பஞ்ச தந்திரம்-13
பஞ்ச தந்திரம்-13
சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.
எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.
ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.
சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.
நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.
ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.
சூர்யாவும் காஸ்மீர் போயிட்டார். போகும் போது ரொம்ப வேதனையோட போனார். அவங்க அப்பா அம்மாவாது நான் கன்சீவா இருப்பேன்னு ஏற்றுப்பிங்கனு நம்பினார். பட் அவங்களும் ஒதுக்கிட்டாங்க. காஸ்மீர் போனதும் அங்கிருந்து போன் லெட்டர் பேசுவார்.
குழந்தையோட நலனை அதிகம் விசாரிப்பார். அடுத்த லீவ்ல தான் பார்க்க முடியும்லனு தினமும் புலம்புவார். நான் பக்கத்துல ஒரு ஸ்கூல்ல இங்கிலிஷ் டீச் பண்ணுவேன். சோ என் டைம் ஸ்கூல்ல தனியா போற பீல் இருக்காது.
ஜனார்தன் வீட்ல அவரோட அப்பா அம்மா ஓரளவு ஹெல்ப் பண்ணுவாங்க. அதனால பயமில்லைனு தேற்றுவேன். ஆக்சுவலி ஜனார்தன் வீட்ல நாங்க குடும்பமா வந்தோம். சூர்யா கூடயிருப்பார்னு எதிர்பார்த்திருப்பாங்க போல. சூர்யா இராணுவத்துல இருக்கார் என்றதும் கொஞ்சம் தனியாவா இருப்பியானு கேட்டாங்க.
வேற வழியில்லையே அம்மானு சொல்வேன். முதல்ல என்னிடம் எட்டி பழகினவங்க, நாளடைவில் நல்லா பழகினாங்க.
ஹாஸ்பிடலுக்கு மட்டும் செக்கப் அழைச்சிட்டு போவாங்க.
தனுஜா பிறந்தப்ப அவங்க சப்போர்ட் நிறைய இருந்தது. அவங்க இல்லைனா நான் கஷ்டப்பட்டிருப்பேன்.
சூர்யாவுக்கு உடனே லீவு கிடைக்கலை. அதனால எட்டு மாசம் கழிச்சி தான் அவர் தனுஜாவை நேர்ல பார்த்தார்.
வீட்டுக்கு வந்தப்ப ஓவர் குஷி. அப்பாவும் மகளும் இந்த உலகத்துலயே அவங்க தான் பெஸ்ட் டாட் அண்ட் டாட்டர் என்பது போல இருப்பாங்க.
நாலு மாசம் லீவு கேட்டு வந்திருக்கவும் முதல் பெர்த் டே செலிபிரேட் பண்ணினோம்.
இரண்டு பேரோட அப்பா அம்மாவை இன்வெயிட் பண்ணினோம். ஆனா வரலை. எங்க வீட்ல அக்கா சொல் கேட்டு என்னல ஒதுக்கினாங்க. அவர் வீட்ல அவங்க தங்கை சொல் கேட்டு ஆடினாங்க. மொத்துல யாரும் வரலை.
பட் அக்கம் பக்கத்து ஆட்களோட சந்தோஷமா கொண்டாடினோம். தத்தி தத்தி நடந்து, கொஞ்சி கொஞ்சி பேசி தனுஜா வளர்றப்ப மறுபடியும் இராணுவத்துல அவசரம்னு போயிட்டார்.
குழந்தையை பார்த்துட்டு போனதுலயிருந்து அவ நினைப்பா இருக்குனு சொன்னார். வீடியோ கால்ஸ் கொஞ்சம் தெம்பாயிருந்தது. அதுக்கூட எல்லா நேரமும் உபயோகப்படுத்த முடியலை.
இப்படியே இரண்டு வருஷம் போச்சு. ஜனார்தனுக்கு கல்யாணம் ஆச்சு.
கொஞ்ச நாள் அந்த பொண்ணு சுசிலா என்னிடம் நல்லா பழகினா. சூர்யா லீவுக்கு கிடைச்சி வந்தப்ப நான் சூர்யா தனுஜா பாப்பா எங்களோட ஜனார்தன் சுசிலா நேரம் போறதே தெரியாம சினிமா பார்க் பீச்னு போவோம்.
மறுபடியும் சூர்யா காஸ்மீர் போனார். பட் இந்த முறை போன முறை போல திரும்ப வரலை. இறந்த உடலா வந்தார்." என்று கூறி கண்ணீரை உகுத்தினாள்.
இதே நைனிகா மற்ற நேரமாக இருந்தால் 'நினைச்சேன் இந்த இராணுவ வீரர்கள் கட்டிக்கிட்டா இதான் கதி. அப்பவே போர்ல செத்துட்டாரோனு கேட்க பார்த்தேன்.' என்று நக்கலடித்திருப்பாள்.
இன்றோ கதையே வேறு. "ஓகே.. நீங்க ஏன் குழந்தையை வச்சி தனியா வளர்க்கலாமே.. உ..உங்களுக்கு என்ன ஆச்சு?" என்று ரஞ்சனாவை அளவெடுத்தாள்.
ஏனென்றால் ரஞ்சனா மிகவும் அழகாகவும் இளமையாகவும், இருந்தாள்.
"எனக்கு இன்னும் இறப்பு வரலை. அவ்ளோ தான்.
சூர்யா இறந்தப் பிறகு ஸ்கூல்ல பார்த்த வேலையோட டியூஷன் எடுத்தேன். குழந்தை வளர்றா.. வாடகை எல்லாம் பார்க்கணுமே.
எனக்காக வீடு வாடகை ஏத்தலை." என்று கூறவும், "பரவாயில்லை... அட்லீஸ்ட் உங்க பிரெண்ட் கணவர் அவரோட பேரண்ட்ஸ் சப்போர்ட் கிடைச்சுதே" என்று திரிஷ்யா கூறவும் ஒரு ஏளனமான விரக்தி புன்னகை வழிந்தது.
"நானும் அப்படிதான் நினைச்சேன். ஆனா சுசிலா கன்சீவாகி அவங்க அம்மா வீட்டுக்கு போனதும் ஜனர்தன் கேரக்டர் வேற மாதிரி ஆச்சு." என்று நிறுத்தினாள்.
"நாக்கை தொங்கப்போட்டு வருவாங்களே. பொண்ணு தனியா இருந்தா பொறுக்காதே." என்று நைனிகா முனங்க, "சீ... கல்யாணம் பண்ணி வீட்டை வாடகைக்கு கொடுத்து ஹெல்ப் பண்ணிருக்கார். சூர்யா பிரெண்ட்." என்று திரிஷ்யா அடுக்க ரஞ்சனா மறுப்பாய் தலையசைத்தாள்.
"வேலி இருக்கற வரை தான் பயிருக்கு பாதுகாப்பு திரிஷ்யா. நீ நினைக்கிற மாதிரி எந்த ஆம்பளையும் நல்லவன் இல்லை. சந்தர்ப்பம் கிடைக்காத வரை தான் நல்லவனுங்க." என்று பேசவும் மஞ்சரி ரஞ்சனாவை தீண்டினாள்.
"ஏதாவது அசம்பாவிதம்னா துடைத்து போட்டு வாழ கத்துக்கோமா." என்று ஆதரவாய் கூறினார்.
ரஞ்சனாவோ "நானும் அவன் என்னை ஏமாத்தி ஜூஸ்ல மயக்கப்படுத்தி ரேப் பண்ணினப்ப உணரலை அம்மா. ஆனா உடம்பு என்னவோ அடிச்சிப்போட்டதா தோனுச்சு. எனக்கே தெரியாம என் உடல்ல சில காயங்கள் பற்தடம்னு பார்த்தப்ப ஜனார்தன் செய்கையா இருக்குமோனு நினைச்சேன். ஆனா ஊர்ஜிதப்படுத்த முடியாம ஊமையா அழுதேன்.
நான் நார்மலா இருப்பதால அவன் திருட்டு தனம் தெரியலைனு மறுபடியும் ஜூஸை நீட்டினப்ப வாங்கிட்டு வந்துட்டேன். ஆனா குடிக்கலை.
ஜனார்தன் வந்தான், நான் மயங்கலை என்றதும் பயந்தான். அடுத்த செகண்ட் எனக்கு யார் இருக்கானு தெனாவட்டு வந்துடுச்சு. வீட்ல வேற ஜனார்தன் பேரண்ட்ல் இல்லை. சுசிலாவும் அவங்க அம்மாவீட்ல போனதால தனியா மாட்டேன்.
சூர்யாவுக்கு துரோகம் பண்ணாதேனு கெஞ்சினேன். உன் தங்கையா நினைச்சி விட்டுடுனு சொன்னேன்.
சூர்யா உயிரோட இருக்கறப்பவே பங்காளினு தானே கூப்பிட்டது. நீ என்னை புரிஞ்சுக்கோனு என்னை ஆக்கிரமிச்சிட்டான்.
ஜனார்தன் அப்பா அம்மா வந்ததும் அவங்களிடம் சொன்னேன். இதை பெரிசுப்படுத்தாம இருமானு சொன்னாங்க. சுசிலாவிடம் ஏதோ நான் என்னோட தாபத்தை தீர்க்க சொன்னதா தப்பா சொல்லிட்டான்.
இனியும் அங்க இருக்கணுமானு வீட்டை விட்டு வந்துட்டேன்.
தனியா வாழ ஆரம்பிச்சேன். ரீசண்டா உடம்பு சரியில்லை. மெடிக்கல்ல செக்கப் பண்ண போனேன். அப்போ... அப்போ.." என்று உடைந்து அழுதாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment