முல்லாவும் கழுதையும்…
வேக வேகமாக சென்று கொண்டு இருந்த அவரை வழியில் பார்த்த அவர் நண்பர் என்ன முல்லா நலமாக இருக்குறீர்களா என்று கேட்க!
முல்லா பதில் எதுவும் சொல்லாமல் வேக வேகமாக சென்று விட்டார்.நண்பர் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போ முல்லாவும் வேலையை முடித்து விட்டு கழுதை மேல் வந்து கொண்டு இருந்தார்! இப்பொழுது நண்பர் முல்லாவை பார்த்த மகிழ்ச்சியில் முல்லா ! என்று கூப்பிட முல்லா கழுதையை நிறுத்தாமல் சென்று விட்டார்.
மறுநாள் கழுதை இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த முல்லாவிடம், அவர் நண்பர் என்ன முல்லா நேற்று கூப்பிட கூப்பிட ரெண்டு தடவை நிற்காமல் போய் விட்டீர்கள் என்று சொல்ல!
முல்லா தன் நண்பரிடம் இந்த கேள்வியை நீங்கள் என் கழுதையிடம் தான் கேட்க வேண்டும்.
நண்பர் அது எப்படி கழுதையை ஓட்டுவது நீங்க தானே என்று சொல்ல!
அதற்கு முல்லா சிரித்து கொண்டே சொன்னாராம்! என் கழுதை நான் சொல்படி கேட்காது. நான் கழுதை மேல் ஏறி உட்கார்ந்து கொள்வேன் அது எங்கு செல்கிறதோ அங்கு உள்ள வேலையை நான் முடித்து கொள்வேன் என்றாராம்.
Comments
Post a Comment