நீ என் முதல் காதல் -14

அத்தியாயம்-14 

    ஜீவி முன் ஸ்ரீநிதி இருக்க, "ரொம்ப சந்தோஷமா நிச்சயதார்த்தம் நடந்துடுச்சா? ஏதும் குறையில்லையே?" என்று நக்கலாய் கேட்க, "நீ வரலை அதான் குறை" என்று இவனுக்கு நான் சளைத்தவள் அல்ல என்ற ரீதியில் ஸ்ரீநிதி பதில் அளித்தாள். 

   "நான் வந்து கங்கிராட்ஸ் பண்ணிருக்கணும். உன்னையும் அவனையும் வாழ்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கணும் அப்படி தானே?" என்று சண்டையை பிடித்தான். எப்பவும் சண்டை போடுவது ஸ்ரீநிதி வேலையாக இருக்கும். ஜீவி எல்லாம் சமாதான உடன்படிக்கையில் சரணடைந்திடுவான். இன்று ஜீவியே சண்டை பிடித்திருந்தான். 
   ஸ்ரீநிதி எவ்வித கவலையின்றி ம்ருத்யுவுடன் நிச்சயத்தில் நின்றதை நெருப்பை திண்றவனாக ஒரு ஸ்பை மூலமாக லைவ் வீடியோ பார்த்ததன் விளைவு அது. 

  "இங்க பாரு ஜீவி நான் ஒன்னும் உன்னை லவ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லலை. நீ கேட்ட டைமுக்கு ஏத்த மாதிரி இப்ப நிச்சயம் முடிச்சிட்டு ஒன்றரை மாசம் டைம் நீட்டித்திருக்கேன். 
   
  ஒரு பொண்ணு இதுக்கு மேல என்னடா ஸ்டெப் எடுப்பா? 

  உனக்கு ம்ருத்யு கூட நின்று சிரிச்சது தான் பிரச்சனையா? அவன் என்னோட சைல்ட் வுட் பிரெண்ட், பிரெண்ட் கூட சோகமா நிற்க வராது. அவன் என்னோட வெல்விஷர். 

   என்னை உன்னை விட அவன் மானமரியாதையை கேர் பண்ணாம, பேரண்ட்ஸ் எப்படி தலைகுனிவாங்கன்னு கூட யோசிக்காம எனக்காக தலையாட்டியிட்டு என் பிளானுக்கு சம்மதிச்சிருக்கான். 
   நீ நின்றா தப்பு, சிரிச்சா தப்புன்னா நான் என்ன செய்யறது?" என்று பேசினாள். 

   "எஸ் அவன் உனக்காக தான் எல்லாம் பண்ணறான். அதான் என் பயமே. அவன் கண்ணுல உனக்கான காதல் வழியுது. உனக்காக அவன் என்ன வேண்டுமின்னா செய்யறான். இப்ப என் பிரச்சனையே அதுதான்." என்று பூசிமொழுகி பேசாமல் வெடித்து விட்டான். 

  "வாவ் நைஸ் டா. அதெப்படி கல்யாணம் பண்ணறதுக்கு ஒரு பிளானும் நீ யோசிக்க மாட்ட. பட் என்னை கார்னர் பண்ண கைநீட்டற. 
  
  இங்க வர்றதுக்கு எவ்ளோ காவல் தெரியுமா. அதெல்லாம் தள்ளிவச்சிட்டு உன்னை பார்க்க வந்தேன். ம்ருத்யு விரும்பறான்னு சொல்லற. இப்ப இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ" என்று எரிச்சலோடு ஹாட் சாக்லேட் கலக்கிக் கொண்டிருந்தாள். 

  ம்ருத்யுவின் அதட்டலில் பப் செல்வதை தடைசெய்துவிட்டாள். அதனால் காபி ஷாப்.

   "அவன் கண்ணை பாரு. எல்லாரிடமும் பேசற அதே பாவணைகள் உன்னிடம் பேசறப்பவும் வருதா. இல்லை உன்னை பார்க்கறப்ப மட்டும் அந்த பார்வை அம்புகள் வருதானு. 
   இது இன்னிக்கு நேத்து இல்லை. முன்னவே அவன் பார்வை அப்படி தான். 

  அப்ப சொன்னா சந்தேகப்படறனு பிரேக்கப் பண்ணுவ. அதான் அட்லீஸ்ட் இப்பவாது சொல்லறேன்." என்று காபி பருகினான்.

  "இப்ப சொல்லறேன்னா? அப்ப பிரேக்கப் பண்ணப்போறியா?" என்று கேட்டாள். 

  "என் ஸ்ரீநிதி தேள் கொடுக்கு மாதிரி பேசற. ஜஸ்ட் இப்பவாது மனசுலப்பட்டதை சொன்னேன். எனக்கு உன் மேல சந்தேகம் எதுவும் இல்லை. ஆனா ம்ருத்யு உன்னை லவ் பண்ணறான். அது அக்கியூர்டா தெரியுது." என்றுரைத்தான். 

   "சண்டை போடறதா இருந்தா தயவு செய்து என்னை கூப்பிடத ஜீவி. அப்பறம் கல்யாணத்தை நிறுத்த மட்டும் பேசு. எதுவென்றாலும் பேசலாம்னு ஆரம்பிக்காத. நான் கிளம்பறேன்." என்று எழுந்தாள். 

  "காபி குடிக்கலை." என்று சுட்டிக்காட்டினான். 

   "எனக்கு காபி பிடிக்கலை. பப் போகாதனு ம்ருத்யு ஒரே அதட்டல். மீறினா உதவறதை பாதிலயே நிறுத்திடுவேன்னு சொன்னான்." என்றதும் நான் மறுத்தப்போது அடம் பிடித்தாயே?! என்று ஆரம்பிக்க இருந்தவனிடம் "தயவு செய்து அதுக்கு வேற நான் சொன்னா கேட்கலை அவன் சொன்னா கேட்கறேன்னு புது அர்த்தம் க்ரியேட் பண்ணாத. அவன் நம்ம கல்யாணம் நிற்க உதவாறான். அதனால அவன் பேச்சை ஒபே பண்ணறேன். தட்ஸ் இட்." என்று கூறிவிட்டு பதில் சொல்ல விடாமல் கடந்தாள். 

      ஜீவியும் ஹாட் சாக்லேட் காபியை அப்படியே வைத்துவிட்டு பில் பே செய்து கிளம்பினான். 

---

   இங்கு ஜீவி ஸ்ரீநிதி போல மற்றொரு இடத்தில் ஷண்மதி ம்ருத்யு வீற்றிருந்தனர். 

   ம்ருத்யுவிற்கு ஷண்மதி தனியா பேசணும் என்று அழைத்து இங்கே வரக்கூறியதிலிருந்து இதயம் படபடத்தது. ஷண்மதியின் தோல்பதனிடும் தொழிற்சாலைக்கு தான் வந்திருந்தான்.

   ஷண்மதியோ ஜான்சியிடம், இரண்டு செம்பருத்தி டீ போட்டு எடுத்து வரக்கூறினாள். 

   அத்தைக்கு ஸ்ரீநிதியோட லவ் ஏதாவது தெரிந்திடுச்சா. என்னை ஏன் தனியா கூப்பிட்டுயிருக்கிங்க? ஸ்ரீநிதிக்கு போன் பண்ணி இன்பார்ம் பண்ணலாமா என்று ஐந்து நொடியில் ஐயாயிரம் வினாவை மண்டைக்குள் ஓடவிட்டான். 

  "செம்பருத்தி டீ இதயத்துக்கு பலத்தை தரும். அடிக்கடி எடுத்துக்கோ." என்று கூறவும் சரியென்று தலையாட்டினான். 

இரண்டு மூன்று மடக் குடித்துவிட்டு, "நைஸ் டேஸ்ட் அத்தை" என்றான்.

  டீ கோப்பையை தனியாக ஒதுக்கி வைத்து "ஏன் ம்ருத்யு?" என்று நேரிடையாக ஷண்மதி வினவ, புரியாமல் குழம்பினான். 

   "என்னது அத்தை கேட்கறிங்க?" என்று பதறினான். 

   "நீ ஸ்ரீநிதியை சின்னதுலயிருந்து விரும்பிட்டு இருந்து, இப்ப அவ எவனோடவோ மேரேஜ் பண்ண உதவறது ஏன்?" என்று சிதறு தேங்காயாக ஷண்மதி கேட்கவும் ம்ருத்யு திடுக்கிட்டு அத்தையை பார்த்தான். 
   
   எல்லாம் தெரிந்தும் எதையும் காட்டிக்காமல், அதே நேரம் ஆளுமையாக கேள்வி வருகிறது. 
  
   ஸ்ரீநிதியை தான் விரும்புவதும், அதுவும் சிறுவயதிலிருந்து விரும்புவதையும், ஸ்ரீநிதி ஜீவி என்பவனை விரும்புவதையும் அறிந்திருக்கும் அத்தை துளியும் கலங்கவில்லை துவளவில்லை. இரும்பு மனுஷியாக தன்னை ஏன் அவள் காதலுக்கு உதவுகின்றாயென்று கேட்கின்றாரே.
    
   கொஞ்ச நேரம் நீண்ட மௌவுனம் புரிந்து, "அவ ஜீவியை விரும்பறதும் நான் அவளை விரும்பறதும் தெரிந்தும் கேட்கறிங்களே அத்த. உங்களுக்கே அதுக்கான பதில் தெரியுமே." என்றான். 
  
  ஷண்மதியோ "அது தெரிந்து தான் கேட்கறேன். அவ காதலுக்கு நீ எதனால உதவணும்? உன் காதலுக்கு தான் நீ போராடணும். 

  உங்கமாமா எங்களை பத்தி கதை கதையா சொல்லியதில் கொஞ்சமாவது யோசிக்கலையா. அவரை விரும்பி மணந்த நான், அதுக்கு முன்ன என்னை கல்யாணம் செய்ய வந்தவனை கட்டிப்போட்டு அடைச்சி அவரோட காதலியோட அப்பாவுக்கு குடைச்சல் தந்து, நான் காதலித்த உங்க மாமாவே சூழ்நிலையில அங்க வரவும் அந்த சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமா மாற்றி என் காதலை அரக்கியா பறிச்சிக்கிட்டவ நான். 

  அப்படியிருக்கறப்ப நம்ம காதலுக்கு தான் நாம எந்த லெவல் வேண்டுமென்றாலும் அரக்கதனம் செய்யலாம். 

  நம்ம காதலை விட்டு கொடுத்து தேவதூதனா மாறக்கூடாது ம்ருத்யு.  

   தேவதூதன் என்ற பட்டம் வச்சி நீ என்ன பண்ணப்போற?" என்று அனைத்தும் அறிந்தவளாக கேட்டாள். 

   "என் ஸ்ரீ, ஜீவி என்பவனை காதலிக்கறாளே. அவ மனசு வலிக்குமே." என்று துடித்தான். 

     "உனக்கு எப்படி சொல்லி புரியவைக்க?" என்றவள் "அங்கும் இங்கும் நடந்தாள். 

  "கல்யாணம் நிற்கறது அவ நினைக்கிற மாதிரி ஈஸி கிடையாது ம்ருத்யு. உங்க அப்பா அம்மாவுக்கும் தலைக்குனிவு. 

   இப்ப எந்த உரிமையில நீ என் வீட்டுக்கு லேட் நைட் வந்து என் மக குடிச்சிருந்தா கூட மாடிக்கு எங்க அனுமதி இல்லாம தூக்கிட்டு போறியோ அதுக்கெல்லாம் ஆப்போசிட்டா. உரிமைகள் குறைந்திடும். 
  உங்கப்பா எங்க வீட்டுக்கு வரமாட்டார். உங்கம்மாவை எங்க வீட்டு வாசற்படில காலை வைக்க விடமாட்டார். உங்க ஆச்சி ஸ்ரீவினிதாவோட பாசம், தாரிகா அண்ணிக்கு கிடைக்காது. அதோட தன் பொண்ணோட பையனை கட்டி வைக்காம வேடிக்கை பார்த்த என்னை ஸ்ரீவினிதா அத்தை மன்னிக்க மாட்டாங்க. அம்மா மகள் பாசம் அத்துபோயிடும். அதே போல அத்தை மருமகள் பாசம் காணாமபோயிடும். 
  இதெல்லாம் பார்த்து உங்க யுகேந்திரன் மாமா என்னை அருவருப்பா பார்ப்பார். உன் மகள் உன் தொழில்முறை சார்ந்த ஆட்களை காதலிச்சிருக்கா உனக்கு தெரியாதானு என்னை குற்றம் சுமத்துவார். 

   ஏற்கனவே டிவோர்ஸ் வாங்கி ஒன்னு சேர்ந்தவங்க நானும் யுகேந்திரனும். 

   இப்ப டிவோர்ஸ் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரா ரிதன்யாவை கூட்டிட்டு தனியா போயிடுவார். என்னை பிரிஞ்சி அவரும் சந்தோஷமா இருக்க மாட்டார். தொழிலையும் சரியா கவனிக்க மாட்டார். ரிதன்யா பிளஸ் டூ படிப்பு கெடும். 

  இந்த பக்கம் ஸ்ரீநிதி எப்பவும் என்னை அம்மானு மதிக்கறதுயில்லை. இதையே காரணமா வச்சி என்னிடம் ஒதுங்கிடுவா. பழி வாங்கறதா நினைச்சிப்பா. ஆகமொத்தம் டோட்டல் குடும்பம் நிம்மதியில்லாம ஒற்றுமை குலைந்து, ஆளாளுக்கு பிரிவில் கவலையோட காலம் தள்ளணும். இத்தனைக்கு பிறகு நீயாவது சந்தோஷமா இருப்பியா? நெவர். என் மகள் நினைவால அவ டேஸ்ட் பண்ணணும்னு ஆரம்பிச்ச குடிப்பழக்கத்தை நீ முழுநேர பானமா அருந்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. 

   இதெல்லாம் அவசியமா?" என்று பேசவும் ஆடிப்போனான். 
    
   அப்பா அம்மா தன் மீது கோபப்படுவார்கள். சமாளிப்போம். ஸ்ரீநிதி ஆசைப்படி சந்தோஷமாக வாழ்வாள். தான் மட்டுமே அவதியுறுவோமென்று தவறாய் கணித்துவிட்டோமே என பதறியது.

  "அத்தை... நான் அவளை விரும்பறதை சொல்லி, குடும்பம் பிரியுமென இதெல்லாம் சொல்லி ஸ்ரீநிதியை கன்வெயிஸ் பண்ண முடியாதா?" என்று புரியாது கேட்டான். 
    "அவ அப்பவும் ஜீவி தான் வேண்டும்னு செல்பிஷ்ஷா இருப்பாளே தவிர நீ காதலிக்கறதை யோசிக்க மாட்டா. குடும்பத்துக்காக நான் என் காதலை தியாகம் பண்ண மாட்டேன்னு பெரிய டேஸ்
மாதிரி பேசுவா." என்று ஷண்மதி ஆணித்தரமாக மகள் மனதை படித்தவராக கூறவும் ம்ருத்யு அத்தையை காணாது மேஜையில் தலை சாய்ந்தான். 

  இருபது நொடிகள் கடந்து, "எனக்கு ஸ்ரீ வேணும் அத்த. ஆனா அவ மனசு வலிக்காம என்னிடம் வந்து சேரணும். அதுக்கு நான் என்ன செய்யறது?" என்று மாமியாரிடம் ஆலோசனை கேட்டு நின்றான். 

    "சிம்பிள் இப்ப நீ செய்வதே செய். ஆனா மனசுல விட்டுக்கொடுக்கணும்னு நினைக்காத. உன் காதலை நீ அடைய அவளை நம்பி கழுத்தறுக்க போற. அவயெப்படி செல்பிஷ்ஷா இருக்காளோ நீ அவளை நம்பி கழுத்தறுத்து கல்யாணம் பண்ணப்போற." என்று திட்டங்களை விளக்கினாள். 

   உன்னிப்பாய் கேட்டவன், "அத்தை அவளை மனசு முழுக்க விரும்பிட்டு அவ வருந்தினா எனக்கு கஷ்டமா இருக்கும்" என்றான். 

   "யார்டா நீ? உங்க மாமாவுக்கு மேல இருக்க? ஆக்சுவலி இது உன் சுபாவமே கிடையாது. உன் ரத்தத்துக்கு அடிப்பணிய வைக்க தான் தெரியும்." என்று அவளையறியாது பேசவும், "புரியலை அத்தை" என்றான். 

   ஷண்மதி ஒர்கணம் துணுக்குற்றாள். 

ம்ருத்யிடம் "அதை விடு அவளிடம் இப்ப பழகற மாதிரியே ஸ்மூத்தா பழகிட்டுயிரு. அப்ப தான் நீ அவளுக்கு உதவறேன்னு நம்புவா. கல்யாணம் வரை, நிச்சயம் ஜீவி என்னிடம் வந்து ஸ்ரீநிதியை கட்டிக்கறேன்னு நிற்க மாட்டேன். அப்படியே கல்யாணத்தப்ப வந்தா நம்ம பிளான் அமுல்படுத்திடுவோம். 

   ஸ்ரீநிதிக்கு தெரியாம கல்யாணத்தை நடத்திடலாம். என்ன சொல்லற?" என்று கேட்டாள்.
  
  "கடவுள் துணையிருந்தா யாரை வேண்டுமென்றாலும் வம்பிழுக்கலாம். நான் கரண்டை வம்பிழுக்க போறேன். எல்லாம் உங்க ஆதரவு" என்று அவளிருந்த திசையை கண்டு தீபராதனை போல தொட்டு கும்பிடு போட்டான்.

  அரக்கியிடம் கைகோர்க்கும் எந்த விஷயமும் தோல்வியே சந்திக்காது. இங்கொருவன் அரக்கியோடு கைகோர்த்து அவன் தேவதையை இம்சை செய்ய தயாரானான். 

   -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 

  
  

  

  
   

   

  

   

   


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1