தோல் பிரச்சனையும் எளிதான தீர்வும்
தோல் என்பது மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு. இது உடலை பாதுகாக்கும் முதல் பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது.
🧬 தோலின் முக்கிய பணிகள்
பாதுகாப்பு: பாக்டீரியா, வைரஸ், மற்றும் வெளிப்புற ஆபத்துகளிலிருந்து உடலை பாதுகாக்கும்.
உடல் வெப்பநிலை கட்டுப்பாடு: வியர்வை மற்றும் இரத்த நாளங்கள் மூலம்.
வைட்டமின் D உற்பத்தி: சூரிய ஒளியின் மூலம் தோல் வைட்டமின் D உருவாக்க உதவுகிறது.
உணர்வு: தொடுதல், வெப்பம், வலி போன்ற உணர்வுகளை உணர உதவும்.
பராமரிப்பு | விளக்கம் |
---|---|
சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல் | UVA/UVB கதிர்களிலிருந்து பாதுகாக்கும் SPF கொண்ட சன்ஸ்கிரீன் தேவை. |
தூக்கம் மற்றும் மனஅழுத்தம் | போதுமான தூக்கம் மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு தோல் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். |
இயற்கை வைத்தியம் | அறுகம்புல், மஞ்சள், வேப்பிலை போன்றவை தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும். |
தோல் மருத்துவம் | Dermatology என்பது தோல், முடி, நகங்கள் தொடர்பான மருத்துவப் பிரிவாகும். |
அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல், படை எல்லாம் ஓடிப்போய்விடும். இதனைக் காலை நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.
வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தாலும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.
Comments
Post a Comment