பாஸ்தா
🌶️ இந்தியன் ஸ்டைல் மசாலா பாஸ்தா
காய்கறிகள் மற்றும் மசாலா சுவையுடன் குழந்தைகள் விரும்பும் வகை.
பாஸ்தாவை உப்பு சேர்த்த நீரில் வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம் வதக்கவும்.
தக்காளி, கேரட், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.
வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். முட்டை சேர்க்க விரும்புவோர் சேர கொள்ளவும்.
🧀 கிரீமி & சீஸி ஒயிட் சாஸ் பாஸ்தா
பால், சீஸ், வெண்ணெய் கொண்டு செய்யும் மென்மையான பாஸ்தா.
வெண்ணெயில் பூண்டு வதக்கி, மாவு சேர்த்து ரூ தயாரிக்கவும்.
பால் ஊற்றி கிளறி, சீஸ், மிளகு, உப்பு சேர்க்கவும்.
வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
Comments
Post a Comment