Posts

Site-இல் கதை பதிவிடுவது, பகிர்வது எப்படி?

Image
Username password login செய்தவர்கள் கதை எழுத விருப்பப்பட்டால் அவர்களுக்கு Author Access கொடுக்கப்படும்.         அவ்வாறு கொடுக்கப்பட்டதும் எழுத்தாளர்கள் தங்கள் username password போட்டு உள்ளே நுழைந்தால், மேலே சில ஆப்ஷன்கள் உங்களுக்கு காட்டும்.  மேலே கருப்பு வண்ணத்தில் சில ஆப்ஷன் இருக்கும். அதில் ➕ பிளஸ் குறியீடு இருக்கும்.  பிளஸ் ➕குறியீடை தொட்டால் post என்ற option காட்டும். அதில் செல்லவும். desktop site ஆப்ஷன் போன இன்னும் பெட்டர். அதற்கான விளக்கப்படம்.   பிளஸ்➕ வந்து post ல போனால், இந்த ஆப்ஷன் இந்த பேஜ் காட்டும்.  படத்தில் உள்ளது போல, டைட்டில்  episode number  episode  category, tag and publish செய்யுங்கள். publish செய்தவுடன், copy செய்யவும். இது wordpress என்பதால் forum பகுதியில் உங்கள் கதைக்கு கீழே இந்த லிங்க் copy  செய்து paste  செய்யவும். கீழ்க்காணும் படத்தில் தெளிவாக எழுதி உள்ளேன்.  பதிவான உங்கள் கதை இப்பொழுது வாசிக்க ரெடி. share செய்வது எப்படி? நம்ம சைட்டில் நிறைய முறையில் share செய்யும் வசதி உண்...

Site-இல் Register & Login செய்வது எப்படி?

Image
Siteஇல் Register Login செய்வது எப்படி? அதை பற்றி இங்கே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.  இது என்னுடைய blog. தற்போது praveenathangarajnovels.com என்ற website  ஆரம்பித்திருக்கின்றேன்.  வாங்க register login செய்வதை படம் மூலமாக காண்போம். Register login இரண்டு வழியில் செய்யலாம்.  எளிதாக செல்ல..... முதல் வழி... தற்போது Google Login எளிதாக செய்யலாம்..👇🏻 படத்தில் உள்ளது போல login with google செல்லுங்கள். உங்களோட gmail login நுழையலாமா என்று கேட்கும். நீங்க அதை சம்மதம் தந்து அதில் சென்றால் வாசிக்கலாம். எளிதாக உள்சென்று எப்ப வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.  இது இரண்டாம் முறை.👇🏻 Step:1 praveenathangarajnovels.com  என்று google la search பண்ணினா ஒரு website காட்டும். அதற்குள் செல்லுங்கள்.  Step-2    உங்களுக்கு காட்டும் தளத்தின் பகுதியில் Register காட்டுகின்றதா அதை click செய்யவும்.      step-3   Username Email box-ல Tic 𜲑 and Register Press      Step-4  இப்ப உங்க பெயர் register ஆகிடும். ஆனா login செய்வதற்கு...

நீ என் முதல் காதல்-35

  அத்தியாயம்-35    ஸ்ரீநிதியாக ரிதன்யாவிடம் பேசி முடித்து கடிகாரத்தை பார்த்தவள் ம்ருத்யு வரும் அரவம் இல்லாததால், "நீ கிளம்பு. அவன் வெட்கப்படறான்." என்று ரிதன்யாவை அனுப்ப முயன்றாள்.    "சரி நான் கிளம்பறேன். பட் ஒன் கண்டிஷன் உன் வீட்டுக்கு டோர் டெலிவெரியா காம்போ ஆஃபர்ல பீட்சா, கோக், ப்ரென்ஞ்ச் ப்ரைடு பொட்டேட்டோ ஆர்டர் பண்ணிருக்கேன். வந்ததும் வாங்கிட்டு சூடா சாப்பிட்டு கிளம்பறேன். அதுவரை வெயிட் பண்ணுக்கா" என்று கூறவும் ஸ்ரீநிதி தலையிலடித்தபடி மாடிக்கு ஓடினாள்.    "ஏ... அத்தானை பிச்சி திண்ணுடாத." என்று கத்தவும் ஸ்ரீநிதி திரும்பி முறைக்க, ரிதன்யா வாய்மூடி க்ளுக்கி சிரித்தாள்.    ஸ்ரீநிதியோ என்னவோ கேலி பண்ணிக்கோ என்று மாடிக்கு விரைந்தால், அங்கே ம்ருத்யுவோ அதேயிடத்தில் மெத்தையில் வீற்றிருந்தான்.    "ரிது போயிட்டாளா?" என்று கேட்டதும், "பீட்சா ஆர்டர் பண்ணிருக்கா. வந்ததும் சாப்பிட்டு கிளம்பறேன்னு சொல்லிருக்கா. இப்ப கிளம்ப மாட்டா, நீ வா. அவளை பார்த்து ஷையா இருக்க அவசியமில்லை. அதெல்லாம் அடால்ட் டிக்கெட்." என்று கூறினாள்.     "இல்லை நா...

நீ என் முதல் காதல்-34

  அத்தியாயம்-34    ம்ருத்யு தன் காரில் வாட்டர் பாட்டிலை தேடி முடித்து தண்ணீர் இல்லையென்றதை அறிந்து பாட்டிலை கவிழ்த்து "பச்'' என்று வாட்டர் பாட்டிலை வீசியெறிந்தான்.    "அதான் எதிர்க்க கடல் இருக்கே போய் தண்ணி குடிக்க வேண்டியது தான?" என்று ஸ்ரீநிதி குரலில் அவளை துளைக்கும்படி பார்வையிட்டான்.    தன் முதுகு பக்கம் இருந்த ஜிப்பை போடாமுடியாது துழாவி, இவனிடம் வம்பளந்து கொண்டிருந்தாள்.   "மீனா இருந்தா கடல் நீரை குடித்திருப்பேன். உன் ம்ருத்யுவா இருக்கறதால.... உன்னை தான் பருகணும்" என்று மீண்டும் உதட்டை முத்தமிட்டு முடித்தான்.    மறுபக்கம் தானாக கைகள் முதுகுப்பக்கமிருந்த அவளின் ஜிப்பை மாட்டி முடித்தான்.      "திரும்ப கழற்றியோனு நினைச்சேன்." என்று உதடு விடுபட்டதும் ஸ்ரீநிதி உள்ளுக்குள் போன குரலில் உதிர்த்தாள்.       "இரவு நமக்கு சாதகமா இருக்கலாம். பகல் நமக்கு பாதகமா போயிடுச்சே. என்ன தான் காருக்குள்ள நடக்கறது வெளியே தெரியாது என்றாலும் நேற்றிரவு சுத்தி இருட்டு மட்டும் கண்ணுக்கு தெரிந்தது. என் போக்கஸ் முழுக்க நீ மட்டும் இருந...

நீ என் முதல் காதல்-33

  அத்தியாயம்-33   'உன்னை தூக்கி கடல்ல போட்டு, சுறாவுக்கு இறாலா போட்டு இரையாக்கிடுவேன்' என்ற வார்த்தையை எண்ணி புன்முறுவல் பூத்தான். ஸ்ரீநிதியை பருகும் நேரம், மான் போல துள்ளியவள் தந்தை தாயுக்கு நடுவே போனாள்.     "யுகிப்பா உன் அரக்கி பெரிய பெரிய பிராட் வேலையை பார்த்தும் எப்படி யுகிப்பா லவ்ஸ் விடற?" என்று கேட்டாள்.     "உங்கம்மாவோட ஹீரோயினிசம் அப்படி பிடிக்கும்டா. எப்பவும் எந்த விஷயத்திலும் அவ தவறா யோசிக்க மாட்டா.     முதல்ல எனக்குமே நீ விரும்பின ஜீவியோட சேர்த்து வச்சிருக்கலாம்னு கோபம் வந்துச்சு. நீயோ உன்னை விரும்பின ஜீவியோ நெருங்கி வந்து உங்க காதலுக்கு ஒரெடி எடுத்து வைக்கலையே.    அவனுக்காகவது தயக்கம் இருந்தது ஸ்ரீநிதி. உனக்கு என்ன தயக்கம்டா?" என்று கேட்டார்.    "தெரியலைப்பா ஒரு வேளை நானா ஜீவியை பார்த்து விரும்பியிருந்தா அம்மா மாதிரி அடம் பிடிச்சிருப்பேனோ என்னவோ? அவனா வந்து பேசி காதலிச்சி, அவனா அவன் காதலுக்கு முயற்சி செய்யணும்னு இருந்தேன். ஒரு விதத்துல நான் செல்பிஷ் தான் அப்பா.    ம்ருத்யுவும் என்னை விரும்பியிருக்கான். அவ...

நீ என் முதல் காதல்-32

  அத்தியாயம்-32 ம்ருத்யுவோ "சொல்லறது ஒன்னுமே புரியலை அத்தை. எதுவானாலும் சொல்லுங்க." என்று கூற அங்கே நால்வர் கொண்ட இருக்கையில் அமர்ந்தாள் ஷண்மதி. மற்ற மூவருமே அமரவும், ஷண்மதி ஸ்ரீநிதியை தான் வெறித்தாள். ஷண்மதி பார்வையின் அர்த்தம் புரிய "நான் அவனை காயப்படுத்துவேன். ஆனா பிறப்பை வச்சி இன்சல்ட் பண்ண மாட்டேன். ஒருத்தரோட பலகீனத்துல பலத்தை தேடுற முட்டாள் நான் இல்லை. உங்களுக்கு நான் இதை வைத்து அவனை ஹர்ட் பண்ணுவேன்னு தோனுச்சினா எழுந்து போறேன்." என்று வெடுக்கென எழுந்தாள் ஸ்ரீநிதி. "உட்காரு. என்னை பார்க்குற? என் மகளுக்கு எப்படிப்பட்ட குணமென்று எனக்கு தெரியும். உனக்கு வேண்டுமின்னா நான் அரக்கியா தெரியலாம். ஆனா நீ எனக்கு எப்பவும் என் ஸ்ரீகுட்டி." என்றதும் அன்னைக்கு அருகேயிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தாள். ஒருவரை அன்பால் அடித்தால் நிச்சயம் வீழ்ந்திடுவார் தானே?! ஷண்மதி பார்வை மகளை விடுத்து மருமகனிடம் நிலைப்பெற்றது. "தமிழ்நாட்டு சி.எம் அரவிந்த் சேதுராமன் பத்தி என்ன நினைக்கிற?" என்றதும் ம்ருத்யு கண்கள் இடுங்க, நான் குப்பத்துல அரசு மருத்துவமனையில இருந்ததா பிளாஸ்...