எனக்கு கால் வலிக்காதா!
எழுத படிக்க தெரியாத ஒருவர் முல்லாவை சந்தித்து தனக்கு ஒரு கடிதம் எழுதி தர கேட்டார்!
முல்லா அதற்கு பெரியவரிடம் எனக்கு கால் வலிக்குது அதனால் எழுத முடியாது என்று சொன்னார்!
அதற்கு அந்த பெரியவர் முல்லாவை பார்த்து ஐயா! கடிதம் கையால் தானே எழுதுகிறீர்கள், கால் எப்படி வலிக்கும் என்று சொல்ல!
அதற்கு முல்லா! பெரியவரிடம் ” இங்க பாருங்க என் கையெழுத்து ரொம்ப மோசம்!
நான் எழுதியதை என்னால் கூட படிக்க முடியாது! நான் எழுதியதை நீங்கள் சரிதானா என்று படித்து பார்க்க ஊரில் படிக்க தெரிந்த ஒரு ஆளை உங்களுடன் சேர்ந்து நடந்து நான் தேட வேண்டி இருக்கும் !
அப்ப எனக்கு கால் வலிக்கும் இல்ல அதான் நீங்க கேட்ட கடிதத்தை எழுத முடியாது என்று சொன்னார்.
பெரியவரும் முல்லா சொன்னது நியாயம் என்று படவே! அந்த இடத்தை விட்டு சென்றார்.
-------------------------------
Comments
Post a Comment