புது விடியலைப் படைத்திடு
எழுதுக்கோல் பற்றியிருக்கும் விரல்களுக்கு கூட
எழுதும் விதி இதுயென அறிந்திட வாய்ப்பில்லை
எண்ணங்களின் வண்ணங்கள் மட்டுமே
ஏற்றயிறக்கங்களை உண்டென உணர்ந்திடு
வறுமையை மாற்ற உழைப்பை விதைத்திடு
இருமைக் கொண்டு நடந்திடும் நிகழ்வுகள்
இன்பத் துன்பத்தை இனிதே செப்பிடும்
கண்ணீரை கணமும் நிறுத்திப் பிறருக்கும்
புன்னகை நாளும் பரிசாய் பூரித்திடு
பகைமை யெனும் பண்பை ஒழித்து
தகமை நாடும் உள்ளத்தில் ஒளிர்விடு
எனக்கு மட்டுமே இப்படியா என்று
எக்களிக்கும் நிகழ்வுகளை மதியால் மாற்றிடு
எண்ணியெண்ணி சிரத்தையாய் செப்பிடும் கனவுகளை
வர்ணங்களைக் கலந்தே விதிக்கு மாற்றி
வாழ்வுக்குப் புது சாயம் மெருகேற்றிடு
புது விடியலைப் படைத்திடு
-- பிரவீணா தங்கராஜ் .
எழுதும் விதி இதுயென அறிந்திட வாய்ப்பில்லை
எண்ணங்களின் வண்ணங்கள் மட்டுமே
ஏற்றயிறக்கங்களை உண்டென உணர்ந்திடு
வறுமையை மாற்ற உழைப்பை விதைத்திடு
இருமைக் கொண்டு நடந்திடும் நிகழ்வுகள்
இன்பத் துன்பத்தை இனிதே செப்பிடும்
கண்ணீரை கணமும் நிறுத்திப் பிறருக்கும்
புன்னகை நாளும் பரிசாய் பூரித்திடு
பகைமை யெனும் பண்பை ஒழித்து
தகமை நாடும் உள்ளத்தில் ஒளிர்விடு
எனக்கு மட்டுமே இப்படியா என்று
எக்களிக்கும் நிகழ்வுகளை மதியால் மாற்றிடு
எண்ணியெண்ணி சிரத்தையாய் செப்பிடும் கனவுகளை
வர்ணங்களைக் கலந்தே விதிக்கு மாற்றி
வாழ்வுக்குப் புது சாயம் மெருகேற்றிடு
புது விடியலைப் படைத்திடு
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment