நீ என் முதல் காதல்-16

 அத்தியாயம்-16

ஒரு வாரம் ஸ்ரீநிதி ம்ருத்யுவிடம் பேசவில்லை. அவனுமே குறைத்து கொண்டான்.

எப்படியும் தனக்கானவளாக முடிவெடுத்தப்பின் ஜீவியை பற்றியும் அவன் தந்தை பற்றியும் கொஞ்சம் அறிந்து வைத்துக்கொள்ள நினைத்தான். இந்த ஒரு வாரத்தில் அதற்கான வேலையில் தீவிரமாக இருந்த கணம் ஜீவி உண்மையில் ஸ்ரீநிதியை விரும்புவதை அறிந்து கொண்டான்.

அதனால் தலைவலி தான் உண்டானது. ஏனெனில் ஜீவி தந்தை இருபது நாள் கழித்து தன் கம்பெனியில் ஒன்றை அவன் பெயருக்கு மாற்றுவதாக அதற்கான ஆயத்தத்தில் இருப்பதை அறிந்தான்.

அவனுக்கான காதல் கைக்கூடும் சாத்தியம் அவனுக்கு பாதகமாக தான் அமைவது  புரிந்தது.

ஆனால் குறுக்கு வழியில் இருபது நாளில் கம்பெனி எழுதப்பெற்று பத்திரம் கொடுக்க விடாமல், ஜீவி தந்தையின் வக்கீலிடம் பேரம் நடத்தினான்.

அப்படியொன்றும் பத்திரப்பதிவே செய்யாதீர்களென்று கூறப்போவதில்லையே. திருமண நாளுக்கு முன் கைக்கு சேரக்கூடாதென்ற ஒப்பந்தமாய் பணத்தை வழங்கினான்.

பணமெல்லாம் பைரவிடம் கேட்டிருந்தான். பைரவ் புதுபிசினஸிற்கு கேட்டதாக நினைத்து வழங்கினார்.

பத்தாவது நாள் "ஐ அம் சாரி நான் உன்னை பார்க்கணும்" என்று ஸ்ரீ அனுப்பவும், "என் வீட்டு கதவு திறந்தேயிருக்கு. நீ என் வீட்டுக்கே வந்து பேசலாம்." என்று அவளை போலவே பதில் சாட் அனுப்பியிருந்தான்.

"நான் எப்படி வர்றது?" என்று கடுப்பானாள்.
பெரும்பாலும் ம்ருத்யும் அவன் பெற்றோருமே இங்கே வந்துவிடுவார்கள். அதனால் ஷண்மதியோ ரிதன்யாவோ ம்ருத்யு வீட்டிற்கு செல்லும் சூழல் வந்ததில்லை.

"எங்க மாம் டேட் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. சோ நீ இங்கயே வரலாம். நான் எங்கயும் வரமுடியாது. எனக்கு என் பிசினஸ் ஆரம்பிக்கற வேலையே நிறைய இருக்கு.

நான் என்ன அந்த ஜீவி மாதிரி அப்பன் கம்பெனி வேண்டும்னு காத்திட்டு இருக்கறவனா? எனக்கா ஒரு பெயரை உருவாக்கறவன்." என்று சந்தடி சாக்கில் ஜீவியை சருகல் பாதைக்குள் தள்ளினான். கூடவே 'உன் ஜீவி' என்ற அடைமொழி 'அந்த ஜீவி'யாக மாறியது.

"நேர்ல பேசிக்கறேன்" என்று அனுப்பிவிட்டு நகத்தை பற்களால் கடித்தாள்.

ம்ருத்யு மீது அளவுக்கதிகமான கோபம் எழுந்தது. அதே நேரம் ஜீவி இப்படி காதலிக்கின்றான் என்று கூறி தன்னை ம்ருத்யுவிடமிருந்து பிரித்துவிட்டதாகவும் ஜீவி மீதும் கோபமானது.

ம்ருத்யு வீட்டிற்கு வந்ததும் பைரவ் இல்லை. தாரிகா மட்டுமிருக்க, வரப்போகும் மருமகளை வரவேற்று சாப்பிட வைத்தார்.

ஸ்ரீநிதிக்கு ஹால் அசௌவுகரியம் கொடுக்க, "நீ அவன் ரூம்ல இருடா." என்று சலுகை கொடுத்தார்.

ஸ்ரீநிதி நல்லது என்று ம்ருத்யு அறைக்கு வந்தாள்.

சுவரெல்லாம் ம்ருத்யு நடுவேயிருக்க, ஸ்ரீநிதி ரிதன்யா என்று மூவரோடு இருக்கும் புகைப்படங்கள். முன்பு அவன் தங்கி படிக்கும் அறையெல்லாம் இப்படியிருக்கும் காலம் எதுவும் தோன்றவில்லை. இப்பொழுது ஜீவியால் கிறுக்குத்தனமாய் தனக்காக வைத்திருப்பானோ என்ற குழப்பம்.

ஆனால் எல்லாவற்றிலும் ரிதன்யாவும் இருக்க, தலையை உலுக்கிவிட்டு, அவன் மெத்தையில் நீட்டி நிமிர்ந்து போனில் முழ்கினாள்.

ம்ருத்யு வரும் போதே தாரிகாவால் ஸ்ரீநிதி அவனது அறையிலிருப்பதை அறிந்தான்.

ஆனாலும் தெரியாதது போலவே அறைக்குள் வந்து தாழிட்டு மடமடவென சட்டை பட்டனை நீக்கினான்.

அங்கிருந்து குட்டிபிசாசு ஒருவன் வந்தது கூட அறியாமல் போனில் மூழ்கியிருக்க, பெல்டில் கை வைத்தவன் சங்கடமா நின்றான்.

அதன் பின்னரே அவன் வந்ததை கூட உணராதவளை எண்ணி சத்தமில்லாது தலையிலடித்து கொண்டான்.

மெதுவாக ஆங்கிலப்பாடலின் பாப் மியூசிக்கை விசில் மூலமாக சத்தமிடவும், திரும்பியவள் முகம் பேயறைந்தது போல மாறியது.

பேண்ட் மட்டும் அணிந்து சட்டையின்றி படிக்கட்டு தேகத்தோடு நின்றவனை கண்டு நாணினாள்.

அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவனாய் பெல்டில் கைவைத்து எடுக்க, "ம்ருத்யு நான் இங்க இருக்கேன்." என்று அலறினாள்.

உதட்டோரம் சிறு சிரிப்பை உதிர்த்து "ஏய் ஸ்ரீ. இங்க என்ன பண்ணற?" என்று அவள் அருகே பவ்யமாய் வந்தான்.

ஸ்ரீநிதி இதயம் தடதடவென ஓட, அவளருகே வந்து மெத்தையில் அவனது சட்டையை எடுத்து தேகத்தை போர்த்தி பட்டனை மாட்ட ஆரம்பித்தான். "அது அது பேச வர்றேன்னு சொன்னேனே" என்று தடுமாறினாள்.

முதல் மூன்று பட்டனை மட்டும் மாட்டாமல் "இங்க வந்துட்டேன்னு மெஸேஜ் பண்ண வேண்டியது தானே. ரூமுக்குள்ள எல்லாம் ஏன் வர்ற? நல்ல வேளை ஷர்ட் மட்டும் கழட்டிருந்தேன்" என்று குறும்பு பேச்சை மிக தீவிரமாக பேசினான்.

ஸ்ரீநிதியோ "தப்பு தான்." என்றவள் அவன் நெஞ்சில் வழித்தெடுத்த ரோமத்தால் திண்ம நெஞ்சு தெரியவும், "முதல்ல பட்டன்ஸ் போடு." என்று முகம் திரும்பினாள்.

'ம்கூம் மேடத்துக்கு டிஸ்டர்ப் ஆகுதா? இவ மட்டும் ஸ்லீவ் டாப் ஷார்ட் ஸ்கர்ட் போட்டு வந்து மனசை அலைபாய விடுவா. டேய் ம்ருத்யு அப்பவே வெளியே போடினு ஒழுங்கா துணி போடு. என் கண்ணு மனசு அலைபாயுதுனு சொல்லிருக்கணும்.
லவ்வையும் சொல்லாம, மனசுல வர்ற எண்ணத்தையும் தவிர்த்து ரொம்ப நல்லவனா இருந்தது தப்புடா' என்று கேலி பேசியது. அதனை அதட்டியபடி சட்டை பொத்தனை மாட்டிவிட்டு, "சொல்லு" என்று கேட்டான்.

"ஜீவியோட அப்பா அவன் பெயர்ல கம்பெனி மாத்தற பிராசஸ்ல இருக்கார். ம்ருத்யு எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து பத்திரத்தை ரெடி பண்ண போராடிட்டு இருக்கான். சோ ஜீவி சைட்ல அவன் முயற்சி பண்ணறான்.
அதை சொல்ல வந்தேன்." என்று கூறியதும் நெற்றி நீவியபடி, 'அதான் எனக்கு தெரியுமே' என்றவன் "குட்... தென்?" என்று உரைத்து விட்டு அவளை ஏறிட்டான்.

"நீ மாறிட்ட ம்ருத்யு." என்று கலக்கமாய் கூறினாள்.

"தேங்க்ஸ்.. மாத்திட்ட ஸ்ரீநிதி. நான் உன்னை லவ் பண்ணறேன்னு அவன் சொன்னதை கேட்டுட்டு என்னை வந்து பார்த்து என் கண்ணுக்கு நேர கேட்டு, என்னை மாத்திட்ட" என்று மெத்தையில் அமர்ந்தான்.

"ஐ அம் சாரி டா. என்னோட மிஸ்டேக் தான்." என்றதும் "இட்ஸ் ஓகே. நல்லதுக்கு காலமில்லைனு சும்மாவா சொன்னாங்க?" என்று எழுவும், தன்னால் அதிகமாகவே காயப்பட்டதை அறிந்து தன் பால்ய நண்பனை கட்டிக்கொண்டாள்.

முன்னழகு மோதி அவன் தேகத்தை கட்டியணைத்தவளின் செய்கையில் முன்பானால் பதறி 'முதல்ல நகரு' என்று நெளிந்திருப்பான்.

இன்றோ வாலி பட வில்லன் அஜித்தாக அவள் அணைப்பை இரசித்து ஏற்றான்.

'சரி மன்னிச்சிட்டேன்' என்ற வார்த்தையை ஸ்ரீநிதி எதிர்பார்க்க, அவ்வார்த்தை உதிர்த்தால் தன் தேகத்தை தழுவிய அவள் அணைப்பு விடுபட்டிடுமென்று கள்வனாக கல்மனதாக காட்டிக் கொண்டிருந்தான்.

"ம்ருத்யு ம்ருத்யு சாரி கேட்டும் ஸ்டோன் மாதிரி ரியாக்ட் பண்ணற? இங்க பாருடா" என்று தன் கண்களை பார்க்க வைக்க, ஸ்ரீநிதியின் கலங்கிய கண்களை கண்டதும், அவனாகவே விடுபட்டுக் கொண்டான்.

"கிளம்பு" என்றான்.

"முடியாது" என்று அவன் முன்னே முன்னே வந்தாள்.

"கிளம்புனு சொல்லிட்டேன் அப்படின்னா சாரி அக்சப்ட். போ நான் டிரஸ் சேஞ்ச் பண்ணணும்" என்றதும் அங்கேயே நின்றாள்.
"நான் நம்ப மாட்டேன். நீ முன்ன மாதிரி என்னிடம் பேசறேன்னு சொல்லு. அப்பறம் போறேன்." என்று அடம்பிடித்தாள்.

"ஏய் ஸ்ரீ கிளம்பு டி. நான் அப்பறம் நான் பாட்டுக்கு டிரஸ் மாத்திடுவேன்" என்றதும் அழுத்தமாய் நின்றவள் அவன் சட்டை கழட்டவும் கீழே தான் இருப்பேன். சீக்கிரம் வா" என்று சென்றாள்.
அவன் பாட்டுக்கு சட்டை கழட்டி பேண்ட் பெல்டை நீக்கிவிட்டு திரும்ப, "இருடா கிளம்பிடறேன்" என்று ஓடியதும் கதவை தாழிட்டு சிரித்தான்.

'இனி ஓட விடறது தான் குட்டி பிசாசே என் வேலை.' என்றவனுக்கு மனமெங்கும் மத்தாப்பூ பூத்தது.

உதடுகள் பாப் மியூசிக்கை ஹம் செய்தபடி குளித்து உடைமாற்றி கீழே வந்தான்.

"இல்லைத்தை பசிக்கலை. எனக்கு வேண்டாம்" என்று மறுத்தவளிடம் "வோட்கா வேண்டுமா ஸ்ரீ" என்று கிசுகிசுப்பாய் கேட்க, "ம்ருத்யு" என்று முறைக்க, "பையன் எதுவோ வேண்டுமான்னு கேட்கறான். அது வேண்டுமென்றாலும் சொல்லு டா. வீட்ல இல்லைனா கூட வேலையாட்களை வச்சி வாங்கிட்டு வந்துடலாம்" என்று மருமகளை ராஜபோகமாக கவனிக்கும் விதமாக பேசினார்.

"ம்ம் சொல்லு ஸ்ரீ. அம்மாவிடம் வேண்டுமின்னா சொல்லு" என்று சேட்டை செய்பவனாய் கேட்டான்.

"அய்யோ அத்தை எனக்கு எதுவும் வேண்டாம். இவன் ரூம்ல இருந்த ப்ரிட்ஜ்ல ஜூஸ் குடிச்சிட்டேன்." என்று நழுவினாள்.

"சரி ம்ருத்யு கிளம்பறேன். அப்பறம் பார்க்கலாம் அத்தை." என்று புறப்பட, தாரிகா மகன் பின்னாலே போகவும் "ம்ருத்யு டச்லயே இருடா. நீ பேசறது எனக்கு யானை பலமா இருக்கும். இந்த டென் டேஸ் என்னவோ என் காதல் என்னை விட்டு போகற மாதிரி இருந்தது. உன்னை பார்த்து பேசியதும் தான் ஜீவியோட சேர்வதாக மனசு சந்தோஷப்பட்டுக்குது.'' என்று கூறவும், 'டச்லயே தானே இருப்போம்.' என்றவன் அவளை கட்டியணைத்து "அம்மா நம்மளையே பார்க்கறாங்க. சோ இது நாடகத்தோட ஒரு பார்ட்" என்று அவள் முதுகோடு அணைத்து விடுவித்தான்.

அவளோ தாரிகாவை பார்த்து "ம்கூம் இதையும் ஜீவி பார்த்தான். லவ்வர்ஸ் என்று முடிவே கட்டிடுவான்." என்று நடக்க ஆரம்பித்தவளின் கையை பிடித்து இழுத்து, "மாடில நீ கட்டிப்பிடிச்ச அப்பவும் அந்த ஜீவி உன்னை தான் டார்க்கட் பண்ணுவானா?" என்று ஜம்பமாய் பேசவும், "ஆளை விடுடா சாமி. இன்னிக்கு இந்த கோட்டாவுக்கே தலை கிறுகிறுன்னுது." என்று ஓடியவளை கண்டு புன்னகை மலர்ந்தது.
இதற்கு முன் சங்கடமாய் தன் மனம் வருந்தும். இன்றோ மனசெல்லாம் ஒரு வித சுகந்த மனம் வீசியது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்



Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...