🌹 உலகமே உதயம் எதனில் 🌹

பட்ட மரத்தின் வேருக்கு
பூக்கள் பூக்க செய்ய
பயோதரம் விடும் கண்ணீர்
திவலை யெதற்கு....?!
தன் கூட்டின் மேல
தான் இடா முட்டைக்கும் 
தாயாய் அடைகாக்கும்
காகம் எதனால்...?!
முட்டி மோதி கொள்ளும் உறவுகள்
பந்தமெனும் கூடும் விழாவில்
ஒன்றுபட்டு புன்னகைப்பெதனால்...?!
பிடியள்ளி உண்ணும் சாதம்
பிள்ளை வந்து முன்னிற்க
பாசமாய் உணவளிப்பதும் எதனால்...?!
எங்கோ கேட்கும் திரிவூர்தி ஓசையது
எங்கோ மூலையில் ஒரு மனம்
வேண்டிடுவதும் எதனால்...?!
எதனால்... எதனால்...
உலகமே உதயம் எதனில் தேடிட...
அன்பே நீ கரைந்திடு  தாய் தந்தைக்காய்...!
பாசமே நிறைந்திடு சகோதரத்துவமாய்...!
நேசமே விதைத்திடு உறவும் நட்புமாய்...!
காதலே கலந்திடு காவியமாய்...!
உலகமே உதயம் அன்பில் - அதை
உணர்த்தியே சொல் உன்னில்.
                              -- பிரவீணா தங்கராஜ்.
பயோதரம்--மேகம்
திவலை-----மழைத்துளி
திரிவூர்தி---ஆம்புலன்ஸ்


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...