நிலவு



















காரிருளில் தன்னந்தனியே கதைப்பேசும் காதல்நிலவே !
கண்ணெதிரே வராமல் மேகத்தினுள் குழந்தையாய்...
நீ தவழ்ந்து ஒளிந்து கண்ணாம்பூச்சி காட்டுகின்றாய்...
மின்மினிப் பூச்சியாய் என் நெஞ்சம்
உன்னில் ஒளிப் பெற்றே பிரகாசமாகின்றதடி 
பனிப்பொழியும் பால்நிலவே பிரபஞ்ச பேரழகே !
பன்மொழியில் கதைத்திடவே ஆசையடி நிறைமதியே !
பசலை நோயில் மெலிந்து தேய்பவளே... 
கற்கண்டு நட்சத்திரம் உண்ணாமல் வாடுவது ஏனோ ?!
தனியே தன்னந்தனியே தாரகை திங்களே !
தலைவனை தேடியே தவிக்கின்றாயோ...
களங்கமில்லா மேனிக்  கொண்ட நிறைமதியே
மாதத்தில் ஒரு நாள் வீட்டுக்கு தூரமோ ?! 
தங்கநிலவாய் ஜொலிக்கின்றாய் நீரில்
உன்னை அள்ளி பருகும் ஆடவன் யாரோ ...
கவிஞனுக்கும் காதலுக்கும் நீயொரு காட்சி நிலா
எனக்கு மட்டும் தோள்கொடுக்கும் நட்பிலா . 

                                         -- பிரவீணா தங்கராஜ் .

 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1