பஞ்ச தந்திரம்-14

பஞ்ச தந்திரம்-14

    திரிஷ்யா "கன்சீவா இருக்கியா?" என்று பதறினாள்.

   "நல்ல வேளை அந்த கெட்டது எதுவும் நிகழலை. அதுவரை கடவுள் இருக்கான்." என்று ரஞ்சனா கண்ணை துடைத்தாள்.

    "செக்கப்ல என்ன வந்துச்சு." என்று மஞ்சரி கேட்டதும், "எயிட்*ஸ்... ஆங். நான் நாட்களை எண்ணிட்டு இருக்கேன். இது செகண்ட் ஸ்டேஜ்.

  பயப்பட வேண்டாம். இது தொடுவதால பரவாது. பழகறதால பரவாது.
   ஆனாலும் நான் இனியும் தனுஜாவோட வாழ்க்கையில அதிக நாள் இருக்க முடியாது. தள்ளிப்போகணும். நான் இல்லாம அவ வாழணும்.

    நானும் தனுஜாவும் இருந்தப்பவே என் லைப் சூன்யமா போச்சு. நானும் இல்லாம என் குழந்தை தனியா இந்த சமூகத்துல எப்படி இருக்கப் போறாளோனு பயம் தினம் தினம் சாகடிக்குது.

    இந்த இரண்டு நாளா நல்ல ஆசிரமத்தை தேடிட்டு இருந்தேன். எதச்சையமா உங்களோட ஆக்டிவிட்டிஸ் சரியில்லைனு மனசுக்கு தோன்றுச்சு.

    அதனால தான் தள்ளியிருந்து கவனிச்சேன்.

   தனுஜாவிடம் தெரியாதவங்க மாதிரி ஒரு விளையாட்டு விளையாடுவோம்னு பேசி அவளை தனியா உட்கார வச்சேன்.

    என்ன தான் தனியா உட்கார்ந்து நடிச்சாலும் அவளுக்கு என் முகம் பார்த்து பார்த்து சில முடிவை எடுக்க நைனிகா கண்டுபிடிச்சிட்டா." என்று ரஞ்சனா கூறிமுடிக்க, நைனிகா மஞ்சரி திரிஷ்யா மூவரும் தனுஜாவை ஏறிட்டனர்.

   "வாங்க சாப்பிடுவோம் பசிக்கும்" என்று ரஞ்சனா அழைக்க, மற்றவர்கள் திகைத்தனர்.

    "என் மக தனுஜாவுக்கு பசிக்கும்" என்றதும் ஐவரும் ஒரு ஹோட்டலுக்கு வந்தார்கள்.

     ரஞ்சனா சாப்பிடும் எதையும் யாருக்கும் பகிரவில்லை. குழந்தைக்கும் கூட, நேற்றே சப்பாத்தியை எடுத்து ரோல் செய்து முடித்தாள். தண்ணீரை கடைசியாக குடித்தாள்.

    "நெக்ஸ்ட் என்ன பிளான்" என்று கேட்டப்படி உணவை விழுங்கினார்கள்.

    "டிவோர்ஸ்.. இனியும் வேதாந்த் கூட என்னால வாழ முடியாது. குழந்தையை சட்டத்து மூலமாக வாங்க போறேன். தனி வீடு பார்த்துப்பேன்." என்றாள்.

   மஞ்சரியோ நைனிகாவை ஏறிட்டார். "நான் தருணோட பேசணும். அதுக்கு பிறகு முடிவெடுப்பேன். பட்.. என்னோட அப்பா அம்மாவோட பேச்சை கேட்டு கல்யாணம் பண்ண மாட்டேன். எனக்கு அவங்க வேண்டாம்." என்று முடிவெடுத்தாள்.

   மஞ்சரியோ, "நான் தருணோட பேசறப்ப கூடவே இருப்பேன். உன் முடிவை ஆதரிப்பேன். சாகப்போறதில்லை." என்று உறுதி தந்தார்.

    "எனக்கு ஏதாவது ஆசிரமம் கிடைக்கணும். தனுஜாவை சேர்க்கணும். அது போதும். முடிந்தா... அடிக்கடி யாராவது அவளை போய் பாருங்க" என்று ரெக்வஸ்ட் வைத்து சாப்பாட்டை முடித்து எழுந்தாள்.

     ஏற்கனவே இலையில் தான் உண்டதால் அதனை அவளே குப்பையில் போட்டு வந்தாள்.
  
    மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தனுஜாவை ஏறிட்டனர்.

   குழந்தை மெதுவாக உணவை சுவைத்தாள்.
  
    மாலை வரை நேரமிருக்க தங்களை சந்திக்க வைத்த பீச்சினில் சென்று நீரில் ஆடினார்கள்.

  ரஞ்சனா மட்டும் வரமறுக்க, மஞ்சரியுடன் இருந்தாள். திரிஷ்யா நைனிகா இருவரும் தனுஜாவை அழைத்து நீரில் விளையாடினார்கள்.

     மாலை மஞ்சரி வீட்டிற்கு சென்று உடைமாற்றி தருணை சந்தித்து பேசுவதாக இருக்க, மற்றதை மறந்து இருந்தார்கள். அவர்களை பொறுத்தவரை நேற்றே இறக்க வந்து தங்கள் எண்ணத்தை மடிய வைத்து விட்டனர். இது அவர்களின் புதுபிறப்பு.

    மஞ்சரி நொடிக்கு ஒருமுறை கடிகாரத்தை பார்த்து, கண்ணீரை துடைத்தார்.

   "ஏன் அழுவறிங்க அம்மா" என்றாள் ரஞ்சனா.

    "இல்லைம்மா.. நான் பெற்றடுத்தவங்க தான் சரியில்லை. பாசமில்லாம பணத்தை நேசிச்சிட்டாங்களேனு வருத்தப்பட்டேன். இப்ப என் அடுத்த தலைமுறை பெண் சாபம் வாங்குமோனு பயமாயிருக்கு.

    நைனிகா எந்த முடிவெடுத்தாலும் தப்பில்லை. காதல் என்ற போர்வையில தருண் செய்தது தப்பு. பிளாக்மெயில் பண்ணறது எந்தவிதத்திலயும் சரியில்லையே.

    அட்லீஸ்ட் கடைசிவரை கைப்பிடிச்சாவாது அவன் அவளை உரிமையா கேட்கலாம். இப்படி சந்திச் சிரிக்கிற மாதிரி அந்தரங்கத்தை எடுத்து அதை போன்ல வச்சிட்டு திரியறது காதலா? ஆகமொத்தம் என் அடுத்த தலைமுறை சரியில்லை." என்று துவண்டார்.

   "அய்யோ அம்மா... உங்க பேரன் என்று இல்லை. இங்க நிறைய பேர் மாறிட்டு இருக்காங்க. நாம சொன்னா நாகரீகமா வளராதவங்க ரேஞ்சுல பார்ப்பாங்க.
  
  நானும் சூர்யாவும் காதலர்கள் தான். ஆனா திருமணத்துக்கு முன்ன அவர் ஏமாத்திடுவாரோனு நான் பயந்ததில்லை. அவரும் இவளை தானே கட்டிக்க போறோம் என்ற எண்ணத்துல எல்லை தாண்டவும் மாட்டார்.
   காதல் என்றால் ஒரு நூலிழையில பழகுவோம். அந்த காதலை தப்பு சொல்லிடக் கூடாதுனு மெனக்கெடுவோம். இப்ப காதலை தூய்மையா பார்ப்பது இல்லை. பிடிச்சிருந்தா இன்னிக்கே பிரப்போஸ் பண்ணறாங்க பிடிக்கலைனா சட்டுனு கடந்துடறாங்க.

   தப்பில்லை தான். ஓருத்தருக்காக ஒருத்தர் வாழ்க்கையை சூன்யமா மாத்திக்கணுமா என்ன.? ஆனா முன்ன ஆழ முடிவெடுத்து செயல்படுவாங்க. இப்ப முடிவெடுக்க யோசிக்கறதில்லை. அவ்ளோ தான்.
  
   முன்ன நிரந்தரமானவற்றுக்கு மதிப்பு. இப்ப எதுவும் நிரந்தரமில்லையென்று கடந்திடணும்னு தத்துவம் பேசுவாங்க. எல்லாத்துக்கும் எல்லாம் பொருந்தாதே." என்றதும் மஞ்சரியோ "உண்மை தான்" என்று நைனிகாவை பார்த்து போகலாமென்று செய்கை காட்டினார்கள்.

   நைனிகா தனுஜாவை தூக்கி கொண்டு நடந்தாள்.

   தனுஜா அன்னை வந்ததும் நைனிகா கையை விடுத்து ரஞ்சனாவிடம் தஞ்சம்புகவும், மஞ்சரி பாட்டியின் கைப்பிடித்து நைனிகா நடந்தாள்.

  திரிஷ்யாவோ தனுஜாவை ரஞ்சனாவை பார்த்து உதயின் நினைவோடு நடந்தாள்.

     மஞ்சரி பாட்டி வீட்டிற்கு கார் புக் செய்து போக, அங்கே இறங்கியதும் கேட் செக்கியூரிட்டி "எங்கம்மா போனிங்க... உங்களை தேடினாங்க" என்று உரைத்தான்.

  "மனசு நிம்மதிக்கு போனேன் தம்பி" என்று மெதுவாய் நடந்து மற்றவர்களையும் அழைத்து சென்றார்.

    திரிஷ்யா ரஞ்சனா இடத்தை பார்த்து திகைத்தனர். சற்று வசதியானவர்கள் என்று முன்பே அறிந்தமையால் லேசாய் பதட்டமின்றி வந்தார்கள்.

   ஹாலில் வந்து சேர்ந்ததும் ஆளுக்கு ஒரு அறையை சுட்டிக்காட்டி, குளிக்க அனுப்பினார்.

  மஞ்சரியும் தனதறையில் ரெப்பிரஷ் ஆக சென்றிருந்தார். கடல் காற்று உப்பால் பிசுபிசுத்திருந்த தேகத்தை குளியால் விரட்டியடித்தனர்.

   அதற்குள் லெமன் டீ காபி பால் என்று விருப்பத்திற்கு ஏற்ப வந்து சேர, ஹாலில் குழுமினார்கள்.

   தருண் அவனின் அப்பா அம்மா என்று வந்து சேர, தருண் கன்னம் ஏற்கனவே அறை வாங்கிய தடயம் இருந்தது.

    தருண் அந்த கோபத்தோடு வந்தான்.

   நைனிகாவிடம் "பொண்ணு தானே நீ. ஏன்டி இப்படி பண்ணின. சும்மா மிரட்டியதுல என்னை மாட்டிவிட்டுட்ட, இதுல எங்க பாட்டியிடம் என்ன ரீல் விட்ட" என்று கத்தினான்.

   "அவளை ஏன் கேட்கற? நீ விரும்பினவ. அவளோட ஒன்னா இருந்ததை ஏன் வீடியோ எடுத்த. அதை வைத்து ஏன் அவளோட நிம்மதியை குலைச்ச? இதான் உங்க அகராதில காதலா?" என்று மந்சரி கேட்டதும் கூறத்தயங்கி தலை கவிழ்ந்தான்.

    இது காலம் மாறியதன் விளைவு. எதையும் வீடியோ எடுக்கும் எங்கள் இளமையும் காலமும் என்று நட்புகளிடம் பேசுவது போல வாயாட முடியுமா?

   அமைதியின் மறுவுருவமாக நின்றான்.

   "இப்ப இந்த வீடியோவை டெலிட் பண்ண சொல்லுங்க. எத்தனை பேர் பார்த்து தொலைத்தாங்களோ" என்று தருண் தாயார் பேச, நைனிகா அது இந்நேரம் எத்தனை காபியா டவுண்லோட் ஆனதோ?' என்று முனங்கினாள்.

   மஞ்சரிக்கு 'பகவானே' என்று அழுத்தம் கூடியது.
  
    இந்த காலத்து பிள்ளைகள் எப்படி எடுத்துக்கொள்ள என்று விழிபிதுங்கினார். தன் நலத்தையும் சேர்த்து அல்லவா இவள் ஏலமிட்டது.

   தருணை ஒழுங்காக வளர்க்காமல் பிறரை குறை கூறயியலாது. ஒரு வேளை நைனிகாவை சந்திக்காமல் இந்த வீடியோ பற்றி தன்னிடம் முறையிட வந்தாள் நைனிகாவை எப்படி எடுத்திருப்போம்' என ஒரு நொடி நினைத்து பார்க்க தானே நைனிகாவை கேவலமாக நோக்கும் நிலையில் இருப்போம். இன்று அந்த பெண்ணிடம் சுயநலமின்றி பழகி பார்த்தவராக யோசித்தார்.

    அவரவர் வாழ்வு அவரவர் முடிவெடுக்க அதுவே சரி. தவறென்ற விதத்தில் எடுத்துரைக்கலாம்.

   நைனிகாவோ ''டெலிட் பண்ணறேன். உங்களுக்காக இல்லை. என்னை லவ் பண்ணி ஏமாத்திய காதலனுக்காக இல்லை. எனக்காக இல்லை... எங்க குடும்பத்துக்காக இல்லை. இந்த நிலையிலும் எனக்காக யோசித்து நடுநிலையா இருக்கற மஞ்சரி பாட்டிக்காக." என்றவள் சரசரவென அழித்தாள். ஏற்கனவே பகிரும் ஆப்ஷன் இல்லாமல் தான் பதிவிட்டாள். கூடுதலாக டவுன்லோட் செய்யும் வசதியை நீக்கியிருந்தாள். மற்றவர் போனில் இருந்து வீடியோ எடுக்கலாம் என்ற ரீதியிலும் கை தேர்ந்த ஹெக்கர்ஸ் யாரேனும் டவுன்லோட் பண்ணலாமென்ற வகையில் பதிவிட்டிருந்தாள். 

     அழித்து முடித்து நின்றாள்.

    "நீ எனக்கு வேண்டாம். இனி என் லைப்ல நுழையாத" என்றவள் மஞ்சரியிடம் நின்றாள்.

   "தேங்க்ஸ்.. வீட்டை விட்டு வெளியே போ" என்று தருண் விரட்டாத குறையாக நாய் போல கத்தினான்.

   "அவயேன் போகணும் டா. நீ போ. இது என் வீடு. இந்த வீட்டை நான் இன்னமும் யார் பெயர்லயும் பதிவு பண்ணலை. இங்க எனக்கானவங்க இருக்கலாம். நீ போ. நீ உங்கம்மா அப்பா அதோட என் வயிற்றுல பிறந்த எல்லாரும் போங்க." என்று மஞ்சரி திடமாய் கூறினார்.

   "எங்களை போக சொல்லிட்டு இவளோட இருப்பிங்களா?" என்று தருண் கேட்க, ஆமென்றார் மஞ்சரி.

   "நாளைப்பின்ன என்னை பார்க்க எப்ப வருவிங்க? பேரனை கூட்டியா பேத்திய கூட்டிட்டு வா. சின்ன பையனை பார்க்கணும்னு புலம்பினா யாரும் வரமாட்டோம்." என்றாள் மகள்.

    "நான் செத்தா ஈமக்காரியம் கூட பண்ண வரவேண்டாம். இரண்டு நாளா ஆளைக்காணோமே அம்மா எங்கனு தேடினிங்க? நீங்களாம் நான் செத்தப்பிறகு வந்து மட்டும் என்ன பண்ணப் போறிங்க" என்று மஞ்சரி கூறவும் மொத்தமாய் அவ்விடம் விட்டு இரண்டு நொடியில் கலைந்தனர்.

     "ஏன் பாட்டி அப்படி பேசினிங்க?" என்று நைனிகா கேட்டு மஞ்சரியின் தோளில் கை வைத்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

   

 

  

   

   

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1