Nee என் முதல் காதல்-12

 அத்தியாயம்-12


ஸ்ரீநிதியே வந்து அவன் கையை பற்றி, "இந்த ஐடியா ஓர்க்அவுட் ஆகும். கொஞ்சம் யோசி. படிச்சவங்க கண்டிப்பா இதை அக்சப்ட் பண்ணுவாங்க" என்று மலர்ந்த புன்னகையோடு கூறினாள். 


"அப்ப நீயே சொல்லிடு." என்று விறுவிறுவென நடந்தான். 


ஸ்ரீநிதியோ மீண்டும் துரத்தி வந்தவள் "நீ என்றால் ஷண்மதி ஒரு பார்வை பார்த்து, தன் பொண்ணையே வேண்டாம்னு சொல்லறானேனு உன்னை ரிஜெக்ட் பண்ணுவா. அட் தசேம் உன்னை அவளுக்கு பிடிக்கும் பழிவாங்க மாட்டா, திட்டமாட்டா. 


பட் நான் என்றால் எதையும் காதுல வாங்க மாட்டா. அதோட செம டோஸ் விடுவா. அந்த ஒரு காரணத்துக்காக தான் நான் சுயநலமா உன்னையே கல்யாணத்தை தடுக்க சொல்லறேன்." என்று வருந்தினாள்.


முதல் முறையாக "என் பக்கம் எப்படி பேக்ஃபயர் ஆகும்னு யோசிக்கலையா நீ. 

எங்கப்பா அம்மா ஆசை ஆசையா உன்னை நான் கட்டிக்க போறேன்னு கனவு காணறாங்க. தம்பி பொண்ணே மருமகளா வரணும்னு விருப்பப்படறாங்க. அப்படியிருக்க, நானே நிறுத்தினா. எங்க வீட்ல சோறுதண்ணி போடமாட்டாங்க. போடா வெளிநாட்டுக்கேனு துரத்திவிடுவாங்க. அப்பறம் என்னோட நார்மலா கூட பேசமாட்டாங்க." என்று கூறவும் ஸ்ரீநிதி வாயை திறக்கவில்லை. 


ம்ருத்யுவிற்கு 'அப்பாடி'யென்ற உணர்வோடு கார் கதவை திறக்க, ஏறியமர்ந்தாள். 


அதன் பின் பெருத்த மௌவுனம். 


வீட்டுக்கு வந்தப்பின் காரிலிருந்து இறங்க மறந்து நின்றாள். 


"ஸ்ரீ" என்று அவளை தீண்டவும், உயிர்பெற்றவளாக, "இன்னும் இரண்டு நாளிருக்கு. நமக்கு நிச்சயம் நடக்க. அதுக்குள்ள ஏதாவது ட்ரை பண்ணிடலாம்னு பார்த்தேன். இட்ஸ் ஓகே. ஷண்மதிகிட்ட நைட் சொல்லி பார்க்கறேன். அதை மீறியென்றால் ஜீவியே ஸ்டெப் எடுக்கணும். ஒரே ஆறுதல் மேரேஜ் வரை டைம் இருக்கு." என்று இறங்கினாள். 


"ஸ்ரீ" என்று ம்ருத்யு அழைக்க, "வீட்டுக்கு வந்துட்டு போவியா. இல்லை இப்படியே ரிட்டனா?" என்று கேட்டாள். 


"அத்தை மாமா வரச்சொன்னாங்க. ஆல்ரெடி அப்பா அம்மா இங்க தான் வர்றாங்க. நிச்சயதார்த்த டிரஸை எடுத்திருக்கு செலக்ட் பண்ண" என்றவன் அவளோடு நடந்தான். 


வீட்டுக்குள் நுழையும் நேரம் "ஏன்டா வெளியே போய் பேசறதுக்கு வீட்லயே மாடில பேசலாம்ல. எப்ப பாரு ஊர்ச்சுத்திட்டு. வெளிநாட்ல இருந்து வந்தா கால் ஒரு இடமா தங்காதோ" என்று தாரிகா பேசவும் ம்ருத்யு அமைதியாகவே வந்தான். 


பைரவோ "நீ சொல்லு தங்கச்சி வரவர இவன் போக்கே சரியில்லை. ரூமுக்குள்ளயே கதவை பூட்டிட்டு கிடக்கான். 


ஆசையா பையன் வந்துட்டானே பேசலாம்னு போனா எரிந்து விழறான். 

என்னைக்காவது நிதானமில்லாம பேசியிருக்கானா?" என்று பைரவ் ஷண்மதியிடம் அவர் பையனையே கோல்மூட்டி கொண்டிருந்தார்.


ஷண்மதியோ ஸ்ரீநிதியை பார்த்து ம்ருத்யுவை கண்டு "கல்யாணம் ஆனா சரியாகிடும் அண்ண." என்றாள். யுகேந்திரன் ம்ருத்யு அருகே வந்து, "என்னடா கண்ணா?" என்று கேட்க "ஒன்னுமில்லை மாமா" என்று உதிர்த்தான். 


பலதரப்பட்ட ஆடைகள் ஹாலில் கொண்டு வந்து அதனை பொம்மையின் தோளில் வைத்து பிடிக்கின்றதா இல்லையா என்று இருவரிடமும் கேட்க, அந்த நிலையிலும், "லைட் பிங்க் கலர், பீச் கலர் சாண்டல் இப்படி இருக்கா?" என்று ஏதோ திருமணத்திற்கு மனமுவந்து எடுத்தாள். 


"ஸ்ரீ குட்டி கேட்கற கலர்ல காட்டுங்க" என்று பைரவ் குரல் உயர்த்தினார்.


"ஏன் டேடி பிளட் ரிலேஷன்குள்ள மேரேஜ் பண்ணினா பிறக்கற பேபிக்கு ஏதாவது அபெக்ட் ஆகும்ல. நாங்க பிளட் ரிலேட்டிவ் ஆச்சே." என்று ஸ்ரீநிதி மென்று முழங்கி கேட்டுவிட்டாள். 


"அதனால என்ன? இப்ப யாரு பிளட் ரிலேஷன்குள்ள மேரேஜ் பண்ணறதா கேட்டது." என்று ஷண்மதியின் அதட்டல் குரலில் 'அரக்கி ஆரம்பத்துலயே அடக்கிடுவா' என்று ஸ்ரீநிதி முனங்கினாள். 


"நான் தான் அத்தை அப்படி கேட்டேன். என் பிரெண்ட்ஸ் ரிலேட்டிவானு கேட்டதும் ஜஸ்ட் அந்த தாட்ஸ்ல யோசித்தேன்." என்று தக்க சமயத்தில் ஸ்ரீநிதியை காப்பாற்றும் பொருட்டு ம்ருத்யு பதில் தந்தான். கிட்டதட்ட அவளை விட தானே இந்த கேள்விக்கேட்டு அவளை தப்பிக்கும் முயற்சியில் நிறுத்தினான் 


ம்ருத்யுவின் பேச்சால் ஷண்மதி அடக்கி பேச தவிர்க்க, "ஏன்டா நீ என் ரத்தம். ஸ்ரீநிதி ஷண்மதி பிளட் குரூப். அதை மீறினா குழந்தை உண்டானதும் டாக்டரிடம் என்ன ஏதுனு சிகிச்சை எடுத்துக்கலாம். இப்ப இருக்கற மெடிக்கல் பீல்ட் அப்படி" என்று பைரவே மகனுக்கு பதில் தர ஸ்ரீநிதி நொந்துவிட்டாள். 


அந்நேரம் தான் ரிதன்யா பள்ளியிலிருந்து வீடு திரும்ப, வீடே உடையால் மூழ்கியிருக்க கண்டு, "ஏய்.. நான் தான் அக்காவுக்கு டிரஸ் செலக்ஷன் பண்ணப்போறேன்." என்று குதித்தாள். 


"எனக்கொன்னும் நீ செலக்ட் பண்ண வேண்டாம். நானே செலக்ட் பண்ணிடுவேன்." என்று அக்கா தங்கை போர் ஆரம்பிக்கவும், ம்ருத்யு நடுவே வந்து "ரிது நீ எனக்கு செலக்ட் பண்ணு." என்று ஸ்ரீநிதி கோபத்தால் அவள் தங்கையை வதைப்பது உணர்ந்து சிறுப்பெண்ணிடம் கனிவு காட்டினான். 


"ம்ருத்யு அத்தான் என்றால் ம்ருத்யு அத்தான் தான்." என்று முதலில் அவனுக்கான உடையை தேர்ந்தெடுக்கும் நேரம் செல்ல, ஸ்ரீநிதியோ ம்ருத்யுவிற்கு பார்த்து பார்த்து தேர்வு செய்யும் தங்கை மீது எரிச்சல் உண்டானது. 


ஒருவழியாக ரிதன்யா எடுத்த ஆடையை ம்ருத்யு பிடித்திருக்கின்றது என்று கூறவும் தனக்கு பார்த்த உடைக்கு மேட்சாக வேண்டுமென்றே ம்ருத்யுவிற்கு வேறு உடையை தேர்ந்தெடுக்கும் படி செய்தாள். 


"அத்தான் நான் செலக்ட் பண்ணியது அப்ப போட மாட்டிங்களா?" என்று முகம் வாடி கேட்டாள். 


"நாம என்ன ஒரு டிரஸா எடுக்க போறோம். உனக்கு பிடிச்சதை எடுத்து வை. எப்ப பங்ஷன் மோட் வைப் ஆகுதோ அப்பப்ப போட்டுக்கலாம்" என்று கூறவும் ரிதன்யா இரண்டு மூன்று அவளது தேர்வாக எடுத்து வைத்தாள். 


தேவையின்றி ஸ்ரீநிதிக்கு வயிறு எரிந்தது. 

இதில் ரிதன்யாவுக்கும் உடையை ம்ருத்யுவே தேர்ந்தெடுக்க ஸ்ரீநிதியோ "ம்ருத்யு என்னோட டிரஸுக்கு எடுத்து கொடு. அவளுக்கு அம்மா இருக்காங்க" என்று அனைவர் எதிரிலும் அதட்ட ஆரம்பித்தாள்.


"இப்பவே ஷண்மதி குணம் பார்த்தியா. ஆனாலும் நம்ம பையன் நேக்கா வழிநடத்துவான்" என்று பைரவ் தாரிகா காதில் கிசுகிசுத்தார்.


ஸ்ரீவினிதாவும் லலிதாவும் மூவரின் அழுச்சாட்டியத்தை வேடிக்கை பார்த்தனர்.


அதன் பின் நிச்சயத்திற்கு அவரவர் அணிந்திட ஆடையை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் முழ்கினார்கள். 


அன்றைய பொழுது பல உடைகளை தேர்ந்தெடுத்தாலும் எதுவுமே தன் நிச்சயத்திற்கு என்று ஆசையாக எடுத்திருக்க மாட்டாளென ம்ருத்யு அறிந்ததே. 


ம்ருத்யுவின் பார்வை அடிக்கடி ஸ்ரீநிதியை தழுவியது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக்கொள்ள, அவன் மனம்படும் பாட்டை அவன் நலம் பேணும் உறவே உணர்ந்தது. 


ம்ருத்யு முகமே வந்ததிலிருந்து மாறியதை அவளே அறிவாள். அவள் அரக்கியின் அவதாரமாக ஸ்ரீநிதி நித்தமும் உரைக்கும் ஷண்மதி. 


ம்ருத்யுவின் சோதன காலங்கள் வந்தது. ஆம் நிச்சயதார்த்த நாள் வந்தே விட்டது. 


ம்ருத்யு அவனது கோர்ட் சூட் அணிந்து அதற்குண்டான அலங்கார பொருட்களை கைகளில் கோர்ட் பாக்கெட்டில் என்று வைரத்தை மிடுக்காக வைத்து கொண்டான்.


ரிதன்யாவோ லெகங்கா அணிந்து குறுக்கும் நெடுக்குமாய் தன் அத்தானை காண ஓடினாள். 


அப்பொழுது தான் பைரவ், "டேய் கண்ணா ராஜா வீட்டு கண்ணுக்குட்டிடா நீ. ஸ்ரீநிதி அழகுக்கு என் மகன் எந்தவிதத்திலும் சோடை போகலை." என்று பெருமிதமாக கூறினார். 


"அவன் என் பையன்'' என்று தாரிகா மைந்தனை புகழ, "வழிவிடுங்க வழிவிடுங்க. அத்தான் கன்னத்தை காட்டுங்க." என்று எக்கி திருஷ்டி பொட்டு வைக்க, ம்ருத்யு உயரத்திற்கு எக்கியதால் கால் இடறியது. 


"அச்சோ சாரித்தான் பாக்கு மரம் அளவுக்கு வளர்ந்திருக்கிங்க. என்றவள் திருஷ்டிபொட்டு இழிவிட, அவனை மெத்தையில் அமர கூறி துடைத்து விட்டாள் ரிதன்யா. 


"ஆஹ் இப்ப பாருங்க அழகாயிருக்கிங்க" என்று கூறிய அடுத்த நொடி ஸ்ரீநிதி கை வந்து ம்ருத்யு கன்னத்தில் இருந்த திருஷ்டி பொட்டை அழித்தாள். 


"என் ம்ருத்யுவை ஜோக்கர் ஆக்காதே. உனக்கு வர்றவனிடம் இப்படி காமெடி பண்ணிட்டுயிரு." என்று தங்கையை வெளுத்து வாங்கினாள். 


பைரவிற்கும் தாரிகாவிற்கும் ஸ்ரீநிதியின் உரிமைப்போராட்டம் ஆனந்தத்தை தரவும், ரிது நீ வா." என்று இழுத்து சென்றனர்.


"என்ன ம்ருத்யு ஜாலியா மாப்பிள்ளை கோலத்தில வந்துட்ட?" என்று ஸ்ரீநிதி முகம் வாடி வதங்கி அவனை பார்த்தாள். 


"நான் என்ன ஹாப்பியா இருக்கேனா. நானும் தான் உன்னை எப்படி அவனோட சேர்க்கன்னு கஷ்டப்படறேன். 


உனக்கென்ன நாளைக்கு அவன் கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டு போனா ஜோடியா கைவீசிட்டு போவ. எங்கப்பா, அம்மா, ஆச்சி, மாமா, அத்தை எல்லாரும் ரொம்ப நொந்துடுவாங்க. இதுல என் ப்யூச்சர் ல்பாயிலாகலாம்." என்று நிதர்சனத்தை உரைத்தான். 


"அத்தை மாமாவிடம் நானே சாரி கேட்டுடறேன். அப்பாவிடம் அழுது பேசினா கரைந்திடுவார். அரக்கி பத்தி கவலையில்லை. அவளே என்னை ஒதுக்கிடுவா. 


ஆங் என்ன சொன்ன ப்யூச்சரா. உனக்கென்ன ம்ருத்யு நீ ஜீவியை விட பேரழகன். நான் நீ என்று போட்டி போட்டு எவளாவது கல்யாணம் பண்ணிப்பாங்க." என்று அவனை பார்த்து கூறவும், "நான் பேரழகன்?" என்று சலிப்பாய் கேட்டவன் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்திற்கு அருகே இருந்த ஸ்ரீநிதி முகம் பார்த்து, 'உன் கண்ணுக்கு அழகனா தெரியலையே. அப்படியிருக்க இந்த அழகு எதுக்கு?' என்பதாக மனதில் நொந்தான். 


"இங்க என்ன பண்ணற? மேடைக்கு போகணும். ரெடியாகு" என்று ஷண்மதி வந்து ஸ்ரீநிதியை செல்லக்கூறவும், ஷண்மதிக்கு நிகராக மிடுக்காய் அலட்சிய நடையிட்டு வெளியேறினாள் ஸ்ரீநிதி.


"ம்ருத்யு ஒன்றரை மாசத்துல கல்யாணம் முடிவு பண்ணிருக்கோம். அதுக்கு மேல உங்க பெயர் பொருத்தத்துக்கு நாள் தள்ளி வைக்க வேண்டாம்னு அத்தை பார்த்துட்டு வந்த ஜோதிடக்காரங்க சொல்லிருக்காங்க. பெரிசா ஜோசியத்துல எனக்கு நம்பிக்கையில்லை. ஆனா மேரேஜ் தள்ளிப்போடறதுல எனக்கு இஷ்டமில்லை. 


நீ மேடைக்கு போ. சொந்தக்காரங்க மட்டும் தான்." என்று தெம்பூட்டினாள். 


ம்ருத்யுவோ வாழ்க்கை ஒரு நாடகம் அதில் நானே நல்ல நடிகன் என்பதாக சரிங்க அத்தை என்று மேடைக்கு நடந்தான். 


"ம்ருத்யு லைட்டா சிரி. நீ சிரிச்சாலே எல்லாமே உன் பக்கம் வந்

திடும்" என்று கூறியதும் தன் அத்தையின் வார்த்தையில் தானாக முறுவல் புரிந்தான். 


-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ் 



Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1