நீ என் முதல் காதல் -2

அத்தியாயம்-2

   ஸ்ரீநிதியோ காரில் சாய்ந்து தலையை தாங்கினாள். 
  
   "உனக்கேன் இந்தளவு கோபம் வருது ஸ்ரீநிதி. அவங்க பேசியது தப்பு தான். உன்னை இன்சல் பண்ணறாப்ள பேசியது. 
  அதுக்கு கண்ணாடி குடுவையை வீசுவியா? கண்ணாடி உடைஞ்சு கண்ணுலபட்டு கண்ணு தெரியாம போயிருந்தா என்ன செய்வ? போலீஸ் கேஸ் அதுயிதுனு இக்கட்டுல தள்ளினா? ஸப்பா நினைக்கவே பகீரென்று இருக்கு." என்று பேசவும் ஸ்ரீநிதியோ போனில் படபடவென சாட் செய்யும் சத்தம் கேட்டது.
   
   "ஸ்ரீநிதி நான் உன்னிடம் தான் பேசறேன்." என்று பாவனா கத்தவும், "காது கேட்குது பாவனா." என்றவள் தன் வேலையை நிறுத்தவில்லை. 

    "ஸ்ரீநிதி" என்றதும் "அவதலையெழுத்து என் கையால கண்ணு போகணும்னு இருந்தா போயிருக்கும். அவ்ளோ தான்." என்று பேசிவிட்டு ம்ருத்யுஜெயனுக்கு அழைத்தாள். 

   இந்த நேரம் அவன் கல்லூரி நேரமென்று அறிந்து அழைத்து கொண்டிருக்க, பாவனாவோ "ஓகே ஸ்ரீநிதி நான் வீட்டுக்கு போகலை. என் பியான்சி வெயிட் பண்ணிட்டு இருப்பார், மால்ல இறங்கிக்கறேன்." என்றதும் டிரைவர்" என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தாள்.

   "சரிங்கம்மா" என்று டிரைவர் உரைக்க போனில் தொடுதிரையில் ம்ருத்யு புகைப்படத்தை கண்டு "போனை எடுக்க என்னவாம். இரு இரு நீ கால் பண்ணும் போது இன்னிக்கு முழுக்க எடுக்க மாட்டேன்" என்று போனை தன்னருகில் வீசினாள். 

   பாவனா சொன்ன மால் வரவும் டிரைவர் நிறுத்திட அவள் இறங்கி "பை டி" என்று கூற, "பை" என்று டிரைவரிடம்  "டிரஸிஸில் பப்' போகும்படி கூறவும் அவர் தன் கடமையை செவ்வென செய்தார். 

    ஸ்ரீநிதி அந்த பப்பிற்குள் இன்னொரு நட்போடு நுழைந்ததும், ம்ருத்யுவிடமிருந்து வீடியோ கால் வரவும், எடுக்க கூடாதென்ற முடிவெடுத்தவள் கைகள் தானாக தொடுத்திரையை ஏற்றது. 

  "ஹாய் என்ன கால் பண்ணியிருந்த?" என்று கேட்க, மௌவுனமாய் உதடு கோணித்தாள். 

   "ஏய் ஸ்ரீ ஏதோ பிரெண்டஸ் கல்யாணத்துக்கு போகணும்னு சொல்லிருந்த, பப்ல இருக்கியா?" என்று புருவம் சுருக்கினான். 

   "வாயை திறந்து சொல்லு ஸ்ரீ" என்று ம்ருத்யு பேசியபடி கல்லூரி கேன்டீனில் சீஸ் பீட்சாவை அதக்கினான். அவனுக்கு மதியம் உணவு வேளையில் மற்றவருக்கு பாடம் நடத்த, சற்று தாமதமாக தான் மணி 2.30கு உணவை சாப்பிட ஆரம்பித்தான். 

   "ஸ்ரீக்கு என் மேல கோபமா? உடனே போனை எடுக்கலைனு? ஏய் சாரிடி. லஞ்ச் டைம் லாஸ்ட் மினிட் எல்சா வந்து சப்ஜக்ட் வைஸ் புரியலைனு அகைன் என்ன சொல்லி தர சொன்னா. அவளுக்கு சொல்லித்தரவும் கவனிக்கலை." என்று கூறிடவும், எங்கெங்கவும் முகம் திருப்பி அவனை காண்பதை தவிர்த்தவள் அவன் கூறிய விளக்கத்தை கேட்டு சட்டென கேமிராவை பார்த்து பார்வையாலே எரிக்கற்களை வீசினாள். அப்பொழுதும் வாய் திறக்கவில்லை. 

  "ஸ்ரீ நீ போன் எடுக்கலைனு எப்படியும் பனிஷ் பண்ணுவனு தான் நெக்ஸ்ட் கிளாஸுக்கு போகலை. உன் கூட பேசணும்னு கிளாஸை கட் பண்ணிட்டேன் போதுமா? பதிலுக்கு பதில், இப்ப பேசு" என்றதும் "பாடம் நடத்தறப்ப எல்சா கண்ணு, உன்னை சைட் அடிச்சிருக்கும். உன்னை பார்த்துட்டு பாடத்தை கவனிச்சிருக்காது. உன்னை கரெக்ட் பண்ண உன்னிடமே புரியலை சொல்லித்தானு குட்டைபாவாடையோட வந்து நின்றுயிருப்பா. சார் பாடம் என்றதும் உலகத்தையே மறந்து என்னை மறந்து பாடம் எடுக்க போயிருக்க?

உலகத்தை மறந்து தொலை. எனக்கு கவலையில்லை. நான் உன்னோட லஞ்ச் டைம்ல கால் பண்ணுவேன்னு தெரியும்லடா. என்னை ஏன் மறந்த?" என்று காச்மூச்சென கத்தினாள். 

  கூடவந்த நட்பிடம் கூட பேசாமல் ம்ருத்யுவிடம் தான் பேசிக்கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி  

  எல்சா ம்ருத்யுவின் வகுப்பு தோழி. அடிக்கடி ம்ருத்யு இவளை பற்றி கூறியிருக்கின்றான். எல்சா என்றுயில்லை. அவன் இங்கே லண்டனில் யாரிடம் பேசினாலும் மூச்சுவிட்டாலும் உரைத்திடுவான். அதனால் எல்சா பற்றி முன்பு கூறும் போது, 'எல்சானு ஒரு பொண்ணு என்னை பார்த்துட்டே இருந்தா டேட் போகலாமானு ஒரு நாள் கேட்டா, நோ சொல்லிட்டேன். ஆனாலும் சைட் அடிக்கிறதை நிறுத்த மாட்டேங்குறா' என்று ம்ருத்யு தான் தேவையற்று உரைத்திருந்தது.

   ஸ்ரீநிதி அப்பொழுது தான் வெயிட்டர் வைத்து சென்ற வோட்காவை மடக்கென தொண்டையில் சரித்திட, "பப்புக்கு வந்து குடிக்கிற அளவுக்கு தைரியமா ஸ்ரீ. மாமாவுக்கு தெரிந்தா பொலந்து கட்டுவார். என்ன தைரியத்துல நீயும் பாவனாவும் இந்த நைட்ல ஊர்சுத்திட்டு இருக்கிங்க. 

  ஆமா கல்யாணத்துக்கு போகலையா?" என்று தாமதமாய் கேட்டான். அவனுக்கும் இன்று அவள் கல்லாரி தோழி திருமணம் என்றறிவான். 

   "அங்க போயிட்டு டிஸ்அப்பாயின்டட் ஆனதால தான் பப்புக்கு வந்தேன். 

   என் காலேஜ் செட் எல்லாருக்கும் மேரேஜ் ஆகிடுச்சாம். எனக்கு மட்டும் ஆகலைனு அந்த லீனா ஒரே அலப்பறை செய்தா. கண்ணாடி டம்ளரை மூஞ்சில தூக்கி விசியெறிஞ்சுட்டு வந்துட்டேன். 

   எனக்கு மேரேஜ் ஆனா என்ன? ஆகலைனா அவளுக்கு என்ன? பத்திரிக்கை வச்சா வந்து திண்ணுட்டு ஏதாவது கிப்ட் கொடுத்துட்டு போற மூதேவி. அவளுக்காக நான் என் லைப்பை உடனே மாத்திக்கணுமா?" என்று பேசியவளை கண்டு தலையில் கைவைத்தான். கொஞ்சம் ஓவராக தான் போதை ஏறுகின்றது என்றது அவன் மனம்.
  
  "அந்த பொண்ணுக்கு ஏதும் ஆகலையே?" என்று கேட்டவனை கண்டு கேமிரா முன்னால் வந்து "ஐ வில் கில் யூ ம்ருத்யு. நான் என் கஷ்டம் பத்தி சொல்லறேன். நீ லீனாவோட நலத்தை விசாரிக்கற?" என்று பாய்ந்தாள். 

  "ஏய் ஸ்ரீ கேமிரா முன்ன முன்ன வராத பயமாயிருக்குல. தனியா வேற இருக்கேன். மந்திரிக்க கூட யாருமில்லை." என்று விளையாடவும், "போடா உன்கிட்ட பேச வந்தேன் பாரு. நெக்ஸ்ட் கிளாஸ் ஆரம்பிக்கறவரை, நீ போன்ல என் மூஞ்சியே பார்த்துட்டு இருக்கணும். அதான் சட்டுனு போன் எடுக்காம இருந்ததுக்கு பனிஷ்மெண்ட்." என்றதும் மலர்ச்சியாக ம்ருத்யுவோ "அய்யோ ரொம்ப கொடூரமான தண்டனை. இட்ஸ் ஓகே." என்று வராத கண்ணீரை கன்னத்தில் சுண்டிவிட்டான். 

   ஸ்ரீநிதி கலகலவென சிரிக்கவும், மீண்டும் வோட்கா வர, "ஸ்ரீ யு கிராஸ் தி லிமிட். மணி ஒன்பதரை ஆகுது. வீட்டுக்கு போக டென் ஆர் டென் தேர்டி ஆகும். நீயும் பாவனாவும் கிளம்புங்க" என்றான். 

   "அடப்பொறுமையா போகலாம்" என்று கூறியவளிடம், "இன்னும் டூ செகண்ட்ஸ் நீ கிளம்பலை. நான் ஷண்மதி அத்தைக்கு கால் பண்ணிடுவேன். இங்க வந்ததும் அப்பறம் லீனாவை அடிச்சதையும் போட்டு கொடுத்துடுவேன்." என்று மிரட்டவும், "சரி கிளம்பறேன்." என்று கூறிவிட்டு வோட்காவை எடுக்க சென்றவளை, "நீ இப்ப கார் டிரைவரோட கிளம்பலை. செகண்ட் கால் போகும்." என்று பேச, "சரி போனை கட் பண்ணு போயிடறேன்." என்று தெளிவாக பேசினாள். 

  "எனக்கு அடுத்த கிளாஸ் கட் ஆனாலும் பரவாயில்லை. நான் வீடியோ காலை கட் பண்ண மாட்டேன். நீ வீட்டுக்கு போய் இறங்கறவரை உன்னை வாட்ச் பண்ணறது தான் எனக்கு வேலை. ஏற்கனவே பனிஷ்மெண்ட் அதானே." என்றவன் டைம் ஸ்டார்ட் நௌவ் ஸ்ரீநிதி" என்றான்.

  "ஸ்ஆஹ்.. உன்னோட லொல்லு டா." என்றவள் எழுந்தாள். 

  தோளில் இடைவரை நீண்ட கைப்பையை எடுத்து நடந்தாள். 

  கையில் போனும் சிரிப்புமாய் நடந்தவள் பப் வெளியே வந்ததும் பை என்று உதட்டில் வலது கையை  வைத்து எடுத்து பறக்கும் முத்தமொன்றை தந்தாள். 

  "பாவனா பியான்ஸி பார்த்தா உதைக்க போறார். நான் கொடுத்துக்கறேன் பறக்கற முத்தம் பிரன்ச் கிஸ் எல்லாம் நீ எந்த கிஸ்ஸும் கொடுக்காதனு கும்பிடு போடுவார்." என்று ம்ருத்யு கேலி செய்தான். 

  "யூ நாட்டி. இது காமன் ஹக் கிஸ் டா." என்று சிரித்தவள் தனது காரில் ஏறினாள். 
   
   ஸ்ரீநிதி அவள் நட்புக்கு அனுப்பிய முத்தங்கள் தனக்கென சேகரித்தான் ம்ருத்யு. 

    வீடு வரவும் காரிலிருந்து இறங்கி "போதுமா டா. வீட்டுக்கு வந்துட்டேன்" என்று கூறியபடி மாடிக்கு லிப்டில் பயணித்தாள். 

  ஏற்கனவே பங்ஷனில் சாப்பிட்டு முடித்திருப்பாள் ன்றதால் ஸ்ரீவினிதாவோ, லலிதா இருவரும் ம்ருத்யுவோடு பேசுவதாலும் ஸ்ரீநிதியை நிறுத்தி எதுவும் கேட்கவில்லை. 

   யுகேந்திரன்-ஷண்மதி இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் பார்த்து கொண்டார்கள்.  
  ரிதன்யாவோ ஏற்கனவே சாப்பிட்டு எழுதிமுடித்து உறங்கியிருந்தாள். 

   ஸ்ரீநிதி நேராக தனது அறைக்கு வந்து, ஹாண்ட்பேக்கை மெத்தையில் வீசிவிட்டு, போனை டிரஸிங் டேபிள் முன் வைத்துவிட்டு, ஹியரிங், வாட்ச் நெக்லஸ் என்று ஒவ்வொன்றாய் கழற்றியபடி, "வீட்டுக்கு வந்தாச்சு, ரூமுக்கும் வந்துட்டேன் போதுமாடா. அம்மாவிடம் போட்டுக் கொடுத்துடாத. அப்பறம் அரக்கி வச்சி செய்வா." என்று பேசவும் ம்ருத்யுவோ சின்ன சின்ன முட்புதர் தாடியை தடவி சிரித்தான். 

  கம்மல் ஜெயின் பிரேஸ்லேட் என்று கழட்டியவள் பின்னால் ஜிப்பை அவிழ்த்தப்பின் தான் இது ஆடியோ கால் இல்லை வீடியோ கால் என்றது உணர, அதே நேரம் ம்ருத்யு வேகமாய் வீடியோ காலை துண்டித்திருந்தான். 

    "ஓ எம் ஜி. கட் பண்ணிட்டான். தேங் காட்" என்றவள் கழுத்துவரை இறக்கிய ஆடையை பிடித்து மூச்சுவிட்டு இரவாடைக்கு மாறினாள். 

    லண்டனில் ம்ருத்யுவோ தனக்கு பின்னால் யாரும் இல்லையென்றதை ஊர்ஜிதப்படுத்தி கீழ் இதழை பல்லால் கடித்து விடுவித்து, வெட்கம் கொண்டு மென்னகைத்தான்.

இதயம் எல்லாம் ஸ்ரீநிதி என்பவளை சுமந்து வகுப்புக்கு சென்றான். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 

  

   

  

   
      
   

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1