மழைக்கு ஒதுங்கிய வானம்



















சிறுதூறலில் என்னை குழந்தையாக்கி
பெருசாரலில் நாசியை வருடும்
மண்வாசம் கிளறியே...
ஒரு கோப்பை தேனீரில்
கசந்ததோ சுகந்ததோ மனதின் மூளையில்
தேங்கிய நிகழ்வை முன்னிறுத்தி
நாழிகளை நகர்ந்திடாது மயிலிறகாய் வருடுகின்றாய்...
சோனையில் கப்பல் விட அடம்பிடிக்கும்
குழந்தையாய் துள்ளுகின்றது என் மனம்
ஆசாரம் அளித்திடுமே...
கவிஞனுக்கு கவிகளாய்...காதலுக்கு தோழனாய்...
வான் மழையே... வா மழையே...!
சிறு தூறலோ... பெரும் திவலையோ...
பச்சை நெற்பயிரில் பட்டு தெறிக்க
வைரத்தை மூடிய தங்க பஸ்பமாக
நெல்மணி கண்ணு(திரு)ம் வளர்ந்திடவே!
உழவனின் நேசத்தின் வரவேற்பின்
மழைக்கு ஒதுங்கிய வானம் வழிவிட
மண்ணிற்கு அழுத்த முத்தமிட்டே
சுவடுபதி ஆலியே... !
                   -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு