நீ என் முதல் காதல் -6
அத்தியாயம்-6
ம்ருத்யுவிடமிருந்து ஸ்ரீநிதி பிரிய முற்பட சட்டென ம்ருத்யு இயல்பான நிலைக்கு மாறினான்.
"யூ டோண்ட் வொர்ரி ஸ்ரீ. எப்படியாவது மேரேஜை டிராப் பண்ணறேன்" என்றதும் தான் ஸ்ரீநிதி நிம்மதியானாள்.
"ஆமா உன் காதல் எஸ்.டி.டி(ஹிஸ்ட்ரி) சொல்லு கேட்போம்" என்று விரும்பதகாதது போல கேட்டான்.
"இங்கயே நின்றுட்டே கேட்கணுமா? வா அங்கிருக்கற பிட்ஸா ஹட் போகலாம்" என்று கைப்பிடித்து இழுத்து சென்றாள்.
அவள் கைகள் தன்கைகளை பிடித்திருக்க, மணக்க வந்த ஆவலில் இப்படி தான் திருமணமாகும் நேரம் தான் அவளை பிடிப்போமென கனவு கண்டவனுக்கு எள்ளல் புரிந்தது மனம்.
பீட்ஸா ஹட்டில் தனக்கானதை ஒப்புக்கு கூறிவிட்டு கதையை தொடர்ந்தாள். "ஜீவியை முதல்ல பார்த்தது, மம்மிக்கு தொழில் முறையில் அவார்ட் கொடுக்கற பங்ஷனில் சந்திச்சேன்.
டேடி மம்மி இரண்டு பேரும் இல்லாத நேரமா வந்து அவனா இன்ட்ரோ பண்ணிக்கிட்டான்.
ஆப்போசிட் டீம்னு தான் சொல்லி பேசினான்.
அதனால, முதல் அறிமுகமே உண்மையா தான் ஆரம்பிச்சது. ஜஸ்ட் ஒரு குட்டி அறிமுகத்தோட ஓடிட்டான்." என்றதும் ம்ருத்யு மனமோ 'அத்தை மாமா இல்லாத நேரமா வந்திருக்கான் அதை நோட் பண்ணலையே இந்த ஸ்ரீ' என நொந்தான்.
அவள் பேச்சை தொடர்ந்தாள். "அகைன் இரண்டு மூன்று முறை ஜீவி மெஸேஜ் பண்ணி பேசினான்.
ஜஸ்ட் ப்யூர்லி பிரெண்ட்லி டாக். பிறகு ஏதோ அவங்க அப்பா நம்ம பேக்டிரில ஆப்போசிட்டா யாரையோ விலைக்கு வாங்கியதா சொன்னான். அம்மாவிடம் அந்த விஷயத்தை காதுல போட்டு விட சொன்னான்.
நான் தான் ஷணுஅரக்கியோட கோட்டை தரமட்டமா போகணும். எங்க டேடியே கதினு வாழணும்னு அதை சொல்லலை."
"உனக்கு ஷணுஅத்தை மேல காண்டு. எப்பப்பாரு அவங்களை கீழே தள்ளி விட துடிக்கிற ஸ்ரீ. இது நல்லதுக்கு இல்லை." என்று குறுக்கே பேசவும், "ப்ளீஸ் உங்கத்தை புராணம் பேசி என் காதலை வாகனத்துல ஏத்தாத. நான் முடிச்சிடறேன்" என்றதும் கையை கட்டி 'டூ பீ கண்டினியூ' என்பது போல தொடர கூறினான்.
"இதே போல நிறைய விஷயம் அவங்க டேடி பிளான் பண்ணறதை சொல்லி, என்னை தடுத்து நிறுத்த சொன்னான். நான் கண்டுக்கலை.
பட் அவனோட அந்த எண்ணம் பிடிச்சிருந்தது. அவங்க அப்பா தொழில்முறையில் போட்டிபோடறதுக்கு பதிலா சில்லியா தாக்குறார்னு பீல் பண்ணினான். அவனோட கைக்கு பொறுப்பு வந்தா இதெல்லாம் மாத்திடுவேன்னு பேசுவான்.
இப்படி ஆரம்பிச்சப்ப 'நீயேன் உங்க அம்மாவிடம் எதுவும் தெரிவிக்கலை. அவங்க கொஞ்சம் ஸ்லிப் ஆகாம இருப்பாங்கனு பேசுவான்.
நான் அது என்னோட தனிப்பட்ட விருப்பம்னு சொன்னேன்.
எனக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கு. உன்னை விரும்பறேன் ஸ்ரீநிதினு சொன்னான். என்னடா இதுனு தோன்றினாலும் அவனை பிடிச்சிருந்தது.
உடனே அக்சப்ட் பண்ணலை ம்ருத்யு. அவன் அதுக்கு பிறகும் தொல்லை பண்ணலை. எனக்கு ஒருகட்டத்துல காதலா ஏற்க பிடிச்சிருந்தது. பழகினேன். லவ் ஓகே சொல்லிட்டேன்.
ஒரு வருஷம் பிரெண்ட்லியா பேசியிருக்கேன். ஒரு வருஷம் காதலிச்சிருக்கேன். இப்ப அப்பாவிடம் சொல்லலாம்னா நிச்சயம் அம்மாவோட காம்படேஷன் மோதறவரோட பையன்னு அப்பாவே அவாய்ட் பண்ணுவார். இப்ப ரீசண்டா இரண்டு மாசம் முன்ன போராட்டம் பண்ணியதும் இவங்க அப்பாவால தான். ஜீவி அதையும் சொல்லியிருந்தான்." என்று முடிக்க, ம்ருத்யுவோ அமைதியாக கேட்டான்.
ஆர்டர் பெயரில் வந்த பீட்சாவும் ஸ்ரீநிதி முத்து பற்களால் இழுப்பட்டு தொண்டையில் இறங்கியது.
ம்ருத்யுவோ டிசு பேப்பரை அவளிடம் நீட்டி உதட்டில் துடைக்க கொடுத்தான். "சோ இப்பவே அவனுக்காக பேசினா அத்தை ஓகே சொல்லமாட்டாங்க. அதனால வேற ரீசன் தான் சொல்லி அவாய்ட் செய்தா அகைன் உனக்கு டைம் கிடைக்கும். அப்படி தானே?" என்று கேட்க, வேகமாய் ஆமென்றாள்.
"சரி எங்கேஜ்மெண்டுக்கு ஒரு வாரம் டைம் இருக்கு யோசிப்போம். அப்படியும் முடியலைனா?" என்று கேட்டான்.
"என்னடா முடியலைனா சொல்லற. உன்னால முடியும். அந்த அரக்கி ஷணு உன்னிடம் கைண்டா(kind) பேசுவா. அவ தலையில பெரிய ஐஸை தூக்கி வை உருகிடுவா." என்று கூறினாள்.
ம்ருத்யுவோ "எங்கத்தை ஐஸ்ல உருகறவங்க இல்லை. மனசை அதிரடி அன்பால உருக்கறவங்க. உனக்கு அவங்க அன்பை விட மாமாவோட அன்பு பெரிசா இருக்குனு என்ன வேண்டுமென்றாலும் பேசாத." என்றவன் பில்லிற்கு கார்டில் தேய்த்து எழுந்தான்.
மீண்டும் காரில் பயணமாகி தன் வீட்டிற்கு சென்றான்.
தாரிகா பைரவ் வீட்டில் தான் ஷண்மதி யுகேந்திரனும் இருந்தார்கள். ஸ்ரீவினிதா லலிதாவும் ம்ருத்யுவின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
ரிதன்யா அழகான பூங்கொத்தை வாங்கி அக்காவின் கணவராக வரப்போகின்ற தன் மாமாவிடம் கொடுக்க மடியில் வைத்திருந்தாள்.
ஸ்ரீநிதி ம்ருத்யு வரவும் மொத்த குடும்பமும் வாசலில் ஆரத்தி கரைத்து வரவேற்க ரிதன்யா பூங்கொத்தை நீட்டினாள்.
அப்பொழுது தான் தனக்காக ஸ்ரீநிதி பூங்கொத்து கூட வாங்காதது நினைவு வந்தது ம்ருத்யுவிற்கு.
ரிதன்யா "ஏன்க்கா மாமாவுக்கு பூங்கொத்து வாங்கலையா?" என்று கேட்க, ஸ்ரீநிதியோ "எனக்கு செண்டிமெண்ட் பிடிக்காது ரிது" என்று வரேவற்பு அறையில் இருக்கும் குஷன் சோபாவில் பொத்தென அமர்ந்தாள். அவள் எப்பவும் இப்படி தானென்று மற்றவரும் விட்டுவிட்டார்கள்.
தன் பாட்டி ஸ்ரீவினிதாவை அணைத்து கொண்டவன் லலிதா பாட்டியிடமும் ஒரு அணைப்பை தந்தான். பைரவ் தாரிகாவோ கன்னம் பிடித்து கொஞ்சி மகனின் திருவுருவத்தை மனதில் நிறைத்தனர்.
ஷண்மதி செருமியபடி "ம்ருத்யு ஸ்ரீநிதி சொன்னாளா? நெக்ஸ்ட் வீக் எங்கேஜ்மெண்ட் பத்தி?" என ஷண்மதி கேட்டதும், "சொன்னா அத்தை" என்று பொறுப்பாக பதில்தந்தான்.
"ஏன் அத்த வந்ததும் வராததும் எங்கேஜ்மெண்ட்? கொஞ்ச நாள் போகட்டுமே" என்று முதல் மறுப்பாய் ஆரம்பித்தான்.
"அட எங்கேஜ்மெண்ட் தான் அடுத்த வாரம். பட் கல்யாணத்துக்கு இரண்டரை மாசம் இருக்கு ம்ருத்யு. யூ டோண்ட் வொர்ரி. இரண்டரை மாசத்துல எல்லா வேலையும் முடியும்." என்று முறுவலை உதிர்க்க ஷண்மதி சிரிப்பில் அடுத்து பேச நாவறவில்லை ம்ருத்யுவிற்கு.
யுகேந்திரனோ "ஏன்டா நீயும் ஸ்ரீநிதியும் லவ் பண்ணறதா பாவனா சொல்லறா. கல்யாணத்தை குயிக்கா வையுங்கனு சொல்வேன்னு பார்த்தேன். நீயென்ன எங்கேஜ்மெண்டே கொஞ்ச நாள் போகட்டும்னு பேசற?" என்று மருமகன் அருகே சிறு வயது நேசத்தோடு உரிமையாய் கேட்டார் மாமா யுகி.
"பாவனா சொல்லறதை கேட்கறியே மாமா. என்னிடம் கேட்டிருக்கணும் நீ." என்றவன் ஸ்ரீநியை பார்த்து "அட்லீஸ்ட் ஸ்ரீயிடமாவது கேட்டிருக்கலாம்" என்று வலியை மறைத்து எதார்த்தமாக கூறிட முயன்றான்.
யுகேந்திரன் ம்ருத்யுவின் குரலில் மாற்றம் கண்டு திருப்ப, "ஸ்ரீயே பிரெண்டா இருக்கறவனை போய் லவ்னு பேசறிங்கனு கேலி செய்திருப்பா." என்று நகைத்தான்.
தன்னிலையை சட்டென மாற்றிக்கொண்டவனை யுகேந்திரன் கவனித்தாலும், அசட்டையாக கடக்க, தன் பூதக்கண்ணால் மகளையே ஆராயும் ஷண்மதிக்கு மகளை மணக்கும் ம்ருத்யு செய்கை சட்டென பிடிப்பட்டது.
இத்தனை பேர் இருக்கும் இடத்தில் அவனிடம் வினாத்தொடுத்திட தவிர்த்து கொண்டாள்.
ஸ்ரீநிதியோ "ஓகே முதல்ல அவன் ரிலாக்ஸாகட்டும்" என்று ம்ருத்யுவை மாடிக்கு தள்ளிக்கொண்டு சென்றாள். காண்போருக்கு இப்பொழுதே கணவனை கவனிக்கும் பெண்ணாக காட்சிதர, ஸ்ரீவினிதா ஆனந்த கண்ணீர் வார்த்தார்.
பைரவிற்கோ 'இது போதும்டா" என்று யுகியின் தோளில் கைப்போட்டார்.
தாரிகாவோ உள்ளம் மகிழ ஷண்மதி அருகே நின்றாள்.
ம்ருத்யு அறைக்கு வந்ததும் "இன்னிக்கே நோ சொல்ல முடியாதா ம்ருத்யு" என்று அழுத்தம் கூட்டினாள்.
"விளையாடறியா? வந்ததும் வராததும் மறுத்தா எங்கம்மா வெள்ளைக்காரியை விரும்பறியானு என் தலையை உருட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஏற்கனவே என்னை நம்பறதில்லை தெரியுமா?
அதனால கொஞ்சம் பொறு. இரண்டு நாள்ல ஏதாவது சொல்லறேன்" என்று கூறினான்.
"ஷண்மதி ஸ்டேடஸ் பார்ப்பா. உடனே நிறுத்தினா தையாதக்கானு குதிப்பா ம்ருத்யு." என்று தன் அன்னையை பற்றி கூறினாள்.
"பல்லை உடைப்பேன். எங்கத்தை அப்படி கிடையாது. எந்த இடத்திலையும் எப்பேற்பட்ட இடத்திலும் எங்கத்தையால சமாளிக்க முடியும். இது நான் புரிஞ்சுக்கிட்டு சொல்லலை. எங்கமாமா யுகி, அதாவது உங்கப்பாவே அத்தையை பாராட்டி பேசியது.
ஷண்மதி அத்தையை பத்தி உன்னை விட, மாமா என்னிடம் கதை கதையா பேசியிருக்காங்க. நீ தான் எங்கப்மாவை டவுன் பண்ணிட்டானு தப்பா புரிஞ்சுக்கிட்டு அத்தையை அவமானப்படுத்தவே துடிக்கிற." என்று கோபமானான்.
"சோ உங்க அத்தை சொல் கேட்டு என்னை கட்டிக்க போறியா?" என்று இவளும் கோபமாய் கைகட்டி நின்றாள்.
"அத்தையை விட அத்தை பொண்ணை பிடிக்குமே. கவலைப்படாத உன்னை கல்யாணம் பண்ணி உன் சந்தோஷத்தை நானே பறிக்க மாட்டேன். உனக்கென்ன நானா கல்யாணத்தை நிறுத்தணும். மாமாவே அவன் கிடக்கான் நான் வேற மாப்பிள்ளை பார்க்கறேன்னு கேட்க, நீ உன் காதலை சொல்லி கண்ணீர் விட்டு, மாமாவிடம் ஓகே வாங்குவ. ஐ அம் ரைட்." என்று மொழிந்தான்.
"அப்சலூட்லி. ஆப்டர் மேரேஜ் ஆனா அடுத்த செகண்ட் நான் டேடியிடம் கன்வின்ஸ் பண்ணிடறேன். ம்ருத்யு என் லவ்வுக்கு உதவினானு சொல்லிடுவேன். நீ எப்பவும் போல எங்கப்பாவுக்கு செல்ல ம்ருத்யுவா இரு. அரக்கியிடமும் நல்ல ம்ருத்யுவா பெயரெடு" என்றதும் ம்ருத்யுவிற்கு சிறுமுறுவல் எள்ளலால் தோன்றியது. 'உதவியா?' என்ற இகழ்ச்சி அது.
"ஓகே நான் ரெப்ரஷ் முடிச்சிட்டு வர்றேன் நீ போ" என்று அனுப்ப, "நீ ரெப்பிரஷ் ஆகு. நான் கீழே போகலை. கீழே போனா எல்லாரையும் பார்த்து கடுப்பா இருக்கும். அதோட ஷணுஅரக்கி என்னையே முறைப்பா. ஏற்கனவே பூங்கொத்து கூட வாங்க தெரியாதுனு ஒரு முறைப்பை கொடுத்துட்டா" என்று மெத்தையில் உருண்டாள்.
இதற்கு மேல் வற்புருத்தி அனுப்ப ம்ருத்யுவுக்கு தெம்பில்லை. ஷண்மதி அத்தை ரிதன்யா பூங்கொத்தை தரும் நேரம் ஸ்ரீநிதியை பார்த்து முறைக்க அவனும் அதனை கவனித்துவிட்டான்.
அதோடு எத்தனை நேரம் தான் அவனும் தன்னிலை அடக்கிக்கொண்டு தனக்கே ஆறுதலுரைப்பது. அதனால் குளியல் அறைக்காவது சென்று தனிமையை நாடிட ஓடினான்.
ஸ்ரீநிதி அறைக்குள் மெத்தையில் உருண்டாள். குளியலறையில் தண்ணீரை திறந்துவிட்டு சத்தமின்றி கதறிது ம்ருத்யு இதயம்.
தனியாக ஸ்ரீநிதியும் அவனும் அறையிலிருந்தால் அதற்கு வேறு கேலி கிண்டலென்று கிசுகிசுக்க ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென்று குளியலரையிலேயே தடுப்பு கொண்ட அறையிருக்க உடைமாற்றி வந்தான்.
ஜீன் டாப் என்று அணிந்து மெத்தையில் ஜீவியிடம் சாட் செய்ய டைப் செய்தவளை கண்டு ஹேர்டிரையரை எடுத்து சிகையை உலரவைத்தான்.
க்ராப் டாப் அவளது இடையை பளிச்சிட வைக்கவும் ஹேர்டிரையரை வைத்து உலர்த்துவதை தவிர்த்து, "கீழே போகலாம் வா" என்று கூப்பிட்டான்.
"தலையெல்லாம் ஈரமாயிருக்கு டா. அதை உலர்த்திட்டுவா போகலாம். அதுவரை ஜீவியிடம் நீ வந்துட்டதையும், உன்னிடம் எங்க லவ் சொல்லிட்டதையும் டைப் பண்ணிட்டு வந்துடறேன்." என்று கூற, "அப்பறமா உங்க வீட்டுக்கு போய் சொல்லு எந்திரி." என்று கைப்பிடித்து இழுக்க, அவன் மெத்தையிலிருந்து எழ விருப்பமின்றி சலித்து எழுந்தாள்.
"ஒரு நிமிஷம் டா" என்றவள் ஹேர் டிரையரை எடுத்து ம்ருத்யுவை உட்கார வைத்து அவனது சிகையை ஹேர்டிரையரால் உலர்த்தினாள்.
"அங்கிருந்து இங்க வந்ததும் தலைக்கு குளிச்சிருக்க. இடமாறினா சேஞ்சு அண்ட் சரியா உலர்த்தாம சளி பிடிச்சிக்க போகுது." என்று அக்கறையாக அன்பு செலுத்த அவனோ தன்னை கட்டுப்படுத்த இயலாது அவளது இடையை வளைத்து கட்டிக்கொண்டான். அவனது சிகை அவளது நெஞ்சில் பட்டும் படாமலும் இருந்தாலும் கைகள் இரண்டும் அவளது இடையை அழுத்தமாய் பற்றியிருந்தது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
வெரி வெரி நைஷ்மா
ReplyDelete