பஞ்ச தந்திரம்-10

பஞ்ச தந்திரம்-10 

    வேதாந்த் நைனிகாவை பார்த்து விட்டு, திரிஷ்யா கூட வந்த மற்றவர்களை பார்வையால் அலசினான். 
    
    ரஞ்சனா மாடர்ன் உடையில் வந்திருந்தாள். அதனால் அவளை அளவிட்டவன் மஞ்சரியை பார்த்து சிரித்தான். நைனிகாவை பார்த்து மஞ்சரியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

    "என்னடா மாதர் சங்கத்துக்கு போய் நாலு நல்ல மனுஷங்களை கூட்டிட்டு வந்து முன்ன நிற்கறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். பிகாஸ் மாதர் சங்கத்து ஆட்களோட வந்தேன்னு தான் லேசா பயந்துட்டேன். 

  கடைசில பார்த்தா போயும் போயும் இவங்களோட..." என்று ஏளனமாய் பேசினான். 
  
   "இந்த பொண்ணு ஓகே... இவங்க இரண்டு பேரை எதுக்கு கூட்டிட்டு வந்த? இவங்களுக்கு என்ன தகுதியிருக்கு என்ன பத்தி பேச." என்று திரிஷ்யாவிடம் கேள்வி துளைத்தான். 
   
    திரிஷ்யா வேதாந்த் அள்ளி வீசுப்போகும் நெருப்புகளை அறியாமல், "ஏன் இவங்களுக்கு தகுதி இல்லைன் சொல்லற" என்று கோபமாய் நின்றாள். தான் நியாயம் கேட்க அழைத்து வந்தவர்களையும் இகழ்கின்றானே என்ற கோபம். 

   "ஓ... நீ நாலு சுவத்துக்குள்ள இருக்கற கட்டுப்பெட்டி இவங்க யாருனு தெரியாது தானே. இதோ உன் பக்கத்துல ஸ்டெயிலா நிற்கறாளே இந்த பொண்ணு நைனி.. தானே? என்றான்.

   நைனிகாவை ரஞ்சனா நோக்கி வந்தாள். அடுத்து மஞ்சரியை காட்டி "நீங்க தருண் பாட்டி தானே?" என்றான். 

   மஞ்சரியோ மாலையில் தருணை நைனிகா முன் கன்னத்தில் அடித்து, பாட்டியாக நியாயமாக நடக்க எண்ணியவர் வேதாந்தின் இந்த இளக்காரமான கேள்வியில் தலைகுனிந்தார்.

     "அதெப்படி மா... தருணோட நெருக்கமா இருந்த வீடியோவை அப்டேட் பண்ணிட்டு, அவங்க பாட்டி கூடவே திரிஷ்யாவுக்கு நியாயம் கேட்க வந்த? முதல்ல உனக்கு அந்த தகுதியிருக்கா? இந்த வயசுல எவனோடவோ சல்லாபம்" என்று வாய்க்கு வந்தபடி திட்டினான். 

    நைனிகா உடைந்து போனாள். தன்னை பற்றி காலையில் தருண் மிரட்டிய வீடியோவை, நீ என்னடா மிரட்டறது. நானே என் வீடியோவை அப்டேட் பண்ணி உன் முகத்திரையை கிழிக்கறேன் என்று அவளது முகத்தை ப்ளர் செய்து சமூக வலைத்தளத்தில் உலாவவிட்டாள். 
  
    ஆனால் தருணோ உடனடியாக தனது முகம் மட்டும் வருகிறதே என்ற கோபத்தோடு மற்றொரு ஐடி மூலமாக அவளோடு இருந்த முகம் தெரியும் பிக்சரை கமெண்ட்ஸில் பதிவேற்றம் செய்தான். 

    ஆளாளுக்கு ஒருத்தரை மாற்றி ஒருத்தர் சமூக தளத்தில் கிழித்து கொண்டார்கள். பாவம்... அதனால் இருவருக்கும் கஷ்டமென்று அறியாது போனார்கள். 
 
   தற்போது பழிவாங்குதல் என்றாலே சமூக ஊடகங்களில் இது போன்ற சித்தரிப்பு மூலமாக தான் மனிதன் தன் வன்மத்தை கொட்டி தீர்ப்பதாக மாறியது. 

    இன்று இந்த நேரம் வேதாந்த் அதை பற்றி பேசுவானென்றோ, மஞ்சரி பாட்டி தருணின் பாட்டி என்றோ அறிந்து மஞ்சரியை தான் ஏறெடுத்தாள். 

    அந்த கணம் ஏனோ மஞ்சரி பாட்டி மீது கோபம் வரவில்லை. உங்க பேரன் தானே என்னை இப்படி பண்ணியது என்று அவரை படுத்தி எடுக்கவில்லை. காலையில் வீடியோ காட்டியதிலிருந்து முகம் பொலிவிழந்து போனதை நைனிகா அறிவாள். 

     "ரொம்ப நல்லது. அடுத்து எங்க பஞ்சாயத்து தான். முதல்ல இந்த அக்காவோட குழந்தையை கொடு." என்று நைனிகா பொங்கினாள். 

  "இதோடா.. நீ அவங்க பேரனோட படுத்து எழுந்திருப்ப. ஆனா அவங்க உன்னோட வந்து இந்த மூதேவியோட நியாயம் கேட்க வர்றாங்க. அவங்களுக்கு தகுதியிருக்கு.. உனக்கு தகுதியிருக்கு... சீ... வாயை மூடு டி. 

   நான் கண்ட வீடியோ பார்த்ததை புருஷன் பொஞ்சாதினு இரண்டு பேருக்குள்ள வச்சிட்டு அடங்கி வாழ்ந்திருக்கணும். ஆனா பண்ணலை. என்னை பத்தி ஊர் ஊரா தப்பா பேசறா. இரண்டாவது  இந்த வீட்டு படிதாண்டி எப்ப போனாலோ அதோட கணக்கு முடிஞ்சது. இப்ப மூனு பேரை கூட்டிட்டு வந்து என்னையே கேள்வி கேட்டுட்டாளே... இதோட உனக்கு இந்த வீட்டோட பந்தம் இல்லைடி. டிவோர்ஸ் தான். குழந்தையாவது குட்டியாவது போடி வெளியே." என்று திரிஷ்யாவை விரட்டினான். 

   "நீ என்னடா என்னோட வாழமாட்டனு சொல்லற. எனக்கு நீ வேண்டாம். என் குழந்தையை கொடு. நான் போறேன். உன்னோட வாழ எனக்கு இஷ்டமில்லை. குழந்தை எங்கயிருக்கான்னு சொல்லு" என்று கேட்டாள்.  

   "குழந்தையை தரமுடியாது டி." என்று திரிஷ்யாவை பிடித்து தள்ளினான். 

 நைனிகாவோ யூ இடியட்.. ஒன்  ஹவர் முன்ன அப்லோட் பண்ணின வீடியோவை வேகமா பார்த்துட்டு தருண் யார்னு தேடி அவன் பேமிலில மஞ்சரி பாட்டி இருக்கறவரை சர்ச் பண்ணின வெறிபிடிச்ச நாய் நீ. நீ என்னடா தள்ளறது." என்று நைனிகா எட்டி மிதித்தாள். 

    வேதாந்த் சோபாவில் தான் விழுந்தான். 
    வேதாந்த் தாய் தந்தை என்று மகனை எழுப்பி ஆதரவை தட, திரிஷ்யாவை ரஞ்சனா மற்றும் நைனிகா ஆதரவாய் அணைத்தனர். 

   திரிஷ்யாவே மஞ்சரியை அழைத்து வெளியே வந்தாள். 

    அந்த ஏரியாவில் ஒரு பூங்கா இருக்க, அங்கு தானாக கால்கள் அழைத்து வந்தது. 

    ரஞ்சனா தனுஜாவை அழைத்து வந்திருந்தாள்.

     "எனக்காக வந்ததுக்கு தேங்க்ஸ்... பட் நான் அவனோட வாழ விரும்பலை. ஒரு பொண்ணை பொண்ணா மதிக்க தெரியாதவன். வெறும் செ..க்.ஸ் டாய்ஸா வச்சி வாழறவன். அவனோட இனி வாழ்ந்தா நான் பிணமா தான் வாழணும். நான் டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணறேன். அவனுக்கு முன்ன நான் டிவோர்ஸ் பேப்பரை அனுப்பறேன்." என்று ஆவேசமாக உரைத்தாள் திரிஷ்யா. 

    "அப்ப குழந்தை... குழந்தையை மறந்துடுவியா?" என்று ரஞ்சனா கேட்க, திரிஷ்யா முகத்திலடித்து அழுதாள். 

     "உன் பையன் எங்க இருப்பான்னு கெஸ் இருந்தா சொல்லு. நான் போய் கூட்டிட்டு வர்றேன்." என்று ரஞ்சனா கூறிட, "இல்லை... எனக்கு அவன் எங்கனு தெரியாது. ஏதோ ஊட்டியோ கொடைக்கானலோ.. படிக்கறான். எனக்கு முதல்ல டிவோர்ஸ் வேண்டும். அது மூலமா குழந்தையை பார்த்துக்கறேன்." என்று கண்ணீரை துடைத்தாள். 

     ஈவினிங் நான் வக்கீல் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்." என்று அணைத்தாள். 

    தனுஜா போன் விளையாட, நைனிகா மஞ்சரி இடம் விட்டு அமர்ந்திருந்தார்கள். 

   ரஞ்சனாவோ திரிஷ்யாவை தட்டிக் கொடுத்துவிட்டு இருவர் மத்தியில் வந்து நின்றாள். 
   
    "அவன் என்ன சொன்னான். தருண் உங்க பேரனா.. நைனிகா.. வீடியோவை பார்த்தப்பவே உங்க பேரன் என்று தெரியும் தானே?" என்று குற்றம் சுமத்தும் போர்வையாக ரஞ்சனா கேட்க மஞ்சரி மனம் உடைந்தார். 

  திரிஷ்யாவும் அருகே வந்து, "தருண் வீடியோவை வெளியிட்டுட்டானா? நீ எங்களிடம் காட்டினப்ப போன்ல உனக்கு தனியா அனுப்பினானே." என்று கேட்க, நைனிகாவோ "நான் தான் அந்த வீடியவவை என் பேஸை ப்ளர் பண்ணி அனுப்பினேன். பட் அவன் பேக் ஐடில வந்து என் முகத்தை போட்டுட்டான்." என்று பல்லை கடித்தாள். 

    "தருண் உங்க பேரன்னு ஏன் சொல்லலை" என்று ரஞ்சனா கேட்க மஞ்சரியோ முகம் செத்தவராய் நைனிகாவை நோக்கினார். சின்ன பெண் நைனிகா முகத்தில் எப்படி விழிப்பதென்று. 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 

 

    

Comments

  1. அடுத்தவர் குறையை மட்டும் காட்டும்உலகம

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1