நானும் வந்து விடுகின்றேன்
முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி
நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர்
இருந்தார்.
அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத்
திருடிச் சென்றபடி இருப்பார். முல்லா வேலைக்காரர் திருடிச்
செல்வதை அறிந்து கொண்டார்.
ஆயினும் அவரிடம் கோபமாகப் பேசாமல் நயமாகவே திருத்த
நினைத்தார். ஒவ்வொன்றாக நிறையப் பொருளை எடுத்துப்
போய் விட்டார்.
கடைசியாக ஒரு நாள் ஒரு தம்ளரை எடுத்து மறைவாக மடியில்
கட்டிக் கொண்டு, முல்லாவிடம் விடைபெற்று வீடு சென்றார்.
அவர் பின்னாலயே முல்லாவும் பணியாள் வீட்டுக்குச் சென்றார்.
வீடு சென்ற பணியாள் திரும்பிப் பார்க்கிறார், முல்லாவும்
பின்னாலயே வருகிறார்.
“முல்லா நீங்க எங்கே வாரிங்க?” என்றார் வேலைக்காரர்.
“நானும் உங்க வீட்டுக்கே வந்துடறேனே” இது முல்லா.
“ஏன் முல்லா இப்படிச் சொல்றீங்க?”-வேலையாள்
“வேற என்னப்பா? என் பொருளெல்லாம்தான் இங்கே வந்துட்டு,
நான் மட்டும் அங்கே இருந்து என்ன செய்யப்போறேன்? நானும்
வந்துடறேன். அதான் வந்துட்டேன்” முல்லா இவ்வாறு
கூறியதைக் கேட்டதும் வேலைக்காரர் வெட்கப்பட்டுத் தலை
குனிந்தார். கோவமாகப் பேசி இருந்தால், வேலைக்காரர் தலை
குனிவாரா!
-----------
Comments
Post a Comment