தேவதையும் விறகுவெட்டியும்

                                 தேவதையும் விறகுவெட்டியும்

ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் ஒரு நாள் குளத்து ஓரமாக மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டது.

அவன் குளத்தங்கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அவன் அழுகையைக்கண்டு மனம் இரங்கிய அந்த குளத்தில் குடியிருக்கும் தேவதை அவன் முன்பே தோன்றி, “ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டது.

அவன் உடனே தன்னுடைய கோடரி குளத்தினுள் விழுந்து விட்டதைக் கூறினான். கோடரி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவது மிகுந்த சிரமம் என்று கூறி அழுதான்.

உடனே தேவதை குளத்தில் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து அவனிடம் காட்டி “இது உன் கோடரியா?” என்று கேட்டது.

அவர் நேர்மையாக “இது என்னுடையது இல்லை” என்றான். அடுத்ததாக ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து காட்டியது. “இதுவும் என்னுடையது இல்லை” என்றான் விறகுவெட்டி.

இறுதியாக தேவதை அவனுடைய இரும்புக் கோடரியை எடுத்து வந்து காட்ட “இதுதான் என் கோடரி” என்றான் விறகுவெட்டி.

அவனுடைய நேர்மையைப் பாராட்டிய தேவதை மூன்று கோடரிகளையும் அவனுடைய நேர்மைக்குப் பரிசாக அவனுக்கே கொடுத்து விட்டு மறைந்தது.

இந்தத் தகவல் இந்த விறகுவெட்டியின் பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரிந்தது. அவனும் அதே குளத்தங்கரை ஓரமாக உள்ள மரத்தை வெட்டச் சென்றான்.

வேண்டுமென்றே தன்னுடைய கோடரியைக் குளத்தினுள் போட்டு விட்டான். குளத்தங்கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான்.

அவன் முன்பும் தேவதை தோன்றியது.”ஏன் அழுகிறாய்?”என்று கேட்டது.

அதற்கு அவன் “என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு இதுபோன்று கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டது. அவன் நேர்மையாக இருந்ததற்காக அவனுக்கு தங்கம், வெள்ளி, இரும்பு என மூன்று கோடரிகளை நீ பரிசாகக் கொடுத்திருக்கிறாய்.”

“எனவே எனக்கும் அவ்வாறு கிடைக்கும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன், எனது கோடரியைக் குளத்தினுள் போட்டேன்”என்று அவன் தேவதையிடம் உண்மையைக் கூறினான்.

அவனுடைய நேர்மையைக் கண்டு வியந்த தேவதை, அவனுக்கும் மூன்று கோடரிகளைப் பரிசளித்தது. அவன் மகிழ்வுடன் தன் வீடு திரும்பினான்!

நீதி:

நேர்மையால் நன்மையே நடக்கும்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2