மண்டேலா
மண்டேலா சில படங்கள் நடிகர்களுக்காக பார்ப்பது. சில படங்கள் டேரக்டருக்காக, சில படங்கள் இசைக்காக, சில படங்கள் நாயகிக்காக பார்ப்போம். இந்த மண்டேலா படம் யோகிபாபுவிற்காக பார்த்தேன். செம ஹாட்டா ஹான்ட்சமா, ஸ்மைல்-ல, அட்ராக் ஐஸ்ல, இப்படி சில நாயகன் நாயகி நம்ம இதயத்தை களவாடுவாங்க. ஆனா யோகிபாபு ஜஸ்ட் லைக் தட் வார்த்தையால படத்தை பார்க்க வைப்பார். லைக் கோலமாவு கோகிலா, தர்மபிரபு இந்த இரண்டும். இவர் ஹீரோவா நடிச்சதுல எனக்கு ரொம்ப பிடிச்சது. அந்த வரிசையில மண்டேலா படமும் அணிவகுத்துவிட்டது. யாரெல்லாம் சர்கார் படம் பார்த்து விஜயோட ஒரு விரல் புரட்சியே பாடி ஒர் வோட்டோட வேல்யூ தெரிந்து அந்த படத்தை பற்றி பேசியிருப்பிங்க. இந்த கதையும் ஒரு வோட்டோட தரத்தை தான் கூற வருது. கிராமத்துல முடிதிருத்தம் செய்து தனக்கு வீடோ, இருப்பிடமோ இல்லாதவனின் கதை. முக்கியமாக பெயர் கூட அறிந்திடாதவனின் கதை. தனக்கு பண்ணி, இளிச்சவாய...