முடக்கத்தான் கீரை

 முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் #மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.

முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

முடக்கத்தான் கீரையை வாயு பிரச்சனையால் அவதிபடுபவர்கள்  சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.

இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும். முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.

இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...