நீ என் முதல் காதல்-1

💕நீ என் முதல் காதல் 💕

அத்தியாயம்-1

'சாகும் வரை உண்ணாவிரதம்', 'முதலாளி வர்க்கம் ஒழிக', தடை செய் தடை செய் விலங்குகளை வதைப்பதை தடை செய்' இத்யாதியான கோஷங்கள் மெத்தையில் கிடந்த அலைப்பேசியில் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது.

"மேடம் சத்தத்தை கேட்டீங்க தானே. என்னால அங்கயிருந்து பேசமுடியலை. ஒரே கூட்டம், கோஷம். கண்ட்ரோல் பண்ண முடியலை மேடம்.

போலீஸ் வந்து தலையை பிச்சிட்டு இருக்காங்க.
கூட்டத்தை அப்புறப்படுத்தவும் முடியலை. அட்த சேம் டைம் நம்ம சொல்ல வர்றதை காது கொடுத்து கூட கேட்க மாட்டேங்கறாங்க." என்று ஷண்மதியின் பி.ஏ.ஜான்சி தான் தனியாக வந்து ஒரு காதை மூடி பேச வந்ததை கூறினாள்.

ஷண்மதி கையில் வைர பிரேஸ்லெட் அணிந்து கொண்டிருந்தவளோ, "டைம் செவன் ஓ கிளாக் ஆகுது ஜான்சி. வித் இன் டூ ஹவர்ஸ்ல அங்கிருந்து எல்லாரையும் ஓடவிடறேன்.

டோண்ட் வொர்ரி.

நீ காபி டீ குடிச்சிட்டு போனியா இல்லையா? குடிக்கலைனா ஆபிஸ்ல போய் முதல் வேலையா காபி மேக்கர்ல சூடா காபி கலந்து குடி." என்று நிதானமாக உரைத்தாள் ஷண்மதி. தோல்பதனிடும் தொழிற்சாலையின் உரிமையாளர். தாய் தந்தையர் இறந்துவிட்டப்பின் முழுப்பொறுப்பும் ஷண்மதி தான்.

திருமணம் ஆனப்பின் கணவன் யுகேந்திரன், கணவரின் தாயார் ஸ்ரீவினிதா(கைம்மை), ஸ்ரீநிதியின் சின்ன அத்தை(அப்பாவின் தங்கை) திருமணமாகமலேயே காலம் கடத்திய லலிதா அத்தை, தன்னிரு மகள்கள்(ஸ்ரீநிதி-ரிதன்யா) என்று ஒரு அழகான கூட்டில் ராணி இவள்.

பெண்ணின் வயதும், ஆணின் சம்பளமும் யாரும் அறிந்திடாமல் இருப்பது சாலச்சிறந்தது. அந்த வகையில் ஷண்மதி வயது யாரேனும் கூறினால் வாயை பிளந்து ஆச்சரியப்படலாம். மற்றபடி இன்னமும் 35+ என்று சொல்லிக்கொள்ளும் வகையில் சிக்கென இருந்தார்.

ஷண்மதினின் தோரணையும், மிடுக்கான பேச்சையும் மெத்தையில் படுத்திருந்து, பின்னந்தலைக்கு கையை மடித்து, காலாட்டி யுகேந்திரன் மனைவியை ரசித்து கொண்டிருந்தார். அவருமே ஜாடிக்கு ஏத்த மூடி என்பதற்கிணங்க ஷண்மதி கணவராக இளைமையாக காட்சியளித்தார்.

"என்ன லுக்கு?" என்று கணீர் குரலில் அதட்டலாய் கேட்டாள் ஷண்மதி. நாயகியின் தாயாருக்கு எப்பொழுதும் அதட்டும் குரல். இன்றும் காதல் கணவரை அப்படியே அதட்டலோடு அன்பு கலந்து கேட்டார்.

கணவர் யுகேந்திரனோ "இல்லை நமக்கு மேரேஜாகி எத்தனை வருஷம் ஆகுது. உன்னை கல்யாணம் செய்தப்பிறகு நீ பஸ்ட் டைம் இதே போல ஆபிஸ் கிளம்பின, அதே டேஸ்ல பார்த்த பிட்னஸ் அண்ட் ஸ்டயில்ல அப்படியே இருக்க" என்று ஆச்சரியமாய் மனைவியின் அழகை கண்ணுற்று புகழ்ந்தார்.

இவர்கள் தான் நாயகன் நாயகி என்று எண்ணிடக்கூடாது. இவர்களுக்கு இருமகள்கள் உண்டு. முதலாமானவள் இக்கதையின் நாயகி ஸ்ரீநிதி, இரண்டாவது மகள் ரிதன்யா.

வழக்கமாய் வீட்டிலிருக்கும் அன்னையின் செயல்களாக, கல்லூரிக்கோ அலுவலகத்திற்கோ கிளம்பும் மகளிற்காக, வேர்த்து வழிய அடுப்படியில் டிபனை கலந்து வைத்து, காபி கலந்து பவ்யமாக கணவனுக்கு நீட்டி மகளை திட்டியவாறு காலை பொழுதை புலர வைப்பார்கள்.

இங்கே நாயகியின் தாய் ஷண்மதி சற்றே தனிதன்மை பெற்றவர். தன் தோல் பதனிடும் தொழிற்சாலையை சீரும் சிறப்புமாக நேர்த்தியாக வழிநடத்துவது நாயகியின் தாய் ஷண்மதியே.

கணவர் யுகேந்திரனும் அவர் தந்தை இறந்தப்பின், தனது சீ-புட் ஏற்றுமதி செய்தாலும், வழிவழியாக ஷண்மதியின் தந்தை தோல் பதனிடும் தொழிலை ஷண்மதி கைவிடுவதில்லை.

பெரிதாக செல்வம் சேர்க்கும் ஆசையல்ல, எடுத்த காரியத்தில் ஜெயத்தோடு காலம் காலமாய் வழிநடத்தி பெயரை தக்கவைத்து வழிவழியாய் தங்கள் மூதாதையர் முதல் இதோ நாயகி ஸ்ரீநிதி-ரிதன்யா வரை பெயரை பதிய வைக்கும் முயற்சி.

ஸ்ரீநிதி மற்றும் ரிதன்யா இருவரில், ஸ்ரீநிதி முதுகலை முடித்து தற்போது ஆனந்தத்தோடு தோழிகளின் திருமணம், விழாக்கள் என்று பொழுதை கழிக்கின்றாள். விரைவில் மேற்கொண்டு படிப்பை தொடர ஆசையா? அல்லது அடுத்த கட்டம் என்ன என்று கொஞ்சம் முடிவெடுக்க நேரம் கடத்துகின்றாள்.

தாய் ஷண்மதி தோல்பதனிடும் தொழிற்சாலையை ஏற்று நடத்த, தந்தை சீ-புட் பேக்டரியை வழிநடத்துகின்றார்கள்.

ரிதன்யா ஸ்ரீநிதியோடு எட்டு வயது இடைவெளி வித்தியாசம் உண்டு. தற்போது தான் ரிதன்யா பிளஸ்டூ படித்துக் கொண்டிருக்கின்றாள்.

ஷண்மதியோ "போதும் போதும் சைட் அடிச்சது. உங்க மக எழுந்தாளா இல்லையா? ஸ்ரீநிதிக்கு இன்னமும் குழந்தைனு நினைப்பு. எப்பவும் போல சுப்ரபாதம் பாடி போய் எழுப்புற வழியை பாருங்க.

உங்க சின்ன வாலு ரிதன்யா பிளஸ் டூ வந்தாச்சு. இன்னமும் லேஸியா இருக்க போற" என்று சலித்தாள்.

"நீ கிண்டல் பண்ணினாலும் பண்ணாட்டினாலும் நான் என் மகள்களை எழுப்ப போறேன்." என்று யுகேந்திரன் பொறுப்பான தந்தையாக எழுந்து, சில்மிஷ கணவனாய் ஷண்மதி இடையில் கிள்ளி விட்டு சென்றான்.

"யுகி." என்ற செல்ல சிணுங்கலோடு ஷண்மதி துள்ளியவள், இது வழக்கம் தானே என்று நேரத்தை கவனித்தாள்.

அவள் சேகரித்து வைத்த வீடியோ புட்டேஜ் எடுத்து கொண்டாள். போதாதற்கு ஒரு டாக்குமெண்டின் நகலை எடுத்தாள்.

"ஆன் தி வே" என்று ஜான்சிக்கு அனுப்பி விட்டு வீட்டின் லிப்டில் தரைத்தளத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

அங்கே சின்ன மகள் ரிதன்யா "குட் மார்னிங் மாம்." என்று மலர்ந்த புன்னகையோடு வரவேற்றாள்.

"ஸ்ரீநிதி இன்னும் எந்திரிக்கலையா?" என்று அவளது அறையை நோட்டமிட்டபடி, கேட்டதும் "டேடி இப்ப தான் கொஞ்சிட்டு இருக்கார். செல்லம், வெல்லம், லட்டுமானு இருக்கற ஸ்வீட் பெயரை வச்சி கொஞ்சி முடிச்சிட்டு தான், அவ கண் திறப்பா. அதுவரை கண்விழிச்சாலும் தூங்கற மாதிரி நடிப்பா மாம்." என்று அக்காவை பற்றி அறிந்தவளாக உரைத்தாள்.

லலிதாவோ "ஏய் வாலு அவ வந்து கேட்டுட்டு உதைக்க போறா. பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு ஸ்கூல் போகற வழியை பாரு" என்று பேத்தியை அடக்கினார். லலிதா ஷண்மதியின் சின்ன அத்தை.

திருமணமாகமலேயே காலம் கடத்தி அண்ணன் மகள் ஷண்மதி கூடவே உறவாடுபவர். ஷண்மதியின் மாரல் சப்போர்ட், வெல்விஷர் இரண்டுமே லலிதா தான்.

ரிதன்யா உரைத்து முடித்து இரண்டு நொடிகள் கடந்தது.

ஷண்மதியின் மாமியார் ஸ்ரீவினிதா அதாவது யுகேந்திரனின் தாயார் "என்னம்மா இன்னும் போராட்டம் நடக்கா? பிரச்சனை சரியாகலையா?" என்று அலுவலகத்தை சார்ந்த கேள்விக்கேட்டு வருத்தமானார்.

"அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லைங்க அத்தை. நான் தான் பெரிசான பிறகு இதுக்கான தீர்வை உடைக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னிக்கு க்ளியர் பண்ணிடுவேன்." என்று உணவு மேஜையில் வந்தமர்ந்தாள்.

தந்தையின் தோளில் சாய்ந்து வந்த ஸ்ரீநிதியோ "பாருங்க டேடி... இந்த அம்மாவுக்கு பொறுப்பே இல்லை. என்னை பத்தி அக்கறையே இல்லை. எப்பபாரு வேலை வேலை." என்று குறை கூறியபடி அமர்ந்தாள்.

உணவு மேஜையில் பிரேக்பஸ்ட் நேரம் ஆரம்பித்தது.

காலையில் பல் மட்டும் விளக்கிவிட்டு யுகேந்திரன் மேலோட்டமாய் தலைவாரிவிட்டு 'க்ளவுச் க்ளிப்' அணிவித்து மகளை அழைத்து வந்திருந்தார்.

காதில், கழுத்தில், கையில், ஒரு அணிகலனும் இல்லை. வெறும் நெற்றி ஸ்டிக்கர் பொட்டு கூட கிடையாது. உதட்டுக்கு சாய பூச்சும் இல்லை.

ஆனாலும் காண்போரின் மனதில் 'அழகி' என்ற பிம்பத்தில் பதிந்து போவாள். அத்தகைய முகஅமைப்பு இயற்கையிலேயே உண்டு.

தாய் தந்தையர் வடிவம் தானே பிள்ளைகளுக்கு அமையும். குழந்தை போல சிறு சிறு விள்ளையை விழுங்கினாள்.

ஷண்மதியோ "இங்கபாரு... மேற்படிப்பு படிக்கப்போறியா? இல்லை. அப்பாவோட புட்பேக்டரி போறியா? இல்லை என்னோட தோல் பேக்டரிக்கு எடுத்து நடத்தறியா?." என்றதும் ஸ்ரீநிதி மௌவுனமானாள்.

இடது கை விரலின் நகப்பூச்சை ஆராய்ந்து "ஒன் வீக் டைம் கொடுங்க சொல்லறேன்." என்று சப்பாத்தியை ரோல் செய்து சாப்பிட்டாள்.

ஸ்ரீநிதி என்ன யோசிக்கின்றாளென்று அவளே அறிய முடியவில்லை. கம்பெனியை தாய் போல தந்தை போல வழிநடத்த, ஆசையாக இருந்தாலும், தற்போது அவளுக்கு இருக்கும் பெர்சனல் பிராப்ளம் 'நிதானமாக இரு' என்று எச்சரிக்கை விடுத்தது.

"சரி யோசித்து சொல்லு பை" என்று ஷண்மதி கிளம்பிவிட்டாள். யுகேந்திரனும் மகளை அரவணைத்து முத்தமிட்டு அவனது பேக்டரிக்கு சென்றார்.

ரிதன்யா அவளுமே பள்ளிக்கு  சென்றாள். இந்த ஒரு மாதம் பள்ளி திறந்து சுமூகமாக தான் செல்கின்றது. நாளாக நாளாக தான் படிப்பு சுமை அதிகரிக்கப்போகின்றது.

நாயகி ஸ்ரீநிதி தோழியின் திருமணத்திற்கு தயாராக சென்றாள்.

ஷண்மதி அலுவலகம் வந்து சேர, குழுமியிருந்த கோஷங்கள் லேசாய் குறைந்தது. ஜான்சி கணவர் சந்தோஷ் புரஜக்டரை எடுத்து வந்து கணினியில் பொறுத்தி ஆன் செய்யவும், கோஷமிட்ட குரல்கள் என்ன நடக்கின்றதென ஆராய்ந்தனர்.

அந்த கோஷத்தின் தலைவன் ஒருவன் திரையில் வந்தான்.
பின்வாசல் வழியாக சிசிடிவி புட்டேஜை அணைத்து விட்டு, தொழிற்சாலைக்குள் ஒரு வண்டியை கொண்டுவந்தான்.

அதிலிருந்த கழிவுகளை யாரும் அறியாவண்ணம் ஷண்மதியின் தொழிற்சாலையில் பணியிடத்தில் கலக்கினான்.

ஒன்றும் அறியாதவன் போல அடுத்த நாள் வந்து சகதொழிலாளர் சிலருக்கு கையில் காலில் அரிப்பு ஏற்பட, தோல்களில் சில வியாதி வந்தது போல உருமாறியது. இந்த கழிவுகள் தான் அனைத்திற்கும் காரணமென தலைவன் உரைத்து முடித்தான்.

அதனால் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று மூன்று நாட்களாக போராட்டம். ஏற்கனவே சிறுசிறு பிரச்சனைகள் அடிக்கடி முளைத்து விட, மொத்தமாய் இன்று மூடுவிழாவை அரங்கேற்ற வந்தாள் ஷண்மதி.

"எல்லாருக்கும் கண்ணு இருக்கா? வீடியோ பதிவை பார்த்திங்களா? இந்த ஸ்கின் மாற்றம் ஆகறதுக்கு என்னோட தொழிற்சாலை கழிவுகள் காரணமில்லை. உங்களை வழிநடத்தற தலைவன்.

போராட்டம் பண்ணியதால என் தொழிற்சாலையை மூடமாட்டேன். அதே சமயம் யாரையும் வேலைவிட்டு எடுக்க மாட்டேன். குள்ளநரிகளை மட்டும் கைது செய்ய போலீஸ் இருக்காங்க. மத்தவங்களுக்கு விருப்பமிருந்தா தொழிற்சாலைக்கு போய் மத்த வேலையை பாருங்க. இந்த பிராடு என்ன கெமிக்கல் கலந்தான் என்றும் அதை எப்படி களைவது என்றும் லேப்ல ரிசர்ச் பண்ணி சுத்தம் செய்து பழைய நிலைக்கு மாற்றுவாங்க. நம்பிக்கை இருந்தா மத்த பகுதிக்கு வேலைக்கு போங்க கழிவுல கலந்த கெமிக்கல் பக்கம் தடைசெய்து மொத்தமா என்னனு பார்ப்போம்." என்று உரைத்துவிட்டு போலீஸிடம் தலைவனை சுட்டிக்காட்டினாள்.

"மேடம் மேடம் தெரியாம பண்ணிட்டேன் மேடம். எனக்கு ஒருத்தங்க காசு கொடுத்து செய்ய சொன்னதை செய்தேன்." என்று புலம்ப அங்கே ஷண்மதி நிற்கவில்லை. ஷண்மதிக்கு ஈவு இரக்கம் என்பதெல்லாம் தெரியாத தவறு தப்பி செய்தவன்களுக்கு தான்.

இது தான் ஷண்மதி தான் ஒன்றை கூறிவிட்டால் அதில் பின் வாங்க மாட்டாள்.

இதே குணத்தோடு நாயகி ஸ்ரீநிதி தோழியின் திருமணத்தில் மாலை வந்திருந்தவளிடம் காட்டினாள்.

உடன் பயின்ற அனைவரும் திருமணத்திற்கு வந்திருக்க, வந்திருந்த தோழிகள் கூட்டத்தில் அனைவருமே மணமானவர்கள்.

பாதிக்கு கணவரை அழைத்து வந்திருக்க, அந்த பெரிய பார்ட்டி மாலில் தனித்து இருப்பதாய் தோன்றியது.

"என்ன சொல்லு கல்யாணம் எல்லாம் காலாகாலத்துக்கு பண்ணிடணும்." என்று ஸ்ரீநிதியை சாடி பேச்சு போனதும், மற்றவர்களும் அவளை பற்றியே கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

"ஒரு கட்டத்தில் ஸ்ரீநிதி கேரக்டருக்கு எவனும் காதலிக்க மாட்டான். கல்யாணம் பண்ணவும் மாட்டான்." என்று கூறி முடிக்க, அவள் தலையை பதம் பார்த்தது ஒரு சிறு கண்ணாடி குடுவை.

அடுத்த நொடி அவ்விடம் கலவரமாக, ஸ்ரீநிதியை கண்டு மற்றவர்கள் ஒதுங்க, தன் போனை கையில் இறுகப்பிடித்து விளக்கம் அளிக்காமல் விழாவை விட்டு வெளியேறி நடந்தாள்.

அங்கிருந்த பாவனாவோ "ஸ்ரீநிதியை யாரும் காதலிக்கலைனு உனக்கு தெரியுமா? அவளோட அத்தை பையன் ம்ருத்யுஜெயன் இவளை தான் லவ் பண்ணிட்டு இருக்கான். இது அவளுக்கே தெரியாது.

ம்ருத்யு வெளிநாட்ல படிக்கிறான். ஆனா ஒரு நாளைக்கு எத்தனை முறை இவளோட பேசறான். நீயோ நானோ ஸ்ரீநிதியிடம் 'யாரிடம் இவ்ளோ நேரம் பேசற. கால்ஸ் வெயிட்டிங்னு போகுது கேட்டப்ப எல்லாம் யார் பெயரை சொல்லிருக்கா. கொஞ்சம் யோசித்து பாருங்க. இந்த கேலி கிண்டல் எல்லாம் அவளிடம் திரும்ப வச்சிக்காதிங்க" என்று டிசு பேப்பரால் ஒழுகிய ரத்தத்துளிகளை துடைத்து விட எடுத்து கொடுத்து, "பை" என்று கிளம்பினாள்.

ஸ்ரீநிதி காரில் ஏறிவிட்டு "எவ்ளோ நேரம் பாவனா. விட்டுட்டு போயிருப்பேன் ஏறி தொலை. அப்படியே இங்க நடக்கறதை மறந்துடு. வீட்ல வந்து போட்டு கொடுக்காத." என்று வார்னிங் கொடுத்தே பாவனாவை காரில் கிளப்பி கொண்டு சென்றாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.









Comments

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1