நீ என் முதல் காதல் -8

அத்தியாயம்-8

    ஸ்ரீநிதி ம்ருத்யு இருவரும் ஈசிஆர் பக்கம் ஒர் ரெஸார்ட்டில் ஜவிக்காக காத்திருந்தனர். 
   ம்ருத்யுவுக்கு இஷ்டமில்லாத சந்திப்பு. எந்த ஆடவனுக்கு தான் இனிக்கும். தான் விரும்பும் பெண், அவள் காதலனை தனக்கு அறிமுகப்படுத்த எரிச்சலில் தான் வந்தான். 
  இதில் கூடுதலாக ம்ருத்யு எனக்கு ஒரு ஐடியா என்று ஸ்ரீநிதி கூறியதை கேட்டு செவுளில் அறையலாமா என்றிருந்தது.

   "எப்படி ஸ்ரீ இப்படியிருக்க? லூசாடி நீ? ரிதன்யா பிளஸ் டூ படிக்கிற குழந்தை. அவளை போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லற. 
  அதெப்படி அதெப்படி எனக்கு ஸ்ரீநிதியை விட ரிதன்யாவை பிடிச்சிருக்கு. எனக்கு அவளை கட்டிக்க ஆசை. இரண்டு வருஷம் வெயிட் பண்ணி அவளையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு யுகி மாமாவிடமும் ஷண்மதி அத்தையிடம் நானா கேட்கணும் இல்லை. 

      இன்னொரு முறை இப்படி ஏதாவது மட்டமான ஐடியாவை தூக்கிட்டு வந்த, இருக்கற கடுப்புல பேசாம தாலியை எடுத்து இப்பவே உன் கழுத்துல கட்டிடுவேன்.

   உன் லவ் சேரணும்னு யோசிக்கறதா இருந்தா யார் மனசையும் காயப்படுத்தாம ஒரு தீர்வை யோசி. 

   கேவலமா ஏதாவது யோசித்த கொன்றுடுவேன்" என்று திட்டியபடி வீற்றிருந்தான்.

  அந்தநேரம் தான் அனைத்தும் கேட்டவனாக ஜீவி வந்தான். 

  அவனை பார்த்தவாறு ம்ருத்யு திட்டியதால் வாடியபடி "ஹாய் டா உட்காரு. ம்ருத்யு இது ஜீவி. ஜீவி ம்ருத்யுவை நீ போட்டோல பார்த்திருக்க, நேர்ல முதல் அறிமுகம்" என்று சோகமாக இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.

   ம்ருத்யு தான் கஷ்டப்பட்டு "ஹலோ" என்று கைகுலுக்க, ஜீவியோ இவ்வளவு நேரம் தன் காதலி ஸ்ரீநிதியை திட்டியதால் சற்று வேண்டாவெறுப்பாக கையை நீட்டி "ஹாய்'' என்றான்.  

     "எப்படிடா இருக்கான்?" என்றதும் ம்ருத்யு ஜீவியை கண்டு "குட் பார்க்க நல்லாயிருக்கார்" என்றான். உண்மையில் ஜீவியை பார்ப்போர் சட்டென மனதை பறிக்கொடுத்திடுவார்கள். காரில் செல்லாமல் சாதாரணமாக ரோட்டில் நடைப்போட்டால் திருமணமான பெண்கள் கூட திரும்பி பார்ப்பார்கள். 

  அந்தளவு அழகனாக இருந்தான். போதாத குறைக்கு செல்வச்செருக்கான ஆளுமையான பார்வை. ம்ருத்யுவுக்கு ஸ்ரீநிதி விரும்பியது ஆச்சரியமாக இருந்தது. 

     ம்ருத்யுவிற்கு அடிவயிற்றிலிருந்து புகைச்சல், இத்தனை நாள் ம்ருத்யு என்றாலே மென்மையானவனாக தோன்றிலும் இக்கணம் அவன் மனதில் ஓடும் எண்ணங்களை கேட்டால் 'ம்ருத்யுவா இப்படி?' என்று திகைக்கலாம்.

   அந்தளவு உள்ளுக்குள் ரௌவுத்திரமாக மாறி அங்கிருந்த கண்ணாடி ஜாரை எடுத்து ஜீவி மண்டையில் இரத்தம் சிதற சிதற அடிக்கும் வெறியில் நினைத்து பார்த்தான். 
   
   ஸ்ரீநிதி தடுக்க வந்தால் அவளை பிடித்து உதட்டில் வன்மையாக முத்தமிட்டு 'நீ என் முதல் காதல் ஸ்ரீநிதி' என்று ஆங்காரமாக கூற நினைத்தான். 

  எதையும் மனதில் நினைப்பதை முகம் வெளிக்காட்டாமல் ஜீவியை கண்டு இளநகையை உதிர்க்க நடித்தான் நாயகன். 

   "என்னடா ஒரு ஹலோ மட்டும் தானா? ஹான்ட்சமா மேன்லியா கியூட்டா இருக்கான்னு சொல்வனு நினைச்சேன்." என்று ஸ்ரீநிதி துவண்டாள். அவளின் காதலன் சோடைப் போகாதவனென்று ம்ருத்யு வாயால் கூற ஆசைக்கொண்டாள் பேதை. 

     "இதுக்கு முன்ன ஒரு ஐடியா கொடுத்தியே அதுல கடுப்பா இருக்கேன் ஸ்ரீநிதி. என்னால அதுலயிருந்து வெளியே வரமுடியலை. 
    உன் ஆளு டாப் டக்கர் தான். நீ தான் முட்டாளா இருக்க" என்றதும் ஜீவிக்கு ம்ருத்யு பேச்சில் ஸ்ரீநிதி தேர்ந்தெடுக்கும் தன்னை சாடுகின்றானோ என்று புரிந்தும் புரிப்படாமலும் இருந்தது. 

   ஸ்ரீநிதியை உரிமையாக ம்ருத்யு வந்ததிலிருந்து திட்ட, அவளும் சுரணையின்றி கேட்பதே ஜீவிக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த இரண்டு வருடத்தில் நண்பனாகவும், காதலனாகவும் ஒரு வார்த்தை அவளை திட்டிவிட்டால் நாள்கணக்கில் பேசாமல் பழிவாங்குவாள். அப்படியிருக்க ம்ருத்யு இந்தளவு திட்டியும் அமைதியாக இருந்தவளை கண்டு ஜீவிக்கு ம்ருத்யு மீது பொறாமை உருவாகியது.

  நியாயப்படி ம்ருத்யுவுக்கு மட்டுமே பொறாமை உண்டாகியிருக்க வேண்டும். இங்கே ஜீவிக்கும் அதே மாற்றம் நிகழ்ந்தது. 

    "சரிடா. சாரிடா. ரிதன்யாவை இழுக்கலை. அட்லீஸ்ட் லண்டன்ல எவளையாவது லவ் பண்ணிருக்கலாம்ல. ஏ... ம்ருத்யு அந்த எல்சா.. அவ உன்னை லவ் பண்ணறா டா. பேசாம அவளையே ஓகே சொல்லிடேன். மேரேஜ் பண்ணிக்கோ." என்று இரண்டாவது முறையாக திட்டம் வகுத்து கொடுத்தாள். 

   "உன் மூளையை கழட்டி வீட்ல பீரோல பூட்டி வச்சிட்டியா? டேட்டிங் கூப்பிட்டப்பவே என்னை மிரட்டி நீ போகவிடலை. இப்ப கல்யாணம் பண்ணிக்கறேன்னு வழிஞ்சிட்டு போக சொல்லற. சான்ஸேயில்லை. எங்கப்பா அம்மா என்னை மதிக்கறாங்க. நான் ஸ்டுப்பிட் மாதிரி எவளையோ காதலிக்க மாட்டேன்." என்றுரைத்தான். 

   அதிலும் ஜீவி தான் உள்குத்து பேச்சாக கருதினான். யாரையோ காதலிச்சா ஸ்டுப்பிட் மாதிரியா? என்றது அவனுக்குள் ஓடியது. அதை விட 'மூளை கழட்டி பீரோல வச்சிட்டியா?' என்று திட்டியும், ஸ்ரீநிதி "அப்ப உனக்கு ஆசையிருந்தது. எல்சா கூட டேட்டிங் போக." என்று அவனை அடிக்கவும் ஜீவிக்கு தன்னை அழைத்துவிட்டு ஸ்ரீநிதி ம்ருத்யுவோடு பேசுவதும் எரிச்சலை உண்டாக்கியது. 

    "ஸ்ரீ கல்யாணத்தை எப்படி நிறுத்த?" என்று கடுப்பாய் வினவும் தான் ஸ்ரீநிதியோ "அச்சோ அதுக்கு தான் ஜீவி ரிதன்யாவை கட்டி வைச்சிடலாம்னு ஐடியாவோட வந்தேன். இவன் அசிங்க அசிங்கமா திட்டறான். 

  எல்சா காதலை ஓகே சொல்லிடுனு இதோ இப்ப இன்ஸ்டண்டா கூட ஐடியா கொடுத்துட்டு இருக்கேன். அவன் ரிஜெக்ட் பண்ணறான்.

  என்னையே சொல்லற ஜீவி. நீ ஏதாவது ஐடியா தந்தியா? லவ் பண்ணறது மட்டும் போதுமாடா?" என்று ஸ்ரீநிதியிடம் திட்டு கிடைத்தது. 

   ஜீவியோ "நாலு நாள்ல நான் என்ன செய்யறது? எனக்கு நேரம் இல்லை. அட்லீஸ்ட் இரண்டு மாசம்னா அப்பா என் பேர்ல கம்பெனியை மாத்திடுவார். அதுக்கு பிறகு நானே ஷண்மதி அத்தையிடம் பேசுவேன்." என்று கடுகடுப்பாய் கூறினான். 

ம்ருத்யுவோ 'ஷண்மதி அத்தையா? அடேங்கப்பா விட்டா இப்பவே கூட்டிட்டு ஓடிடுவான்' என்று மிளகாய் திண்றவன் போல முறைத்தான். 

   "இரண்டு மாசத்திலயும் உங்கப்பா கம்பெனியை உங்க பெயருக்கு மாற்றலைனா?" என்று ம்ருத்யு கேட்ட தோரணையில் அதீத சினம் எழுந்தது ஜீவிக்கு. 

  "அப்ப கம்பெனியாவது மண்ணாங்கட்டியாவதுனு என் ஸ்ரீநிதியை மட்டும் போதும்னு தனியா வந்துடுவேன். படிச்ச படிப்புக்கு வேலை சேர்ந்து ஸ்ரீயை பார்த்துப்பேன்." என்றவன் பேச்சு அழுத்தமாய் ஆவேசமாய் வந்தது. 

    இத்தனை நாள் கம்பெனி முக்கியம் என்று காத்திருக்க நினைத்த ஜீவிக்கு, ம்ருத்யுவை கண்டதும் புகைச்சல் உண்டானது. 

   ஆறடி ஆண்மகனாய் பேரழகனாய் இருந்தான் ம்ருத்யு. அதெல்லாம் விட ஸ்ரீநிதி அடித்து விளையாடும் நபராக, அவளை உரிமையாக திட்டும் ஆணாக காண காந்தியது.

   ஜீவி ஒன்றும் தொழிலுக்கு போட்டியாகவோ, ஷண்மதியை அழிக்கவோ ஸ்ரீநிதியை விரும்பவில்லை. தனக்கு அவளை பார்த்ததும் பிடித்தவளாக மனதில் பதிய உண்மை நேசத்தில் விரும்புகின்றான். 

   அதனால் ம்ருத்யு என்றால் அவனுக்கு ஆரம்பம் முதலே பிடிக்காது. தன்னிடம் பேச வந்தாலும் அவனிடம் வீடியோ காலில் கதை அளக்கும் ஸ்ரீநிதியை தடுக்காமல் காணும் போது, ம்ருத்யு கண்கள் ஸ்ரீநிதியை ரசிப்பது ஒரு ஆணாக அவன் நன்கறிவான். 

  அதை நாசூக்காய் 'ம்ருத்யு உன்னை விரும்பறானா?' என்று கூட கேட்டுவிட்டான். 

    'அவனோட பேசறது உனக்கு சந்தேகத்தை கொடுக்குதா ஜீவி' என்ற ஸ்ரீநிதியின் பார்வையும் குரலும் அதன் பின் 'ம்ருத்யு பற்றி இப்படி என்னிடம் பேசாதே' என்று சொல்லாமல் சொல்ல, தன் காதலுக்கு ஆபத்தென முடியுமென்று அந்த கேள்வியை புறம் தள்ளினான்.

    ஜீவி கேள்விப்பட்டவரை ஸ்ரீநிதி ஷண்மதிக்கு மேலானவள். ஷண்மதியாவது அவள் செய்யும் செய்கைக்கு பின்னால் ஒரு நல்ல காரணம் இருக்கும். ஸ்ரீநிதிக்கு அப்படியொன்றும் யோசிப்பவளே இல்லை. 

   தன்னை காயப்படுத்தும் எதையும் விட்டு வைக்க மாட்டாள். அதில் சிறப்பாக வச்சி செய்யும் எமபாதகி.

   "வாவ் ஜீவி" என்று கைதட்டினாள். ''இதான்டா எனக்கு வேண்டும். எப்பபாரு அங்கிள் கம்பெனி வந்ததும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு பேசும் போது சே நான் இரண்டாவது பிரியாரிட்டியானு கேட்க நினைச்சேன். பட் திஸ் மௌமெண்ட் ம்ருத்யுவால நான் தான் உனக்கு முதல்ல முக்கியம்னு சொல்லிட்ட. ரியலி லவ் யூ மேன்" என்று கட்டிபிடிக்க ம்ருத்யு துடித்துவிட்டான். 
  
   சாதாரண தோழமையான கட்டிபிடிப்பு. ஆனால் விரும்பியவனுக்கு இதயத்தை யாரோ எண்ணெய் சட்டியில் வதக்கும் பிரளயம் ஏற்பட்டது. 

    இந்த இரண்டுநாளில் அளவுக்கு அதிகமாக இதயத்தில் கணத்தை கொடுப்பதாக இதயம் அவனை எச்சரித்தது. 

  அவன் காதல் வலியை விட பெரிதாக எதையும் எண்ணியதில், அதனால் இந்த புதுவிதமான வலி அவனை அழுத்த மயங்கினான்.

"ம்ருத்யு ம்ருத்யு என்னாச்சு?" என்றவள் அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முடிவோடு ஜீவியை உதவிக்கு அழைத்தாள். 

   அவனும் ம்ருத்யுவை தோளோடு தோளாக அழைத்து காரில் ஏற்றினான். 

ஸ்ரீநிதி மருத்துவமனைக்கு செல்ல அவள் காரை பின் தொடர்ந்தான். 

  மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரீநிதி இறங்கி ஸ்டக்சரில் ஏற்றிவிடவும், ஜீவியோ ஸ்ரீநிதி கையை பிடித்து, "இங்கயேயிருந்தா ஷண்மதி அத்தை என்னை பார்த்திடுவாங்க. அப்பாவும் போன் பண்ணிட்டு இருந்தார். நான் கிளம்பறேன். என்னனு எனக்கு மெஸேஜ் பண்ணு" என்று ஜீவி அப்படியே செல்லவும், ஸ்ரீநிதி ஒரு நொடி தடுமாறினாலும் ஜீவிக்கு தலையாட்டிவிட்டு, ம்ருத்யு சென்ற சிகிச்சை அறைக்கு ஓடினாள். 

  அங்கே மருத்துவ சிகிச்சை நடைப்பெறவும், ஸ்ரீநிதி பயத்தில் தாய் தந்தைக்கு அழைத்தாள். 

   யுகியும் ஷண்மதியும் பரபரப்பாக வந்தார்கள். ஸ்ரீவினிதா லலிதா என்று வர, அதே நேரம் பைரவ் தாரிகவும் வந்து சேர்ந்தார்கள். 

   ஷண்மதி வந்ததும் வராததும் மகளுக்கு ஓங்கி ஒரறையை பரிசளித்தாள். 

  -தொடரும். 
-பிரவீணா தங்கராஜ் 

  
      

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1