நீ என் முதல் காதல் -5
அத்தியாயம்-5
ம்ருத்யு ஏர்போர்ட்டில் ஏறிவிட்டு போனில் ஸ்ரீநிதி புகைப்படத்தை வைத்து தனியாக சிரிக்க, ஏர்ஹோஸ்டர் பேசியது காதில் கேளாது இருந்தான்.
அவன் தோளை தீண்டவும் இருவிழிகளை ஏறிட்டு பார்க்க, போனை அணைக்க கூறவும், பிளைட் மோட் போட்டுவிட்டு "சாரி" என்று கொஞ்சிய முகத்தோடு மகிழ்ச்சியாக பயணித்தான்.
முகமெங்கும் விகாசித்து அழகான இளைஞன் சிரிக்க, ஏர்ஹோஸ்டர் பெண்களும் ம்ருத்யுவை தான் வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவனோ தன் மகிழ்ச்சியை குறைத்து கொண்டு தன் வெட்கத்தையும் ஆசையையும் ஸ்ரீநிதியிடம் காட்டவே துடித்தான்.
ம்ருத்யுவை அழைத்து வர ஏர்ப்போட்டில் காத்திருந்தாள் ஸ்ரீநிதி.
தந்தை யுகேந்திரன் தாய் ஷண்மதி இருவரும் ம்ருத்யுவை அழைத்து வர தன்னையே அனுப்ப, முதலில் மறுத்தவள் பின்னர் தாய் ஷண்மதியோ 'என்ன ஸ்ரீநிதி குட்டி வெட்கமா? ம்ருத்யு உன் அத்தை பையன் தானே, இத்தனை நாள் எப்படி பழகினிங்களோ அப்படி தான் ஆப்டர் லைப்பும் வாழப்போறிங்க. நீயே போய் கூட்டிட்டு வா" என்று கார் கீயை தரவும், அன்னையை கடுகடுப்போடு கடந்தாள்.
இங்கு வந்ததும் அவனுக்காக காத்திருக்க, ம்ருத்யுவுக்கு எப்படியும் எதுவும் சொல்லிருக்க மாட்டாங்க. நானா கல்யாண விஷயத்தை பத்தி பேசி அவன் வாயாலையே என்னை மேரேஜ் பண்ண மாட்டேன்னு சொல்ல வச்சிடணும். டேடிக்கு அவனா தான் என்னை ரிஜெக்ட் பண்ணியதா காட்டிட்டு நான் எப்பவும் போல அப்பாவை காயப்படுத்தாத பொண்ணா வேடிக்கை பார்க்கணும். ம்ருத்யு என் சொல் கேட்பான். பிரச்சனையை ஸ்மூத்தா ஹாண்டில் செய்திடணும் என்று திட்டமிட்டாள்.
ம்ருத்யு டிராலி சூட்கேஸை தள்ளியபடி வரவும் "ஏய்... ம்ருத்யு." என்று சிறுவயதில் கத்துவது போல அழைத்து கூட்டத்தை சுத்தமாய் மதிக்காமல் அவனை தேடி ஓடி கட்டியணைத்து விடுவித்தாள்.
அவள் கட்டியணைத்ததும் மேனி சிலிர்க்க விதிர்த்தது என்னவோ ம்ருத்யு தான். பெண்ணவள் சட்டென பிரிந்து, "உன்னை கூட்டிட்டு வர மம்மி என்னை அனுப்பிட்டாங்க. பச்... எனக்கு ஒரு விஷயத்துல சாதகம் தான்." என்றவள் கார் கதவை திறக்க அதில் ஏறினார்கள். டிராபிக் ஆகாமல் இருக்க அவனுமே தன் உடலில் ஏற்படும் வேதியல் மாற்றத்திற்கும் மகிழ்ச்சியையும் கட்டுப்படுத்தி அவளோடு பயணம் செய்தான்.
லண்டன் பல்கலை கழகத்தில் கடைசி சில நாட்களுக்கு முன் அவன் தந்தை பைரவ் பொறுக்கமாட்டாது 'உனக்கு ஸ்ரீநிதியை பொண்ணு கேட்டோம். ஷண்மதியும் யுகேந்திரனும் மேரேஜிக்கு ஓகே சொல்லிட்டாங்க. அநேகமா நீ வந்ததும் உன்னிடம் சொல்லணும்னு ஸ்ரீநிதி காத்திருப்பா. என்னால சந்தோஷத்தை அடக்க முடியலை ம்ருத்யு.' என்று உளறி கொட்டியதால் ஆண்மகனின் எண்ணமெல்லாம் ஸ்ரீநிதி நிறைந்திருக்க காதலை கண்ணில் மறைத்து இயல்பாய் பார்வையிட நடித்தான்.
ஸ்ரீநிதி மிகயியல்பாய் இருந்தாள். அவளுக்கு அவசரம் பதட்டம் மட்டும் இருந்தது.
காரை சற்று தூரம் ஓட்டியவள் சிக்னலை எல்லாம் தாண்டி, ஓரமாய் நிறுத்தினாள்.
இவளும் காதலித்து இருப்பாளோ? தன்னிடம் காதலை பகிர தனிமையான இடமாக நிறுத்தியிருப்பாளோ என்று தான் ம்ருத்யுஜெயன் மனம் எண்ணியது. ஏனென்றால் அவள் ஒதுங்கிய தெருவில் ஆள்நடமாட்டம் இல்லை. வெகுவாக வெறிச்சோடியிருந்தது.
முகத்தை தன்னிரு கைகளால் மூடி ஆசுவசப்படுத்தி பேசுவதற்காக தொண்டை செருமினாள் ஸ்ரீநிதி.
அவளின் ஒவ்வொரு அசைவையும் அவள் காணாத நேரம் நோட்டமிட்டவன், அவள் விலோசனங்கள் அவன் மீது படவும், எதுவும் அறியாதவன் போல "இங்க எதுக்கு நிறுத்தியிருக்க?" என்று கேட்டான்.
"சொல்லறேன் பட் நீ என்னை தப்பா எடுத்துக்க கூடாது." என்றவள் கைகள் பிசைந்து சிகையை ஒதுக்கியது. ம்ருத்யுவின் தலையாட்டலில் தொடர்ந்தாள் ஸ்ரீநிதி.
"உனக்கும் எனக்கும் வீட்ல வர்ற சண்டே எங்கேஜ்மெண்ட் பேசியிருக்காங்க" என்று மெதுவாய் சுரத்தையின்றி கூறினாள்.
ம்ருத்யு மட்டும் தனியாக இருந்தால் 'யாகூ..' என்று கத்தியிருப்பான். ஸ்ரீநிதி தேன் குரலில் தங்கள் நிச்சயத்தை கூறுகின்றாளே?!
ஆனால் நாகரீகம் என்ற கடிவாளத்தை கொண்டவனாக வளர்ந்திட மௌவுனமானான். ஸ்ரீநிதியிடம் இன்னமும் அதே அமைதியின் சாந்தசொரூபணாக, முழுதாய் அவள் வாயால் அந்த காதல் என்ற வார்த்தை வெளிவரட்டும் என்று நினைத்தான்.
சர்வ ஜாக்கிரதையாக "அப்படியா?" என்று அறியாதது போலவே வார்த்தை உதிர்த்து அவளை ஏறிட்டான்.
"எனக்கு இந்த எங்கேஜ்மெண்ட் வேண்டாம் ம்ருத்யு. உன்னை கல்யாணம் பண்ண முடியாது. தயவு செய்து நீயே அப்பா அம்மாவிடம் நோ சொல்லிடு" என்று கவலையாய் அவன் கையை பிடித்து கெஞ்சினாள்.
கையை பிடித்து காதல் உரைப்பாளென ஆசைக் கொண்டவனுக்கு அவள் மடமடவென உதிர்த்தவையை கேட்க பேரிடையாக தோன்றியது.
"ஏ... பிராங் பண்ணாத." என்று அதிர்ச்சியை காட்டாமல் சிரித்தான்.
"நோ நோ... சீரியஸ்லி... எனக்கு உன்னை கல்யாணம் செய்துக்க இஷ்டமில்லை." என்று திரும்ப கூறினாள்.
அவளின் உடல்மொழி, பேச்சு, விழிகள் அனைத்தும் அவள் உண்மை உரைப்பதை கூற, ம்ருத்யுவோ ஆடிப்போனான்.
அதனை வெளிகாட்டாமல் "ஏன் இஷ்டமில்லை?" என்று எதிர் கேள்வி கேட்டான்.
"இஷ்டமில்லைனு சொல்லறேன் புரிஞ்சுக்கோ ம்ருத்யு.
டேட் கேட்டா சாரி மாமா அவளை பிரெண்ட்லியா தான் பார்த்தேன் சமாளிச்சிடு. மேரேஜை கேன்சல் பண்ணிடு." என்று மொழிந்தாள்.
"நீ பிரெண்ட்லியா பழகினியா?" என்றதும் "யா" என்று பட்டென மொழிந்தாள்.
"சரி பிரெண்டா பழகியவங்க மேரேஜ் பண்ணி பார்த்திருக்கேன். சோ மாமாவிடம் நோ சொல்லறதுக்கு பதிலா மேரேஜ் பண்ணி வாழலாமே?" என்று வருத்தத்தை மறைத்து தன் நிலையை தவிர்த்து திருமணம் செய்யவே கேட்டான்.
"ம்ருத்யு எனக்கு பிடிக்கலை. நான் சொல்லறதை கேட்க மாட்டியா?" என்று எரிச்சலாய் ஆரம்பித்தாள். ஸ்ரீநிதியை பொறுத்தவரை ம்ருத்யுவிடம் முதல் முறையிலேயே 'சரி, ஓகே, ம்ம்' என்ற சம்மத வார்த்தைகள் தான் கேட்டிருக்கின்றாள். முடியாது ஏன் எதற்கு என்று எதிர் கேள்விகளை முதல் முறை அவனிடமிருந்து வரவும் எரிச்சல் அதிகமானது.
"இங்க பாரு ஸ்ரீநிதி ஏன் எதுக்குனு கேட்காம தலையாட்ட இது மத்தவிஷயம் மாதிரி கிடையாது.
நீ சொல்லறேன்னு தலையாட்ட நான் ரெடி. ஆனா யுகிமாமா ஷணுஅத்தை ஏன் எதுக்குடானு என்னை நிற்க வச்சி கேட்பாங்க. அதுக்கு இந்த மாதிரி பிடிக்கலைனு ஒரே வார்த்தையிலயோ, இல்லை பிரெண்டா பழகியதால மனைவியா ஏற்க முடியலைனு சொல்ல முடியாது.
அதோட எங்கப்பா அம்மாவிடமும் நான் விளக்கம் சொல்லணும். மேரேஜ் கேன்சல் பண்ணணும்னா ப்ராப்பரா ஒரு வேலீட் ரீஸன் வேண்டும். நீ அத்தை மாமாவை தாண்டி என்னை அவாய்ட் பண்ணணும்னா என்ன காரணம்? விளையாடாம ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு நான் அதுக்கு ஏற்றது போல பதில் தயாரிக்கறேன்." என்று விளக்கவும் ஸ்ரீநிதிக்கு ம்ருத்யு கூறியது நியாயமாக தோன்றியது.
உண்மை தான் இதே போல மேரேஜ் பிடிக்கலை என்றால் ஷணுஅரக்கி விடமாட்டாள். தன்னை குடைந்து எடுத்திடுவாள். அப்பாவும் வருத்தப்படுவார் என்பதால் ஸ்ரீநிதி உண்மை காரணத்தை உரைத்திடும் முடிவில் ம்ருத்யு பக்கம் திரும்பினாள்.
"ம்ருத்யு ஆக்சுவலி நான் இதை முன்னவே சொல்லிருக்கணும். நீ திட்டுவனு அவாய்ட் பண்ணிட்டேன். அதோட கொஞ்சம் தயக்கம் இருந்தது.
நான் ஒருத்தனை லவ் பண்ணறேன் ம்ருத்யு. அப்படியிருக்க உன்னை எப்படி மேரேஜ் பண்ணறது? நானும் டூ ஆர் த்ரி டைம்ஸ் டேடி, மம்மியிடம் சொல்ல நினைச்சேன். மம்மி நிச்சயம் ஓகே சொல்லமாட்டாங்க. பிகாஸ் அவங்க தொழில் முறையில ஜீவியோட அப்பா தான் மோதறது.
தொழில்முறை போட்டியை வச்சி ஜீவி என்னை லவ் பண்ணறதா சொல்வாங்களே தவிர எங்க ட்ரூ லவ்வை புரிஞ்சுக்க மாட்டாங்க. கொஞ்ச நாள்ல ஜீவியிடம் அவங்க அப்பா பிஸினஸ் கைக்கு வந்துடும். பிறகு அம்மாவிடம் சாரி கேட்டு என்னை விரும்பறதா அவனே சொல்லறதா டைம் கேட்டுயிருக்கான். அதுக்கு முன்ன ஜீவியை விரும்பறதை அம்மாவிடம் சொன்னா ஷணுமா காதுலயே வாங்க மாட்டா.
டேடி இந்த விஷயத்துல ஷணுக்கு தான் ஆதரவு தருவார். சோ ப்ளீஸ் நீ தான் எனக்கு உதவணும்" என்று விவரித்தாள்.
அவள் கூறியதை கேட்டவனுக்கு இதயமே சுருக்கென்று தைத்தது. வருத்தம் அழுகை கலக்கம் எல்லாம் மறைக்க பாடுபட்டவன் காரிலிருந்து சப்டென கீழே இறங்கிவிட்டான்.
எங்கே காரிலிருந்தால் அவன் விழிகளில் இருந்து அடைப்பெடுத்த கண்ணீர் அருவியாக பொழிந்திடுமோயென்ற பயம்.
தன் காதல் குட்டு வெளிப்பட்டு ஸ்ரீநிதி 'இத்தனை நாள் காதலோடு பழகினாயா?' என்பாளோயென கண்ணீரை அடக்க படாதபாடுபட்டான்.
"ம்ருத்யு ம்ருத்யு" என்று ஸ்ரீநிதி காரிலிருந்து இறங்கி ம்ருத்யு முன் வரவும் அவசரமாய் கண்ணீரை கைக்குட்டையால் துடைத்தான்.
கீழே குனிந்து வாய் விட்டு சிரித்து "ஏ லவ் பண்ணறியா? பெயர் என்ன சொன்ன? ஜீவியா? ஓ மைகாட். ஸ்ரீநிதி லவ்ஸ் ஜீவி." என்று இடைவிடாமல் நகைத்தான்.
ஸ்ரீநிதியோ "டோண்ட் ஹர்ட் மீ. நான் சீரியஸா பேசறேன். காமெடியா எடுத்துக்காத. மேரேஜ் டிராப் பண்ண என்ன பண்ணறது?" என்று கேட்டாள்.
"வேலீட் ரீஸன். பட் இதை அத்தையிடம் சொன்னா உடனடியா நிச்சயத்துக்கு பதில் எனக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணிவச்சாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை." என்றதும் ஸ்ரீநிதி உடைந்து போனவளாக காரில் சாய்ந்தாள்.
ம்ருத்யுவோ முகம் வாடிய ஸ்ரீநிதியை கண்டு அருகே வந்தவன், "ஏய் ஸ்ரீ என்னிடம் சொல்லிட்ட தானே? விடு எப்படியாவது ஸ்டாப் பண்ணிடலாம். முகம் தூக்கி சோகமா மாறாத, எனக்கு பார்க்க கஷ்டமாயிருக்கு" என்று கன்னம் ஏந்தி உரைத்தவனிடம், "நம்ம மேரேஜை நிறுத்திடுவல?" என்று கேட்டதும், "கண்டிப்பா" என்று கூற அவனை கட்டியணைத்து கொண்டு "தேங்க்ஸ் ம்ருத்யு" என்று உளறினாள்.
ம்ருத்யுவோ அவள் தலைக்கு மேல் தாடையை பதித்து இமை மூட, சூடான கண்ணீர் கன்னத்தை நிரைக்க, வேகமாய் மறைத்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
ம்ருத்யு இனி என்ன செய்ய போகிறான்? உண்மையை கூரபோகிறானா அ தன்மேலேய பழி போட்டுக்கபோரானா?????
ReplyDelete