வாடகைதாரருக்கான முக்கிய சட்ட உரிமைகள்

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான சட்ட உரிமைகள் இந்தியாவில் மிக முக்கியமானவை. உங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்வது, எந்தவொரு சிக்கலிலும் பாதுகாப்பாக இருக்க உதவும். 

🏠 வாடகைதாரருக்கான முக்கிய சட்ட உரிமைகள்

  • வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும்: 11 மாதங்களுக்கு மேல் வாடகை ஒப்பந்தம் இருந்தால், அதை சட்டபூர்வமாக பதிவு செய்ய வேண்டும். சாதாரண காகிதத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் நீதிமன்றத்தில் செல்லாது. வீட்டின் உரிமையாளர் மோசடியில் ஈடுபட்டிருந்தால் இவை உங்களுக்கு பாதுகாப்பாக அமையும்

  • உங்கள் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைய முடியாது: வீட்டு உரிமையாளர் உங்கள் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைவது சட்டவிரோதம். இது தனிப்பட்ட உரிமைக்கு எதிரானது.

  • திடீரென வெளியேற்ற முடியாது :உரிமையாளர் திடீரென உங்களை வெளியேற்ற முடியாது. குறைந்தது 2 மாதம் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

  • அட்வான்ஸ் தொகைக்கு வரம்பு உள்ளது: உரிமையாளர் அட்வான்ஸ் தொகையை கேட்கலாம், ஆனால் அது சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும். சில மாநிலங்களில் இது 3 மாத வாடகையை தாண்டக்கூடாது.

  • வாடகை ரசீது பெறுவது உங்கள் உரிமை: நீங்கள் ரொக்கமாக வாடகை செலுத்தினாலும், ரசீது கேட்டால் உரிமையாளர் கட்டாயம் வழங்க வேண்டும். இது வாடகை செலுத்தியதற்கான சட்டப்பூர்வமான ஆதாரம். எனவே செலுத்திய வாடகைக்கு ரசீது பெறுவது கட்டாயம்.

  • நீதிமன்றத்தில் முறையிடும் உரிமை :வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சனைகளை நீதிமன்றத்தில் எடுத்துச் செல்லலாம். சென்னையைப் பொறுத்தவரை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.

  • வீட்டு உரிமையாளர் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை வாடகைதாரருக்குத் தடைசெய்ய முடியாது. அதற்கான உரிமைச் சட்டத்தில் இல்லை. அதுபோலத் திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்லவும் முடியாது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.

  • 100 வருடம் இருந்தாலும் வீடு சொந்தமாகாது: நீண்ட காலம் ஒரு வீட்டில் வசித்தாலும், அந்த வீட்டின் உரிமையை கோர முடியாது. உரிமை என்பது ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே அமையும்

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2