ஹெலன் கெல்லர்
ஹெலன் கெல்லர் ( Helen Adams Keller ) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்க பெண்மணி. அமெரிக்காவில் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார் பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லருக்கு பதினெட்டு மாதச் சிறுமியாக இருந்த பொழுது மூளைக் காய்ச்சல் வந்தது. அப்பொழுது இவர் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடுத்தர குடும்பம் இவர்களுடையது. ஹெலன் கெல்லரின் பெற்றோர் அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தார்கள். அலெக்சாண்டர்,அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முதலில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். கிரகாம்பெல் ஆன்சல்லிவன் என்ற ஆசிரி...