கடைசி பத்துநிமிடம்
கடைசி பத்து நிமிடம்
நான் இங்க தவிச்சிட்டு இருக்கேன். என்னால இனி என்னை காப்பாத்திக்க முடியலை. இதுக்கு மேல முடியாதுனு தோனுது.
ஆனா அவள் மட்டும் மனசு வச்சா நான் பிழைப்பேன். மனசு வைப்பாளா. அவ லாஸ்ட் இயர் செவிலியர் பயிற்சி எல்லாம் படிச்சி ஒரு நர்ஸாக போக தகுதி இருக்கு. கடவுளே ஆனா அவ பார்க்க மாட்டரா. பார்த்தா தானே உதவி கேட்பது. கேட்டாதானே அவள் உதவி பண்ணுவா. முதல்ல உதவி பண்ணுவாளா? என்ற அச்சம் தாக்கியது.
இந்த இடத்துல உதவி எதிர்பார்ப்பது எல்லாம் ரொம்ப தப்பு. எதிர்பார்க்கவும் கூடாது. இங்க மனிதநேயம் செத்துடுச்சு.
இப்படி தான் புலம்பி கொண்டிருந்தான் ரவீந்தர். அதுவும் அரை மணி நேரமாக.
அவன் புலம்புவது யார் காதிலும் விழவில்லை. அப்படி நிசப்தமாய் புலம்பும் விதமாக அவனுக்கு அமைந்து விட்டது.
அவனின் தலையெழுத்தை எண்ணாக அங்கே யாரோ கிறுக்கி வைத்திருப்பார்கள் போலும்.
மெதுவாய் தலை சாய்த்து இமை மூடினான்.
இமைக்குள் "நீயெல்லாம் படிச்சி வேலைக்கு போறதுக்குள்ள என் உசிரு போகிடும்." என்று தந்தை குரலும், "ஏன்டா எத்தனை அரியர் உங்கப்பா உயிரை கொடுத்து வாங்கின சீட்டு. இப்படி இருக்கியே. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா. நம்ம வீட்ல உனக்கு பிறகு பிறந்து வளர்ந்த உன் தங்கை ஜானகி எல்லாம் வேலைக்கு போறா. நீ இன்னமும் அப்பா காசுல இருக்கியே." என்ற அம்மாவின் கத்தல் மொழிகள் செவியறையில் மோதியது.
"உங்களுக்கு என்ன நான் படிக்கலை வேலைக்கும் போகலை அதானே. கவலைப்படாதிங்க ஏதாவது இரயில் தண்டவாளத்துல தலையை கொடுத்துட்டு செத்துடறேன்." என்றான் ரவீந்தர்.
இப்பொழுது அப்படிப்பட்ட நிலை தான். தலைக்கொடுத்து விட்டாயிற்று.
அங்கே அவன் கொண்டு வந்த பிஸ்லரி தண்ணீரை எடுத்து குடித்தான். நீரின் தாகம் அடங்கியது. ஆனால் வாழ்க்கையின் பதிலை தேடும் தேடல் அடங்கவில்லை.
தலையை உயர்த்தி பார்த்தான் ரவீந்தர். அவனை தவிர யாரும் கவலை கொண்டதாக தெரியவில்லை. அவரவர் வேலையை செய்தனர். மீண்டும் தன் அருகே இருந்தவளை தான் ஏக்கமாய் பார்த்தான்.
அவளின் காதுமடல் சிவந்து இருந்தது. கம்பளில் ஏதோ செருப்பை மாடலாக அணிந்திருந்தாள்.
Comments
Post a Comment