ராகி நூடுல்ஸ்
நமக்கு மைதா நூடுல்ஸ் தான் தெரியும். மோஸ்ட்லி உடலுக்கு கெடுதி என்று அதிகம் வாங்க யோசிப்போம். ஆனா நூடுல்ஸ்ல கூட வெரைட்டி இருக்கு. ராகி, சோளம், திணை, வரகு, இப்படி கடையில் விற்கும். கேட்டு வாங்கி குழந்தைக்கு கொடுங்க. அப்படியே கொடுக்கமா, காய்கறி சேர்த்து செய்து தாருங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி நூடுல்ஸ் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை பட்டாணி – 1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கேரட், கேப்ஸிகம், முட்டைகோஸ் – சிறிது
எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
செய்முறை:
நூடுல்ஸ் வேகுதல்: தண்ணீரில் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்கவைத்து, ராகி நூடுல்ஸை 5 நிமிடங்கள் வேக வைத்து வடிகட்டவும்.
காய்கறி வதக்குதல்: எண்ணெயில் வெங்காயம், இஞ்சி பூண்டு, பிற காய்கறிகளை வதக்கவும்.
மசாலா சேர்த்தல்: மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
நூடுல்ஸ் சேர்த்தல்: வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாக கிளறி, ஸ்ப்ரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.
Comments
Post a Comment