பஞ்ச தந்திரம்-16

பஞ்ச தந்திரம்-16

    ஆறு மாத காலங்கள் கடந்தது. 

            திரிஷ்யா பள்ளி வாளாகத்தில் அவளது குழந்தைக்காக காத்திருந்தாள். 

   கோர்ட்டில் உதயிடம் அன்னையிடம் இருக்க போகின்றாயா? தந்தையிடம் இருக்க போகின்றாயா? என்று கேட்டதற்கு மழலை குரலில் "எங்கப்பா கூட" என்று கூறினான். 

  அவ்விடத்திலேயே திரிஷ்யா உடைந்து போனவளாய் சுருண்டாள். 

    கோர்ட்டில் தீர்ப்பு கூறும் போது மயக்கத்தில் ஆழ்ந்திருக்க, வெளியே வரும் போது தந்தையின் கைவளைவில் இருந்தான். 

        கடைசியாக அருகே சென்று பேச முயன்றவளிடம், "ஐ ஹேட் மம்மி. நீ எனக்கு வேண்டாம்" என்று கூறி தந்தையை கண்டான் பாலகன். 

     தந்தை கூறியதை அப்படியே ஒப்பித்தாயிற்றா என்று சரிபார்த்து கொண்டார்கள். 
   
      'அம்மா' என்ற அருகதை அற்றவளாக மாற்றிவிட்டார்களே என்று பரிதவிக்க, "அம்மா வாங்க போகலாம். உங்களோட சுதந்திர நாளை கொண்டாடலாம்" என்ற தனுஜா குரலால் உயிர்பெற்றாள். 

    "வர்றேன் டா குட்டி" என்று மகிழ்ச்சி பொங்க கூறி "என்ன பார்க்கற பெத்த குழந்தையை நல்லவனா வளர்க்கறது பெரிய விஷயம். அதை விட பெறாத குழந்தையை பெத்த குழந்தையை விட நல்லா வளர்க்கறது அதை விட பெரிய விஷயம். 

    சவால் விட்டு சொல்லவா... நீ வளர்க்கற நம்ம பையன் உதயை விட  நான் வளர்க்கற என் பொண்ணு தனுஜா குணத்துல படிப்புல எப்படி வளர்க்கறேன் பாருடா." என்று கூறவும் திரிஷ்யா தாய் தந்தையர் பதறினார்கள். 

   "திரிஷ்யா என்ன பேசற. மாப்பிள்ளை அவரு." என்று திரிஷ்யா தாய் தான் அதட்டினார்.

    "இவனுக்கு என்ன மரியாதை. பிட்!!டு படம் பார்க்குறவன். நீங்க வேண்டுமின்னா மாப்பிள்ளைக்கு மாலை போட்டு மரியாதை பண்ணுங்க" என்று இளக்காரமாக கூறிவிட்டு தனுஜாவை அழைத்து சென்றாள்.

     வேதாந்தோ "உங்க பொண்ணுக்கு  இனி தான் என் அருமை புரியும். நல்ல வீட்டை புருஷனை இழந்துட்டது புரியும்" என்று கூறவோ "டேய் டேய்.. எப்படி டா... இப்படி காமெடி பண்ண முடியுது. உன் முகறகட்டையை கண்ணாடில பார்த்து கேளு... யார் தப்பு செய்தது யார் குறைவுள்ளவங்கனு தெரியும்." என்று நக்கலாக கூறி சென்றதும் வேதாந்திற்கு கோபம் வர மகனை அழைத்து கொண்டு காரில் ஏறினான். 

    நாகேஸ்வரியோ "திமிரு பிடிச்சவ.. இரண்டு பேர் கூடயிருந்தா கொடுக்கு முளைச்சுக்குமா. எத்தனை நாள் சோறு போடுவாங்க. 

    நீ வண்டியை எடுடா. உனக்கு அடுத்து பொண்ணு பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என்று சராசரி அன்னையாக கூறுவது திரிஷ்யா தாய் தந்தையர் காதில் விழுந்தது. 

   மகளை தங்களோடு அழைத்து செல்ல நேருமோ என்று பிடிக்காமல் இருக்க, மகள் அதற்கும் தங்கறிடம் வராமல் ஒரு குழந்தையோடு செல்வதில் நிஜமாகவே விழித்தனர். ஆனால் அடுத்து திருமணம் செய்ய வரிசையில் இருக்கும் பெண்ணிற்காக இவளை வாழாவெட்டியாக வீட்டில்வைத்து கொள்ளவும் இயலாது. அதனால் எங்கு போகின்றாளோ போகட்டுமென்று இருந்தனர். 

    அதன்பின்னும் திரிஷ்யா ரஞ்சனா தனுஜா என்று தான் மூவராய் இருந்தார்கள். 

    ரஞ்சனாவுக்கு அவளைக்கு வந்த நோயால் அதற்குண்டான மருத்துவமனையில் சென்று சேர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் கூடுதலாகவும் முழு மனதாய் திரிஷ்யாவிடம் ஒப்படைத்தாள். 

   அப்பொழுது கூட "உன்னால முடியலைனா இந்த ஆசிரமத்துல சேர்த்திடு. நான் விசாரித்தவரை இது பெஸ்ட்னு தோணுது. நான் அந்த நிர்வாகியிடம் பேசிட்டேன். எப்ப வேண்டுமென்றாலும் நீ தனுஜாவை சேர்த்துவிட்டாலும் பார்த்துப்பாங்க." என்று உரைத்தாள். 

   "இந்த ஆசிரமத்துக்கு என் மக தனுஜா என்னைக்கும் போக மாட்டா. நான் அனுப்ப மாட்டேன். என் மகளை நான் பார்த்துப்பேன்." என்று திரிஷ்யா கூற, "இல்லை உனக்குனு ஒரு லைப் எதிர்காலத்துல வந்தாலும்...." என்று ஆரம்பிக்க, "அப்படி வந்தாலும் என் மகளோட வர்ற எதிர்கால வாழ்க்கை இருந்தா போதும்" என்று கூறினாள் திரிஷ்யா. 

   தனுஜாவிடம் முடிந்தவரை ரஞ்சனா வீடியோ காலில் பேசுவதாக கூறினாள். 
    அப்படி என்றாவது ஒரு நாள் வீடியோ கால் வரவில்லையென்றால் திரிஷ்யா அம்மாவை தொந்தரவு தரக்கூடாது என்று கூற, ஏற்வே பலதும் சொல்லி பழக்கப்படுத்திய குழந்தை சோகமாய் தலையாட்டியது. 
   
   மஞ்சரி நைனிகாவிடமும் சொல்லிவிட்டு தோல் பையோடு கிளம்பினாள். 

   தனுஜா அழவும் நைனிகா தூக்கி கொண்டு கன்னத்தை துடைத்துவிட்டாள். 

   நைனிகாவோ-மஞ்சரி தனுஜா-திரிஷ்யா என்ற நால்வரும் ஒரே வீட்டில் தான் வசித்தார்கள். 

  திரிஷ்யா அவளுக்கு உலகய் தெரியாததால் கிடைத்த வேலையில் சேல்ஸ் கேர்ளாக பணிப்புரிய துவங்கினாள். 
   அந்த சம்பளமே தனுஜா படிப்புக்கும் மற்றவைக்கும் ஓரளவு கைக்கொடுத்தது. 

   நைனிகாவுமே கல்லூரி படித்தபடி ஹோட்டலில் பணிப்புரிய ஆரம்பித்தாள். 

   என்ன தான் மஞ்சரி வீட்டிலிருந்தாலும் தேவையற்று அவர்களிடம் கையேந்தும் எண்ணம் இல்லை. 

    மஞ்சரிக்கு அதில் வருத்தம் கொண்டாலும். தனித்து வாழ பெண்களுக்கு ஒரு வேலை வேண்டும். தன்னம்பிக்கை பெருகவும், பலவித சூழ்நிலைகளில் மக்களின் சுடுச்சொற்களை தாங்கவும் பழக இந்த அனுபவங்கள் வேண்டுமென்று புரிந்தது. 

    தினமும் நைனிகா தனது மஞ்சரி பாட்டியிடம் கதை அளப்பால், கல்லூரியில் இப்படி மதிப்பெண் எடுத்தேன். கேண்டீனில் இதை சாப்பிட்டேன். பூங்கை மரத்தில் இளைபாறினேன். மதிய உணவை ஒரு காகத்துக்கு வைத்தேன். அது தினமும் தற்போது வந்த்விடுகிறது என்று மாற்றி மாற்றி கூற, தனுஜாவும் திரிஷ்யாவிடம் பகிர்ந்தாள். 

   பள்ளியில் தோழிகளோடு கதைத்தவை முதல் தனக்கு நடந்தவை அனைத்தும் விவரித்தாள். 

    மஞ்சரிக்கும் தனுஜாவோடு கதைக்கூறுவது பிடித்தது. தனசு பேரன் பேத்திகளோடு இருக்க ஆசைப்பட்டதை எல்லாம் தனுஜா நைனிகாவோடு வாழ்ந்தார். 

    நைனிகாவும் நல்ல வழிகாட்டியாக பாட்டி மஞ்சரி, திரிஷ்யா அக்கா, குட்டி தங்கையாக தனுஜா என்று வாழ்க்கை வட்டம் அடங்கியது. 
 
    நாட்களும் அதன் போக்கில் சென்றிட ரஞ்சனா போன் காலில் தினமும் பேசினாள். 

   இதற்கிடையே அவமானமும் மானபங்கமும் ஏற்படாமல் இல்லை. நைனிகாவுக்கு கல்லூரியில் அது பாட்டிற்கு நிகழ்ந்து. 

  கிண்டலோ கேலியோ அவளை அசைக்க வில்லை. மாறாக அவளை உறுதியாக்கியது. 

  திரிஷ்யாவையும் வேதாந்த் சும்மாவிடவில்லை. அவள் வேலை செய்யும் இடம் தேடி வந்து அவளை வெறுப்பேற்றும் விதமாக தன் புதுமனைவியுடன் துணியெடுக்க வந்தான். 

  திரிஷ்யா பார்வை வேதாந்த் கூட வந்த பெண்ணை தாண்டி உதயை தேடியது. ஆனால் அவன் வரவில்லை. புதுமணதம்பதிகள் மட்டும் வந்திருந்தனர். 

    வேதாந்த் தனது இரண்டாவது மனைவியை, அங்கும் இங்கும் கைகளை போட்டு திரிஷ்யா பார்க்க வெறுப்பேற்ற, திரிஷ்யாவோ "வேதாந்த்... சிசிடிவி கேமிரா அங்கயிருக்க, நீ பாட்டுக்கு என்னை வெறுப்பேற்ற உன் புது மனைவியோட சில்..!மிஷம் பண்ணாத. அப்பறம் வைரல் வீடியோவா நீ பார்க்க கி!.ல்!மா சைட்ல வந்தாலும் வரும். 

  நீ சந்தோஷமா வரவேற்கலாம். பாவம் உன்னை நம்பி வந்த அப்பிராணி ஜீவன் இவளை அசிங்கப்படுத்தாதே. உன்னை மாதிரி கண்டவனும் அவ உடலை பார்ப்பாங்க" என்று புதுமனைவி முன்னே பெயரிட்டு பொட்டிலடித்தாற் போல பேச அறைவாங்கிய உணர்வோடு கட்டியவளை இழுத்து கொண்டு சென்றான். 

  திரிஷ்யாவோ 'இவன் திருந்தாத கேஸு.' என்று பணியை செவ்வென கவனித்தாள். 
 
  -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 
    

 
 
    
      

   

   

Comments

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1