பஞ்ச தந்திரம்-5
பஞ்ச தந்திரம்-5
எப்பவும் ஆண் பெண் ரசனை வித்தியாசமானது.
கல்யாணத்துக்கு முன்னயும் சரி, கல்யாணத்துக்கு பின்னயும் சரி ஆண் எப்பவும் வேற பொண்ணுங்களை பார்த்து சைட் அடிப்பாங்க. மற்ற பெண்ணோட கண், காது, மூக்கு, வாய், செஸ்ட், கழுத்து, இடுப்பு, பின்னழகு, தொடை கால், கால் விரல் நகம் வரை முழு உடலை ரசிப்பாங்க.
முடி கர்லிங்கா இருந்தாலும் ஸ்ரெயிட்டிங் பண்ணினாலும் ஏன் எதிர்வீட்டுக்காரி கொண்டை குத்தி அழுக்கு நைட்டி போட்டுட்டு வந்தாலும் ரசிப்பாங்க சபலப்படுவாங்க.
இதே பெண் கல்யாணத்துக்கு முன்ன சைட் அடிச்சிருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கு பிறகு எவனையும் ஏறெடுத்து பார்க்க மாட்டா. பையன் அழகாவே இருந்தாலும் கண்ணு இந்த பக்கம் அந்த பக்கம் போகக்கூடாது. பிகாஸ் அவ கல்யாணம் ஆனவ. இன்னொருத்தனை பார்த்தா பத்தினியா இருக்க முடியாது.
புராணமே இதை தானே சொல்லுது. ரேணுகாதேவிம்மா மண்ணை குழைத்து பானை செய்து தண்ணி பிடிச்சி வர சொல்வார் ஜமதக்கினி. ரேணுகா தேவியும் மண்ணை பானையா செய்து, பாம்பை சும்மாட்டியா வச்சி எப்பவும் நீர் எடுத்துட்டு வர்றவங்க. ஒரு முறை நீரில் தெரிந்த காந்தர்வனோட அழகுல மயங்கி ரசித்ததுக்கே கற்பு தவறிட்டானு பேசின உலகம் தானே.
ஆனானப்பட்ட வேள்வில பிறந்த பெண்களுக்கே இந்த நிலை. நான் எல்லாம் எந்த மூலைக்கு?
என் சுடிதாரை கொடுத்துட்டாரேனு கோபத்துல இருந்த நான். ஒரு வாரம் அவரிடம் பேசலை. என் கணவரும் பெருசா அதுக்காக கவலைப்படலை.
அன்னைக்கு உதயோட ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். சனிக்கிழமை என்றதால இரண்டு பேரும் போகவேண்டிய கட்டாயம் இருந்தது.
ரொம்ப நீட்டா.. டீக்கா... ஜீன் டீஷர்ட்னு பயங்கர ஹாண்ட்ஸம்மா டிரஸ் பண்ணிட்டு வந்தார். நான் எப்பவும் போல ஒரு சேலையை சுத்திட்டு வந்தேன். பாதிக்கு மேல சுடிதார்ஸ் ஜீன்ஸ்னு கேர்ள்ஸ் வந்தாங்க. உதய் பிரெண்ட்ஸோட பேரண்ட்ஸ் இருக்கவும் நாங்க பேசிட்டு இருந்தோம்.
அவரும் பேசிட்டு இருந்தார். என்னை சுடிதார் போடாதேனு சொன்னவர் ஜீன்ஸ் போட்ட ஒருத்தவங்களிடம் சிரிச்சு சிரிச்சு பேசினார்.
நானும் மனுஷியில்லையா. என் கணவர் வேற பெண்ணிடம் பேசறதுல பொறாமை வந்துச்சு. பிகாஸ் அவர் சாதாரணமா பேசலை. ரொம்ப ரசித்து பேசினார். என்னிடம் அது மாதிரி பேசி பல வருஷம் ஆச்சு.
ரொம்ப வெறுப்பா இருக்கவும் தள்ளி வந்தேன். இவரை மாதிரி இன்னொருத்தர் இருப்பார் தானே. அதாவது மனைவியை உதாசினப்படுத்தி வேற பெண்ணிடம் சிரிச்சி பேசற ஆட்கள். அப்படி தான் ஒருத்தன் வந்தான்.
நீங்க சேலையில அழகாயிருக்கிங்க. உங்க முடி நல்லா லென்தியா இருக்கு. சீயக்காயா? ஷாம்பூவா? வழிஞ்சான்.
எனக்கு அப்ப கணவரோட கோபத்தை அதிகப்படுத்த தோணுச்சு. நானும் சிரிச்சிட்டே என்னிடம் வழிந்தவரோட பேசினேன்.
என் கணவர் பார்த்துட்டு வந்து என்னை கையோட கூட்டிட்டு வந்தார். பேரண்ட்ஸ் மீட்டிங் முடியவும் அவசரமா போகலாம்னு சொன்னார்.
ஸ்கூல்ல கேட்க முடியாத கேள்வி எல்லாம் வீட்ல வந்து ஆரம்பித்தார்.
'அவனிடம் என்னடி பேச்சு... சிரிச்சு சிரிச்சு பேசறனு அவன் என்ன பேசினான். நீ என்ன பதில் சொன்னனு கேட்டார்." என்று திரிஷ்யா பேசவும், "சந்தேகப்பட்டாரா?" என்று ரஞ்சனா இடைப்புகுந்து கேட்டாள்.
விரக்தியாய் சிரித்த திரிஷ்யா "ஆமா.. சந்தேகம்.. அது ஒன்னு தான் குறைச்சல்." என்றாள் சலித்தபடி.
"நீ சும்மா இருக்கியா.. இவங்க முதல்ல கண்டினியூவா சொல்லட்டும். சும்மா.. குறுக்க குறுக்க வந்துட்டு." என்று நைனிகா சிலுசிலுத்தாள்.
"அட முதல்ல உன் போன் தான் டிஸ்டர்ப் பண்ணிச்சு. நீ தான் புல் ஷிட்னு பேசி இடைப்புகுந்த. இப்ப நான் கேட்டதும் குறுக்க குறுக்க வர்றேன்னு சொல்லற" என்று ரஞ்சனா சிலுப்பினாள்.
"ஏன் இரண்டு பேரும் இப்படி சண்டை போடறிங்க. நமக்கே ஆயிரம் பிரச்சனை. கிடைச்ச நேரத்திலும் முட்டிக்கிட்டே இருக்கணுமா?" என்று மஞ்சரி பாட்டி கூறவும் நைனிகா அங்கிருந்த ஆப்பிளை கடித்து கோபத்தை குறைத்தாள். ரஞ்சனாவோ "சாரி நீங்க கண்டினியூவா சொல்லுங்க" என்று சுவரோடு சாய்ந்தாள்.
"சந்தேகப்படலை... ஆனா ஓவரா பேசினார். ஆனா நானும் சும்மா இல்லாம பேசிட்டேன். நீங்க கூட தான் ஒரு பொண்ணோட பேசினிங்க. நான் அவர் பேசியதுக்கு பதில் சொன்னேன் என்ன தப்புனு.
'அவன் என்ன பேசினான்.' என்று கேட்டார்.
நான் கட்டியிருந்த சேலை அழகாயிருந்ததுனு சொன்னார். அதுக்கு பதில் தேங்க்ஸ் சொன்னேன் என் வீட்டுக்காரரிடம் சொன்னதும் அவ்ளோ தான் மூஞ்சி இஞ்சி திண்ண குரங்கு மாதிரி ஆகிடுச்சு.
எவனோ ஒருத்தன் சொன்னா பல் இளிப்பியானு திட்டினார்.
நீங்க சுடிதார் போட்டாலோ சேலை கட்டினாலோ ஒன்னும் சொல்லப்போறதில்லை. அவர் ஜஸ்ட் புகழ்ந்தார் அதுக்கு தேங்க்ஸ் சொல்லி சிரிச்சா என்ன தப்புனு கேட்டேன்." என்றதும் நைனிகா ஆர்வமாய் முன்னே வந்து, "உங்க கணவரோட ரியாக்ஷன் என்ன?" என்று கேட்டாள்.
"நீ சின்ன பொண்ணு... அங்க போய் நில்லு." என்று திரிஷ்யா கூறிவிட்டு மஞ்சரியிடம் திரும்பி, "நான் பேசியது தப்பாம்மா?" என்று பாவமாய் கேட்டாள்.
மஞ்சரியோ "முதலும் முடிவும் சொல்லு.. யார் மேல தப்புனு சொல்லறேன். இப்படி பாதில யாரையும் எடைப்போட முடியாது." என்று பதமாய் அனுபவம் கண்டவராய் கூறினார்.
"நான் சிரிச்சா என்ன தப்புனு கேட்டேன். அவர் கோபமா என்ன தப்பா... அவன் உன்னை ரசித்து பார்த்திருக்கான். நீ வெட்கமேயில்லாம பேசியிருக்க" என்று குற்றம் சுமத்தினார்.
ஏன்மா.. என்னிடம் பேசாம யாரோ ஒருத்தியிடம் ஸ்கூல்ல அவர் பேசறார். போன்ல எவளோ ஒருத்தி கவர்ச்சியா டிரஸ் போட்டிருக்க அதை ரசித்து ரிலாகஸுக்கோ எண்டர்டெயிண்மெண்ட் எதுக்கோ பார்க்கறார் கேட்ட அவ கூட என்ன படுத்தேனா இல்லையேனு சொன்னார். நானும் அதையே சொன்னேன். பேசதானே செய்தேன்... நீங்க சொன்ன மாதிரி ஒரே பெட்ல உருளலையேனு.. நான் ரொம்ப பேசிட்டேன்... அவர் அடிச்சிட்டார்." என்றதும் அழத்துவங்கினாள்.
"இதுக்கு தான் வீட்டை விட்டு வந்தியா திரிஷ்யா?" எர்று கேட்டார் மஞ்சரி.
அழுகையை துடைத்து மூக்குறிந்து "இல்லைம்மா... அவர் அடிச்சிட்டு போயிட்டார். அதோட என்னிடம் மறுபடியும் இரண்டு வாரம் பேசலை. எங்க அம்மா அப்பா தான் போன் பண்ணி மாப்பிள்ளையை எதிர்த்து பேசினியா? வீட்டுச்செலவுக்கு கொடுத்த காசை தேவையில்லாத துணி வாங்கினியாமேனு ஒரே அட்வைஸ். போதாதுக்கு அத்தைமாமா ஏதோ அவங்களை மதிக்கலைனு ஒரே புகார்.
அம்மா என்னடானா உனக்கு அப்பறம் ஒரு தங்கச்சி இருக்கா. அக்கா பொண்ணு வயசுக்கு வர்ற மாதிரி இருக்கா. எதுனாலும் சம்பந்தி வீட்ல பிரச்சனை பண்ணி இங்க வராதேனு சொன்னாங்க.
நான் என் பக்கம் என்ன நடந்ததுனு சொல்ல வந்தேன். ஆனா அதை காது கொடுத்து கேட்கலை. நானும் என் தரப்பு கேளும்மானு சொன்னேன். என்ன பெருசா உன் தரப்பு. மூனு வேளை சோறுபோட்டு உன்னை அந்த வீட்ல நல்லபடியா பார்த்துக்கறாங்க. மத்த வீட்ல மாதிரி நகை வாங்கிட்டு வா. அது இதுனு இம்சை தரலைனு சொல்லிட்டாங்க. ஒரு பேச்சுக்கு கூட என் மனக்கஷ்டத்தை கேட்கலை." என்று அழுதாள் திரிஷ்யா.
சில பெற்றவர்கள் திருமணம் முடித்து விட்டால் போதுமென்று இருக்க மகளின் கஷ்டம் உணர்வதில்லை. அவர்கள் பார்வைக்கு நல்ல வீடு உடை பகட்டா வாழ்க்கை இதுவே மகளுக்கு போதும். மாப்பிள்ளை அனுசரித்து போகவாமே என்ற எண்ணம்.
ஆனால் பெற்றடுத்த பெண்ணுக்கு ஆசை கனவு இருக்கும். சின்ன சின்ன அன்பை காதலை பெற துடிக்கும். ஒரு உடைக்கே புகுந்த வீட்டில் எத்தனை இடிபாட்டை வாங்கி அணிவாள் என்று யோசிப்பதில்லை.
திரிஷ்யாவே கன்னத்தை துடைத்து, இதெல்லாம் கூட ஓகே தான் ரஞ்சனா. ஆனா பார்ன் சைட் பார்ப்பார். அதுல வர்ற உடல்வாகு பொசிஷன் இப்படி ஆசைப்படுவார். நானும் அவர் ஆசைக்கு இணங்கினாலும் அவருக்கு என்னிடம் சாட்டிஸ்பேக்ஷன் வராது. நீ குண்டாயிட்ட உன் ஸ்கின் கழுத்துல கருப்பா இருக்கு. அதுயிதுனு ஆரம்பிப்பார்.
குழந்தை பெத்த உடம்பு சிக்குனு இருக்காதே." என்று கூறவும் நைனிகா மெதுவாக வந்து திரிஷ்யாவை வலது இடதென திருப்பி "உங்களுக்கு என்ன குறைச்சல் சுடிதார் போட்டா இன்னும் ஐந்து வயசு கம்மியாகிடுவிங்க. ஜீன் டாப் போடுங்க பத்து வயசு குறைந்திடும். உங்க கணவரோட பார்வை தான் தப்பாயிருக்கும்." என்று கூறினாள்.
"டிரஸ் பத்தி எனக்கு ஓபினியன் இல்லை. எனக்கு அவர் ரசிக்கலை என்றது கூட பிரச்சனையில்லை. என்னை தவிர எல்லாரையும் ரசிக்கிறார். நான் அலுத்து போயிட்டேன். வீட்ல ஏடாகூடமான வீடியோ பார்க்கறார். என் கவலை எல்லாம் உதய் அதை பார்த்துடக்கூடாதுனு தான். நான் இரண்டு மூன்று தடவை சொன்னேன். எனக்கு தெரியும் உன் வேலையை பாரு என்று எரிந்து விழுந்தார்.
அடிக்கடி சண்டை நடக்கும். பொதுவா ஹால்ல கேட்கற அளவுக்கு சண்டையிட மாட்டார். ஆனா அதை மீறி உதய் அத்தை மாமாவிடம் அம்மா அப்பா சண்டை போடறாங்கனு சொல்லிடுவான்.
என் மாமியார் மாமனார் கேட்கவும் மழுப்பிடுவார். ஆனா ஒரு முறை பெரிசா சண்டைவந்துடுச்சு.
உதய் ஏதோ கேம் விளையாட அதுல விளம்பரமா ஆபாசமா வந்துச்சு. அத்தை உடனே 'என்னடி இது உன் பையன் போன்ல இப்படி இருக்குனு' பிடிங்கி என்னிடம் அதட்டினாங்க. அத்தையிடம் உங்க பையன் தான் இப்படிப்பட்ட வீடியோ பார்க்கறார்னு சொன்னேன். அவரோட ஐடி போட்டு வச்சிருக்கார். அதனால வீடியோ இப்படி வந்துயிருக்கும்னு டிவி பார்க்குறப்ப சொன்னேன்.
அவங்க அப்பவும் என்னவோ ஆம்பளைங்க அப்படி தான். நீ கண்டுக்காதேனு எரிந்து விழுந்தாங்க. போதாதுக்கு உதயிடம் போனை பிடுங்கி அவனை திட்டினாங்க. என்னவோ போனை நான் தான் அவனுக்கு பிரசண்ட் பண்ணியது போல பயங்கர திட்டு. ஒரு நல்ல அம்மாவாடி நீ என்று.
அதுக்கு நான் உங்கப் பையனை முதல்ல திருத்துங்க. என் பையனை இவர் தான் கெடுத்து வச்சிருக்கார். படிக்கிற பிள்ளைக்கு போன் எதுக்கு?உங்க பையன் போன்ல கண்ட கருமத்தையும் ஆபாச வீடியோவும் பார்க்க, உதய் டிஸ்டர்ப் பண்ணறதால தான் உதயுக்கு தனி போன் வாங்கி தந்திருக்கார். அவரால என் பையன் உதய் இதை கவனிச்சு கெட்டுப்போனா என்ன பண்ணறது. நீங்க முதல்ல நல்ல அம்மாவா இருங்கனு பேசினேன்.
என் உடலை ரசிக்க தெரியாதவர், அடுத்தவங்க உடல்வாகை பார்த்து ரசிக்கறார். முதல்ல என்னை பெண்ணா மதிக்க கத்து கொடுங்கனு கத்தினேன்.
மாமனாரோ உடனே போனை போட்டு எங்கப்பாவை வரவழைச்சிட்டார். உங்க பொண்ணு அதிகம் பேசுது. அதட்டிட்டு போங்க. இல்லை வீட்டுக்கு அனுப்பிடுவோம்னு சொன்னாங்க. அப்பாவும் அடங்கியிரும்மானு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு போனார்.
ஆனா வேதாந்த் அதுக்கு பிறகு ரொம்ப மாறிட்டார்.
என்னிடம் மொத்தமா பேசறதில்லை. ஏதோ எவனோடவோ நான் பேசி ஓடிப்போறதா முகத்தை திருப்பிக்கறார்.
சுயமரியாதை எனக்கு சுத்தமா இல்லை. நான் சாப்பிட்டேனா தூங்கினேனா, நான் அந்த வீட்ல இருக்கேனாயென்ற அளவுக்கு என்னை வீட்ல ஒதுக்கினாங்க. அவரோட கேரக்டரை நான் வெளிச்சம் போட்டுட்டேனாம்.
இதையெல்லாம் கூட தாங்கினேன். ஆனா என் மகன் உதயை என்னிடம் பழகவிடலை. உன் அம்மா திமிர் பிடிச்சவ, அவ கெட்டவ அவ ஒன்னுத்துக்கும் உதவாதவ. அப்படியிப்படினு நிறைய பேசி அவனை என்கிட்டவே வரவிடாம பண்ண முயற்சி பண்ணறாங்க.
நான் இல்லாம இருக்கமாட்டான். ஆனா இந்த இரண்டு மாசம் என்னை அவனோட பேசவே விடலை. அவன் முகத்துக்காக தான் இத்தனை நாளா சகிச்சிட்டு இருந்தேன். இப்ப அவனை ஏதோ போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பறாங்க.
இனியும் அங்க ஒரு வேலைக்காரியா இருக்கறதுக்கு என்னால முடியாது. நான் எங்க வீட்டுக்கு போனாலும் எங்கப்பா அம்மா திரும்ப திரும்ப எனக்கு புத்திமதி சொல்லி அனுப்புவாங்களே தவிர என்னை அன்பா அரவணைக்க அங்க ஆளில்லை என்பதை புரிஞ்சுக்க மாட்டாங்க.
நான் உயிரோட இருக்கறதுக்கு சாகலாம்னு தான் பீச்சுக்கு வந்தேன்." என்று மொத்தமாய் கூறினாள்.
சற்று நேரம் அமைதியாக இருக்க, நைனிகாவோ, பச் டிவோர்ஸ் வாங்கிட்டு தனியா வாழலாமே. அதுக்கு... சாகணுமா. உங்களுக்காக வாழ ஒரு ரீசனுமா இல்லை. பையன் இப்ப பேசலை பார்க்க முடியலலனா என்ன. ப்யூச்சர்ல அம்மாவை தேடி ஓடிவருவான். இதுக்கெல்லாம் சாக துணிவாங்களா?" என்று கேலி இழைத்தாள்.
திரிஷ்யாவோ மஞ்சரி பாட்டி ரஞ்சனா என்ன கூறுவார்கள் என்று அவர்கள் பக்கம் திரும்பினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
ஓ மை காட்...! நமக்காக ஒரு ஜீவன் கூட இல்லைன்னாலும், அது பேலஸே ஆனாலும் சிறை தான். ஆனா, அதுக்காக சாகணுமா..? ஏன் திரிஷ்யா படிக்கலையா என்ன?
ReplyDeleteபடிச்சவள் தான் சகி. சில நேரம் சில மனம் முட்டாளாக முடிவெடுக்கும்.
Deleteகொண்டவன் தூற்றினால்கூரையம் தூற்றும்
ReplyDelete