரும் சேர்ந்து எடுப்போம்." என்று நிறுத்தி எடுக்க வைத்தாள். ம்ருத்யு சற்று தள்ளி நகர்ந்துக் கொண்டான்.
போட்டோ க்ளிக் ஆனதும் ஷண்மதி நகர, பைரவோ அக்கணம் 'ஷண்மதி ஸ்ரீநிதி ரிதன்யா மூவரையும் ஒன்னா பார்க்க அக்கா தங்கைகளா தெரியறிங்க.' என்று புகழ்ந்தார்.
ஸ்ரீநிதியோ 'ம்கும் அதான் என் ஜீவியும் சைட் அடிச்சான். வயசுக்கேற்றது போல டிரஸ் பண்ண வேண்டாம். இப்ப ஸ்லீவ் நாட் வச்சி ப்ளவுஸ் பேன்சி ஒர்க் ஹீல்ஸ் என்று யார் கேட்டா? இதுல ப்ரிஹேர் வேற' என்று எரிச்சலாக அன்னையை கவனித்தாள்.
யுகேந்திரன் தாய் தாரிகாவோ பட்டு சேலை நீண்ட பின்னல் பூவும் பொட்டும் தங்க நகைகள் என்று பார்க்க பக்கா ஹோம்லி லுக்' என்றதும் அதற்கு வேறு அன்னையை மனதில் வறுத்தாள்.
அப்படியிப்படி என்று பலதில் மௌவுனம் சிலவற்றில் சிறு ஸ்மைல் பலதில் வாய் கொள்ளா புன்னகை என்றிருந்தாள்.
தோழியில் பாவனா மட்டும் வரவேற்றிருந்தாள். ஆனால் பாவனாவோ நட்பு கூட்டத்தையே அழைக்க, ஸ்ரீநிதியை அடக்கும் அந்த ம்ருத்யு பார்க்க ஆவலாக மற்ற தோழிகளும் நட்புகளும் வந்தனர்கள்.
அவர்களை எல்லாம் ஷண்மதி தான் மதித்து வரவேற்று உபசரித்தது. ஸ்ரீநிதி "தேங்க்ஸ் பார் கம்மிங்." என்று ஒற்றே வார்த்தையில் முடித்து கொண்டாள்.
ஸ்ரீநிதி படுஜோராக தான் ம்ருத்யுவோடு நின்றிருந்தாள்.
அடிக்கடி சிகையை ஒதுக்கி, காதணி அசைந்தாட, ம்ருத்யு பக்கம் திரும்ப, ம்ருத்யு இந்த நாடகத்தில் தான் பொம்மை என்ற கதாபாத்திரத்தையே மறந்தான்.
தன்னவளை அனுஅனுவாய் ரசிக்க ஆரம்பித்தான்.
நேரங்கள் விழுங்கி கடந்திட, உணவுண்ணும் இடத்தில் ரிதன்யாவோ அப்பொழுது தான் வயிற்றை நிறைத்து வந்தாள்.
"ரிது அதுக்குள்ள சாப்பிட்டியா?" என்றதும், "ஆச்சு அத்தான் எல்லா டிஸ்லயும் டேஸ்ட் பண்ணியாச்சு. இப்ப தான் திருப்தியா இருக்கு." என்றாள்.
ம்ருத்யு பசிக்குது சாப்பிட போகலாமா" என்று அவனை பேசவிடாமல் அழைத்து சென்று உண்ண ஆரம்பித்தாள். தனி தனி டேபிளாக தான் இருந்தது. ஆறு முதல், நான்கு, இரண்டு என்று இருக்கைகள் பிரித்து இருந்தது.
நான்கு பேர் அமரும் இருக்கையில் அமரவும் ஒவ்வொரு உணவாக எடுத்து வந்து கொடுக்க, தனிமையாக இருந்தனர்.
"கல்யாணமும் இப்படி நடந்தா என்னை தப்பா எடுத்துக்க கூடாது. உன் ஜீவி வரலைனா. என் ஸ்ரீநிதி கூட என் திருமணம் நடந்துடும்" என்று அவளை ரசித்தபடி பேசினான்.
"அப்படி நடந்தா அப்ப பார்த்துக்கலாம்." என்றவள் உணவை விழுங்க, "சப்போஸ் அவன் மேரேஜ் நிறுத்த எந்த ஸ்டெப்பும் எடுக்கலைனா என்னப்பண்ணுவ? வெயிட் நமக்கு கல்யாணம் ஆகிட்டா?" என்று கேட்டான்.
"சிம்பிள் உன்னை என் கணவரா ஏற்றுப்பேன். நான் வேண்டும்னு எபெக்ட் போட்டு தடுக்க வேண்டியது ஜீவி. அவன் அதை செய்யலைனா நானா கல்யாணத்தை நிறுத்தி என் தலையில மண்ணை அள்ளி போடமாட்டேன்." என்றாள்.
ம்ருத்யு எண்ணம் அக்கணம் சொல்லமுடியாத மகிழ்ச்சியில் திளைத்தது.
இந்த கணம் அதுபடியே வாழ்வு அமைந்தாலும் அவளை அள்ளிக்கொள்ள மனம் விரும்பியது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment