என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே
என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே
என்று சொல்வதும் நானே தான்
உன்னில் உயிராய் கலந்து
உந்தன் சுவாசத்தை சுவாசித்து
உனக்காக வாழும் பேதையே தான்
விழிகளில் மோதி வானத்தில் பறந்து
விரக்தியில் தவிப்பதும் நானே தான்
வானவில்லின் வர்ணமாய் வந்தவனே
வசந்தத்தை எனக்காய் தந்தவனே
வாஞ்சையோடு சொல்வதும் நானே தான்
உன் அன்பை சிறுகச் சிறுக சேர்த்து
நம் காதலை பருகியவளும் நானே தான்
எங்கோ கேட்கும் பாடலுக்கு
என் இதயத்தில் வாசம் கொள்ளும்
உன்னை எண்ணி மருகுவதும் நானே தான்
உப்பில்லா உணவும் ருசிக்க செய்யும்
உன் நினைவு கோப்பைகளை
எனக்குள்ளே தேக்கி வைப்பதும் நானே தான்
நித்திரையில் கள்வனாய் நீ புகுந்திட
நித்தமும் அக்கனவு வேண்டுவதும் நானே தான்
என்னை விட்டுப் பிரிந்துவிடு என்று சொல்கின்றேன்
நம் காதல் வேரூன்றி இருக்கும் ஆழம் உணர்ந்தே
ஏனெனில்
நம் உண்மை காதல் அழியாதே...
-- பிரவீணா தங்கராஜ் .
என்று சொல்வதும் நானே தான்
உன்னில் உயிராய் கலந்து
உந்தன் சுவாசத்தை சுவாசித்து
உனக்காக வாழும் பேதையே தான்
விழிகளில் மோதி வானத்தில் பறந்து
விரக்தியில் தவிப்பதும் நானே தான்
வானவில்லின் வர்ணமாய் வந்தவனே
வசந்தத்தை எனக்காய் தந்தவனே
வாஞ்சையோடு சொல்வதும் நானே தான்
உன் அன்பை சிறுகச் சிறுக சேர்த்து
நம் காதலை பருகியவளும் நானே தான்
எங்கோ கேட்கும் பாடலுக்கு
என் இதயத்தில் வாசம் கொள்ளும்
உன்னை எண்ணி மருகுவதும் நானே தான்
உப்பில்லா உணவும் ருசிக்க செய்யும்
உன் நினைவு கோப்பைகளை
எனக்குள்ளே தேக்கி வைப்பதும் நானே தான்
நித்திரையில் கள்வனாய் நீ புகுந்திட
நித்தமும் அக்கனவு வேண்டுவதும் நானே தான்
என்னை விட்டுப் பிரிந்துவிடு என்று சொல்கின்றேன்
நம் காதல் வேரூன்றி இருக்கும் ஆழம் உணர்ந்தே
ஏனெனில்
நம் உண்மை காதல் அழியாதே...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment